14 பிப்ரவரி 2019

காணொலியா காணொளியா

காணொளி எனும் சொல்லைப் பலரும் பயன்படுத்தினாலும் அது பொருத்தமான சொல் அல்ல என்பது என் கருத்து. காணொளி என்பதை இயற்பியல் நோக்கில் பார்த்தால் அங்கே வேறு மாதிரியாகப் பொருள் படுகிறது.

காணொளி என்றால் காணக்கூடிய ஒளி எனும் பொருள்.

காணொளி என்பது ஒளி அலைகளின் வரிசையில் நம் கண்களால் காணக் கூடிய ஒரு தொகுதி மட்டுமே ஆகும். இதை ஆங்கிலத்தில் visible spectrrum என்கிறார்கள். spectrrum என்றால் ஒளி அலை வரிசை.

ஆக காணொளி என்றால் visible spectrum. ஆகவே வீடியோ என்பதற்கு *நிகழ்படம்* என்பதே பொருத்தமான சொல். முன்பு சொன்னார்கள். பயன்படுத்தினார்கள்.

ஆனால் அண்மைய காலங்களில் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் காணொலி எனும் சொல்லைப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

ஒரு சிலர் காணொலி என்பதைவிட *ஒளியொலி* என்பதே சிறப்பான சொல் என்றும் கருத்துகள் சொன்னார்கள்.

*வீடியோ* என்பதற்கு நிகழ்படம் என்பதே முன்னர் பொருத்தமான சொல். நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போலவே ஒரு திரையில் காட்டும் *அசைப்படம்*.

*ஒளிதம்* என்றால் நிகழ்படம். அதாவது காணொலி. ஆங்கிலத்தில் video. காணொலி எனும் சொல் தான் அண்மைய காலங்களில் மிகப் பரவலான பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

opto; optic; optical; எனும் சொற்கள் ஒளியைக் குறிக்கும் ஆங்கிலச் சொற்கள். ஆக காணொளி (visible light) என்றால் காணக் கூடியது என்று பொருள். ஆனால் இங்கே ஒன்றை இயற்பியல் ரீதியாக ஒன்றைக் கவனிக்க வேண்டும்.

ஒளி என்பது பொருள் நீட்சி பெற்றது. அதாவது ஒளி என்பது காணும் ஒளிகளை மீறிய அலைநீளங்கள் கொண்டவை ஆகும். அவை ஒருவகையில் மின்காந்த அலைகள்.

எடுத்துகாட்டு: optical fiber = ஒளிநார்.

ஆனால் ஒளிநாரின் ஊடாகச் செல்லும் மின்காந்த அலைகள் காணொளி நிறமாலைக்கு அப்பால் பட்டவை. அதை நினைவில் கொள்ளுங்கள்.

அகச் சிவப்புக் கதிர் எனும் Infra Red Rays என்பவை அலைநீளங்கள் கொண்டவை. அதாவது காணொளி மாதிரி அலைநீளங்கள் கொண்டவை. அதனால் தான் ஒளிநார் என்கிறோம்.

ஆக இங்கு காணொளி என்பதை visibile light எனும் பொருளில் பார்க்கிறோம். அதனால் தான் நிகழ்படம் (video) என்பதற்குப் பதிலாகக் காணொளி எனும் சொல்லைப் பயன்படுத்தி வந்தோம், புரியும் என்று நினைக்கிறேன்.

காண் எனும் (காட்சியும்); ஒலி எனும் (சத்தமும்) ஒரே சமயத்தில் இணைந்து வருவதால் காணொலி ஆகிறது.

காண் என்றால் பார்க்கும் அல்லது பார்ப்பது என்று பொருள். ஒளி என்றால் வெளிச்சம். ஆக காணொளி என்றால் வெளிச்சத்தை மட்டும் பார்ப்பதாகும். அதாவது ஊமையான ஒளி. அது சரியான சொல் ஆகாது.

காணொலி என்று சொல்லில் ஒளியும் வருகிறது. ஒலியும் வருகிறது. ஆக காணொலி என்பதே சரியான சொல். அந்தச் சொல்லை ஏற்பவர்கள் ஏற்கட்டும். ஏற்காதவர்கள் பழையதிலேயே இருக்கட்டும். அது அவர்களின் விருப்பம்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் காணொலி எனும் சொல் சரியான சொல் என ஏற்றுக் கொண்டு உள்ளன. தமிழ்நாட்டு அரசாங்கம் வெளியிடும் பள்ளிப் பாடநூல்களில் காணொலி எனும் சொல்லைக் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். விக்கிப்பீடியாவும் காணொலி எனும் சொல்லையே பயன்படுத்துகிறது. நன்றி.

6 கருத்துகள்:

  1. மிகத் தவறு. காணொளியும் தவறு.. காணொலியும் தவறு. மெய்நிகர் என்பதே சரி. காணொளிகூடப் பரவாயில்லை எனலாம்.. ஆனால், காணொலி என்பது முற்றிலும் தவறு. ஒலியை எங்காவது காண முடியுமா? கேட்கத்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  2. மிகத் தவறு. காணொளியும் தவறு.. காணொலியும் தவறு. மெய்நிகர் என்பதே சரி. காணொளிகூடப் பரவாயில்லை எனலாம்.. ஆனால், காணொலி என்பது முற்றிலும் தவறு. ஒலியை எங்காவது காண முடியுமா? கேட்கத்தான் முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Virtual reality என்பதே மெய்நிகர் எனப்படும். உண்மை இல்லை. ஆனால் உண்மைக்கு இணையான என்பதால் மெய்நிகர் எனப்படும்

      நீக்கு
    2. பெயரில்லா4/7/22, PM 4:59

      மெய் நிகர் என்பது உண்மைஇல்லை என்று பொருள் படுவதால் இது திரைப்படங்களுக்கு மட்டுமே பொருந்தும். உண்மையான காணொளி (விடியோ) அழைப்பிற்கு இது எப்படி பொருந்தும்?

      நீக்கு
  3. Mute சத்தம் (ஒலி) இல்லாத இரு வீடியோவை எவ்வாறு அழைப்பது காணொளியா? காண் மட்டுமா? 🤔

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12/9/20, AM 1:06

    வீடியோ என்றா அது ஆடியோவையும் உள்ளடக்கியதா? வீடியோ கான்பெரன்ஸ் என்பதை காணொளிக்காட்சி என்று சொல்வதுதான் சரி. அதிகமாக விளக்கம்கொடுக்கிறேன் பேர்வழி என்று குழப்பிக்கொள்ளவேண்டாம்.

    பதிலளிநீக்கு