தமிழ் மலர் - 21.03.2021
(English version is given below this main article. ஆங்கிலப் பதிப்பு இந்தக் கட்டுரைக்கு கீழே கொடுக்கப்பட்டு உள்ளது))
உலகில் அதிகமான கண்ணிவெடிகளைப் புதைத்துக் கொண்டு வாழும் நாடுகளின் பட்டியலில் லாவோஸ் நாட்டிற்கு தனி இடம். முதலிடம் வகிப்பது எகிப்து. அடுத்து வருவது அங்கோலா. அடுத்து ஈரான். அதற்கும் அடுத்து ஆப்கானிஸ்தான்; ஈராக்; சொமாலியா; சூடான் நாடுகள் வருகின்றன.
ஆனால் அதிகமாகப் பாதிக்கப்பட்டது கம்போடியா லாவோஸ் வியட்நாம் நாடுகள். பல இலட்சம் மக்கள் பலியாகி விட்டார்கள்.
லாவோஸ் நாட்டின் கண்ணிவெடித் துயரின் வேதனைத் துளிகள் அன்றாடம் கண்ணீர்க் கடலாய்க் காம்போதிகளைப் பாடிக் கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவின் உலகப் போலீஸ்காரர் வேலையில் இதுவரையிலும் 29,000 லவோஸ் மக்கள் பலி.
இருந்தாலும் அதைப் பற்றி லாவோஸ் மக்கள் கவலைப் படுவது இல்லை. வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம் என்று போராடிக் கொண்டு போகிறார்கள்.
அங்கே வலிமிகுந்த பழைய நினைவுகள். முதலில் பிரெஞ்சுக்காரர்களின் சுரண்டல்கள். அடுத்து ஜப்பானியர்களின் உருட்டல்கள். அடுத்து வியட்நாம் போரின் வேதனைகள். அடுத்து பாத்தட் லாவோ கம்யூனிஸ்டுகளின் நரபலிகள்.
அந்த வேதனைகளின் பின்விளைவுகளை லாவோஸ் மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள். பாவம் அவர்கள்.
அந்தப் போராட்ட வாழ்க்கையில் தங்களின் இந்து சமயப் பின்னணியையும் தமிழர்ப் பண்பாடுகளையும் அவர்கள் மறக்கவில்லை. அந்தத் தகைசால் விழுமியங்களைத் தக்க வைத்துப் போற்றிப் புகழ்ந்து பாராட்டி வருகிறார்கள்.
தென்கிழக்கு ஆசியாவில் லாவோஸ் ஓர் அழகிய நாடு. அற்புதமான நாடு. அமைதியின் அணிகலனாய் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. வண்ண வளப்பங்கள் வான் மேவுகின்ற வசீகர நாடு.
இயற்கை அன்னை வஞ்சகம் இல்லாமல் சீர் சிறப்புகளைச் சீதனமாக வாரி இறைத்துவிட்டுச் சென்று இருக்கிறார். எங்கு பார்த்தாலும் கரும் பச்சையில் கானகத்து மலைகள். இயற்கை எழில் கொஞ்சும் பனிச்சாரல் மேகங்கள். ஆழ்மஞ்சள் மீகோங் நதிக்கரைக் கரைகளின் (Mekong River) அழகிய செம்மண் காடுகள்.
இயற்கை அன்னை நேரம் காலம் பார்க்காமல் செதுக்கியச் சிற்பங்களாய் மலைக் குன்றுகள். சுவர்களில் புத்த ஜாதக ஓவியங்கள். மலை வாழ் மக்களின் மகத்தான படைப்புகள். காடுகளின் பரிசுகள். கானகத்தின் நிறை கொடைகள்.
இடை இடையே கோபுர வாசல்களாய் சுண்ணாம்புக் குகைகள். அக்கம் பக்கத்தில் பச்சை பசேல் கானகத்து ஓவியங்கள். நாடு முழுவதும் தோகை விரித்தாடும் வயல்காட்டுப் புல்வெளிகள். கூடவே தங்க ரத நெல்மணிக் கதிர்கள். வர்ணனை போதுங்களா. இன்னும் வேண்டுங்களா. நேரில் பார்த்தால் நெஞ்சம் பனிக்கும்.
மலேசியப் பரப்பளவில் மூன்றில் இரு மடங்கு. வடமேற்கே சீனா, மியான்மார். கிழக்கே வியட்நாம். தெற்கே கம்போடியா. மேற்கே தாய்லாந்து. அதன் தலைநகரம் வியன்டியன் (Vientiane). லாவோஸ் நாட்டைச் சுற்றிலும் நிலப்பரப்புகள். நீர்நிலைகள் எதுவும் இல்லை.
கிழக்கு ஆசியாவில் நிலத்தால் சூழப்பட்ட ஒரே நாடு. இருந்தாலும் நாடு முழுக்க கானகத்தின் பச்சை விரிப்புகள்; பசுமலைப் பளிங்குக் கம்பளங்கள். லாவோஸ் பல்வகைக் கலாசாரங்கள் கொண்ட நாடு. 55 விழுக்காட்டினர் மான் கெமர் மக்கள். மலை அடிவாரங்களில் 45 விழுக்காட்டு பூர்வீக மக்கள்.
லாவோஸ் மக்களின் வரலாற்றில் இந்தியர்களின் தாக்கங்கள் தான் அதிகம். இந்தியர்கள் என்று சொல்லும் போது தமிழர்கள் தான் முதலில் அங்கே போய் இருக்கிறார்கள்.
வரலாற்றைப் பார்ப்பவர்களும் சரி; வரலாற்றை எழுதுபவர்களும் சரி; தமிழர்களை மறந்துவிட்டு இந்தியர்கள் என்று பொதுவாகவே சொல்கின்றார்கள். இதை முதலில் சொல்லி விடுகிறேன்.
லாவோஸ் நாட்டிற்கு முதலில் சென்றவர்கள் தமிழர்கள். சரியான சான்றுகள் உள்ளன. தவிர உலகத்திலேயே மூத்த இனம் என்று கப்சா விட்டுக் கதை கட்டும் ஜெகதாளப் புரட்டாசிகள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி.
லாவோஸ் நாட்டின் அருகாமையில் சீனா நாடு. இருந்தாலும் சீனா நாட்டுத் தாக்கங்கள் குறைவு. மிக அருகாமையில் வியட்நாம். இருந்தாலும் அந்த நாட்டின் தாக்கங்களும் குறைவு.
ஆனாலும் சற்றுத் தொலைவில் இருக்கும் தாய்லாந்து நாட்டின் தாக்கங்கள் சற்று அதிகம். மகாபாரதமும் இராமயணமும் சேர்ந்து இரு நாடுகளையும் இணைத்து வைத்து விட்டன. அந்தக் காலத்துத் தமிழர்கள் கொண்டு சென்ற மகா காப்பியங்களின் தூரல்கள் இன்னும் நிற்கவில்லை.
லாவோஸ் நாட்டில் பெரும்பான்மை மக்கள் மகாபாரதம்; இராமாயணம் இந்திய இதிகாசங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அந்த இதிகாசங்களின் தாக்கங்களை இன்றும்கூட லாவோஸ் நாட்டின் கிராமப் புறங்களில் நன்றாகவே உணர முடிகிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இந்தோசீனா நாடுகளுக்கு வணிகம் பார்க்கச் சென்ற பல்லவர்களும் தமிழர்களும் இந்து மதத்தையும் தேரவாத புத்த மதத்தையும் அங்கே படரச் செய்தார்கள் (Theravada Buddhism). அதில் புத்தம் மலர்ந்தது. இந்து மதம் சற்றே மறைந்தது.
(People of Laos were influenced by Indian rather than Chinese culture. From the 1st century AD Indian merchants introduced Theravada Buddhism into Laos. - http://www.localhistories.org/laos.html)
9-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை கம்போடியாவின் கெமர் அரசர்கள் லாவோஸ் நாட்டின் பெரும் பகுதியை ஆட்சி செய்து வந்தார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக லாவோஸ் நாடு என்பது பகுதி பகுதிகளாகப் பிரிந்து சிதறிப் போய்க் கிடந்தது. அவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து ஓர் ஐக்கிய நாடாக உருவாக்கியவர் பா நிகும் (Fa Ngum).
ஏன் இவ்வளவு நீளம் என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். ஒருக்கால் அந்தக் காலத்து மன்னர்கள் தங்களின் வீர தீரப் பராக்கிரமங்களை பறைசாற்றுவதற்காக அப்படி நீண்ட பெயர்களை வைத்து இருக்கலாம். சொல்ல முடியாது.
முதலில் சொன்னேனே பா நிகும், அவர்தான் ஸ்ரீ சதான கனயுதா மகாராஜா ராஜாதரனா. அவர் பல்லவ வம்சாவழியைச் சேர்ந்தவர். இருந்தாலும் பின்னாட்களில் இவரின் பெயர் பா நிகும் என்று மாற்றம் கண்டு லாவோஸ் வரலாற்றில் நிலைத்துப் போனது.
இவர் இப்போது பா நிகும் எனும் பெயரில் தான் லாவோஸ் வரலாற்றில் பிரபலம் அடைந்து உள்ளார். பா நிகும் எனும் மகாராஜா ராஜாதரனா தான், லாவோஸ் நாட்டில் லான் சாங் (Lan Xang) எனும் பேரரசை 1353-ஆம் ஆண்டில் உருவாக்கினார்.
மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). இவர் ராஜதரணி ஸ்ரீ சுத்தானம் எனும் சிற்றரசின் (King of Rajadharani Sri Sudhana) அரசராக இருந்தார்.
சம்மாத பிரகதிஞ்ச பைவாதத்திற்கு இரு மனைவிமார்கள். மூத்தவர் கெமர் பேரரசின் இளவரசியார். இரண்டாம் மனைவி தாய்லாந்தின் அயோத்தியா பேரரசின் இளவரசியார். அயோத்தியா அரசர் ராமாதிபதி (King Ramadipati of Ayudhaya) என்பவரின் மகள்.
மகாராஜா ராஜாதரனாவின் பாட்டனார் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong). இவர் லாவோஸ் முவாங் சுவா (Muang Swa) நிலப் பகுதியின் ஆட்சியாளர். இந்த முவாங் சுவா நிலப் பகுதிதான் இப்போது லுவாங் பிரபாங் (Luang Prabang) என்று அழைக்கப் படுகிறது. தாத்தா, மகன், பேரன் இவர்களின் சுருக்கம்.
1. மகாராஜா ராஜாதரனா ஸ்ரீ சுத்தான நகரன். லாவோஸ் நாட்டு மொழியில் பா நிகும் (Fa Ngum).
2. மகாராஜா ராஜாதரனா தந்தையாரின் பெயர் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் (Samdach Brhat-Anya Phya Vath). லாவோஸ் நாட்டு மொழியில் சாவோ நிகியோ (Chao Fa Ngiao).
3. மகாராஜா ராஜாதரனா தாத்தாவின் பெயர் சௌனா காம்புங் (Souvanna Khamphong).
தாத்தா சௌனா காம்புங்கின் வைப்பாட்டிகளில் ஒருவருடன், மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் சம்மாத பிரகதிஞ்ச பைவாதம் நெருக்கமாகப் பழகியதற்காகப் குடும்பத்தில் இருந்து வெளியேற்றப் பட்டார்.
பரமேஸ்வரா சிங்கப்பூரில் இருந்து மலாக்காவிற்கு வந்தது. ஒரு பெண்ணால் தான் சிங்கப்பூரில் பரமேஸ்வராவின் ஆட்சி முடிவிற்கு வந்தது. ஆக லாவோஸ் நாட்டிலும் அப்படித்தான் 1320-இல் நடந்து இருக்கிறது.
மகாராஜா ராஜாதரனாவின் குடும்பம் லாவோஸ் நாட்டில் இருந்து கம்போடியத் தலைநகரான அங்கோர் வாட்டிற்குத் தப்பிச் சென்றது. கம்போடியாவில் மகாராஜா ராஜாதரனா வளர்க்கப் பட்டார். பின்னர் அவர் ஒரு கெமர் நாட்டு இளவரசியை மணந்தார்.
1350-ஆம் ஆண்டு வாக்கில் மகாராஜா ராஜாதரனாவும் அவருடைய தந்தையாரும் கம்போடியாவில் ஓர் இராணுவப் படையை உருவாக்கினார்கள்.
மீகோங் நதி பள்ளத்தாக்கில் ஏராளமான சண்டைகள். பற்பல வட்டார ஆளுமைகள் நிர்மூலம் ஆக்கப்பட்டன. பல குட்டி அரசுகள் அட்ரஸ் இல்லாமல் போயின. அந்தச் சமயத்தில் மகாராஜா ராஜாதரனாவின் தந்தையார் இறந்தார்.
பின்னர் மகாராஜா ராஜாதரனா தன் படைகளைக் கொண்டு தாத்தா சௌனா காம்புங்கைத் தோற்கடித்தார். லாவோஸ் அரசு கைப்பற்றப்பட்டது.
மகாராஜா ராஜாதரனா, அவர் கைப்பற்றிய நிலப் பகுதிகளை எல்லாம் ஒன்றிணைத்தார். 1353-ஆம் ஆண்டு ஐக்கிய லாவோஸ் எனும் நாட்டை உருவாக்கினார்.
பின்னர் காலத்தில் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் பா நிகும் (Fa Ngum) என்று மாற்றம் கண்டு நிலைத்துப் போனது. அசல் மகாராஜா ராஜாதரனா எனும் பெயர் கரைந்து போனது. இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை.
மகாராஜா ராஜாதரனா தான் லாவோஸ் நாட்டின் முதல் அரசர். இவருக்குப் பின்னர் நிறைய 78 அரசர்கள் லாவோஸ் நாட்டை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர்:
சம்சேனாதி (Samsenethai);
பூமாதா (Phommathat);
மகாராணி பிம்பா (Phimpha);
சக்கபதி (Chakkaphat);
சௌனா (Souvanna);
சோம்பு (Somphou);
விஷன் (Visoun);
போதிசாரதன் (Photisarath);
சீதாதீர்த்தன் (Setthathirath);
சௌளிந்தன் (Soulintha);
கோமான் (Koumane);
வீரவங்சன் (Voravongsa);
சௌரிகனம் (Sourigna);
இவரின் வாரிசுகளில் கடைசியாக வந்தவர் ஸ்ரீ சாவங்ச வதனா (Savangsa Vatthana). இவர்தான் லாவோஸ் நாட்டின் கடைசி அரசர். பிரதமர் பட்டியலில் ஆறாவதாக வருகிறார்.
அவருடைய பெயரின் பொருள்: அண்டத்தின் கடவுளார் புத்தர் (The Buddha is the God of the universe). இவருடைய முழுப் பெயரைக் கேட்டால் மயக்கம் வருகிறது.
(Samdach Brhat Chao Mavattaha Sri Vitha Lan Xang Hom Khao Phra Rajanachakra Lao Parama Sidha Khattiya Suriya Varman Brhat Maha Sri Savangsa Vadhana)
அந்த அரசரின் பெயரில் வரும் ராஜநட்சத்திரம்; பரம சித்த சூரியா வர்மன்; மகா ஸ்ரீ வதனம் எனும் சொற்கள் மட்டுமே நமக்குத் தெரிந்த சொற்களாகத் தெரிகின்றன.
அவை அனைத்தும் புத்தரைப் புகழ்ந்து உரைக்கும் சொற்களாகும். அந்தப் பெயரில் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து வருகின்றன. அவை லாவோஸ் மொழிச் சொற்கள். அதன் மூலம் தமிழர்களின் தாக்கத்தை நம்மால் ஓரளவிற்குக் கணிக்க முடிகின்றது.
1975-ஆம் ஆண்டில் பாத்தட் லாவோ (Pathet Lao) கம்யூனிஸ்டுகள் லாவோஸ் நாட்டைக் கைப்பற்றினார்கள். புதிதாக வந்த புரட்சி அரசாங்கம், அரசக் குடும்பத்தை ஒரு தடுப்பு முகாமில் அடைத்து வைத்தது. அத்துடன் லாவோஸ் நாட்டில் 600 ஆண்டுகால மன்னராட்சி முடிவிற்கு வந்தது.
1978-ஆம் ஆண்டில் லாவோஸ் மன்னர் ஸ்ரீ சாவங்ச வதனா; மகாராணி காம்பூய் (Queen Khamphoui); பட்டத்து இளவரசர் சாவாங் ஆகிய மூவரும் மலேரியா நோயினால் இறந்து விட்டதாகக் கம்யூனிஸ்டு அரசாங்கம் அறிவித்தது.
ஆனால் அந்தச் செய்தி தவறானது என பின்னர் தெரிய வந்தது. கட்டாய உழைப்பு; பட்டினியால் அவதிப்பட்டு அவர்கள் இறந்து இருக்கலாம். அதன் பின்னர் லாவோஸ் நாட்டில் அரச பரம்பரை மறைந்து போனது.
இருந்தாலும் லாவோஸ் மக்கள் தங்களின் இந்தியப் பின்புலத்தை மறக்கவில்லை. இந்திய இதிகாசங்களின் பிரதான மாந்தர்களுக்கு மரியாதை மதிப்பு கொடுக்கும் வகையில் அஞ்சல் தலைகளை வெளியிட்டு சிறப்பு செய்து இருக்கிறார்கள்.
இருந்தாலும் பாருங்கள் இந்திய இதிகாசங்களான மகாபாரதம்; இராமாயணம் தொடர்பான கதாமாந்தர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்து மதத்திற்குப் பெருமை செய்து இருக்கிறார்கள்.
இதில் ஒரு பெரிய ஆச்சரியம் என்னவென்றால் சரஸ்வதி தேவிக்குத் தான் அதிகமான அஞ்சல் தலைகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
1955-ஆம் ஆண்டில் இராமர், சீதை, இராவணன், அனுமான் ஆகியோரைச் சித்தரிக்கும் 6 அஞ்சல் தலைகளை வெளியிட்டார்கள்.
1971-ஆம் ஆண்டில் மற்றோர் அஞ்சல் தலையை வெளியிட்டது. அதில் விஷ்ணுவின் மீன் அவதாரம் அனுமனுடன் சண்டையிடுவதைச் சித்தரிக்கிறது.
1974-ஆம் ஆண்டில் சரஸ்வதி, இந்திரன் மற்றும் பிரம்மா ஆகியோரைச் சித்தரிக்கும் 3 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.
2004-ஆம் ஆண்டில் இராமாயணத்தின் 4 காட்சிகளைக் கொண்ட 4 அஞ்சல் தலைகளின் தொகுப்பை வெளியிட்டது.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் சார்ந்த பல்லவர்கள் லாவோஸ் நாட்டிற்கு வந்தார்கள். வாழ்ந்தார்கள். வரலாற்றில் இருந்து மறைந்தும் போனார்கள்.
இருந்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற இதிகாசங்களையும்; இதிகாசப் படிமங்களையும்; இதிகாசப் பண்புகளையும் லாவோஸ் மக்கள் இன்றும் மறக்கவில்லை. மரியாதை செய்கிறார்கள். வாழ்த்துவோம். வணங்குவோம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
21.03.2021
The great epics taken by the Tamils of that time were the Mahabharata; Ramayana. The majority of the people in Laos know Mahabharata and Ramayana. The effects of those epics can still be felt in the rural areas of Laos.
Tamils who went from India to Indochina to trade 2000 years ago converted people there to Hinduism. The Pallavas spread Theravada Buddhism.
Buddhism blossomed and Hinduism has faded in the long run. For more than a thousand years Laos had been a fragmented country. It was Fa Ngum who put them all together into one piece nation.
His original name was Sri Sadhana Kanayuda Maharaja Rajatharana Sri Suthana Nagaran (Somdetch Brhat-Anya Fa Ladhuraniya Sri Sadhana Kanayudha Maharaja Brhat Rajadharana Sri Chudhana Negara). Not sure why such a long name. He is of Pallava descent.
He is now known in Laos history as Fa Ngum. Maharaja Rajadarana, also known as Fa Ngum, founded the Lan Xang Empire in Laos in 1353. The Lao Kingdom of Lan Xang Hom Khao existed as a unified kingdom from 1353 to 1707. For three and a half centuries, Lan Xang was one of the largest kingdoms in Southeast Asia.
Maharaja Rajadarana's father's name was Samdach Brhat-Anya Phya Vath. He was the king of the kingdom of Rajadharani Sri Sudhana.
Two wives for consensual proclamation. The eldest was a princess of the Khmer Empire. Second wife Princess of the Ayodhya Empire of Thailand. Daughter of King Ramadipati of Ayudhaya.
Souvanna Khamphong is the grandfather of Maharaja Rajatarana. He is the ruler of Muang Swa, Laos. This area of Muang Chua is now known as Luang Prabang.
1. Maharaja Rajadarana Sri Suthana Nagaran. Known as Fa Ngum in Laos.
2. Maharaja Rajadarana's father was Samdach Brhat-Anya Phya Vath. Known as Chao Fa Ngiao in Laos.
3. Maharaja Rajadarana's grandfather was Souvanna Khamphong.
The family of Maharaja Rajadarana moved from Laos to Angkor Wat, the Cambodian capital. Maharaja Rajadarana was brought up in Cambodia. He later married a Khmer princess.
Around 1350, Maharaja Rajatarana and his father formed an army in Cambodia. Numerous fights in the Mekong River Valley. Many regional personalities were annihilated. Many petty states went without an address. During that time the father of Maharaja Rajadarana died.
Later Maharaja Rajatarana defeated his grandfather Sauna Kambung with his troops. The Laos government captured.
Maharaja Rajadharana consolidated all the lands he had conquered. In 1353 he created the country of United Laos.
Later, the name of Maharaja Rajatarana was changed to Fa Ngum. The name of the original Maharaja Rajatarana was dissolved. The people of Laos, however, have not forgotten their Indian background.
Maharaja Rajatarana was the first king of Laos. Laos has been ruled by a total of 78 kings since then.
Some of them are:
King சம்சேனாதி Samsenethai
Queen பூமாதா Phommathat
Queen பிம்பா Phimpha
King சக்கபதி Chakkaphat
Queen சௌனா (Souvanna);
King சோம்பு (Somphou);
King விஷன் (Visoun);
King போதிசாரதன் (Photisarath);
King சீதாதீர்த்தன் (Setthathirath);
King சௌளிந்தன் (Soulintha);
King கோமான் (Koumane);
King வீரவங்சன் (Voravongsa);
King சௌரிகனம் (Sourigna);
The last of this heirs was Sri Savangsa Vatthana. He was the last king of Laos. His name means: The Buddha is the God of the universe. (Samdach Brhat Chao Mavattaha Sri Vitha Lan Xang Hom Khao Phra Rajanachakra Lao Parama Sidha Khattiya Suriya Varman Brhat Maha Sri Savangsa Vadhana)
மிக அருமை ஐயா....👌 தமிழர்களின் பெருமை உலங்கெங்கும் பரவி இருப்பது நமக்கெல்லாம் பெருமை....
பதிலளிநீக்குகருத்துகளுக்கு மிக்க நன்றிம்மா...
நீக்குமிக அருமை ஐயா....👌 தமிழர்களின் பெருமை உலங்கெங்கும் பரவி இருப்பது நமக்கெல்லாம் பெருமை....
பதிலளிநீக்குகட்டுரை சிறப்பு. தமிழன் என்று சொல்வதற்கு பெருமையாக உள்ளது. நன்றி ஐயா.
பதிலளிநீக்கு