23 மார்ச் 2021

மலாயா தமிழர்கள் வரலாற்றில் போதி தர்மர்

தமிழ் மலர் - 22.03.2021

ஆதித் தமிழன் கண்டுபிடித்த தமிழர்க் கலை. சீனப் பொதிகையில் சிருங்காரம் பாடிய சீனத்துக் கலை. வீரமந்திரம் பேசிய விசித்திரமான கலை. பாலைவன அரேபிய மண்ணுக்குள் படர்ந்த பவித்திரமான கலை. ஆயிரம் ஆயிரம் உறவுகளை அரவணைத்துப் போன ஆயக் கலை. அதுதான் போதி தர்மரின் புனிதக் கலை. புண்ணியம் பேசும் பொற்கலை. மலாயா தமிழர்களின் வரலாற்றில் மர்மம் பார்க்காத வர்மக் கலை.

மலாயா தமிழர்களின் வரலாற்றில் போதி தர்மரா? இது சாத்தியமா? இது என்ன புதிய கதை என்று கேட்கலாம். போதி தர்மர் என்பவர் பாண்டியர்களுக்குப் பின்னர் வந்த பல்லவர் இனத்தைச் சேர்ந்தவர். போதி தர்மரைச் சிலர் களப்பிரர் இனத்தைச் சேர்ந்தவர் என்று சொல்வதும் உண்டு.

தமிழக வரலாற்றில் களப்பிரர் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோலவே போதிதர்மரின் வரலாறும் இருண்டு கிடக்கிறது. போதிதர்மர் களப்பிரராக இருந்து இருக்கலாம். அதனால் அவருடைய வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என்பதும் சிலரின் குற்றச்சாட்டு.

போதி தர்மர் வாழ்ந்த காலம் கி.பி. 475 - கி.பி. 550. இந்தக் காலக் கட்டத்தில் மலாயா கடாரத்தில் ஸ்ரீ விஜய பேரரசின் ஆளுமை. அதை மறந்துவிட வேண்டாம். போதி தர்மர் சீனாவுக்குப் போகும் போது கடார மண்ணில் கால் பதித்து விட்டுத் தான் போய் இருக்கிறார்.

கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் வாழ்ந்த தமிழ் மக்களுடன் உறவாடிச் சென்று உள்ளார். ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் கடாரத்தில் தங்கி இருக்கிறார். இதைப் பற்றி வரலாற்று ஆவணங்களில் தேடிக் கொண்டு இருக்கிறேன்.

உலகத்திலேயே மூத்த இனம் என்று ஓர் இனம் பெருமை பேசிக் கொண்டு இருக்கும் போது போதி தர்மர் தமிழர்கள் இனம் சார்ந்தவர் என்று சொல்வதில் என்னங்க தப்பு. இல்லாதவர்களே இருப்பதாக கற்பனை ஜோடனைகள் செய்யும் போதும் இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு.

ஒன்று மட்டும் சொல்வேன். போதிதர்மர் என்பவர் தமிழர் இனத்தைச் சார்ந்தவர் என்று நாம் இப்போதே இங்கே இந்தப் பக்கம் முன்னெடுப்பு செய்யவில்லை என்றால் போதிதர்மர் என்பவர் ’அவர்களின்’ இனத்தைச் சேர்ந்தவர் என்று பின்னர் காலத்தில் ’அவர்களே’ ஒரு கதையை உருவாக்கி போதிதர்மரை ஈர்த்துக் கொள்வார்கள்.

அதற்குள் நாம் முந்திக் கொள்ள வேண்டும். என் கருத்துகளில் உடன்பாடு என்றால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பரவாயில்லை. இருகரம் கூப்புகிறேன்.

சித்தர்களில் மூத்தவர் அகத்தியர். வர்மக் கலையை உருவாக்கித் தந்தவர். அந்தக் கலை உருவான இடம் தமிழகத்தின் குற்றால மலை. அவருக்குப் பின்னர்தான் அந்தக் கலைக்கு மகத்துவம் ஏற்பட்டது. மகிமை கிடைத்து இந்த உலகமே திரும்பிப் பார்த்தது.

பாண்டிய மன்னர்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் தமிழகக் கோயில்களுக்குப் பற்பல திருப்பணிகளைச் செய்து இருக்கிறார்கள். அந்தப் பாண்டிய மன்னர்களில் ஒருவர் தான் ஜடாவர்ம பாண்டியன். இவர்தான் வர்மக் கலைக்கு வாயிதா வாங்காமல் வணங்காமுடியாக வாழ்ந்தவர். அந்தக் கலையை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தப் பெருமகனார். சிரம் தாழ்த்துகிறோம்.

ஜடாவர்ம பாண்டியன் 1251-ஆம் ஆண்டில் இருந்து 1270-ஆம் ஆண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர். அழகர் கோயிலில் உள்ள சோமசந்த விமானத்திற்குத் தங்கத் தகடுகளைப் பதித்தவர்.

ஜடாவர்ம பாண்டியன் தன்னுடைய ஆட்சியின் போது பல நூறு வர்மக் கலைத் தர்பார்களை உருவாக்கினார். வர்மக் கலை ஆசான்களுக்கு நிலபுலன்களை வழங்கி ஆதரவு வழங்கினார். அந்த வகையில் அந்தக் காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கும் வர்மக் கலை சொல்லித் தரப்பட்டது.

பெண் பிள்ளைகளையும் வர்மக்கலை விட்டு வைக்கவில்லை. அவர்களையும் ஈர்த்துக் கொண்டது. அந்த வகையில் தமிழக வரலாற்றில் ஜடாவர்ம பாண்டியனின் காலச் சுவடுகள் பெருமைக்குரிய அத்தியாயங்களாகும்.

ரஜினிகாந்த நடித்த கோச்சடையான் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். நல்ல ஒரு திரைப் புதினம். அதில் கதாநாயகனாக வரும் கதாபாத்திரத்தின் பெயர் கோச்சடையான். அந்தக் கோச்சடையான் தான் சாட்சாத் இந்த ஜடாவர்ம பாண்டியன். வர்மக் கலைக்கு ஆலாபனை செய்து அழகு பார்த்தவர். தெரிந்து கொள்ளுங்கள்.

வர்மக் கலையில் மட்டும் அல்ல. போர்த் திறமையிலும் ஜடாவர்ம பாண்டிய ஒரு வித்தகர். அண்டை நாட்டுச் சோழர்கள், சேரர்கள், கொங்கர்கள், கர்நாடர்கள் பலரைப் போரில் தோற்கடித்த தமிழர்.

ஆக பாண்டிய நாட்டை விரிவாக்கிய தலையாயப் பங்கு இந்தக் கோச்சடையான் மாவீரருக்கும் உண்டு. தமிழக வரலாற்றில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் இந்தக் கோச்சடையானும் ஒருவராகும்.  

ஏன் இவரைப் பற்றி அதிகமாகச் சொல்கிறேன் என்றால் இவர்தான் வர்மக் கலையையும்; அந்தக்கலை சார்ந்த தற்காப்பு முறைகளையும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்தவர். இவருக்கு முன்னரே போதி தர்மர் சீனாவிற்குப் போனவர். வர்மக் கலையை அங்கே அறிமுகம் செய்தவர். சரி.

அந்தக் கலையைத் தன்னுடைய போர் வீரர்களுக்கும் கோச்சடையான் சொல்லித் தந்தார். ஆக இந்தத் தற்காப்புக் கலையின் மூலமாகத்தான் தமிழகத்தின் வீர தீர மன்னர்கள் பலரும் கோச்சடையானின் ஆளுமையின் கீழ் வந்தனர். அது வரலாறு.

இருப்பினும் இந்தக் கோச்சடையானுக்கு முன்னரே வர்மக்கலை சீனாவில் தடம் பதித்து விட்டது. அதை மறந்துவிட வேண்டாம்.

வர்மக்கலையில் நான்கு வர்மங்கள் உள்ளன. 1. தொடு வர்மம். 2. தட்டு வர்மம். 3. நோக்கு வர்மம். 4. படு வர்மம். இந்த நான்கு வர்மங்களையும் பிழியப் பிழியக் கற்றுத் தேர்ந்தவர் கோச்சடையான்.

அவருடைய திறமையைக் கண்டு எதிரிகள் அசந்து போனது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அவரின் திறமைகளைத் தளையத் தளைய ஆராதனை செய்து இருக்கிறார்களே.

அதுவே அந்தக் கோச்சடையானுக்கு கிடைத்த முதல் மரியாதை. கோச்சடையானைப் பற்றி நிறைய தகவல்கள் இருக்கின்றன. ஒரே ஒரு சின்னத் தகவலை மட்டும் சொல்லி விடுகிறேன். சோழ மன்னர்கள் சேர பாண்டிய அரசர்கள் பலரைப் பற்பல போர்களில் வென்றார்கள். விலை மதிப்பில்லா செல்வங்கள் கிடைத்தன.

ஆனால் அவற்றை அவர்களின் சொந்த நலன்களுக்காக எடுத்துக் கொள்ளவில்லை. அனைத்தையும் தென்னகத்தில் இருந்த கோவில்களுக்கு நன்கொடையாகக் கொடுத்து விட்டார்கள்.

அதிகம் பயன்பெற்றக் கோவில்கள் என்று பார்த்தால் முதலாவது சிதம்பரத்தில் இருக்கின்ற நடராசப் பெருமான் கோயில். வேள்விக்குடிச் செப்பேடுகள் சான்றுகள் சொல்கின்றன. அடுத்து திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதர் கோயில். கோடிக் கோடியாக அள்ளிக் கொடுக்கப் பட்டதாகக் கேந்தூர்க் கல்வெட்டுகள் சொல்கின்றன. சரி.

காலப் போக்கில் பாண்டிய இனம் சிதையத் தொடங்கியது. இந்த வர்மக் கலையும் சன்னம் சன்னமாய் மறையத் தொடங்கியது. இருந்தாலும் பாண்டியர்களுக்குப் பின்னர் வந்த பல்லவர்கள் இந்தக் கலையின் மகிமையைக் காலம் தாழ்ந்து அறிந்து கொண்டனர்.

அவர்களும் அந்தக் கலையைக் கைவிடவில்லை. ஆதரித்தனர். பின்னர் காலங்களில் இந்தக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்கும் கொண்டு செல்லப் பட்டது.

பாண்டியர்களுக்குப் பிறகு பல்லவர்கள் வந்தார்கள். பல்லவர்கள் காலத்தில் தான் தென்னிந்தியாவில் புத்த மதமும் ஆழமாக வேரூன்றியது. இவர்களுடைய காலத்தில் மற்ற நாடுகளுடன் வர்த்தகம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் காலக் கட்டத்தில் சீன யாத்ரீகர்கள் தென்னகத்திற்குப் புனிதப் பயணங்களை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் யுவாங் சுவான் (Yuan Chwang).  

அந்தச் சமயத்தில் பல்லவர்களின் தலைநகரமாக காஞ்சிபுரம் இருந்தது. முதலாம் கந்தவர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் நந்திவர்மன். இரண்டாவது மகன் குமாரவிஷ்ணு. மூன்றாவது மகன் புத்தவர்மப் பல்லவன்.

இவர்களில் மூன்றாவதாகப் பிறந்த மகன்தான் புத்தவர்மப் பல்லவன் என்கிற போதிதர்மர். இவரின் இயற்பெயர் புத்த வர்மன். ஜடாவர்ம பாண்டியன் கோச்சடையான் பிறப்பதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த நிகழ்ச்சி. அதை மறந்துவிட வேண்டாம்.

அந்தக் காலத்துப் பல்லவ வம்சத்தின் கடைசிக் குழந்தையைப் புத்த மதத்திற்கு அர்ப்பணிப்பது வழக்கம். எனவே பல்லவ மன்னன் கந்தவர்மன் தன்னுடைய கடைசி மகன் போதிதர்மனைக் குருகுல வாழ்க்கையில் சேர்த்தார்.

அப்போது காஞ்சிபுரத்தில் பிரஜ்ன தாரா (Prajnatara) என்கிற ஒரு சமய குரு இருந்தார். அவர் புத்தச் சிந்தனைகளைப் பரப்பி வந்தார். கந்தவர்ம அரசன் அவரிடம் தன் மகன் போதி தர்மரை அனுப்பி வைத்தார்.

காலப் போக்கில் போதி தர்மரும் பல கலைகளில் கற்றுத் தேர்ந்தார். களறி, வர்மம், சிலம்பம் போன்ற பல்வேறு அதிரடிக் கலைகளையும் அசத்தலாகக் கற்றுக் கொண்டார்.

போதி தர்மரின் அபாரமான திறமைகளைப் பார்த்துப் பிரமித்துப் போனார் பிரஜ்ன தாரா. ஆக சின்ன வயதிலேயே போதி தர்மர் வர்மக் கலையில் அதிக ஈடுபாடு காட்டி இருக்கிறார் என்பது அதில் இருந்து தெரிய வருகிறது.

போதி தர்மரின் அறிவுக் கூர்மை. அவரின் அபாரமான தனித் திறமை. அவற்றினால் பிரஜ்ன தாரா கவரப் பட்டார். அந்த வகையில் போதி தர்மர் தான் தன்னுடைய அடுத்த வாரிசு என்றும் முடிவு செய்தார். கொஞ்ச நாட்களில் குருகுலத்தின் 28-ஆவது குருவாகவும் போதி தர்மர் நியமனம் செய்யப் பட்டார்.

காலம் கரைந்தது. போதி தர்மர் ஒரு புத்த மதக் குருவாக மாறினார். புத்த சிந்தனைகளை நன்கு தெரிந்து கொண்டார். காஞ்சிபுரத்தில் இருந்து நாலந்தா பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். நாலந்தா பல்கலைக்கழகம் (Nalanda University) இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ளது. உலகப் புகழ்பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கப் பட்டது.

உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். புத்த மதக் கருத்துக்களைப் போதிக்கும் இடமாகவும் விளங்கியது. எத்தனையோ பேரரசுகள் இந்தியாவிடம் நீயா நானா வசனங்கள் பேசி இந்திய மண்ணில் அழிப்புகள் செய்து உள்ளன. ஆனால் நாலந்தா பல்கல்கலைக்கழகத்தில் மட்டும் அவர்களின் வசனங்கள் செல்லுபடி ஆகவில்லை. ஒன்றுமே செய்யாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

இந்தப் பல்கலைக்கழகம் புகழ் பெற்று விளங்கிய காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிஞர்களும் அங்கு வந்து கல்வி கற்றனர். புத்தர் மகான் இந்த இடத்திற்கு வந்து சென்றதாகவும் சொல்லப் படுகிறது.  மிக அண்மையில் அந்தப் பல்கலைக்கழகம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

நாலந்தா பல்கலைக்கழகத்தில் கொஞ்ச காலம் தங்கிய போதி தர்மர், புத்த சமயத்தின் ஆழ்க் கூற்றுகளை அதிகமாகத் தெரிந்து கொண்டார். பின்னர் அவருடைய பார்வை சீனாவின் பக்கம் திரும்பியது. புத்தச் சிந்தனைகளைச் சீனாவிற்குக் கொண்டு செல்ல ஆசைப் பட்டார். அவர் ஏன் சீனாவுக்குப் போக விரும்பினார் என்பது தான் தெரியவில்லை.

இருந்தாலும் சீன யாத்ரீகர்கள் தென்னகத்திற்கு அடிக்கடி வந்து போன தாக்கமாக இருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எந்த ஆண்டில் போதி தர்மர் சீனாவிற்குச் சென்றார் எனும் துல்லிதமான விவரங்கள் இன்றுவரை நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இரண்டு கருத்துகள் சொல்லப் படுகின்றன.

லியூ சோங் வம்சத்தினரின் (Liu Song Dynasty) ஆட்சிக் காலத்தில் போதி தர்மர் சீனாவிற்குப் போய் இருக்கலாம் என்பது ஒரு கருத்து. இந்த லியூ சோங் வம்சாவளியினர் சீனாவை கி.பி. 420 லிருந்து 479 வரை ஆட்சி செய்தனர்.

அடுத்து லியாங் வம்சத்தினரின் (Liang Dynasty) ஆட்சிக் காலத்தில் போய் இருக்கலாம் என்பது இன்னொரு கருத்து. இந்த லியாங் வம்சாவளியினர் கி.பி. 502 லிருந்து 557 வரை சீனாவை ஆட்சி செய்தனர்.

இதில் இந்த இரண்டாவது கருத்தைத் தான் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அதாவது லியாங் வம்சாவளியினர் காலத்தில் தான் போதி தர்மர் சீனாவிற்குப் போய் இருக்கலாம் எனும் கருத்து.  

அடுத்து போதி தர்மரின் சமகாலத்தவர்கள். அதாவது அவருடைய காலத்தில் வாழ்ந்தவர்கள். இரண்டு கூற்றுக்களை விட்டுச் சென்று உள்ளனர். ஒரு கூற்று யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதியது. இவர் கி.பி. 547 ஆம் ஆண்டில் மகாயான புத்தப் படைப்புகளைச் சீனமொழிக்கு மொழி பெயர்த்தவர். இதை யாங் சுவான்சீயின் குறிப்பு என்றும் சொல்வார்கள். அந்தக் குறிப்பு, சீனாவின் லுவோயாங் (Luoyang) கிராமப் பகுதியின் புத்த மடாலயங்களில் இருந்து கிடைத்த குறிப்பாகும். (Yang Xuanzhi's The Record of the Buddhist Monasteries of Luoyang 547 AD)

போதி தர்மர் சீனாவுக்குச் சென்ற போது மலாயா கடாரத்தில் கொஞ்ச காலம் தங்கி இருக்கிறார். அந்தக் கட்டத்தில் அதாவது கி.பி. 500-ஆம் ஆண்டுகளில் கடாரம் பூஜாங் சமவெளியில் தமிழர்கள் வணிகம் செய்து வந்து உள்ளனர். ஓராங் அஸ்லி மக்களுடன் ஒன்றரக் கலந்து தமிழர் சார்ந்த பண்பாடுகளைப் பரவல் செய்து உள்ளனர்.

ஓராங் அஸ்லி மக்கள் வெற்றிலை போடும் பழக்கம் தமிழர்களிடம் இருந்து போனதாகும். கடாரத்திற்குச் சென்ற போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களிடம் வர்மக்கலையைச் சொல்லித் தந்து உள்ளார். கடாரத்து மண்ணில் வர்மக்கலை நீண்ட நாட்களாகப் பயன்பாட்டில் இருந்து உள்ளது.

1025-ஆம் ஆண்டு கடாரத்தைக் கடைசியாக ஆட்சி செய்த விஜயதுங்க வர்மன் வர்மக்கலையை ஆதரித்து குருகுலங்களை உருவாக்கி உள்ளார். அந்தக் காலக் கட்டத்தில் வர்மக்கலை மிகவும் பரவலாகி இந்தோனேசியா வரை படர்ந்து உள்ளது. சுமத்திரா ஆச்சே பகுதியில் வர்மக்கலை பள்ளிக்கூடமே இருந்து உள்ளது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.03.2021

சான்றுகள்:

1. Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press,

2. Taylor, Nora A. (2000), Studies on Southeast Asia (Studies on Southeast Asian Art: Essays in Honor of Stanley J. O'Connor), 29, Southeast Asia Program Publications)

3. Rev. H Heras, SJ (1931) Pallava Genealogy: Indian Historical Research Institute

4. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)

5. Taishō Shinshū Daizōkyō, Vol. 85, No. 2837 Archived 2008-06-05 at the Wayback Machine, p. 1285b 17(05)
 

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Francis Arokiasamy: அக்காலத்தில் கி.பி. 500-ஆம் ஆண்டில் கடாரத்தில் வாழ்ந்த தமிழர்கள் எங்கு சென்றார்கள். என்ன ஆனார்கள். அவர்கள் சந்ததி அழிந்ததா? எப்படி? கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா. உங்களது தொடர் தமிழர் வரலாற்றை புரிந்து கொள்ள மிகவும் உதவுகிறது

Muthukrishnan Ipoh >>> Francis Arokiasamy: வந்தவரகள் வணிகர்கள். திரும்பிப் போனவர்கள் பலர். இங்கேயே தங்கியவர்கள் சிலர். உள்ளூர் மக்களுடன் ஒன்றாய்க் கலந்தவர்கள் சிலர்.

இனக் கலப்பு ஏற்பட்டு தமிழர்கள் கட்டமைப்பு மறைந்து போய் இருக்கலாம். நிறைய பின்விளைவுகள் உள்ளன.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இன்றைய உள்ளூர் மக்கள் பலரின் இரத்தத்தில் கலப்பு இரத்தம் ஓடிக் கொண்டு இருக்கிறது. இது போல மனிதப் புலம் பெயர்வுகளில் எல்லா இடங்களிலும் நடந்து உள்ளது. கடாரப் படையெடுப்பில் கரைந்து போய் இருக்கலாம்.

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: மனித மரப்பணுக்களில் (Homo Sapiens DNA RNA) 97 விழுக்காடு ஒரே சாயல் கொண்ட அணுக்கள் தான். ஒரே வடிவங்கள் தான். ஏறக்குறைய 3 விழுக்காடுதான் மாற்றம் அடைந்து கறுப்புத் தோல் வெள்ளைத் தோல் என்று திரிபுநிலை அடைந்து உள்ளன. அந்த மூன்று விழுக்காட்டுக்குள் தான்... மதவாதம் இனவாதம் எல்லாம் வந்து சேர்கின்றன.

உலக இனங்களில் தமிழர் இனம் மூத்த இனங்களில் ஒன்றாகும். கற்பனை அல்ல. உண்மை. இதை ஆரியர்கள் மறைத்து ஆரியத்தை முன்னிலைப் படுத்த பல்வேறு வரலாற்றுச் சிதைவுகளை மெற்கொண்டு உள்ளனர். அந்தச் சிதைவுகளினால் தான் தமிழர் இனம் பாதிப்பு அடைந்து உள்ளது. அந்தப் பாதிப்புகளில் இருந்து வெளிவரும் போதுதான் தமிழரின் உண்மையான தொனமை அவர்களுக்கே தெரியவரும். கருத்துகளுக்கு நன்றிங்க.

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: அக்கா, முன்னோர்கள் சதிநாச வலையில் சிக்கி மூச்சடைத்துப் போனார்கள். அன்றைய வாழ்க்கை நிலையில் கற்றுத் தெளிந்த மக்கள் இருந்தாலும் மக்களை ஒன்றாய் சேர்த்திட தடைகள் பல இருந்தன. இன்று நமக்கிருக்கும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து இருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையிலும் எதையும் கண்டு கொள்ளமல் "மர" மண்டைகளாய் சிலதுகள் சுற்றிக் கொண்டு இருக்கிறதே.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உங்களின் கூற்று உண்மை என்றால் இந்த உலக தமிழர்கள் ஒவ்வொருவருக்கு உள்ளும் நம் முன்னோர்களின் மரபணு உயிரணுக்களாக ஓடிக் கொண்டிக்கும் வாய்ப்பு இருக்குமே?

அதனால்தான் நாமும் இளகிய மனதோடு எல்லாவற்றையும் தாரை வார்த்து ஏமாந்து நிற்கிறோமோ? என்னமோ? இன்னும் எத்தனை,எத்தனை மோ, மோ, மோ வோ?????? 🤔🤦

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: உங்கள் வரலாற்று பதிப்போடு அவ்வப்போது அறிவியலிலும் தெளிவு பெறுகிறோம். அன்று ஆரியர்களின் ஊடுருவலை அறிவுபூர்வமாக எதிர்க் கொள்ள எம் முன்னோர்களுக்கு திறன் இல்லாமல் போனதே அதை என்னவென்பது சார்?

Vani Yap:
தமிழர்களின் தடங்களை தெரிந்து கொள்ள தங்களின் பதிவுகள் மிக சிறப்புங்க ஐயா... நன்றி

Sathya Raman >>> பெ.சா. சூரிய மூர்த்தி: அத சொல்லுங்க. எல்லா உரிமைகளும் நம்மை விட்டு விடுதலை வாங்கி கொண்டிருக்கிற போதும் எவ்வித உறுத்தலும், உணர்வும் இன்றி உலா வரும் உதவாக் கரைகளாகவே இன்றும் இயலாமைகளின் மொத்த உருவமாய் நாம்.

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: நாம் அல்ல அக்கா. சிலர்.

Sathya Raman >>> பெ.சா. சூரிய மூர்த்தி: அந்தச் சிலரைக் கூட சிறைப் படுத்த நம்மால் முடியவில்லையே. அதுவே ஒருவித உறுத்தல் தானே சூர்யா?

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Sathya Raman: அவர்கள் எல்லாம் பிறந்தோம் தின்றோம் சாவோம் என்று இருப்பவர்கள். நவீன அடிமைத் தனத்தில் இன்பம் கண்டு மொழி பற்றும் இல்லாமல் இனப் பற்றும் இல்லாமல் தங்களுக்கானதை மட்டுமே தேடிக் கொள்பவர்கள்.

Kala Balasubramaniam: Super sir

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam:
நன்றிங்க

Velan Mahadevan: Bodhitharmaudin aaga maarividumo 🤔

Muthukrishnan Ipoh >>> Velan Mahadevan: நிச்சயமாக விட மாட்டோம்.

Velan Mahadevan:
Yes Namathu kadamai sar 👍

Sundaram Natarajan: Arumai Anna. Thanks For Sharing

Maha Lingam: நன்றி வாழ்த்துகள்

மோஹன் Mohan: அருமை ஐயா

Malini Rangasamy: சூப்பர்

பெ.சா. சூரிய மூர்த்தி:
சொல்வார்கள் ஐயா. அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்து வளர்ந்த இரத்த அணுக்களின் பிறப்புகள்.

Vijaya Sri: நற்தகவல் ... நன்றி ஐயா

Darshini Priya: Super

Rama Bathma:

Palaniappan Kuppusamy:


Shanmugasundaram D: போதி தருமர் பற்றி இரண்டு புத்தகங்கள் படித்துள்ளேன். இரண்டிலும் காஞ்சியை ஆண்ட சிற்றரசரின் மகன் என்றும் வாரிசு உரிமை போட்டியில் இளையவரான போதி தருமரை மன்னராக நியமிக்க அவர் தந்தை விரும்பிய போது அதை மன்னரின் முத்த மகன் ஏற்காததால் போதி தருமர் விட்டுக் கொடுத்து புத்தமத துறவியாகி தலைமையின் கட்டளை ஏற்று சீனாவிற்கு சென்றார் என்று உள்ளது. இருப்பினும் நீங்கள் கூறுவது புது தகவல். ஆதலால் தகுந்த ஆதாரங்கள் திரட்ட வேண்டி இருக்கும் இல்லையேல் மக்கள் நம்ப மாட்டார்கள்

Muthukrishnan Ipoh >>> Shanmugasundaram D: வணக்கம் சகோதரரே. நீங்கள் படித்த நூல்களில் வேறு மாதிரியாகச் சொல்லி இருக்கலாம். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தான் நான் எழுதி இருக்கிறேன். நம்மிடம் சான்றுகள் உள்ளன. இல்லாமல் எழுத முடியாதுங்க. தங்களின் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Muthukrishnan Ipoh: போதி த்ர்மரின் புத்திசாலித்தனம்; அறிவுக்கூர்மை அவரின் அண்ணன்மார்களுக்கு பொறாமை ஏற்படுத்தி இருக்கலாம். உண்மை. அதை செவிலியர்கள் மூலமாக போதிதர்மர் அறிந்து கொண்டதும் உண்மை. விட்டுக் கொடுத்துச் சென்றதாகத் தாங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ளலாம்.

அதே சமயத்தில் அவர் புத்த மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு விட்டதால் அரச பதவியை அவர் நிராகரித்து இருக்கலாம் அல்லவா. அத்துடன் மூதத அண்ணன்கள் இருக்கும் போது ஆக இளையவரான தம்பிக்கு அரசர் பதவியை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்குமா என்பதும் ஒரு கேள்விக் குறியே.

MP Tarah: நானும் போதி தர்மர் கட்டுரையை படித்தேன் நிறைய தெரிந்து கொண்டேன் ஆச்சரியமாகவும் இருக்கிறது

Muthukrishnan Ipoh >>> MP Tarah: நன்றிங்க ... 🌺

Sathya Raman: வணக்கம் சார். சமீபத்தில் தான் போதி தர்மர் பற்றி முக நூலில் வேறொரு பதிவை படித்திருந்ததேன். போதி தர்மரின் வாழ்க்கை வரலாறு சூர்யா நடித்த "ஏழாம் அறிவு" திரைப் படத்திற்கு பிறகே நன்கு அறியப் பட்டதாக தெரிகிறது. போதி தர்மரை பற்றி நம் நினைவுக்கு வருவது இந்தியா, சீனா என்ற இரு நாடுகள் மட்டுமே.

ஆனால் உங்களுடைய இந்தப் பதிவில் அவர் கடாரம் வரை கால் பதித்து உள்ளார் என்பது புதிய தகவலாக இருக்கிறதே? கூடவே அவர் தமிழர் என்பதும் பிரமிப்பாக இருக்கிறது.

ஒரு தமிழரின் மரபணுவில் ஊறிய வர்ம கலையின் மறு வடிவமே குங்பூ, காராத்தே, தெக்குவண்டோ என்பதாக எடுத்து கொள்ளலாமோ? உலகம் தோன்றிய போது ஒரு இனம் முதன்மையாக தோன்றி அந்த அற்புதங்களை ஆவணப் படுத்தாமல் அறியாமையால் எல்லாவற்றையும் தொலைத்து, துவசம் பண்ணிய பின் காலங் கடந்து நமது அருமைகளில் ஆவல் கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

உலகக் கண்டு பிடிப்புகளில் எல்லாம் நம்மவர்கள் உருவாய் இருந்திருக்கிறார்கள் ஆனால் எதிர்கால சந்ததினரின் உயர்வுக்கு, வாழ்வுக்கு அவற்றை எல்லாம் முன்னெடுப்புகளுக்கான முயற்சியைத் தான் எவரும் செய்யவில்லை. எதையும் ஆதாரமாக்கவில்லை.

அவசரத்தில் அள்ளி தெளித்த கோலங்கலாய் அன்றைய நம் முன்னோர்களின் உழைப்பு இன்று நமக்கு எந்த வகையிலும் உதவாமல் போய் விட்டதே?

இன்று தீ பந்தம் ஏந்தி கஷ்டபட்டு தேன் எடுக்காமலே "எல்லாமே எங்களுடையது " என்று முழங்கும் முயற்சியற்ற முட்டாள்களுக்கு நம் நிலையை நிறுத்தி, இப்படிபட்ட பதிவுகள் மூலமே பறைசாற்ற வேண்டிருக்கிறது.

புத்தரைப் போல், போதி தர்மரையும் புறக்கணித்த பெருமை இந்தியாவையே சாரும். இனப்பற்று மொழிபற்று தேசபற்று இல்லாத இந்தியாவில் வெறும் ஜாதி பற்றை வைத்துக் கொண்டு இந்த ஜென்மம் அழியும் வரை வாய்ச் சவடால் பேசும் வரை நம் வரலாறுகளும், சரித்திரங்களும் சாகவரம் பெறப் போவதில்லை என்பதே சத்தியமான உண்மை என்பேன்.

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: ஆங்கிலத்தில் ஒரு பதிவு உள்ளது. அதை அப்படியே இங்கு பதிவு செய்கிறேன்.

According to Southeast Asian folklore, Bodhidharma travelled from Jambudvipa by sea to Palembang, Indonesia. Passing through Sumatra, Java, Bali, and Malaysia, he eventually entered China through Nanyue. In his travels through the region, Bodhidharma is said to have transmitted his knowledge of the Mahayana doctrine and the martial arts. Malay legend holds that he introduced forms to silat.

தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளின்படி, போதி தர்மர் ஜம்புதிவிபாவில் இருந்து கடல் வழியாக இந்தோனேசியாவின் பலேம்பாங் வரை பயணம் செய்தார். சுமத்திரா, ஜாவா, பாலி மற்றும் மலேசியா வழியாகச் சென்று, இறுதியில் நான்யூ (சீனாவில் உள்ள மலைப்பகுதி) வழியாக சீனாவுக்குள் நுழைந்தார்.

இப்பகுதி வழியாக அவர் மேற்கொண்ட பயணங்களில், போதிதர்மா மகாயான கோட்பாடு மற்றும் தற்காப்புக் கலைகள் குறித்து தன் அறிவைப் பரப்பியதாகக் கூறப் படுகிறது. அவர் சீலாட் தற்காப்புக் கலையை அறிமுகப் படுத்தியதாக மலாய் புராணக் கதைகளும் கூறுகின்றன.

ஜம்புதிவிபா (Jambudvipa) என்பது இந்தியர்களின் புராணக் காப்பியங்களில் சொல்லப்படும் புராண உலகம். அந்தப் புராண உலகத்தில் இருந்து போதி தர்மர் வந்து இருக்கலாம் என்று தென்கிழக்கு ஆசிய நாட்டுப்புறக் கதைகளில் சொல்லப் படுகின்றன.

இவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் மலாய் மக்களின் சீலாட் தற்காப்புக் கலையைப் போதி தர்மர் அறிமுகப் படுத்தியதாக 2006-ஆம் ஆண்டில் சீலாட் துவா - வாழ்க்கையின் மலாய் நடனம் (Silat Tua - The Malay Dance of Life) எனும் சொல்லில் எழுதப்பட்டு உள்ளது. ஜைனல் ஆபிடின் ஷேக் அவாப் மற்றும் நைகல் சுட்டன் (Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton) ஆகிய இருவர் எழுதிய நூல்.

கடாரத்திற்கு வடக்கே தாய்லாந்து நாட்டுப் பகுதியில் அமைந்து இருந்த பட்டாணி எனும் இடத்தில் போதி தர்மர் சீலாட் கலையைச் சொல்லிக் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கலை நீண்ட காலமாக பினாங்கில் இரகசியமாக இருந்ததாகவும் பின்னர் சுமத்திராவிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் எழுதி இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும் போது அந்தக் காலத்தில் (கி.பி. 500) கடாரத்தில் வாழ்ந்த மக்களிடம் போதி தர்மர் வர்மக் கலையைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம் அல்லவா? தவிர போதி தர்மர் பல்லவ இனத்தைச் சேர்ந்தவர்.

பல்லவர்கள் தமிழ்நாட்டை 550 ஆண்டுகளாக ஆட்சி செய்து உள்ளார்கள். மாமல்லபுரம் கற்கோயில்களைக் கட்டியவர்கள். பல்லவர்கள் தமிழர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது என்னுடைய முன்னெடுப்பு.

போதிதர்மர் வட மலாயாவில் சீலாட் கலையைப் பரப்பியதால் அவர் அந்தக் கலையின் தந்தை என்றும் அவர்களின் வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் கருத்துகளை முன் வைக்கிறார்கள்.

Silat Tua - The Malay Dance of Life is a 120 page book published by Living Tradition Sdn Bhd in 2007 in English. Written by Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton, Silat Tua expounds on the philosophies, maxims and techniques of this ancient northern silat style.

Originally from Patani, Silat Tua has spread silently throughout the peninsula, especially in Pulau Pinang where guru Zainal, the author, now resides. Information kept secret for many years including practical meditation methods, animal and elemental (Fire, Air, Water, Earth) style silat and more are described in detail for the first time ever in this book.

நூலின் பெயர்: Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1

சான்று: https://en.wikipedia.org/wiki/Bodhidharma...

இதைப் பற்றி போதிதர்மர் கட்டுரையின் 4-ஆம் கட்டுரையில் (26.03.2021) விளக்கமாக எழுதுகிறேன். அருமையான கருத்துகளைப் பதிவு செய்து உள்ளீர்கள். கருத்துகளுக்கு நன்றிங்க சகோதரி.

Aathi Pogan >>> Sathya Raman: முன்பு எல்லாத்துக்கும் ஆவணங்கள் இருந்தது தொடர் படையெடுப்பு, இன அழிப்பு, ஆக்ரமிப்பு, ஆங்கிலேய ஆட்சியின் திருட்டு என்று பல வழிகளில் பல ஆவண ரகசியங்கள் அழிந்து விட்டன. எல்லாமும் தமிழர்கள் DNA மரபணுவில் மறைந்து உள்ளன அதை யாரும் வெளி கொண்டுவர முயற்சிப்பது இல்லை.

Sathya Raman >>> Aathi Pogan:
ஆனால் எவ்வித ஆதாரமும், ஆவணங்களும் இல்லாமலே அடுத்தவர் உழைப்பை, கண்டுபிடிப்பை ஒரு கூட்டம் மட்டும் எல்லாம் "எங்களுடையது " என்று எப்படி கூப்பாடு போட முடியும்?

நீங்கள் முன் வைத்த காரணங்களால் எல்லாம் அழிந்தது என்றால் இவர்கள் மட்டும் எந்த தைரியத்தில் எல்லாவற்றையும் உரிமை கோரி கொண்டாடுகிறார்கள்? அப்படி என்றால் அவர்களுக்கு எவ்வித ஆதாரப் பூர்வமான ஆவணங்கள் தேவை இல்லையோ? இஷ்டத்துக்கு, இட்டுக்கட்டி அடுத்தவர் உழைப்பை திருட முடியுமோ?

Aathi Pogan >>> Sathya Raman: திருட்டு என்பதும் ஆளுமையை பொருத்தது. ஆளுமை அற்ற, சொந்த நாடு அல்லாத நாதி அற்ற மக்கள் என்ன செய்வது. வேடிக்கைதான் பார்க்க முடியும்.😢

Aananthi Pooja: மிக அருமை .

Muthukrishnan Ipoh >>> Aananthi Pooja:
நன்றிங்க ...

Anika Morthi: Very good morning ayya entha patiuve enaku irutha Santhagam tinthu nandree Valga valarga ugal sevai Nandree ayya

Muthukrishnan Ipoh >>> Anika Morthi:
வாழ்த்துகள். கருத்துகளுக்கு மிக்க நன்றி.

மோஹன் Mohan:

Muthukrishnan Ipoh >>> மோஹன் Mohan:
மிக்க நன்றி.

Sarkunavathi Panchanathan:

Manimala Tamil

Ganesan Nagappan

Parimala Muniyandy

Kala Balasubramaniam

Muthukrishnan Ipoh >>> Kala Balasubramaniam:
மிக்க நன்றி.

Kumar Siva

Sharma Muthusamy

Vejayakumaran: 💯

Alex Mark II


Krisnakumar Narayanasamy: Iya naan ungal nesan.taangal elutiya padivangalai semittum vaittullen.taangal kuuruvatum unmai.boti tarmarai velicchattirku kondu varuvom

Muthukrishnan Ipoh >>> Krisnakumar Narayanasamy:
நன்றிங்க. போதிதர்மர் பல்லவ இனத்தைச் சார்ந்தவர். பல்லவர்கள் தமிழர்களே என்று வரலாற்று ஆசிரியர்களில் ஒரு சாரார் உறுதியாக உள்ளார்கள்.

Nagarajah Nagarajah:

Sara Subramaniam: இல்லாதவர்களே இருப்பதாகக் கற்பனை ஜோடனைகள் செய்யும் போதும் இருக்கிறவர்கள் இருப்பதைச் சொல்வதில் என்னங்க தப்பு. 😄😄😄👌👌👌

Muthukrishnan Ipoh >>> Sara Subramaniam: உண்மைதானுங்க...😀 ஒன்னுமே இல்லாமல் என்ன என்னவோ சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நாமும் துணிந்து இறங்குவோம்ல... 😀

Srimurugan Munusamy

Sureshdamotaran Suresh

Sureshdamotaran Suresh

Nagarajah Nagarajah: Aiya super tagaval taarunggal Naamum. Varalaattrai puratti poduvom Namakku pinne varubavar Nammmai nesippargal

Muthukrishnan Ipoh >>> Nagarajah Nagarajah: தங்களின் ஆர்வம் மலைக்கச் செய்கிறது

Kavitha Vitha

Ganes Gani

Murugaiah Muthusamy

Mathivanan Sellamuthu

Palaniappan Kuppusamy

Raman Roman


Banu Linda: ஆவண திருடர்களை கட்டுப்படுத்த உலக அளவில் ஏதும் பொது இயக்கம் உள்ளதா ஐயா...

Muthukrishnan Ipoh >>> Banu Linda:
இருக்கிறது. ஆனால் சுடுகிறவர்கள் சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஒன்னும் செய்ய முடியாது.😀

Sathya Raman: திருடர்களே உலகமாய் இருந்தால் யாரிடம் நாம் போய் முறையிட முடியும் ஐ,நா சபையிலா? அல்லது உலக மகா திருடனிடமா? யாருன்னு பானுவுக்கு இந்நேரம் புரிந்திருக்குமே. சமத்து.

Rammesh Muniandy: இடைக் காலத்தில் நான் போதி தர்மர் மலாய் இனத்தைச் சார்ந்தவர் என்பதைக் கேள்விப் பட்டது உண்டு. நாளை கூறுவர் என்பதல்ல. இன்றே ஆரம்பித்து விட்டனர்.

Muthukrishnan Ipoh >>> Rammesh Muniandy: போதி தர்மர் தமிழகத்தில் இருந்து மலாயாவுக்கு வந்த போது மலாயா கிழக்கு கரையில் பட்டாணி எனும் இடத்தில் தற்காப்புக் கலை சொல்லிக் கொடுத்து இருக்கிறார். அதை சீலாட் என்று சொல்லுகிறார்கள். அதற்காக போதி தர்மர் அவர்களின் இனத்தைச் சார்ந்தவர் என்று கதை சொல்லக் கூடாது. தப்பு.

Rony Murugan >>> Muthukrishnan Ipoh: Silambattam = Silat

Veloo Muniandy:
Arumai Paghilvilku Nanri. Vaalgha Tamil 🙏

Muthukrishnan Ipoh >>> Veloo Muniandy: கருத்துகளுக்கு மிக்க நன்றி.

Manialagan Alagan

Manikam Sockalingam: valthukal ayaa

Muthukrishnan Ipoh >>> Manikam Sockalingam:
மிக்க நன்றி.

Jee Jee

Ganes Gani:
Valka Tamil inam

Muthukrishnan Ipoh >>> Ganes Gani: கருத்துகளுக்கு நன்றி.

Arushothy Veerasamy: Super

Mohan Jegan: மிக அருமை .💚

Thangaraju Perumal: Greet information

Muthukrishnan Ipoh >>> Thangaraju Perumal: கருத்துகளுக்கு நன்றி.

Muthukrishnan Ipoh: அனைவருக்கும் வணக்கம். இங்கு பதிவு செய்யப்பட்ட அன்பர்கள் அனைவரின் பதிவுகளும் வலைத்தளத்திலும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பேஸ்புக் ஊடகத்தின் பதிவுகள் தற்காலிகமானவையே. ஆனால் வலைத்தள இணையத்தின் பதிவுகள் நிரந்தரமாகி விடும். நமக்குப் பிறகு நம் சந்ததியினரும் அந்தப் பதிவுகளைப் பார்ப்பார்கள் படிப்பார்கள். அதற்காகத் தான் இந்த முன்னேற்பாடுகள். நன்றி.

https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_23.html

பெ.சா. சூரிய மூர்த்தி >>> Muthukrishnan Ipoh: நல்லது ஐயா. தங்களின் முயற்சி வீண் போகாது. உண்மை நிலையை இப்படி எல்லாம் பதித்து வைக்க வாய்ப்பு இல்லாமல் போனதினால் தான் வரலாற்றிலும் திருட்டு தொடர்கிறது. வாழ்த்துகள்
ஐயா.

Parameswari Doraisamy >>> Muthukrishnan Ipoh: மிக்க நன்றி ஐயா.

Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நமது வரலாறுகளை ஆதாரத்தோடு ஆவணப் படுத்தும் முயற்சியை, முன்னெடுத்து நமது வருங்கால சந்ததியினருக்குச் சகல சௌகரியங்களை முறைபடுத்த ஒரு முத்து கிருஷ்ணனாவது முன் நின்று பல ஆய்வுகளைத் தேடிச் சேகரித்து அவற்றைப் பழுது இல்லாமல் பதிவேற்றம் பண்ண பாடுப்பட்ட உழைப்புக்கு பெரும் உள்ளதோடு உவகை கொண்டு நன்றி மலர்களை தூவிகின்றேன்.

இந்த தலைமுறைகளை தவித்த தவிப்புகளை நம் வருங்காலத்தினர் அறவே வருந்திப்படக்கூடாது.

அவர்களாவது இந்நாட்டில் நாம் யார் என்பதை உங்களின் அரும் பெரும் ஆவணப் பதிவுகளை படித்து உணர்ந்து அறிவுபூர்வமான சிந்தனையாளர்களாக உருமாற்றம் பெறட்டும்.

இவ்வேளையில் தங்களின் அயராத, அளப்பரிய முயற்சிக்கு முக நூல் அன்பர்கள் சார்பாக தலைவணங்கி வாழ்த்துகிறோம் சார் 🙏🌷

Muthukrishnan Ipoh >>> Sathya Raman: தங்களின் அன்பான ஆதரவான சொற்கள் மென்மேலும் உற்சாகத்தை வழங்குகின்றன. தங்களைப் போன்று ஒரு சிலர் பக்க பலமாக இருந்தால் போதுங்க. நேரம் காலம் பார்க்காமல் தொடர்ந்து தேடல்களைத் தொடரலாம்.

தமிழக வரலாற்ரைப் பொறுத்த வரையில் அங்கே நிறைய வரலாற்று ஆசிரியர்கள் உள்ளார்கள். அங்கே இங்கே தேடிப் பிடித்து நூல்களாகக் கொண்டு வருகிறார்கள்.
இங்கே வேறு கதை.

நம்முடைய பழைய சான்றுகள் சாட்சிகள் எல்லாவற்றையும் ஒரு சிலர் புதைத்து விட்டார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் மடைமாற்றம் செய்து வருகிறார்கள்.

அவற்றைத் தேடிப் பிடித்து மொழிபெயர்த்து எளிய முறையில் உயிர் கொடுத்து பத்திரிகையில் எழுதுவதற்குள் பாதி வயது ஓடிவிடும் போல உள்ளது.
இன்னொரு தமிழர் வரலாம்.

மலாயா தமிழர்களைப் பற்றிய வரலாறுகளைத் தோண்டி எடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். அது எப்போது. அதற்குள் இருப்பவை எல்லாம் கரைந்து காணாமல் போய் விடலாம். காலத்தை விரட்டிக் கொண்டு போக வேண்டிய கட்டத்தில் வாழ்கிறோம்.

Darshini Priya: Super

Vijaya Sri: நற்தகவல் ... நன்றி ஐயா

Palaniappan Kuppusamy:

Rama Bathma:

Malathi Nair: Endru thaniyum intha sutahtira taagam. (
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்)

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: என்று தணியும் இந்த சுதந்திர தாகம்... என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்... என்று எமது அன்னை கை விலங்குகள் போகும்... என்று எமது இன்னல்கள் தீர்ந்து பொய்யாகும்


இராமசாமி கவுண்டர்: அந்த போதிதருமர் பிறந்த தமிழ் மண்ணைக் காணத் தான் சீனப் பிரதமர் சென்ற ஆண்டு சென்னை மகாபலிபுரம் வந்தார். இங்கிருந்து கலங்கள் நேரடியாக சீனா சென்றதை தமிழ் இலக்கிய நூல்கள் பலவும் கூறுகின்றன. சீனநாட்டு அறிஞர்களும் இதை உறுதி படுத்திய சான்றுகள் பலவுண்டு.

Muthukrishnan Ipoh >>> இராமசாமி கவுண்டர்: உண்மையை சீனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் ஐயா. ஒரு சில நாடுகளில் உண்மையை ஏற்க துணிவு இல்லாமல் மூடி மறைக்கிறார்கள்.

Malathi Nair: I still believe it wont b as how u are writting with proof anna.

Muthukrishnan Ipoh >>> Malathi Nair: தேடிப் பிடிக்க வேண்டும். தேடியதைப் படிக்க வேண்டும். மற்ற மற்ற வரலாற்றுச் சான்றுகளுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். உண்மை என்று 100 விழுக்காடு உறுதியானால் வெளியே சொல்லலாம். இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி மற்றவர்களை ஏமாற்றுவது பாவச் செயல்.

Arojunan Veloo: வாழ்த்துகள் ஐயா!

Alagumani Mathivanan: தங்களின் அரிய முயற்சி தொடர வேண்டும்

Muthukrishnan Ipoh >>> Alagumani Mathivanan: மிக்க நன்றிங்க. தொடர்வோம். நம் வரலாற்றை மீட்டு எடுப்போம்.

பெ.சா. சூரிய மூர்த்தி: சொல்வார்கள் ஐயா. அடுத்தவன் உழைப்பிலேயே வாழ்ந்து வளர்ந்த இரத்த அணுக்களின் பிறப்புகள்.

Muthukrishnan Ipoh >>> பெ.சா. சூரிய மூர்த்தி:
ஒரு சோம்பேறிக் கூட்டம் உருவாகி விட்டது. எதிர்காலத்தில் பேர் போடுவது சிரமம்.

Veera Ranta: .💚














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக