தமிழ் மலர் - 11.11.2020
அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கும் கமலா ஹாரிஸின் தாயார் ஒரு கள்ளக்குடியேறி என அறிவித்து விட்டு அதற்காக மன்னிப்புக் கோரிய டி.வி.3-இன் போக்கு கண்டிக்கப்பட வேண்டும்.

மன்னிப்புக் கேட்டு விட்டால், செய்த தவறுக்குத் தீர்வு கிடைத்து விட்டது என்று அர்த்தமா? தவறான செய்தியை வெளியிட்ட இந்தப் பொறுப்பாளர்கள் உடனே பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அடுத்து வரும் பொறுப்பாளர்கள் தங்கள் கடமையைச் சரியாகச் செய்வார்கள்.
இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்று மலேசியப் பிரதமருக்குத் தெரியாதா? அவர் ஏன் இதைப் பற்றி இன்னும் தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை?
காஷ்மீர், பிரான்ஸ், ஸக்கீர் நாயக் போன்ற விசயங்களிலும் மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும். இதில் இந்தப் பிரச்சினை வேறு.
நம்நாட்டு அரசியல் வாதிகள் ஏன் பிறநாட்டுப் பிரச்சினைகளில் தலையிடுகின்றனர் என்று தெரியவில்லை. தங்களை ஒரு ஹீரோ எனக் காட்டிக் கொள்ள இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளைச் செய்கிறார்களா?
இப்படி தவறாக எடுக்கும் ஆயுதம் நம் நாட்டை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் என்பதை இவர்கள் அறிவார்களா என தைப்பிங்கைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மேஜர் ஏ.முனுசாமி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக