25 மே 2017

பெண் புத்தி பின் புத்தி

பெண்கள் எப்போதுமே எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அதன் பின்விளைவுகளை ஆராய்ந்தே முடிவுகள் எடுப்பார்கள். 


கல்வி ஆகட்டும், காதல் ஆகட்டும், குடும்பம் ஆகட்டும். எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு பின்விளைவுகளைத் தரும் என்பதை நன்கு யோசித்து விட்டு அதற்குத் தகுந்த முடிவைத் தான் அவள் புத்தி சொல்லும்.

பெண் புத்தி பின் வருவனவற்றை யோசித்து விட்டு சொல்லும் புத்தி என்பதைத் தான் பெண் புத்தி பின் புத்தி என்றார்கள்.

இதை நாம் எந்த இலட்சணத்தில் புரிந்து கொண்டோம் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை. உங்களுக்கே தெரியும். பெண் இல்லாமல் எந்த ஓர் ஆணும் பேர் முடியாது.

உண்மையிலேயே பெண் புத்தி முன் புத்தி என்று தான் சொல்ல வேண்டும். அதற்காகப் பெண்களுக்குத் தலைக்கனம் பிடிக்காமல் இருந்தால் சரி.

2 கருத்துகள்:

  1. நீங்கள் சொன்னது போல பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும் மிகுந்தட சுயநலம் இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

    பதிலளிநீக்கு
  2. சுயநலம் பெரிதா பொதுநலம் பெரிதா...

    பதிலளிநீக்கு