காஜாங் செமினி தோட்டம் (Semenyih Estate Kajang) 1896-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அந்த ஆண்டில் 350 தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப் பட்டார்கள். அதற்கு முன்னர் அது ஒரு காபி தோட்டம். ஏற்கனவே 1880-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டத்தில் 20 தமிழர் குடும்பங்கள் இருந்தன. 140 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி.
1898-ஆம் ஆண்டில் ரப்பர் கன்றுகள் நடப்பட்டன. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1904-ஆம் ஆண்டில் முதல் ரப்பர் மரம் சீவப்பட்டது. வருடத்தைக் கவனியுங்கள். 1896.
இந்தத் தோட்டத்தின் பரப்பளவு 709 ஏக்கர். 1898-ஆம் ஆண்டில் 54 ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டது. 1905-ஆம் ஆண்டில் 38 ஏக்கர். 1906-ஆம் ஆண்டில் 200 ஏக்கர். 1907-ஆம் ஆண்டில் 329 ஏக்கர்.
மேலும் 90 ஏக்கர் காடுகள் அழிக்கப் பட்டன. காஜாங் செமினி தோட்டத்திற்கு வந்த மூத்த தமிழர்கள் தான் செமினி பாசா காடுகளை அழித்தார்கள். செம்மண் சாலைகளை அமைத்தார்கள். செமினி ரப்பர் தோட்டத்தை உருவாக்கினார்கள். அந்தத் தோட்டத்தில் 1907-ஆம் ஆண்டில் மொத்தம் 81,162 மரங்கள் இருந்தன.
1906 ஜூன் மாதத்தில் 4,635 பவுண்டு ரப்பர் அறுவடை செய்யப்பட்டது. இந்த ரப்பர் இலங்கையில் விற்கப்பட்டது. அதே 1906-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் 400 பீக்கள் காபி உற்பத்தி செய்யப்பட்டது.
இந்தத் தோட்டம் இலங்கையில் இருந்த ஆசிய ரப்பர் தயாரிப்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது (Asiatic Rubber Produce Company, Ltd., of Ceylon).
அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள்: ஜி. எச். ஆல்ஸ்டன் (G. H. Alston); ஈ.எம். ஷாட்பாக் (E. M. Shatfock); ஆர்.எப்.எஸ். ஹார்டி (R. F. S. Hardy); சி. டி. ரோட்ச் (C. D. Rotch); செமினி தோட்ட நிர்வாகி: மிட்சல் (C. Mitchell).
முதலில் இந்தத் தோட்டம் லா பூன் டிட் (Lau Boon Tit) என்பவருக்குச் சொந்தமானது. அவரிடம் இருந்து 1906 ஜனவரியில் வாங்கப்பட்டது.
இந்தத் தோட்டம் காஜாங் இரயில் நிலையத்தில் இருந்து ஏழு மைல் தொலைவிலும்; செமினி கிராமத்தில் இருந்து ஒரு மைல் தொலைவிலும் அமைந்து இருந்தது. இதற்கு இருபத்தி இரண்டாம் கட்டை தோட்டம் என்றும் உள்ளது. தோட்டத்திற்குள் மாட்டு வண்டிகளில் தான் செல்ல முடியும்.
1920-ஆம் ஆண்டில் 120 குடும்பங்கள் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டன. 30 குடும்பங்கள் பக்கத்துத் தோட்டங்களுக்குப் புலம் பெயர்ந்தன. ஒரு கேள்வி. 140 ஆண்டுகளுக்கு முன்னால் செமினி காட்டை அழித்துச் செப்பனிட்டவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா? அப்படி அழைப்பதற்கு ஒரு விவஸ்தை வேண்டாமா?
மலாயா தமிழர்கள் இங்கு வந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் பக்கத்து நாட்டில் இருந்து கப்பலேறி வந்த பட்டி தொட்டி மட்டும் ஒரு நாட்டின் பெரிதான மந்திரி பதவியை எல்லாம் வகிக்க முடியும். மண்ணின் மைண்டர் ஆக முடியும்.
ஆனால் இவர்களுக்கு முன்னால் வந்த தமிழர்களுக்கு எல்லாம் வந்தேறிகள் எனும் பட்டயம். மனசாட்சி இல்லாதவர்களைப் பார்த்து மனம் மௌனமாய் அழுகின்றது.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
10.03.2021
சான்றுகள்:
Source:
1. The British and rubber in Malaya, c1890-1940; James Hagan. University of Wollongong.
2. Twentieth century impressions of British Malaya - its history, people, commerce, industries, and resources. ARNOLD WRIGHT (London). LLOYD'S GREATER BRITAIN PUBLISHING COMPANY, LTD.,
1908.
3. Sandhu. K.S (2010). Indian in Malaya: Some Aspects of Their Immigration and Settlement (1786 - 1957), Mexico City: Cambridge University Press.
4. Table - 3.2 Indian Labour Immigration to Malaysia (1844-1941)
அருமை ஐயா...
பதிலளிநீக்குமிக்க நன்றிங்க
நீக்குKindly allow us to receive more of these evidences to support our stand in this secular country.We are oppressed and sidelined.
பதிலளிநீக்குதொடர்ந்து பயணிப்போம். நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டியது நம்முடைய இலக்கு. நன்றிங.
நீக்குமிக அருமை. நமது இனத்தை காப்பாற்றியே தீர மவண்டும்.
பதிலளிநீக்கு