22 September 2009

என்ன கொடுமை சார் இதுசாமியின் பெயரைச் சொல்லி வாயில்லா ஜீவன்களைப் பலி கொடுப்பது இன்று நேற்று நடக்கும் கொடுமை அல்ல. இது காலாகாலமாக உலகம் முழுமையும் நடை பெறுகிறது. இன்னும் நடந்து வருகிறது. தென் அமெரிக்காவில் பெரு நாட்டில் மனிதப் பலி, பல நூறு ஆண்டுகளாக நடந்திருக்கிறது. அது வரலாறு.

மெக்சிகோவில் அஸ்டெக் இனத்தவர் நரபலியில் புகழ் பெற்றவர்கள். Montezuma's Daughther எனும் நாவலைப் படிக்கும் போது தெரிந்து கொண்டேன். அது வரலாறு. மலாயாவுக்குக் கப்பலேறி வந்த நம் தமிழர்கள், கூடவே சாதி சம்பிரதாயங்களைக் கொண்டு வந்தார்கள். அது வரலாறு. ஆடு மாடுகளைக் கொண்டு வந்தார்கள். அது வரலாறு. சமயத்தின் பேரில் ஆடுகளைப் பொலி போட்டார்கள்.


எனக்கு விவரம் தெரிந்த வரையில், நான் வாழ்ந்த மலாக்கா காடிங் தோட்ட ரத்துக் கோயிலில் ஆடு பலி ஆட்டம் மிக ஆர்ப்பாட்டமாக நடந்து இருக்கிறது. கட்சி கட்டிக் கொண்டு கத்திகளைத் தீட்டுவார்கள். ஈவு இரக்கம் இல்லாமல் ஆடுகளைக் காவு கொடுக்கும் படலம் என்னை மிகவும் பாதித்துள்ளது.

அந்த மாதிரி கண் கொள்ளா காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டு அழுது இருக்கிறேன். அதனால் கடவுளார் மீது நம்பிக்கை குறைந்து போய் கோயில்களுக்குப் போவதை கூட நிறுத்திக் கொண்டேன். வயதான பிறகு இப்போது போகிறேன். சரி, விஷயத்திற்கு வருகிறேன்.
இலங்கை Chilaw எனும் இடத்தில் முன்னேஸ்வரம் மகா பத்திரகாளி அம்மன் கோவில் இருக்கிறது. அண்மையில்  அந்தக் கோயிலில் அரங்கேறிய மகா கொடுமை பற்றி சொல்கிறேன்.

ஏறக்குறைய 200 ஆடுகள், பலநூறு பேர் முன்னிலையில், கோயிலின் சமய சடங்கு என்ற பெயரில் வெட்டி வீசப்பட்டன. கதை சொல்லும் படங்களைப் பாருங்கள்.

இந்தக் கோயில் பரக்கிரமபாகு (1412­-1467) எனும் அரசனால் கட்டப்பட்டது. 1578 ல் போர்த்துகீசியர்கள் உடைத்துப் போட்டார்கள். அப்புறம் 1753ல் கீர்த்தி ஸ்ரீ ரஜசின்ஹா என்பவரால் புனரமைப்பு செய்யப் பட்டது. 1753ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

அப்படிப் பட்ட கோயிலில் இப்படிப் பட்ட அநியாயம். ஒரு காலக் கட்டத்தில் மத சடங்குகள் எனும் பெயரில் சாமிகளைச் சந்தோஷப்படுத்த பலியிடுதல் என்ற சடங்குகள் நடந்து வந்திருக்கின்றன. ஆடுகள், கோழிகள் போன்ற விலங்குகளைப் பலியிட்டு இருக்கிறார்கள். 

குழந்தைகளையும் மனிதர்களையும் பலியிடும் வழக்கம் பல காலம் இருந்திருக்கின்றது. ஆனால் காலப் போக்கில் மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது. அதனால் தடைச் சட்டங்கள் இயற்றப் பட்டன். பலியிடுதல் அருகிப் போனது.


ஆனாலும் இன்று வரை இது எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியாகவே இருந்து வருகின்றது. \மலேசியாவில் நகர்ப்பகுதிகளில் நடை பெறுவது குறைவு. கிராமப் புறங்களில், தோட்டப்புறங்களில் அதிகமான அளவில் நடைபெறுகின்றது. 

வாடிக்கையான விஷயம். அண்மையில் இலங்கையிலும் இந்த ஆடு பலி ஆட்டம் மிக விமரிசையாக நடந்திருக்கின்றது. கேள்வி பட்ட போது மிக மிக அதிர்ச்சி. அதுவும் ஏறக்குறைய 200 ஆடுகள். 

குழந்தைகள் முன்னிலையில் நீண்ட கூரிய அரிவாள்களால் வெட்டிக் காவு கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் பார்க்கக் கூடாது என்பதற்காக என்னென்னவோ மறைப்புகள் போடுவார்கள். அது எல்லாம் மலை ஏறி விட்டது. 

நாலு பேர் கூடும் பொது இடங்களில் மிருகங்களை வெட்டிக் கொல்வதற்கு சட்ட வகையில் தடை இருக்கின்றது. இருந்தாலும் பாருங்கள் மதம் எனும் போர்வையில் செய்யப் படுவது அனைத்தும் தப்பிவிடுகின்றன. இதைப் பற்றி டாக்டர் எலியன் பெத்திய கோடா என்பவர் The Island online இணையத்தில் எழுதியிருக்கிறார். படியுங்கள்.
Sacrificial goats
I was horrified to see in the Sunday Times that some 200 goats were Slaughtered in public at a Kovil in Munneswaram, Chilaw in the presence of the police, a PHI and thousands of devotees – including men women and children.


The slaughter of animals is prohibited in public, so how come the police allow this? Swords were used to slaughter these poor innocent goats in front of all these people.


Animal sacrifice is not done in any civilized country. Great men like Gautama Buddha, Mahatma Gandhi and Krishnamurti were against this cruel disgusting practice.


Watching this brutal slaughter will only make the devotees criminal minded. If you can kill a living animal so cruelly, the people watching will get “brutalised”. I implore President Mahinda Rajapaksa who is a strong Buddhist leader to stop these heinous crimes in Buddhist Sri Lanka.


Several of my Tamil Hindu friends telephoned me to say that they are all against this shocking crime. 


http://www.island.lk/2009/09/18/opinion7.html

எல்லா உயிர்களும் கடவுளின் படைப்புகள். எல்லா உயிர்களிலும் கடவுள் நிலைத்திருக்கின்றார் என்று வலியுறுத்தும் இந்து மதத்தில், இக்கொலைகளுக்கு எப்படி நியாயம் சொல்ல முடியும்.

உயிர்க் கொலைகளையும், மாமிசம் உண்ணுவதையும் இந்து மதத்தில் மகா பெரிய பாதகங்களாகச் சொல்லுகின்றார்கள். இந்த மாதிரியான பாவங்கள் பாவங்களாகவே இருக்கட்டும்.


ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் காவு கழிசடை இல்லாமல் சுத்தமாக இருந்த இந்தக் கோயில் இப்படி மாறிப் போனதே என்று நினைக்கும் போது தெய்வம் இருக்கிறதா எனும் கேள்வி வருகிறது. இப்படி எழுதியதற்காக மன்னிக்கவும். என்ன கொடுமை சார் இது?

மேற்கோள்:
Sacrificial goats http://sundaytimes.lk/090906/News/nws_04.html

6 comments:

 1. 1000 பெரியார் வந்தாலும் இவங்கள திருத்த முடியாதுப்பா

  ReplyDelete
 2. தான் கறிஉணவு சாப்பிட, சாமிக்கு கிடாய் வெட்டுவது ஆக ஒரு பெயருக்குத்தான்:))

  கடைகளில் மாமிசம் விற்பதும் ஒருவகையில் வருத்தமானதே :((

  ReplyDelete
 3. :(

  மனிதன் ஏதாவது ஒரு விதத்தில் தன்னைப்படைத்தவனுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதலே, இவ்வாறு உள்ள அனைத்துக்கும் காரணம்.

  ReplyDelete
 4. //ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் காவு கழிசடை இல்லாமல் சுத்தமாக இருந்த இந்தக் கோயில் இப்படி மாறிப் போனதே என்று நினைக்கும் போது தெய்வம் இருக்கிறதா எனும் கேள்வி வருகிறது//

  ஆடு வேண்டும் மாடு வேண்டும் என எந்த கடவுளும் கேட்கவில்லையே,மனிதன் தான் மிருங்களை பலி கொடுத்து அதை அவனே தின்கிறான்...இதில் கடவுளை குறை சொல்லி என்ன இருக்கிறது...
  -renga-

  ReplyDelete
 5. கொடுமையிலும் கொடுமை இந்த உயிர் பலி .

  ReplyDelete