07 ஏப்ரல் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 40

 அர்சுன் செல்வராஜா  arjunselvaraja@ymail.com
கே: 'நாளும் ஒரு கீரை' என்று ஓர் இணையத் தளம் இருப்பதாக என் நண்பர் சொன்னார். நான் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. நீங்கள் தேடிப் பார்த்துச் சொல்லுங்கள்.

ப: நானும் தேடிப் பார்த்தேன். அப்படி ஓர் இணையத் தளம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கீரைகளைப் பற்றிய இணையத் தளங்கள் தமிழில் நிறைய உள்ளன. www.ruraldoctors.blogspot.com எனும் வலைப்பூ நல்ல தகவல்களைத் தருகிறது.

கீரைகளின் அடிப்படை மருத்துவ முறைகள்; எந்தக் கீரைகள் எந்த நோய்களைத் தீர்க்கும்; குழந்தைகள் எந்தக் கீரைகளை எந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு இரத்தச் சோகை நோய் வந்தால் அவர்களுக்கு பேய் பிடித்து விட்டது என்ற எண்ணங்கள். சமூகத்தின் தவறான நம்பிக்கைகள் இந்த வலைப் பூவில் சுட்டிக் காட்டப் படுகின்றன.


ஹேமாவதனன், தைப்பிங், பேராக்    hemavath7@gmail.com
கே: விண்டோஸ் 7 என்று ஏன் ஏழாம் எண்ணில் பெயர் வைத்தார்கள். வேறு பெயர் கிடைக்கவில்லையா?

ப: அண்ணன் பில் கேட்ஸ் அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் வந்து கேட்கிறீர்கள். நம் தமிழர்களிடம் கேட்டிருந்தால் போதும். ஸ்ரேய்ஸா, நயன்ஸா, அசின்ஸா எனும் உலகம் போற்றும் நல்ல நல்ல பெயர்களைக் கொடுத்து இருப்பார்கள். என்ன செய்வது. விஸ்த்தா எனும் பெயரைக் கொடுத்து விட்டார்கள். விண்டோஸ் விஸ்த்தாவைப் பயன் படுத்தியவர்கள் பலர் அதைத் தூக்கி எறிந்து விட்டு எக்ஸ்.பிக்கு புலம் பெயர்ந்தார்கள்.

ஒரு கட்டத்தில் விண்டோஸ் என்கிற பெயரையே விட்டு விடலாமா என்று கூட மைக்ராசப்ட் தலைவர்கள் நினைத்தார்களாம். இதுவரை மைக்ராசாப்ட் நிறுவனம் தயாரித்தச் செயலிகளில் விண்டோஸ் 7 என்பது ஏழாவது சிஸ்டம். System - சிஸ்டம் என்றால் கணினியை இயக்கும் அடிப்படைச் செயலி. விண்டோஸ் 7 என்பது ஏழாவதுச் செயலி.

அதனால் அதற்கு விண்டோஸ் 7 என்றே பெயர் வைத்து விட்டார்கள். பெயர் இல்லாமல் 7 என்கிற எண் வருகிறது பார்த்தீர்களா. இந்த விண்டோஸ் 7 இப்போது உலக மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. விஸ்த்தாவின் களங்கத்தை நிவர்த்தியும் செய்து வருகிறது.  


இரா.கணேஷ், சுங்கை பூலோ, சிலாங்கூர்    ganes_9918@yahoo.com
கே: ஒவ்வொரு கணினிக்கும் IP Address  இணைய முகவரி இருப்பதாகச் சொல்கிறீர்கள். அது எங்கே இருக்கிறது? அதை எப்படி கண்டுபிடிப்பது?


ப:
நல்ல கேள்வி. Start >> Run >> என்ற இடத்திற்குப் போய் ipconfig என்று தட்டச்சு
செய்யுங்கள். அப்புறம் Enter பொத்தானைத் தட்டுங்கள். உங்கள் கணினியின் தனிப்பட்ட இணைய முகவரி கிடைத்து விடும். இந்த முகவரியை வைத்து தான் ஒருவர் செய்யும் இணையக் குற்றங்களைக் கண்டுபிடிக்கிறார்கள்.

எடுத்துக் காட்டாக, கொரியாவில் உள்ள ஒரு வங்கியை ஏமாற்றி இணையம் மூலமாக ஒருவர் கொள்ளை அடித்தார் என்று வைத்துக் கொள்வோம். ஏமாற்று வித்தை கொஞ்ச நாளில் தெரிந்து விடும். வங்கியை ஏமாற்றப் பயன் படுத்தப் பட்ட கணினி எங்கே இருந்து வந்தது என்பதைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

அதற்கு இந்த இணைய முகவரி தேவைப் படுகிறது. இந்த இணைய முகவரியையே மாற்றக் கூடிய கில்லாடித்தனமான நிரலிகள் கூட இருக்கின்றன. பிரான்ஸ’ல் உள்ள நண்பர் எனக்கு ஒன்றை அனுப்பி இருந்தார்.


அதை வைத்துக் கொண்டு நம் கணினியின் முகவரியை மாற்றி விடலாம். மலேசியாவில் இருந்து கொண்டு சீனாவின் முகவரியைக் கொடுத்து கடிதம் அனுப்பலாம். அந்தக் கில்லாடித்தன நிரலி வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டாம். வேண்டும் என்றால் கேளுங்கள். இடத்தைச் சொல்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யக் கூடாது. இணைய உலகில் பல அதிசயங்கள் உள்ளன.

அ.சிட்டிபன், சிலியாவ், நெகிரி செம்பிலான்
கே: Power Point பயன்படுத்துகிறேன். சில சமயங்களில் 'virtual memory being too low' என்று கணினித்திரையில் எச்சரிக்கை செய்தி வருகிறது. என்ன  செய்வது?


ப:
Adobe Photoshop பயன்படுத்துபவர்களுக்கும் அடிக்கடி இந்த மாதிரி அறிவிப்பு வரும். பயப்பட வேண்டாம். உங்களுடைய கணினியில் தற்காலிக நினைவகம்  இருக்கும். அதற்கு பெயர் RAM எனும் நினைவி. SDRAM, DDR1, DDR2 என்கிறார்களே அதுதான். அதன் கொள்ளளவு சக்தி குறைவாகிப் போனால் மேற்     சொன்ன எச்சரிக்கை வரும். பொதுவாக 512MB நினைவி இருந்தால் இந்தப் பிரச்னை வராது.

Virtual Memory என்றால் ஒரு மாயை நினைவு. கணினித்திரையின் முகப்பில் பல சின்னங்களைப் பார்க்கலாம். அதில் My Computer சின்னத்தின் மீது  சுழலியின் வலது பொத்தானைச் சொடுக்குங்கள் (Right Click). சுழலி என்றால் Mouse. அதில் Properties என்பதைச் சொடுக்குங்கள். System Properties என்று வரும். அடுத்து Advanced Tab என்பதைச் சொடுக்குங்கள். Performance எனும் பகுதியில் Settings   பொத்தானைத் தட்டுங்கள். அங்கே Performance Options எனும் தொகுதி இருக்கும். அதில் Advanced Tab ஐச் சொடுக்கினால் Virtual Memory எனும் பிரிவு வந்துவிடும். நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது Custom என்பதைச் சொடுக்க வேண்டும். அதில் 1000MB என்று டைப் செய்யுங்கள். உங்கள் Hard Disc எனும் வன்தட்டின் கொள் ளளவு அதிகமாக இருந்தால் 1500MB வரை போகலாம். உங்கள் பிரச்னை தீர்ந்தது.

5 கருத்துகள்:

  1. வணக்கம். உங்கள் கேள்வி பதில் பகுதி மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. வாழ்த்துக்கள்,தொடர்ந்து எழுதுங்கள். வாழ்க வளமுடன். ரவாங் ரஃபி.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா8/4/10, PM 9:54

    வேண்டும் என்றால் கேளுங்கள். இடத்தைச் சொல்கிறேன். சட்டத்திற்குப் புறம்பாக எதையும் செய்யக் கூடாது. இணைய உலகில் பல அதிசயங்கள் உள்ளன.

    "எனக்கு வேண்டும் அதை எவ்வாறு பெறுவது?

    --இணைய உலகில் பல அதிசயங்கள் உள்ளன---
    சற்று விளக்கமாக சொல்லுங்கள்??

    தகவல்களுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஐயா,
    தங்களின் கணினியும் நீங்களும் பகுதி மிகவும் அருமை தங்கள் இது வரை எழுதிய 42 பகுதிகளை மொத்தமாக PTF பைல்லாக எனக்கு அனுப்ப முடியுமா? எனது இ-மெயில் முகவரி b.govindaraj@hotmail.com 'நன்றி'

    பதிலளிநீக்கு
  4. அய்யா வணக்கம்,
    என்னுடைய கணினி shut down ஆக முழுமையாக
    2 நிமிடங்கள் எடுத்துக் கொல்(ள்)கிறது.ஆனால் 45 வினடிகளில் open ஆகிறது.விரைவாக shut down ஆக வழி சொல்லுங்கள்.நான் ஏழாம் பலகணி(OS)தான் உபயோகிக்கிறேன்.நன்றியுடன்
    இராசகோபாலன்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்,நிங்களும் கணினியும் அங்கத்தில் கேக்கஊடிய கேள்விகள்
    மிக்க பயனாக இருகிறது .

    பதிலளிநீக்கு