21 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள் - 19.10.2019

அண்மைய காலங்களில் இரு வகையான வாதங்கள் உலகை உலுக்கிக் கொண்டு வருகின்றன. ஒன்று தீவிரவாதம். மற்றொன்று பயங்கரவாதம். 



தீவிரவாதம் என்பது ஒரு கொள்கையை வன்முறை மூலமாக நிலைநாட்டச் செய்வது. முற்றிப் போனால் அதுவே பயங்கரவாதம் என்று பெயர் எடுக்கிறது. இந்த இரண்டுமே தேவையற்ற மனிதப் பிடிவாதங்கள்.

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குத் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் மூலமாக மிரட்டல்கள் வரலாம். அப்படி வந்தால் கண்டிப்பாக அதை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம்.

இருந்தாலும்  அந்தப் போராட்டத்தில் ஒரு  சமநிலை இருக்க வேண்டும். அதாவது ஒரு சமச் சீர் இருக்க வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா?




அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள் எனும் இந்த இரண்டு உரிமைகளும் மீறப் படாமல்... ஒரு சமநிலையில் அந்தத் தேசியப் பாதுகாப்புப்  போராட்டம் இருக்க வேண்டும்.

நீதிக் கொள்கைகள் என்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட மனிதக் கொள்கைகள். மனிதம் பேசும் மனசாட்சிக் கொள்கைகள்.

என்னதான் வந்தாலும் போனாலும், அந்த இயற்கையின் நீதி நியாயமானக் கொள்கைகள் நிலை நாட்டப்பட வேண்டும். அதே சமயத்தில் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றைக்கும் மீறப்படக் கூடாது. சரி.

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள். இந்த இரண்டு உரிமைகளும் நிலை நாட்டப் படுவதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. 




அது மட்டும் அல்ல. அந்தப் பாரபட்சம் இல்லாமை என்பது காலா காலத்திற்கும் நீடிக்கப்பட வேண்டும். அதாவது அரசு நிர்வாக அதிகாரிகளும் சரி; காவல் துறை அதிகாரிகளும் சரி; இரு தரப்பும் இணைந்து சேவை செய்ய வேண்டும்.

சோஸ்மா தெரியும் தானே. கடுமையான தடுப்புக் காவல் சட்டம். பலரும் எதிர்த்துப் போராடும் சட்டம்.

பக்காத்தான் அரசாங்கத்தைப் பொருத்த வரையில், அந்தச் சோஸ்மா சட்டம் என்பது மேலே சொல்லப்பட்ட அந்தச் சமநிலைக்குச் சாதகமாக அமையவில்லை என்பதே நம்முடைய கருத்து. மன்னிக்கவும்.

2012-ஆம் ஆண்டில் இந்தச் சோஸ்மா நடைமுறைக்கு வந்தது. அதில் இருந்து நூற்றுக் கணக்கான பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கால வரையறை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 




இதற்கு முன்னர் ஐ.எஸ்.ஏ. எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Internal Security Act, Malaysia) அமலில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

1960 ஜுன் 20-ஆம் தேதி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் சட்டமாக அங்கீகரிக்கப் பட்டது. 1972 ஆகஸ்டு 1-ஆம் தேதி திருத்தப் பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.

(Act No. 18 of 1960) Revised: 1972 (Act 82 w.e.f. 1 August 1972)

எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், விசாரணை இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது.




இந்தச் சட்டத்தின் கீழ், தொழிற்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வலைப் பதிவாளர்களும், ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

2005-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் 44 ஆண்டு கால வரலாற்றில் 10,662 பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 4,139 பேர் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப் பட்டு இருக்கிறார்கள். 2,066 பேர் இடம் பெயர்த்தப் பட்டு இருக்கிறார்கள்.

2013-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, அந்தச் சட்டத்தின் கீழ் 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

தவிர 1984 - 1993-ஆம் ஆண்டுகளில் (பத்தாண்டுகள்) அந்தச் சட்டத்தின் கீழ் 12 பேர் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள்.




தடுப்புக் காவல் முறையை 1948-இல் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர். மலாயா அவசர காலத்தின் போது மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியினர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக, தடுப்புக் காவல் முறை மலாயாவில் அமலுக்கு வந்தது. அன்றைய காலத்தில், அதாவது 1948-இல், தடுப்புக் காவல் முறை ஓர் அவசரகாலச் சட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டு இருந்தது. அந்தச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சர். எட்வர்ட் ஜெண்ட் எனும் பிரித்தானிய உயர் ஆணையர் ஆவார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தற்காலிகமாக, ஓர் ஆண்டு காலத்திற்குத் தடுப்பு காவலில் வைக்க முடியும். வன்முறைகளைக் கட்டுப் படுத்துவதே அந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. 1960-ஆம் ஆண்டு மலாயாவில் அவசர காலம் முடிவுக்கு வந்தது. மலாயா அவசரகாலச் சட்டமும் நீக்கப் பட்டது.

ஆனாலும் மலாயா அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக, 1960-ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் 149-ஆவது விதியின்படி, புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 




இருப்பினும், மலாயா அவசரகாலச் சட்டத்திற்கு இணையான தடுப்புக் காவல் முறை மட்டும், இதுநாள் வரையிலும் தக்க வைக்கப்பட்டு வருகிறது. அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

மலாயாவின் அவசரகாலத்தின் போதும் அதன் பின்னரும் கம்யூனிசச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிகைப்படியான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களும் உறுதியாகவும் திடமாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு கமுந்திங், சுங்கை ரெங்கம் தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப் பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பலமான அதிருப்திகளையும், மனக் கசப்புகளையும் ஏற்படுத்தி வந்தன. ஆளும் கட்சியின் அரசியல் நிலைத் தன்மையில் குறை காண்பவர்களின் மீது அந்தச் சட்டம் எகிறிப் பாய்ந்தது.




மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நடுநிலையான மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றும்; அது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும்; பரவலான அதிருப்திகள். நெடுநாட்களாகப் பொதுமக்களிடம் நீறு பூத்த நெருப்புகளாய்க் கனன்று வந்தன.

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், திருத்தி அமைக்கப்படும் என்று மலேசியாவின் முன்னாள் உள்துறை டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் கூறினார். அவர் காலத்திலேயே திருததமும் செய்யப் பட்டது. அந்தத் திருத்தத்தில் உருவானது தான் சோஸ்மா.

அதே அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாகத் தான் சோஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

சோஸ்மா சட்டத்தை அறிமுகம் செய்தவர் பிரதமர் நஜீப். 2012 ஜுன் 22-ஆம் தேதி சட்டமாகப் பிரகடனம் செய்யப் பட்டது. மரணதண்டனை வழங்குவதற்கும் சோஸ்மா சட்டம் அனுமதி அளிக்கிறது.

இப்போதைய பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்... ஆட்சிக்கு வந்தால் அந்தச் சோஸ்மா சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. சொன்னது சொன்னது தான். இருப்பினும்  மக்களுக்கு எதிராக இன்றும் சோஸ்மா பயன்படுத்தப் படுகிறது.




Thus far, as reported, more than 2,000 people have been detained under the Security Offences (Special Measures) Act 2012 (Sosma), 475 under the Prevention of Crime (Amendment) Act 2015 (Poca) and nine under the Prevention of Terrorism Act (Pota) in the country.

மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இவைதான். அண்மையில் சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 12 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அவர்கள் தவறு செய்து இருந்தால்... செய்ததற்கான சான்றுகள் இருந்தால்... அவற்றின்படி அவர்கள் மீது மற்ற குற்றவியல் சட்டங்களின் கீழ் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும்.

அது மட்டும் அல்ல. மற்றும் ஓர் எதிர்பார்ப்பு. விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க அனுமதி அளிக்கும் மற்ற மற்ற அனைத்துச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான வேண்டுகோள். 




சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் உடனடியாக ஒரு நீதிபதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீது முறைப்படி குற்றப் பதிவுகள் செய்யப்பட வேண்டும்.

ஒரு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அவையே மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள். அவையே மலேசிய இந்தியர்களின் அவசரமான எதிர்பார்ப்புகள். பக்காத்தான் அரசாங்கம் நிறைவேற்றுமா?

சான்றுகள்:
1. https://www.malaysiakini.com/letters/175537

2.http://www.federalgazette.agc.gov.my/eng_main/main_akta.php?jenis_akta=Baru3.https://www.malaysianbar.org.my/human_rights/national_security_and_constitutional_rights_the_internal_security_act_1960.html



பேஸ்புக் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: 1969 மே 13 நாள் போராட்டம் அப்போது நடந்த தேர்தலில் DAP பெற்ற வெற்றியின் எதிரொலிதான். அந்த கறுப்பு நாளுக்கு வித்திட்டவர்தான் இன்றும் DAP யின் மக்கள் ஆதரவை நிர்மூலமாக்க சொஸ்மாவை கருவியாக்கி இருக்கிறார். சீனர்களையும், இந்தியர்களையும் மறைமுகமாக மிரட்டுகிறார்கள்.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகக் குற்றவியல் சட்டங்கள் (பினல் கோட்) உள்ளன... ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடியாது... சான்றுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும்...சோஸ்மாவினால் பொதுவாக அரசியல் எதிரிகள் தான் பாதிக்கப் படுகிறார்கள்...

Varusai Omar: May 13 அப்பொழுது நாள் பர்மா ரோடு, பினாங்கு நிலையத்தில் 3 நாட்கள் வெரும் நாசி லெமாக் மட்டும் உணவு. அதுவும் எங்கள் பொதுத் தலைவர் (டான்ஸ்ரீ) ஜைநால் ஆலாம் அவர்களின் கருணையால்)

ஓம் நம சிவாய >>> M R Tanasegaran Rengasamy: உண்மை ஐயா ..

Thanabaal Varmen: நியாயனமான கோரிக்கை, நிறைவேற்றுமா நம்பிக்கை கூட்டணி???

Muthukrishnan Ipoh:
நம்முடைய வேண்டுகோளை நாம் முன்வைப்போம்... அலிரான், சுகாகோம் போன்ற அரசு சாரா இயக்கங்களும் சோஸ்மாவை அகற்றச் சொல்லி குரல் எழுப்புகின்றன...

Varusai Omar:
அவர்களே குழப்பக் குரிசில்களாக இருக்க, உங்க கோரிக்கை எல்லாம் கேட்க நோ டைம், கவான்!

Thanabaal Varmen >>> Varusai Omar: அதுவும் சரிதான்!!!

Varusai Omar: அவாள் எல்லாம் ரொம்ப பிசி... அவங்க பிரச்சினைகளை தீர்க்க முடியாம... சிண்டு பிடி சண்டை நடப்பதாக நம்ம கருத்து கண்ணாயிரம்...  மூக்கு கடை முனுசாமி சொல்லிக்கினாப்லே...

Varusai Omar >>>Thanabaal Varmen: வேற வழி? நம்ப தலையெழுத்து... காலத்துக்கும் துன்பப்பட்டுத் தொலைக்கனும்னு தமிழன் தலையெழுத்து தனபால்…

Narinasamy Karpaya: அருமையான பதிவு! அரசு உடன் கவனித்தால் நல்லது!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஐயா...

Ramarao Ramanaidu >>> Narinasamy Karpaya: இதெல்லாம் மகாதிர் கண்ணுக்குத் தெரியாது சார் ...

Narinasamy Karpaya >>> Ramarao Ramanaidu: மொழிபெயர்த்துச் சொல்ல நிச்சயமாக ஆள் இருப்பார்கள்!!

Ramarao Ramanaidu >>> Narinasamy Karpaya: அப்படி என்றால் தமிழில் தான் மொழி பெயர்த்துத்தர வேண்டும் சார் ...

Neela Vanam: மிகச்சரியாக எழுதி இருக்கிறீர்கள் ஐயா

Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க...

Dato Maneyvannan Velue: அம்பு ஏய்தவனிடம் கிளி அடைக்கலம் கேட்டதாம்

Muthukrishnan Ipoh: சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது எனும் காலத்துக் கட்டாய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம்... அதுதான் சார் உண்மை...

Balan Muniandy: மதவாதமும் தீவிரவாதமும் உலகில் வென்றதாக வரலாறு இல்லை ,இவை அனைத்துமே அழிவின் அடையாளமகத்தான் இருக்கும்

Muthukrishnan Ipoh: உண்மைதான் தம்பி... மதவாதம் என்பது தீவிரமான ஒரு புதிய இலக்கை நோக்கித் துரிதமாகப் பயணிக்கின்றது... அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது...

Letchumanan Nadason: நீதி நிலைநிறுத்தப் படவேண்டும். தெளிவான பதிவு.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... நீதி நிலைக்க வேண்டும்...நம் எதிர்பார்ப்புகள் ஐயா...

Sambasivam Chinniah: Vaazhga Valamudan. Vaazhga Tamil.

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள் ஐயா...

KR Batumalai Robert: Justice.

Muthukrishnan Ipoh: Yes... Justice must be done...

Shree Rau: May GodBless

Muthukrishnan Ipoh: We move till we get a fair trial...

Jsr Chandra: Aiya ippotu ivargalai kappaddra mudiatha

Muthukrishnan Ipoh: சோஸ்மாவின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் விடுவிக்கப் படுவார்கள்...

Muthukrishnan Ipoh: https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_21.html
மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள்

M Kabilan Mohan; Paramathayalan Naidu; Kavi Arasan;

Muthukrishnan Ipoh: நன்றிங்க

தமிழரசு முனுசாமி: மதவெறிப் பிடித்தவர்களும் இனவாதம் நிறைந்த மனம் உடையவர்களிடம் மனிதம் எதிர்பார்க்கலாமா... காலம் தான் பதில் கூற வேண்டும்.

Muthukrishnan Ipoh: எதிர்பார்க்க முடியாது தான் தம்பி... ஆனாலும் விவேகமான முறைகளில்... பணிவான தோரணங்களில் அழுத்தங்களைக் கொடுப்போமே... வன்செயல்பாடுகளைத் தவிர்ப்போமே...

Balan Muniandy:
நல்லவர் லச்சியம் வெல்வது நிச்சயம் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

M R Tanasegaran Rengasamy: ஆண்டாண்டு காலம் இந்த நாட்டை சுபிட்சமாக்க விசுவாசத்துடன் போராடிய இனத்தை யாரோ ஒருவரை திருப்திப் படுத்த பண்டிகை கால சமயத்தில் கைது செய்து அவஸ்தைப் பட வைக்கிறார்கள். சிறு பிள்ளைகளின் கோரிக்கைகள் கூட அவர்கள் காதில் விழவில்லை. புதியவர்களை நம்பியதுக்கு கைமேல் பலன் கிடைத்து உள்ளது. முதுகில் குத்தி விட்டார்கள். இந்நிலை நிச்சயம் மாறும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மிதமாகக் கொண்டாடுவோம்.

Manikam Manikam Manikam: சொஸ்மா, சொஸ்மா, சொஸ்மா இது எப்ப ஒழியும், அவங்க எப்ப குடும்பத்துடன் இணைந்வார்கள், இறைவனை நோக்கி பிராத்தனை செய்கிறேன், அருப்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை, அருப்பெருஞ்ஜோதி

Venogobaal Kuppusamy: அனைவரும் படித்து செயலூக்கம் பெற வேண்டும்! வாழ்த்துக்கள்!

Murugan Rajoo: கசாப்பு கடைக்காரிடம் கரிசனம் எதிர்பார்க்க முடியுமா

மாரியப்பன் முத்துசாமி: எய்தவன் இருக்க அம்பை நோவதேன்

மாரியப்பன் முத்துசாமி: சத்தியம் வெல்லும்

Ilan Murugan: Tun will not help...

Muthukrishnan Ipoh: It is our duty to put forward our request.. and our feelings...

Khatir Rasen: ஒருவரிடம், நம் எதிர்காலம் - நம்பிக்கை எனும் தடியை கொடுத்தோம். அவர் அதை ஈட்டியாக்கி நம் முதுகில் குத்துகிறார்.

Chandran Vinod: Where is the justice.

Tamggam Janu: உண்மையே வெல்லும்

Natarajan Surendran: பிரதமர் மகாதிர் முகமது இந்த சட்டத்தை நிச்சயமாக ரத்து செய்ய மாட்டார்...

Sanjiv Manoharan: Senjiruvan... Innuma inthe ulagam aveneh nambethu?

Nanda Mg: தீவீரவாதத் தூண்டல்கள் செய்யும் நாடுகள் அல்லது தனி நபர்கள் , இறுதியில் புனிதராகி விடுகின்றனர்! மண்ணுக்கும் விடுதலைக்கும் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தான் நியாயமா?

Muthukrishnan Ipoh: சத்தியம் ஜெயிக்க வேண்டும்... நீதி நிலைக்க்க வேண்டும்... கடைசி வரை அழுத்தங்களைக் கொடுப்போம் ஐயா...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக