08 அக்டோபர் 2019

மலேசியாவில் தமிழ் மொழியைக் காப்போம்

ஒவ்வொரு மனித இனத்திற்கும் ஒவ்வொரு நாகரிகம் உள்ளது. அந்த ஒவ்வொரு நாகரிகத்திற்கும் ஒவ்வோர் அடையாளம் உள்ளது.
அந்த இனத்தின் மொழிக்கு அடையாளமாக இருப்பது அந்த இனத்தின் தாய்மொழி.

தமிழர்களுக்கு அடையாளமாக இருப்பது தமிழ் மொழி. ஆயிரம் கங்கையில் குளித்தாலும் தமிழர்களின் தாய்மொழி தமிழ்மொழியே!

மலேசியாவில் நம் தமிழ் மொழியைக் காப்போம்... நம் தமிழ்ப் பள்ளிகளைக் காப்போம்...


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Krishnan Ramiah  உலகிலேயே மிகவும் கடினமான வேலை எதுவென்றால் ஒரு தமிழனை, தான் ஒரு தமிழன் என்று உணர வைப்பது தான்.

Muthukrishnan Ipoh நன்றாகச் சொன்னீர்கள் ஐயா... மிகவும் சிரமம்...

Khavi Khavi ஏனென்றால் தனிநாடற்ற தமிழர் என்பவர் தம்மை இந்தியன் என்று அடையாளப் படுத்தி கொண்டதன் விளைவு. இந்தியன் என்பது ஒரு குடியுரிமையின் அடையாளம். மனிதர் என்பவரின் அடையாளம் எனப் படுவது அவர்தம் வாய்வழக்கே. அவர் சார்ந்த சமூகம் புழங்கும் மொழியே. தமிழ் வணக்கம்..
 
Manikam Manikam Manikam என்ன நடக்கும் என்று சொல்வதற்கு இல்லை; இன வெறி தலை விரித்துப் போகிறது ஐயா!

Muthukrishnan Ipoh நல்லா இருக்கிற நாட்டை இந்த அரசியல்வாதிகள் கெடுத்துக் குட்டிச்.... மாற்றி வருகிறார்கள்

Hamba Mu Umar Umar

No photo description available.
 
Tamil Zakir Image may contain: 2 people, text Raja Mutukumar

Image may contain: 1 person, standing and text

Nathan Perumal

Image may contain: flower and text
 
Melur Manoharan "இனிய" மதிய வணக்கம்...
  
 Image may contain: outdoor and water
 
Moon Noom ஜாவி எழுத்துக்கு முடிவு
 
Yogavin Yogavins Send all our kids to Tamil school only...
 
Rajendran Pakirisamy வாழ்த்துகள்.... Hide or report this
 
Neela Vanam யாரைத்தான் நம்புவதோ !!! 

Sathya Raman   வணக்கம் சார். மழை விட்டாலும் துவானம் விடாது போலிருக்கே? 2026-இல் எல்லாம் தமிழ் பள்ளிகளையும், சீனப் பள்ளிகளையும் முற்றாக துடைதொழிக்க வேண்டுமாமே? மண்டையில் மசாலா இல்லாதவர்கள் இன்னும் எத்தனைக் காலம் தான் இந்த விசயத்தையே வைத்துக் கொண்டு தொங்குவார்களோ?

இவர்கள் சொல்லி விட்டால் நாம் கேட்டுவிட்டு வாய் பொத்தி மூலையில் முடங்கி விடுவோமா? இந்த நாட்டில் என்ன இன ஒற்றுமை பாதிக்கப் படுகிறதென்று ஒரு பைத்தியம் உளறிக் கொட்டுகிறதோ தெரியவில்லை?

உலகமே தேடுகிற ஒரு ஆளை வைத்து இஸ்லாம் மதத்தில் சேர ஆள் பிடிக்கிற வேலை சரியாக நடக்கவில்லை என்பதற்காக தமிழ், சீனப்பள்ளிகள் ஒற்றுமையை வளர்க்கவில்லையாம்?

பல்கலைக்கழகத்திற்குப் போய் படித்துப் பட்டம் பெற்றும் மூளையைத் துருப்பிடிக்க வைக்கும் செயலைப் பார்த்து உண்மையிலேயே வெட்கப்பட வேண்டும். மும்மொழி பள்ளிகளால் தான் மலேசியாவின் ஒற்றுமை சீரழிகிறது என்று சிறிதும் யோசிக்காமல் பேசி இருக்கும் அவர் அரபு நாடுகளில் முழுக்க, முழுக்க இஸ்லாமியர்களே இருப்பதால் அங்கே ஒற்றுமை உலகப் புகழ் பெறுகிறதா?

எங்கும் உள் நாட்டுச் சண்டை என சொந்த சகோதர இனங்களிடையே இரத்தக் களரியை ஏற்படுத்தி கொன்று குவித்து வரும் விசயம் எல்லாம் பாவம் இந்த மேதாவிகளுக்கு தெரியாது போலிருக்கிறது?

இந்த அரை வேக்காடுகள் எல்லாம் இப்படி மேடை போட்டு மற்ற இனங்களின் மனங்களைப்பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் கருத்து சொல்கிறார்கள் என்றால் இதற்கு பின்னால் இருந்து இப்படி பேசச் சொல்லி அனுமதித்தது யார் என்றெல்லாம் நாம் அறிந்ததே. இந்த நாடு அமைதியாக இருக்க இந்த அரசியல் வாதிகளே விரும்புவதில்லை, விடுவதுமில்லை.

மலாய்க்காரர்களின் கௌரவத்தைக் காப்பாற்றும் அளவிற்கு அதை யார் கெடுத்தார்களாம்? அவ்வப்போது தேவை இல்லாமல் இத்தகைய பிரச்சாரங்களை நடைபெற வைத்து நாட்டின் சுபிட்சத்தையும், ஒற்றுமையையும் சீரழிப்பது மலாய்காரர்களாகிய இவர்களே ஒழிய தமிழரோ, சீனரோ அல்ல.

இந்தப் பிரச்சனையை இப்படி அடிக்கடி பிசுபிசுக்க வைப்பதனால் ஒன்று நம் தமிழ் பள்ளிகளை இவர்களால் எளிதில் அபகரிக்க முடியாது.

இந்நாட்டில் கடைசி சீனர் இருக்கும் வரை நம் தமிழ்ப் பள்ளிகூடங்களும் வாழும். சுயக்கட்டுபாடு உள்ளவனே சுதந்திர மனிதன். சொற்களை விட செயல்கள்தாம் உரக்கப் பேசும். பேசுபவர்கள் எதையாவது பேசட்டும். 2008-இல் நாம் ஏற்படுத்திய ஒரு புதிய சகாப்த்ததை, அரசியல் அலையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். நாமும் செயலில் காட்ட முற்படுவோம்.

கல்வெட்டில் கால் பதித்த தொன்மையான தமிழ் மொழியை அதன் சார்ந்த பள்ளிகளை இந்நாட்டு தமிழர்களிடம் இருந்து பறிக்க நினைக்கும் பராரிகளை நாமும் பந்தாடுவோம். இந்நாட்டில் தமிழ், சீனப்பள்ளிகள் வேண்டாமா.

இந்தப் பள்ளிகளால்தான் இந்நாட்டின் புனிதம் கெடுவதைப் போல் சதா பேசி, குழப்பத்தை உண்டு பண்ணுபவர்களிடம் ஏன் மலாய் பள்ளிகளையும் மூடிவிட்டு முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளிகளை அமுல் படுத்த வக்கு இருக்கிறதா என்ற கேள்வியையும் முன் வைப்போம்?

"கடலில் எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் கப்பலை மூழ்கடித்த முடியாது. கப்பலின் உள்ளே தண்ணீர் புகுந்தால் மட்டுமே கப்பலை மூழ்கடிக்க முடியும்”. அதே போல தான் சிலரின் ஆர்ப்பரிப்புக்கு எல்லாம் நாம் அலட்டிக் கொள்ளவே கூடாது. நல்லதைச் செய்வோம்... நல்லதைப் பார்ப்போம்... நலமாகவே வாழ்ந்து, தமிழோடும், தமிழ்ப் பள்ளிகளை ஆராதித்து அரவணைப்போம்.

Varusai Omar அந்த உணர்வு திணிக்கப்படுவதல்ல! மனதளவில் ஊற்றெடுத்து பொங்கிப் பிரவகிக்க வேண்டும். சட்ட திட்டங்களுக்கும் அப்பாற்பட்டதோர் உன்னத உணர்வு. சொல்லி விளக்க முடியாது ஐயா! ரசித்து ருசித்து அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்தது புரிந்தது!!!

அதில் மாற்றுக் கருத்தும் இருக்க முடியுமோ? என்னாவோ கடந்த வாரம் ஒரு குணக் கேடன் சொன்னானாமே? இன்னும் ஆறு ஆண்டுகளில் இனம் சார்ந்த பள்ளிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென... ஒரு கூகை கூகக் கூரலிட்டதாமே? நடக்குமா? நடக்கவிட்டு விடுவோமா மானமுள்ள தமிழா. எங்கே உன் பதில் குரல்?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக