24 May 2017

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனைச் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். 





அப்போது பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக தான் வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து இருந்தாலும் சாவு நிச்சயம்.

எனவே செய்நன்றிக் கடனுக்காகத் தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவு தான்.

நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவு தான் என்பது தான் அதன் பொருள். ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறித்துச் சொல்லப் படுகிறது. தவறு.

No comments:

Post a Comment