தமிழ் மலர் - 23.11.2019
சிலாங்கூர் மாநிலத்தில் அனைவரின் பார்வையையும் ஈர்க்கும் பள்ளி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் சிறப்பாகக் காணப் படுகின்றன.
அதற்கு மூலகாரணமாகப் பல நல்லுள்ளங்களும் நன்கொடையாளர்களும் விளங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பள்ளியின் வாரியத் தலைவரும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமாகிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன்.
அவரின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி கட்டடத்தில் பள்ளியின் பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு மேல் ’ஓம்ஸ் ப. தியாகராஜன் அறிவகம்’ என்று பெரிய எழுத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைத் தத்தெடுத்து இன்று அந்தப் பள்ளியின் பல்வேறு உருமாற்றங்களுக்கு வித்திட்டவர் இவர் என்றால் அது மிகையாது.
ஆனால் நேற்று ஒரு தமிழ் நாளேட்டில் அதன் ஆசிரியர் எழுதிய ’சுடும் உண்மைகள்’ பகுதியில் தமிழ்ப் பள்ளிகளின் மேன்மைகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் சிம்பாங் லீமா தமிழ்ப் பள்ளியின் புகைப்படம் ஒன்று இடம் பெற்று இருந்தது. அந்தப் புகைப்படத்தில் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி கட்டடத்தில் பொறிக்கப்பட்டு இருந்த ’ஓம்ஸ் ப. தியாகராஜன் அறிவகம் என்ற பெயர் மறைக்கப்பட்டு இருந்தது.
ஒரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஒருவர் பிரதிபலன் பாராது வித்தாக இருந்து உள்ளார் என்றால் அதை இந்திய சமுதாயம் மட்டுமின்றி தமிழ் ஊடகங்களும் கட்டாயம் வரவேற்க வேண்டும்.
இனியாவது இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு உண்மையை உண்மையாய் எழுதச் சுடும் உண்மைகளின் உண்மை ஆசிரியர் துணிய வேண்டும்.
–மோகனதாஸ்
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்
சிலாங்கூர் மாநிலத்தில் அனைவரின் பார்வையையும் ஈர்க்கும் பள்ளி சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி. இப்பள்ளியில் அனைத்து வசதிகளும் சிறப்பாகக் காணப் படுகின்றன.
அதற்கு மூலகாரணமாகப் பல நல்லுள்ளங்களும் நன்கொடையாளர்களும் விளங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் பள்ளியின் வாரியத் தலைவரும் ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமாகிய செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியைத் தத்தெடுத்து இன்று அந்தப் பள்ளியின் பல்வேறு உருமாற்றங்களுக்கு வித்திட்டவர் இவர் என்றால் அது மிகையாது.
ஆனால் நேற்று ஒரு தமிழ் நாளேட்டில் அதன் ஆசிரியர் எழுதிய ’சுடும் உண்மைகள்’ பகுதியில் தமிழ்ப் பள்ளிகளின் மேன்மைகள் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஒரு தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சிக்கு ஒருவர் பிரதிபலன் பாராது வித்தாக இருந்து உள்ளார் என்றால் அதை இந்திய சமுதாயம் மட்டுமின்றி தமிழ் ஊடகங்களும் கட்டாயம் வரவேற்க வேண்டும்.
இனியாவது இதுபோன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு உண்மையை உண்மையாய் எழுதச் சுடும் உண்மைகளின் உண்மை ஆசிரியர் துணிய வேண்டும்.
–மோகனதாஸ்
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் பெற்றோர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக