20 அக்டோபர் 2019

செல்லினம் - தட்டச்சு செய்வது எப்படி?


பேஸ்புக் ஊடகத்தில், திறன்பேசியின் வழியாகத் தமிழில் தட்டச்சு செய்வது பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

முதலில் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கு இருக்க வேண்டும். அது மிகவும் எளிது. மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் கூகிள் இணையப் பக்கத்திற்குப் போய் G Mail என்பதைச் சொடுக்குங்கள். அல்லது G Mail என்று தட்டச்சு செய்யுங்கள். g mail sign up என்பதைச் சொடுக்குங்கள்.

Create your Google Account என்று வரும். அதில் தேவையான விவரங்களைப் பதிந்து ஒரு மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ளுங்கள். பொதுவாக பேஸ்புக் கணக்கு உள்ளவர்களுக்கு அந்த மின்னஞ்சலையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே யாகூ, ஹாட்மெயில் (அவுட் லுக்), சோகோ, ஐ கிளவுட்... இப்படி ஏதாவது ஒரு மின்னஞ்சல் கணக்கு இருந்தாலும், அந்தப் பழைய கணக்கிலேயே பதிவு செய்யலாம். புதிதாகத் திறக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சரிங்களா.

பின்னர் உங்கள் திறன்பேசி, கைப்பேசியில் Play Store எனும் ஒரு சின்னம் இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதைச் சொடுக்குங்கள்.

அங்கே உங்கள் மின்னஞ்சல் கேட்கப் படும். மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் Search என்பதில் Sellinam என்று தட்டச்சு செய்யுங்கள். செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிப்பு செய்யுங்கள். சில கேள்விகள் கேட்பார்கள். ஆமாம் என்று தட்டி விடுங்கள். மற்றவற்றைச் செயலியே உங்களுக்காகச் செய்து கொடுக்கும்.

எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. அவ்வளவுதான். மிகவும் எளிது. இரண்டு மூன்று நிமிட வேலைகள். சரிங்களா.

இந்தச் செயலியை உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கியவர் மலேசியா திரு. முத்து நெடுமாறன். அவரின் அந்தத் தமிழ் உணர்வுகளுக்கு நன்றி சொல்வோம். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக