30 அக்டோபர் 2020

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச் சீட்டில் தமிழ்

தமிழ் மலர் - 30.10.2020

அமெரிக்க அதிபர் தேர்தல் ஓட்டுச் சீட்டில் தமிழ் உள்ளிட்ட 6 இந்திய மொழிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்காக பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களும் ஓட்டளித்து வருகின்றனர்.

இதில் சான்டா கிளாரா பகுதி மக்கள் சமீபத்தில் ஓட்டளித்தனர். இதற்காக வைக்கப்பட்ட ஓட்டு பெட்டியில் ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட மொழிகளுடன் 6 இந்திய மொழிகளும் இடம் பெற்றிருந்தன. ஓட்டு பெட்டி, வாக்காளர் விண்ணப்பப் படிவம், வாக்காளர்கள் ஓட்டளிக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் போன்றவை இந்திய மொழிகளிலும் வழங்கப் பட்டுள்ளன.

தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி, உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வாக்காளர் விண்ணப்பப்படிவம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டிரம்ப் மற்றும் ஜோ பிடன், அமெரிக்கா வாழ் இந்தியர்களை குறி வைத்தே தங்களின் தேர்தல் பிரச்சாரங்களை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக ஜனநாயகக் கட்சி தங்களின் தேர்தல் டிஜிட்டல் விளம்பரங்களை 14 இந்திய மொழிகளில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக