மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழில் வெளியான கணினியும் நீங்களும் கேள்வி பதில் பகுதியைக் கட்டம் கட்டமாக இந்த வலைப் பூவில் பிரசுரித்து வருகிறேன். பழைய எல்லாப் பகுதிகளும் வெளி வந்த பின்னர், ஞாயிற்றுக் கிழமைகளில் பிரசுக்கப் படும் அதே பகுதி அதே தினத்தில் இந்த வலைப் பதிவிலும் பிரசுரிக்கப் படும். உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் படிக்க வேண்டும். பயன் அடைய வேண்டும். நீங்கள் மின்னஞ்சல் வழியாகக் கேள்விகள் கேட்கலாம். உங்கள் கேள்விகள் நாளிதழிலும் வெளிவரும். இணையத்திலும் வரும். (மலேசிய நண்பன் - 27.12.2009 ஞாயிறு நாளிதழில் வெளியானது)
ராஜன் ராஜன் rjn_rajen@yahoo.com
ராஜன் ராஜன் rjn_rajen@yahoo.com
கே: பில் கேட்ஸ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு கடிதம் அனுப்பினேன். போய்ச் சேரவில்லை. நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானது தானா? உறுதி செய்யுங்கள்.
ப: அண்ணன் பில் கேட்ஸ் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். அதுவரை உங்களைப் பாராட்ட வேண்டும். அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்கிறீர்கள். அவருடைய மின்னஞ்சல் முகவரி bgates@microsoft.com என்பதைச் சரியாக எழுதினீர்களா. அவரிடம் பணம் கேட்டால் சில சமயங்களில் கிடைக்கும். அவர் முன்பு போல இல்லை. எல்லாவற்றையும் பார்த்து செய்கிறார். மற்றபடி அவருடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள நாள் ஒன்றுக்கு நூறு பேர் விண்ணப்பம் செய்கிறார்களாம். அவர்களில் நீங்கள் ஒருவரா என்று தெரிய வில்லை. பராவாயில்லை. அவரிடம் கேட்டுச் சொல்கிறேன்.

கௌசல்யா, ஜொகூர் பாரு (குறும் செய்தி 21.10.2009)
கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிக்கிறோம். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறோம். எங்கள் மகளுக்கு தேவைப் படும். உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து கள்.
ப: நீண்ட கடிதம். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். பழுத்த மரம் கல்லடி படுகிறது என்பார்கள். யாரும் மரத்தை சும்மா அடிக்கவில்லை. பழத்தைத் தான் அடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். விட்டு விடுங்கள். நல்லதைப் பார்ப்போம். நல்லதைப் பேசுவோம்.
நீங்கள் இந்தக் குறும் செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. திட்டவில்லை என்பதற்காக முதல் மரியாதை. பதில் கிடைக்காதவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.
திருமதி.செல்வமணி, ஜாலான் பாராட், பெட்டாலிங் ஜெயா
கே: Cannot delete file: Access is denied. Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use எனும் எச்சரிக்கை என் கணினியில் வந்து கொண்டே இருக்கிறது. பெரும் தொல்லையாக இருக்கிறது. என்ன செய்வது? உதவி செய்யுங்கள். பெரும் புண்ணியமாக இருக்கும்.
ப: கணினி பயன் படுத்துபவர்களுக்கு இது ஒரு தொல்லைக் கொடுக்கும் எச்சரிக்கை. முக்கிய கோப்புகளைத் திறக்கும் போது இந்தப் பிரச்னை வந்தால் மிகவும் சிரமம். கவலைப் படாதீர்கள். யாம் இருக்க பயம் ஏன்? அதற்கு வழி இருக்கிறது. http://ccollomb.free.fr/unlocker/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று UNLOCKER எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதைக் கணினிக்குள் Install எனும் பதிப்பு செய்யவும். அதன் பிறகு அந்த எச்சரிக்கை கணினியின் ஆயுசு பூராவும் வராது.
அருண் செல்வராஜா arjunselvaraja@ymail.com
கே: இணையத்தை முழுமையாக அழிக்க முடியுமா அல்லது தடை செய்ய முடியுமா?
ப: முடியவே முடியாது. உலகின் மிகப் பெரிய தேடல் இயந்திரமான Google ஐ நிறுத்த சீனா என்ன என்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இப்போது அந்த இரண்டிற்கும் ஒரு பயங்கரமான பனிப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தை பல அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கங்கள் கூட்டாக நிர்வாகம் செய்கின்றன. இணையத்தில் நகல் பராமரிப்பு என்று உள்ளது. ஒருவருடைய சேவையைத் தடை செய்தால் அதே சேவை வேறு ஓர் இடத்தில் இருந்து தொடங்கும். உலகத்தில் முக்கால் வாசி நில நடுக்கம் ஏற்பட்டாலும் இணையத்தை அழிக்க முடியாது.
இளமதி மரியா, Selayang, Kuala Lumpur
கே: Win RAR, Win Zip போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் நிரலி உள்ளதா?
ப: கோப்புகளைச் சுருக்கி விரிக்க உதவும் நிரலிதான் 'ஜிப்' நிரலி. Win RAR, Win Zip போன்றவை நல்ல 'ஜிப்' நிரலிகள். இருந்தாலும் பணம் கொடுத்து வாங்க வேண்டும். 7Zip எனும் நிரலி ஒன்று இருக்கிறது. இலவசமாகக் கிடைக்கும். http://www.7zip.org எனும் இடத்தில் கிடைக்கிறது.
குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வர வர பயன்படுத்த வெறுப்பாக இருக்கிறது. கணினியை On செய்து விட்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வரும் வரையில் திரையில் எதுவும் வராது. நான் பயன்படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?
ப: இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. சரி, எப்படி இருப்பினும் உடனடியாகச் செய்யக்கூடிய நிவாரணங்களைச் சொல்கிறேன். தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம். Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம்.
முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.
வி.முருகையா, அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு
கே: ஒரு கணினிக்கு Hard Disc முக்கியமா Processor முக்கியமா?
ப: ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை முக்கியமா பெண்பிள்ளை முக்கியமா என்று கேட்பது போல இருக்கிறது. இரண்டுமே முக்கியம். Processor எனும் செயலர் அல்லது மையச் செயலகம் ஒரு கணினிக்கு மூளையைப் போன்றது. மூளை இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலத்தான் கணினிக்குச் செயலரும். இருந்தாலும் தகவல்களைச் சேகரித்து வைக்க ஒரு வங்கி வேண்டுமே. அந்த வங்கிதான் தட்டகம். வேண்டும் என்கிற நேரத்தில் செயலர் தன் வேலைக்காரர்களை அனுப்பி, தனக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்துவிடுவார். சும்மா சொல்லக்கூடாது. தட்டகமும் ஓடி ஓடித் தகவல்களை விரட்டி விரட்டிப் பிடிப்பார். அதுவும் ஒரே ஒரு வினாடியில் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும். ஆக, பாரபட்சம் காட்டக்கூடாது. செயலர் இல்லை என்றால் தட்டகம் இல்லை. தட்டகம் இல்லை என்றால் செயலர் இல்லை.
குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?
ப: தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம். அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள். அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.
ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM120. AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கே: உங்களுடைய கணினியும் நீங்களும் தொகுப்பை வாராவாரம் படிக்கிறோம். படித்ததைப் பத்திரமாக வெட்டி வைக்கிறோம். எங்கள் மகளுக்கு தேவைப் படும். உங்களைத் திட்டித் தீர்க்கும் சில ஆசாமிகளைப் பொருட் படுத்த வேண்டாம். எங்கள் குடும்பத்தாரின் வாழ்த்து கள்.
ப: நீண்ட கடிதம். நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால் இது எல்லாம் சகஜம். பழுத்த மரம் கல்லடி படுகிறது என்பார்கள். யாரும் மரத்தை சும்மா அடிக்கவில்லை. பழத்தைத் தான் அடிக்கிறார்கள். சாப்பிடுகிறார்கள். விட்டு விடுங்கள். நல்லதைப் பார்ப்போம். நல்லதைப் பேசுவோம்.
நீங்கள் இந்தக் குறும் செய்தியை அனுப்பியது தீபாவளி நேரத்தில். இப்போதுதான் பதில் வருகிறது. திட்டவில்லை என்பதற்காக முதல் மரியாதை. பதில் கிடைக்காதவர்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்.
திருமதி.செல்வமணி, ஜாலான் பாராட், பெட்டாலிங் ஜெயா
கே: Cannot delete file: Access is denied. Make sure the disk is not full or write-protected and that the file is not currently in use எனும் எச்சரிக்கை என் கணினியில் வந்து கொண்டே இருக்கிறது. பெரும் தொல்லையாக இருக்கிறது. என்ன செய்வது? உதவி செய்யுங்கள். பெரும் புண்ணியமாக இருக்கும்.
ப: கணினி பயன் படுத்துபவர்களுக்கு இது ஒரு தொல்லைக் கொடுக்கும் எச்சரிக்கை. முக்கிய கோப்புகளைத் திறக்கும் போது இந்தப் பிரச்னை வந்தால் மிகவும் சிரமம். கவலைப் படாதீர்கள். யாம் இருக்க பயம் ஏன்? அதற்கு வழி இருக்கிறது. http://ccollomb.free.fr/unlocker/ எனும் இணையத் தளத்திற்குச் சென்று UNLOCKER எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதைக் கணினிக்குள் Install எனும் பதிப்பு செய்யவும். அதன் பிறகு அந்த எச்சரிக்கை கணினியின் ஆயுசு பூராவும் வராது.
அருண் செல்வராஜா arjunselvaraja@ymail.com
கே: இணையத்தை முழுமையாக அழிக்க முடியுமா அல்லது தடை செய்ய முடியுமா?
ப: முடியவே முடியாது. உலகின் மிகப் பெரிய தேடல் இயந்திரமான Google ஐ நிறுத்த சீனா என்ன என்னவோ செய்து பார்த்தது. ஒன்றும் நடக்கவில்லை. அதனால் இப்போது அந்த இரண்டிற்கும் ஒரு பயங்கரமான பனிப் போர் நடந்து கொண்டு இருக்கிறது. இணையத்தை பல அமைப்புகள், வர்த்தக நிறுவனங்கள், அரசாங்கங்கள் கூட்டாக நிர்வாகம் செய்கின்றன. இணையத்தில் நகல் பராமரிப்பு என்று உள்ளது. ஒருவருடைய சேவையைத் தடை செய்தால் அதே சேவை வேறு ஓர் இடத்தில் இருந்து தொடங்கும். உலகத்தில் முக்கால் வாசி நில நடுக்கம் ஏற்பட்டாலும் இணையத்தை அழிக்க முடியாது.
இளமதி மரியா, Selayang, Kuala Lumpur
கே: Win RAR, Win Zip போன்றவற்றைக் காசு கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. இலவசமாகக் கிடைக்கும் நிரலி உள்ளதா?
ப:
குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்
கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. வர வர பயன்படுத்த வெறுப்பாக இருக்கிறது. கணினியை On செய்து விட்டு பாத்ரூம் போய் குளித்துவிட்டு வரும் வரையில் திரையில் எதுவும் வராது. நான் பயன்படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?
ப: இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை. சரி, எப்படி இருப்பினும் உடனடியாகச் செய்யக்கூடிய நிவாரணங்களைச் சொல்கிறேன். தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம். கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம். Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம்.
முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும். அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும்.
வி.முருகையா, அல்மா, புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு
கே: ஒரு கணினிக்கு Hard Disc முக்கியமா Processor முக்கியமா?
ப: ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை முக்கியமா பெண்பிள்ளை முக்கியமா என்று கேட்பது போல இருக்கிறது. இரண்டுமே முக்கியம். Processor எனும் செயலர் அல்லது மையச் செயலகம் ஒரு கணினிக்கு மூளையைப் போன்றது. மூளை இல்லை என்றால் மனிதன் ஒரு பிணம். அதை நினைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலத்தான் கணினிக்குச் செயலரும். இருந்தாலும் தகவல்களைச் சேகரித்து வைக்க ஒரு வங்கி வேண்டுமே. அந்த வங்கிதான் தட்டகம். வேண்டும் என்கிற நேரத்தில் செயலர் தன் வேலைக்காரர்களை அனுப்பி, தனக்கு வேண்டிய தகவல்களைச் சேகரித்துக் கொண்டு வந்துவிடுவார். சும்மா சொல்லக்கூடாது. தட்டகமும் ஓடி ஓடித் தகவல்களை விரட்டி விரட்டிப் பிடிப்பார். அதுவும் ஒரே ஒரு வினாடியில் வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும். ஆக, பாரபட்சம் காட்டக்கூடாது. செயலர் இல்லை என்றால் தட்டகம் இல்லை. தட்டகம் இல்லை என்றால் செயலர் இல்லை.
குமாரி. ஜானகி மலர், அவுலோங், தைப்பிங், பேராக்
கே: என்னுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறேன். முரசு அஞ்சல் எங்கே எப்படி கிடைக்கும்?
ப: தங்களுடைய கணினியில் தமிழைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள். பாராட்டுகள். முரசு அஞ்சல் செயலி Software மலேசியாவில் உருவாக்கப்பட்டது. உலகம் முழுமையும் உள்ள தமிழர்கள் விரும்பித் தங்கள் கணினிகளில் பதித்துக் கொள்கிறார்கள். பயன்படுத்த சுலபமானது. இணைமதி, இணைக்கதிர் எழுத்துருகள் மிக அழகாக இருக்கின்றன என்பது கூடுதல் சன்மானம். அண்மையில் நான் தமிழ்நாட்டுக்குப் போயிருந்த போது அங்கே உள்ள பல கணினி மையங்கள், முரசு அஞ்சலைப் பயன்படுத்துவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ்ச் செயலிகளில் முரசு அஞ்சல் எளிதானது என்றார்கள். அந்தச் செயலியைப் பெற்றுக் கொள்ள முரசு நிறுவனத்துக்கு கடிதம் எழுதலாம். கட்டணம் உண்டு. தவிர www.murasu.com எனும் இணைய மையத்திற்குச் சென்றும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கணினியில் பதித்துக் கொள்வதும் (Installing) சுலபம். எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி விளக்கம் கொடுத்திருப்பார்கள்.
ஆர். முத்தழகன், கம்போங் சிமி, ஈப்போ, பேராக்
கே: ஒவ்வொரு கணினியிலும் Anti Virus போட்டிருக்க வேண்டுமா?
ப: கணினி வைரஸ் என்பதை மனிதர்களைத் தாக்கும் கிருமிகள் என்று நினைக்க வேண்டாம். அவை சின்ன மென்பொருட்கள் அல்லது சின்ன Program - நிரலிகள். இவை கணினிக்குள் நுழைந்ததும் நாம் சேகரித்து வைத்திருக்கும் செய்திகள், படங்கள், ஆவணங்கள், செயலிகள் போன்றவற்றை அழித்துவிடும். அதனால் அவற்றுக்கு தமிழில் அழிவி என்று பெயர். கணினிகள் செயல்படுவதற்கு செயலிகள் Programs தேவை. இந்தச் செயலிகளை எழுதும் கணினி நிபுணர்களே இந்த அழிவிகளையும் எழுதுகிறார்கள். தங்களுடைய திறமையைக் காட்ட வேண்டும் என்பதற்காக மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். எந்த நேரத்தில் அழிவிகள் உங்கள் கணினியைத் தாக்கும் என்று தெரியாது. அதனால் உடனடியாக Anti Virus தடுப்பு நிரலியை வாங்கி கணினியில் பதித்துக் கொள்ளுங்கள். வெள்ளம் வருவதற்கு முன்பாக அணை போடுங்கள். Norton Anti Virus தடுப்பு நிரலியின் சந்தாத் தொகை ஆண்டு ஒன்றுக்கு RM120. AVG, Avast போன்ற இலவச தடுப்பு நிரலிகளும் உள்ளன. அவற்றின் இணையத் தளங்களுக்குச் சென்று இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வணக்கம்,உங்களால் பயன் அடைந்த ஒரு வாசகன் நான் உங்கள் கேள்வி பதில் அங்கம் நன்று. எனக்கு மிக்க பயனாக இருக்கிறது தொடரட்டும் உங்கள் சேவை.
பதிலளிநீக்குthank you for your good service to tamil society
பதிலளிநீக்குvanakam anaa, en peyar mu.krishnasamy (54vayathu) minsara turail chargeman BO vaitulen. matrum electronics turail miguntha aarvam.suyamaaga putagangal paditu arinthu konden.tarpothu microcontroller patri arinthu kolla ,mehlum padika aarvamaaga ulathu.naan palah idangalil tehdi vitten. ondrum payanilai. neengal thayavuseithu uthava mudiyumah? Alathu naameh indiavil irunthu lectures varavalaithu shorterms course nadatalaameh.
பதிலளிநீக்குnandry vanakam. VAALGA THAMIL (AIYAH TAMILIL EPADI TYPE SEIVATHU)
anna...vanakkam.brother thank you very much for your kind answers..anne i dont know anything in blog.anna please let me know what are the things we can do in blog,if want to do any busineess?ialready open a blog but its really complicated for me.i dont have any furher studies in computer field,only basic knowledge.pls reply me anna.
பதிலளிநீக்கு