மலேசியாவின் மூத்த அரசியல்வாதி ராயிஸ் யாத்தீம். சில மாதங்களுக்கு முன்னர் மலாயா தமிழர்களைப் பற்றி ஒரு தப்பான வியாக்கியானம் செய்து இருந்தார். 1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று கூறி இருந்தார்.
ஆசியா பசிபிக் சமூக அறிவியல் சஞ்சிகை (Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2) July-Dec 2013, pp.205-229); 2013-ஆம் ஆண்டு ஜுலை - டிசம்பர் இதழில் பக்கம்: 225-இல் புள்ளி விவரங்கள் உள்ளன. அதை அவர் பார்த்து இருந்தால் அப்படி ஒரு தப்பான தகவலைச் சொல்லி இருக்க மாட்டார்.
1844-ஆம் ஆண்டு; அந்த ஆண்டில் தான் முதன்முதலில் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தமிழர்கள் மலாயாவுக்கு கொண்டு வரப் பட்டார்கள்.
இதற்கும் முன்னதாக 1837-ஆம் ஆண்டு 2000 தமிழர்கள் பினாங்கிற்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள்.
Asia Pacific Journal of Social Sciences, Vol.5(2), July-Dec 2013, pp.205-229
ஆனால் அது அதிகாரப்பூர்வமற்ற குடியேற்றம். மெட்ராஸ் மாநிலத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரியாமல் தமிழர்கள் பினாங்கில் உள்ள கரும்புத் தோட்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கிறார்கள். இதைப் பற்றிய விவரங்கள் ஒரு தொடர் கட்டுரையாக விரைவில் வெளிவரும்.
மலாயா தமிழர்கள் பற்றிய சில புள்ளிவிவரங்களை வழங்கி இருக்கிறேன். ஆச்சரியமாக உள்ளது. பாருங்கள். 1934-ஆம் ஆண்டு 70 ஆயிரம் பேர்; 1937-ஆம் ஆண்டு ஒரு இலட்சம் தமிழர்கள் மலாயாவுக்கு வந்து இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நான்கு மில்லியன் தொழிலாளர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். அதாவது இரண்டாம் உலகப் போர் வருவதற்கு முன்னர். வந்தவர்களில் முக்கால்வாசி பேர் திரும்பிப் போய் விட்டார்கள்.
ஆக மலாயாவுக்குத் தமிழர்கள் தொழிலாளர்களாக முதன்முதலில் வந்தது 1837-ஆம் ஆண்டு. இதை மூத்தவர் ராயிஸ் யாத்தீம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.
1930-ஆம் ஆண்டில் தான் மலாயாவுக்குத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள் என்று சொன்னது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிதைவு. மலாயா தமிழர்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். வயதிலும் அரசியல் கலையிலும் மூத்த ஒருவருக்கு அதுவே அறிவார்ந்த அழகு.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.09.2020
சான்றுகள்:
1. Indian Labour Immigration to Malaysia 1844 - 1941
2. Sandhu, K.S (2010), Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786-1957)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக