தமிழ் மலர் - 24.03.2021
போதி தர்மர் கடாரத்து மண்ணில் கால்பதித்த பின்னர்தான் சீனாவுக்குச் சென்று இருக்கிறார். அங்கு அப்போது கி.பி.500-ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த தமிழர்கள்; தமிழர் அல்லாத இதர இந்தியர்கள்; பூர்வீக மக்களுடன் பழகி இருக்கிறார். அவர் குனோங் ஜெராய் மலையில் சில வாரங்கள் தியானம் செய்ததாகவும் சொல்லப் படுகிறது.
2006-ஆம் ஆண்டில் சீலாட் துவா - வாழ்க்கையின் மலாய் நடனம் (Silat Tua - The Malay Dance of Life) எனும் நூலில் எழுதப்பட்டு உள்ளது. ஜைனல் ஆபிடின் ஷேக் அவாப் மற்றும் நைகல் சுட்டன் (Zainal Abidin Shaikh Awab and Nigel Sutton) ஆகிய இருவர் எழுதிய நூல்.
கடாரத்திற்கு வடக்கே தாய்லாந்து நாட்டுப் பகுதியில் அமைந்து இருந்த பட்டாணி எனும் இடத்தில் போதி தர்மர் சீலாட் கலையைச் சொல்லிக் கொடுத்ததாக எழுதி இருக்கிறார்கள். அந்தக் கலை நீண்ட காலமாக பினாங்கில் இரகசியமாக இருந்ததாகவும் பின்னர் சுமத்திராவிற்குக் கொண்டு செல்லப் பட்டதாகவும் எழுதி இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் போது அந்தக் காலத்தில் (கி.பி. 500) கடாரத்தில் வாழ்ந்த மக்களிடம் போதி தர்மர் வர்மக் கலையைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம் அல்லவா?
(Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1)
முன்பு காலத்தில் பருவக் காற்றை நம்பி பாய்மரக் கப்பல்களில் பயணம் செய்தார்கள். கடாரத்து மண்ணில் கால் பதிக்கும் பயணிகள்; அடுத்த பருவக் காற்று சாதகமாக அமையும் வரையில் காத்து இருக்க வேண்டும். எப்படியும் சில மாதங்கள் பிடிக்கலாம்.
அந்த இடைவெளிக் காலத்தில் தான் போதி தர்மர் அங்கு வாழ்ந்த மக்களுடன் பழகி இருக்கிறார். வர்மக் கலையின் அடிப்படைக் கல்வியைச் சொல்லிக் கொடுத்து இருக்கலாம்.
அந்த வகையில் கடாரத்தில் புத்த மதப் பரப்புரைகளைச் செய்து இருக்கலாம். கி.பி.500-ஆம் ஆண்டுகளில் கடாரத்தில் புத்த மதம் நன்றாகவே வேரூன்றி விட்டது. அதுவும் போதி தர்மருக்குச் சாதகமாக அமைந்து போனது.
போதி தர்மர் கடாரத்தில் கால் வைக்கும் போது தென்கிழக்கு ஆசியா நாடுகளில் புத்த மதம் ஆழமாகச் சார்ந்து விட்டது. அருகாமையில் இருந்த தாம்பிரலிங்கா அரசும் ஒரு புத்த மத அரசாகும். இந்த அரசு கம்போடிய அரசாங்கத்துடன் நல்ல முறையில் நட்புறவு பாராட்டி வந்தது. சரி.
(Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India)
ஆக போதி தர்மரைப் பற்றி இப்போதே எழுதி வைக்க வேண்டும். முடிந்தால் காபிரைட் எடுத்து வைக்க வேண்டும்.
இல்லாவிட்டால் போதி தர்மரையும் அல்லாக்காகத் தூக்கிக் கொண்டு போய் ராமர் பாலத்தில் கடாசி விட்டுப் போகலாம். யாரையும் எவரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அடிக்கடி வயிற்றெரிச்சல். கொட்டிக் கொள்கிறேன்.
ஒரு சில ஆதிக்க வர்க்கத்தினரின் பிழைப்புக்காக ஒரு சமூகம் கிணற்றுத் தவளைகளாக வார்க்கப் படுகின்றது எனும் வயிற்றெரிச்சல். வேறு என்னங்க சொல்வது. விடுங்கள். நமக்கு ஊர் பொல்லாப்பு வேண்டாமே.
போதி தர்மர் என்பவர் ஒரு பல்லவர். தமிழர் இனத்தைச் சார்ந்தவர். அதனால் இந்தக் கட்டுரையின் வழி அவருக்குச் சிறப்பு செய்யலாம் என்பது நம்முடைய மானசீகமான மரியாதையும்கூட. சரிங்களா.
அதற்கு முன் பல்லவர்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம். பல்லவர்கள் கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை ஏறக்குறைய அறுநூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்து இருக்கிறார்கள். இவர்கள் இலங்கைக்கு அடுத்து இருக்கும் மணிபல்லவத் தீவில் இருந்து வந்தவர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
அது எல்லாம் இல்லை. பல்லவர்கள் என்பவர்கள் பாரசீகத்தில் இருந்து வந்த ஆரியர்கள் என்றும் சிலர் சொல்கிறார்கள். இருந்தாலும் பல்லவர்கள் நெடுங்காலம் தமிழ்நாட்டில் இருந்ததால் இறுதிக் கட்டத்தில் தமிழர்களாகவே மாறிப் போனார்கள். தமிழர்களாகவே வாழ்ந்தும் காட்டினார்கள். அதுதான் உண்மை.
அவர்களின் குடைவரைக் கோயில்களை மறக்க முடியுமா. இல்லை மாமல்லபுரத்துச் சிற்பங்களைத் தான் மறக்க முடியுமா. அவர்கள் உருவாக்கிய குடைவரைக் கோயில்களை இன்றைக்கும் உலக மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். அதைப் பார்த்து நாமும் மயங்கிப் போகிறோம்.
போதி தர்மர் எந்த ஆண்டு சீனாவிற்குச் சென்றார். மிகச் சரியான தகவல்கள் இன்று வரையிலும் நமக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் இரு வெவ்வேறான கருத்துகள் சொல்லப் படுகின்றன.
சீனாவை லியூ சோங் வம்சாவளியினரின் (Liu Song Dynasty) ஆட்சிக் காலத்தில் போதி தர்மர் அங்கு போய் இருக்கலாம். இது ஒரு கருத்து. லியூ சோங் வம்சாவளியினர் சீனாவை கி.பி. 420-ஆம் ஆண்டில் இருந்து 479-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தனர்.
இன்னும் ஒரு வரலாற்றுப் பதிவு. கி.பி. 547-ஆம் ஆண்டில் யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதிய பதிவு. இவர் மகாயான புத்தப் படைப்புகளைச் சீனமொழிக்கு மொழி பெயர்த்தவர். இவரின் பதிவுகளை யாங் சுவான்சீயின் குறிப்பு என்றும் சொல்வார்கள்.
(Yang Xuanzhi's The Record of the Buddhist Monasteries of Luoyang)
அந்தப் பதிவு சீனாவின் லுவோயாங் (Luoyang) கிராமப் பகுதியின் புத்த மடாலயங்களில் இருந்து கிடைத்த பதிவாகும். அந்தப் பதிவில் இப்படிப் பதிவாகி உள்ளன. முன்பு காலத்தில் மத்திய ஆசியாவில் இருந்து ஒரு பாரசீகத் துறவி வந்தார். அவருடைய பெயர் போதி தர்மா. அவர் காட்டு எல்லையின் வழியாகச் சீனாவை அடைந்தார். யோங்னிங் (Yongning) எனும் இடத்தில் ஒரு தூபி இருந்தது.
அந்தத் தூபியின் தங்கத் தட்டுகளைப் பார்த்ததும் மெய்மறந்து அதைப் புகழ்ந்து பாடினார். அதன் பிறகு போதி தர்மா இப்படிச் சொன்னார். இது உண்மையாகவே ஆவிகளின் வேலை. எனக்கு 150 வயதாகிறது. நான் எத்தனையோ நாடுகளுக்குப் போய் வந்துள்ளேன். நான் போகாத இடமே இல்லை. ஆனால் இது போன்ற ஒரு தூபியை நான் பார்த்ததே இல்லை.
பிறகு தன் கரங்களையும் கூப்பினார். நாள் கணக்கில் நின்றவாறு கும்பிட்டுக் கொண்டே இருந்தார். இந்த விமர்சனம் யாங் சுவான்சீ என்பவரால் எழுதப் பட்டது. இது முதலாவது குறிப்பு.
(Broughton, Jeffrey L. (1999), The Bodhidharma Anthology: The Earliest Records of Zen, Berkeley: University of California Press, ISBN 0-520-21972-4)
இரண்டாவது குறிப்பு தான்லின் (Tanlin) என்பவரால் எழுதப்பட்டது. இவருடைய வாழ்நாள் காலம் கி.பி. 506 கி.பி. 574. இவர் ஒரு நூலுக்கு முன்னுரை எழுதி இருக்கிறார். அதன் பெயர் இரு வாயில்களும் நான்கு செயல்களும் (Long Scroll of the Treatise on the Two Entrances and Four Practices). அதில் போதி தர்மர் ஒரு தென்னிந்தியர் எனக் குறிப்பிடுகிறார். மீண்டும் நினைவு கூர்கிறேன்.
வர்மக் கலையை உருவாக்கித் தந்தவர் அகத்தியர். உருவான இடம் பொதிகை மலை. இப்போது குற்றால மலை. வர்மக் கலையில் இருந்து உருமாற்றம் கண்டதுதான் குங்பூ தற்காப்புக் கலை.
பாண்டிய மன்னர்களில் பிரசித்தி பெற்றவர் ஜடாவர்ம பாண்டியன். வர்மக் கலையை வாழ்த்தும் ஒரு ஜீவனாக வாழ்ந்து காட்டினார். இவருடைய மற்றொரு பெயர் கோச்சடையான். வர்மக் கலையை உச்சத்தில் ஏற்றி வைத்து அழகு பார்த்தார். இன்றைய அளவில் வர்மக் கலை மறக்க முடியாத மாற்றங்களைக் கண்டு மந்திரங்கள் பேசி வருகின்றன.
பாண்டியர்களுக்குப் பின்னர் வந்தவர்கள் பல்லவர்கள். வர்மக் கலையின் மகிமையை உணர்ந்த பல்லவர்கள். அதைப் பெரிதும் போற்றி ஆராதனை செய்தனர். பின்னர் காலங்களில் வர்மக் கலை இலங்கை, சீனா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டது.
பல்லவர்களின் தலைநகரமாக காஞ்சிபுரம் விளங்கியது. கி.பி. 350-இல் முதலாம் கந்தவர்மன் என்பவர் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்தார். இவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் நந்திவர்மன். இரண்டாவது மகன் குமாரவிஷ்ணு. மூன்றாவது மகன் புத்தவர்மப் பல்லவன். இவர்களில் மூன்றாவதாகப் பிறந்த மகன்தான் புத்த வர்மப் பல்லவன் என்கிற போதி தர்மர்.
இங்கே இன்னும் ஒரு முக்கியமான செய்தியைப் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. போதி தர்மர் என்பவர் களப்பிரர் வம்சத்தைச் சார்ந்தவர் என்று மற்றொரு கருத்தும் இருக்கிறது. வரலாற்றில் களப்பிரர்களின் வரலாறு எப்படி இருண்டு கிடக்கிறதோ அதுபோல போதி தர்மரின் வரலாறும் கொஞ்சம் அல்ல ரொம்பவே இருண்டு கிடக்கிறது.
போதி தர்மரைப் பற்றிய செய்திகள் மிக மிகக் குறைவாகவே வரலாற்றில் பதிவாகி உள்ளன. அதிலும் அவர் இந்தியாவில் வாழ்ந்த வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்துப் பார்த்தால் அதிகம் இருக்காது.
ஒரே ஒரு பக்கத்தில் எழுதி முடித்து விடலாம். இப்பொழுது நமக்கு கிடைத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச வரலாற்றுத் தகவல்கள்கூட சீனா நாட்டு ஜப்பானிய நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்தவையாகும். அவர்கள் இல்லை என்றால் இதுவும் கிடைத்து இருக்காது.
தமிழகத்தின் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர்களின் வரலாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்து தான் தொடங்குகிறது.
மூவேந்தர்களும் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நேரம். அப்படிச் செழிப்பாக போய்க் கொண்டு இருக்கும் போது தான் தென்னகத்தில் அடுத்து அடுத்து அயல்நாட்டுப் படையெடுப்புகள் நடந்தன.
பல்லவர்களின் படையெடுப்புகள் சேரர், சோழர், பாண்டியர்களின் எல்லைகளைச் சுருங்கச் செய்தன. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி வந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று புற்றீசல் போல களப்பிரர்கள் வந்தனர்.
அவர்களின் ஆதிக்கமும் விரிவு அடைந்தது. தொண்டை நாட்டின் காடுகளில் வசித்தவர்களே களப்பிரர் என்று ஒரு சாரார் சொல்கின்றனர். அது எல்லாம் இல்லை. களப்பிரர் என்பவர்கள் அசல் தமிழர்களே என்று மற்றொரு சாரார் சொல்கின்றனர்.
களப்பிரர் ஆண்ட காலத்தை தமிழகத்தின் இருண்ட காலம் என்றுதான் சொல்லி வந்தனர். எது எப்படியோ களப்பிரர்களின் வருகைக்குப் பின்னர்தான் திருக்குறள், நாலடியார் போன்ற அறநூல்கள் நமக்கு கிடைத்தன. அதற்காகவே களப்பிரர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஆறாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர்களின் ஆட்சியைப் பல்லவர்கள் ஒரு முடிவிற்கு கொண்டு வந்தனர். பல்லவர்கள் புத்தம் அல்லது சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர். பல்லவர்களின் இரண்டாம் தலைமுறையில் வந்த முதலாம் கந்தவர்ம மன்னனின் மூன்றாம் மகன் தான் போதி தர்மர். சரி.
போதி தர்மரின் ஆரம்ப கால வரலாற்றை மூன்று சீன நூல்கள் பதிவு செய்து உள்ளன. முதலாவது ’புத்த மடப் பதிவுகள்’ எனும் ஒரு நூல். இது ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த யாங் சுவான்சீ (Yang Hsuan-Chih) என்பவர் எழுதிய நூல்.
அடுத்தது ஆறாம் நூற்றாண்டைச் சார்ந்த தான்லின் (Tanlin) என்பவரின் ‘இரண்டு நுழைவாயில்களும் நான்கு சட்டங்களும்’ (Two Entrances and Four Practices) எனும் நூல்.
(http://www.dharmadrum.org/userfiles/event/Bodhidharma's Two Entries and Four Practices.pdf)
மூன்றாவதாக வருவது ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்த தாவோ சுவான் என்பவர் எழுதிய ‘பிரபல புத்த துறவிகளின் சரிதம்’ எனும் நூல். இவை தான் போதி தர்மரின் வரலாற்றைப் பதிவு செய்த மூன்று முக்கிய சீன நூல்கள் ஆகும். வேறு எதுவும் இல்லை.
போதி தர்மரின் வரலாற்றைப் பதிவு செய்த சீன, ஜப்பானிய வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகளிலும் சில பல முரண்பாடுகள் காணப் படுகின்றன.
எடுத்துக் காட்டாக போதி தர்மர் தேநீர் அருந்தினார் என்கிற ஒரே ஒரு சாதாரண நிகழ்வைப் பதிவு செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் இப்படி பதிவு செய்து இருக்கிறார்கள்.
போதி தர்மர் தேநீர் அருந்துகிறார். அது இனிப்பானது. இல்லை கசப்பானது. அதன் நிறம் பச்சை. இல்லை அதன் நிறம் வெள்ளை. அதன் நிறம் கருப்பு. இல்லை அதன் நிறம் சிவப்பு.
அது எங்கள் வீட்டு தேநீர். நான் தான் அவருக்கு அன்பாக வழங்கினேன். போதி தர்மர் பருகும் தேநீர் தேவலோகத்தில் இருந்து வருகிறது. போதி தர்மர் போன பிறவியில் தேயிலை பயிர் செய்பவராக இருந்து இருக்கலாம். அதனால் தான் அவர் இந்தப் பிறவியில் அதிகமாகத் தேநீர் அருந்துகிறார்.
போதி தர்மர் கசப்பான தேநீரை அருந்துகிறார். அதன் பின்னணியில் ஒரு தத்துவம் இருக்கிறது. வாழ்க்கையின் கசப்பை ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.
இப்படித்தான் போதி தர்மர் பற்றிய நிழ்வுகளைச் சீனர்கள் முரண்பாட்டு மூட்டைகளாகப் பதிந்து வைத்து உள்ளனர். இருந்தாலும் எழுதி வைத்து இருக்கிறார்களே. அதுவரை பாராட்டியாக வேண்டும். ஜப்பானியர்களைச் சொல்ல வேண்டாம். அதற்கும் மேலே ஒரு படி ஏறிப் போய் அழகு பார்க்கின்றனர்.
(Chang, Chung-Yuan (1967), "Ch'an Buddhism: Logical and Illogical", Philosophy East and West, Philosophy East and West, Vol. 17, No. 1/4, 17 (1/4): 37–49)
போதி தர்மர் குடித்த தேயிலையை இந்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து குடித்தால் சகல ஆற்றலையும் பெறலாம். ஏன் என்றால் அவர் அதனை ஒன்பது ஆண்டுகள் தவமாய்த் தவம் இருந்து பெற்றார்.
அது ஒரு சாதாரண நிகழ்வு தான். ஆனாலும் அதை அப்படியே ஒரு புராணமாகவே பாடிக் காட்டுகிறார்கள். ஆக அவர்கள் பதிப்பு செய்ததில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பதற்குள் கண்டிப்பாக தலை கிறுகிறுத்துப் போகும்.
ஜான் மெக்ரீ (John McRae) என்பவர் கனடா நாட்டுக் கவிஞர். ஒரு மருத்துவரும்கூட. போதி தர்மரின் பதிவுகளைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத புனிதராகக் கருதப் பட்டவர். அதற்குத் தகுந்தபடி அந்த மனிதரின் துல்லியமான உண்மைச் சரிதத்தை எழுதுவது என்பது முற்றிலும் இயலாத காரியம்.
அதனால் போதி தர்மரின் வாழ்க்கையை மீட்டு எடுக்கும் முயற்சியில் எவரும் முழுமையாக வெற்றி அடைவதே இல்லை. ரொம்பவுமே புலம்புகிறார் அந்த வரலாற்று ஆய்வாளர். அவரும் என்ன சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை.
ஜான் மெக்ரீயின் கருத்துப்படி பார்த்தால் போதி தர்மரின் வரலாற்றை எழுவது என்பது இன்றைய நேற்றைய ஆசிரியர்களின் வேதனைகள் அல்ல. பல நூற்றாண்டுக் காலமாகக் தொடர்ந்து வரும் சுனாமிச் சோதனைகள்.
ஆக இப்படி இருக்கையில் போதி தர்மர் இந்த இடத்தில்தான் பிறந்தார். இந்தக் குலத்தில்தான் பிறந்தார். இந்தத் தேதியில்தான் பிறந்தார் என்பதை எல்லாம் திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்லவே முடியாது. சரி. இதை இதோடு நிறுத்திக் கொண்டு போதி தர்மரின் சீனப் பயணத்தைப் பார்ப்போம். ஒரு நிமிடம் பிளீஸ்...
இந்தத் தொடரை இரண்டு மூன்று பாகங்களில் முடித்து விடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் போதி தர்மரைப் பற்றிய தகவல்கள் ஆங்கில நூல்களில் இருந்து சரம் சரமாய் வந்து கொட்டுகின்றன. அதனால் இந்தக் கட்டுரையும் நீண்டு போகலாம். பொறுத்துக் கொள்ளுங்கள். மீண்டும் சந்திப்போம்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
24.03.2021
சான்றுகள்:
1. Emmanuel Francis (2011), The Genealogy of the Pallavas: From Brahmins to Kings, Religions of South Asia, Vol. 5, No. 1/5.2 (2011)
2. Zvelebil, Kamil V. (1987), "The Sound of the One Hand", Journal of the American Oriental Society, Journal of the American Oriental Society, Vol. 107
3. Shaikh Awab, Zainal Abidin; Sutton, Nigel (2006), Silat Tua: The Malay Dance Of Life, Kuala Lumpur: Azlan Ghanie Sdn Bhd, ISBN 978-983-42328-0-1
4. Shahar, Meir (2008), The Shaolin Monastery: history, religion, and the Chinese martial arts, University of Hawaii Press, ISBN 978-0-8248-3110-3.
5. Acharya, Raghu (2017), Shanon, Sidharth (ed.), Bodhidharma Retold - A Journey from Sailum to Shaolin, New Delhi: Motilal Banarsidass, ISBN 978-8120841529
6. Henning, Stanley (1994), "Ignorance, Legend and Taijiquan" (PDF), Journal of the Chenstyle Taijiquan Research Association of Hawaii, 2 (3): 1–7
7. Dumoulin, Heinrich (1993), "Early Chinese Zen Reexamined: A Supplement to Zen Buddhism: A History" (PDF), Japanese Journal of Religious Studies, 20 (1): 31–53
பேஸ்புக் பதிவுகள்
Sathya Raman: இந்த மிக நீண்ட பதிவை எத்தனை பேர் மெனக்கெட்டு படித்து இருப்பார்களோ தெரியவில்லை? போதி தர்மரை பற்றி நிறைய யூகங்களே கட்டுரையின் கடைசி வரை. அவர் தமிழர் என்பது அனுமானமாகவே தெரிகிறது.
இந்த மிக நீண்ட கட்டுரையை ஒரு தடவையே படித்து புத்தியில் ஏற்றிக் கொள்ள வாய்ப்பு இல்லை. நிறைய பெயர்கள், ஆண்டுகள் மனப்பதிவு ஆக காலம் பிடிக்கும் போல் இருக்கிறது. எத்தனைப் பேர் படிக்காமலே ’லைக்’ போட்டார்களோ?
எவ்வளவு பெரிய பதிவாக இருந்தாலும் பொறுமையாக படிப்பதே என் பாலிஸி.
பள்ளியில் சலிப்பு தட்டிய சரித்தப் பாடம் தற்சமயம் தங்களின் பதிவில்தான் ஈர்ப்பு பெறுகிறது. காரணம் அவற்றில் தமிழர் வாழ்வு வற்றாத நதியாக நர்த்தனமாடுகிறது.
Muthukrishnan Ipoh >>> Sathya Raman: போதிதர்மர் இந்தோனேசியாவில் இருந்து வந்தவர் என்று ஒரு சாரார் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். பதிவுகளும் செய்து வருகிறார்கள். போதிதர்மர் அங்கே தற்காப்புக் கலை வகுப்புகள் நடத்திய பின்னர் தான் சீனாவுக்குப் போனதாகவும் சொல்கிறார்கள்.
ஆக இப்படியே விட்டுக் கொடுத்துக் கொண்டு போனால் நாளைய பின்னர் தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்று அடையாளம் இல்லாமல் போய்விடும். அதைக் கருத்தில் கொண்டுதான் அந்தக் கட்டுரையை எழுதினேன்.
நீண்ட கட்டுரை தான். கட்டுரையை முழுமையாகப் பதிவு செய்தால் தான் முழுமையான உண்மை தெரிய வரும். படிக்கிறார்களோ இல்லையோ படிக்க ஆர்வம் உள்ளவர்கள் படிக்கட்டும். உண்மை வரலாற்றைத் தெரிந்து கொள்ளட்டும்.
ஒரு துளி சான்றும் இல்லாமல் கதை சொல்பவர்கள்... கதைகள் சொல்லிக் கொண்டு போகிறார்கள். அந்தக் கதையில் தமிழர்களின் வரலாறு அடிபட்டுப் போவதைப் பார்த்துப் பேசாமல் இருக்க முடியுமா?
உண்மை எது பொய் எது என்று வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து உண்மையை நிலைநிறுத்த வேண்டிய கட்டத்தில் பயணிக்கிறோம்.
நம்முடைய பதிவுகளில் அது தவறு இது தவறு என்று குறை காண்பவர்கள் குறை கண்டுபிடிப்பதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். தனிமனிதனாக நின்று போராடிக் கொண்டு இருக்கிறானே பாராட்ட வேண்டாம். குறை சொல்லாமல் இருப்போமே என்ற எண்ணம் கொஞ்சமாவது வேண்டாமா.
என்ன என்னவோ கதைகள் சொல்லி தமிழர்களின் வரலாற்றுத் தடங்களை அழித்துக் கொண்டு வருகிறார்களே அதை எதிர்த்துப் பேச முடியவில்லை. அங்கே இங்கே தேடிக் கண்டிபிடிப்பவன் மீதுதான் குறைகாணும் போக்கு. வேதனையாக உள்ளது சகோதரி.
தேவிசர சரவணக்குமார் >>> Muthukrishnan Ipoh: ஐயா... தங்கள் பணி அளப்பரியது... உண்மையை எடுத்துரைக்கும் பணியை இறைவன் தங்களுக்கு அருளி உள்ளார்... அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது... காரணம் இல்லாமல் இறைவன் தங்களுக்கு இப்பணியை கொடுத்திருக்க மாட்டார்... ஆகையால் வருத்தம் இன்றி பணியை தொடருங்கள் ஐயா... நாளைய இளையோர் உங்களை போற்றி வணங்குவார்கள் என்பது சத்தியம்.... இறைவன் உங்களுக்கு துணை புரிவார்..... நன்றி ஐயா...
Muthukrishnan Ipoh >>> தேவிசர சரவணக்குமார்: கருத்துகளுக்கு நன்றி மகளே. நேரப் பற்றாக்குறை. இருப்பினும் நம் மலாயா தமிழர்கள் வரலாற்று ஆவணங்களை மீட்டு எடுப்பதற்கு ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஒதுக்க வேண்டிய நிலை. காலத்தின் கட்டாயம் எனக் கருதுவோம்.
இன்னொருவர் வருவார் என்று காத்து இருக்க முடியாது. காலம் ஓடிவிடும். அதற்குள் எவ்வளவு மீட்க முடியுமா அவ்வளவையும் மீட்டு எடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும். அந்த இலக்கில்தான் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.
Vani Yap: வணக்கம் ஐயா... காலை வேளையில் இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, மெய் சிலிர்க்கிறது... போதி தர்மர் பற்றிய தகவல் மிக அருமை... தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்... பதிவுக்கு மிக்க நன்றிங்க ஐயா...
Muthukrishnan Ipoh >>> Vani Yap: கருத்துகள் தெரிவித்த முதல் அன்பர். மிக்க நன்றிங்க.
Murugan Pitchan: சிறப்பான பதிவு ஐய்யா. மிக்க நன்றி.
Muthukrishnan Ipoh >>> Murugan Pitchan: நன்றிங்க
Francis Arokiasamy: உலகம் முடியும் வரை வரலாறு தமிழர்களின் பெருமை பேசும்.
Muthukrishnan Ipoh >>> Francis Arokiasamy: நிலைக்கச் செய்ய வேண்டியது தமிழர்களின் கடமை
Vijay Pallava: Pallavas, Pahlavas, Parthavas, Parthians and Persians பஹ்லவி மொழி அராமைக்- மொழி கிளை மொழி இவர்கள் பல்லவர்
Karuna Karunagran: Sir appadhinah Rajah Rajah cholanagiyeh arun molzhi varman?
Muthukrishnan Ipoh >>> Karuna Karunagran: போதிதர்மர் 5-ஆம் 6-ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இராஜா ராஜா சோழன் 947 - 1014 ஆண்டுகளில் வாழ்ந்தவர். போதிதர்மருக்குப் பின்னர் 500 ஆண்டுகள்.
Maha Lingam: நன்றி ஐயா
Arojunan Veloo: சிந்தனையூட்டும் பதிவு! வாழ்த்துகள். ஐயா!
Muthukrishnan Ipoh >>> Arojunan Veloo: மகிழ்ச்சி
Venogobaal Kuppusamy: மிக அருமை! நல்வாழ்த்துகள்
Muthukrishnan Ipoh >>> Venogobaal Kuppusamy: நன்றிங்க.
Vejayakumaran: ஓம் நமசிவாய
Vijay Pallava: ஈரான் நாட்டில் பஹ்லவி மொழி அராமைக்- மொழியின் கிளை மொழி இவர்கள் பல்லவர். அம்மா, ஈரான்.
Amma is a village in Gachi Rural District, Gachi District, Malekshahi County, Ilam Province, Iran.
Muthukrishnan Ipoh >>> Vijay Pallava: தகவலுக்கு நன்றிங்க
Arichanderan Manickavasakar
Mancula Manju
Poovamal Nantheni Devi
Sarkunavathi Panchanathan
Ganesan Nagappan
Kumar Siva
Sharma Muthusamy
Bobby Sinthuja: தமிழர்கள் எவ்வளவு விடயங்களை இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உங்களுடைய தேடல்கள் பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டும். உங்களுடைய தேடல்கள் தொடரட்டும்
Muthukrishnan Ipoh >>> Bobby Sinthuja: தங்களின் ஆதரவான சொற்களுக்கு நன்றிங்க
Nks Sateesh Lhexmi: Sir, their dynasty known as varman empires
Muthukrishnan Ipoh >>> Nks Sateesh Lhexmi: பல்லவர்களில் ஒரு பிரிவினர்தான் வர்மன் என்று தங்கள் பெயரில் இணைத்துக் கொண்டார்கள்.
Nks Sateesh Lhexmi >>> Muthukrishnan Ipoh: thank you sir
Kody Sivasubramaniam: ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம. ஒன்றை எனக்கு தெளிவு படுத்த வேண்டுகிறேன் .. ஆரியர் என்பவர் யார்... பல்லவர்கள் மணிபல்லவ தீவிலிருந்து வந்து தமிழர்களாக வாழ்ந்தர்கள் என்று கூறினீர்கள் ... தமிழ்மொழியை கற்றுக் கொண்டு தமிழ் பேசினார்களா... தமிழ்மொழி பேசுகிறவர்கள் தமிழர்களா அல்லது ..... வேறு ஏதாவது உள்ளதா.... உதாரணம் பிராமணர்...
Muthukrishnan Ipoh >>> Kody Sivasubramaniam: இந்தக் கேள்விகளுக்கு ஏற்கனவே பதில் கொடுத்து இருக்கிறேன். நன்றிங்க.
Banu Linda: சிறப்பு...
Vijikrish Krishnasamy: வணக்கம் ஐயா
Palaniappan Kuppusamy
Mathivanan Sellamuthu
Mohan Jegan
Shantakumar Dilip: வணக்கம் ஐயா.
David Rajasthan
Jeyabalan Ramasamy: அருமை ஐயா.. அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.. அதிகபடியான உழைப்பு சிரமத்திற்கிடையே நீங்கள் செய்யும் இந்த தமிழ் வரலாறுகளை மனக்கச் செய்யும் சேவையால் பெருமை கொள்கிறோம் ஐயா.. போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்தை தந்த உங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா..
Muthukrishnan Ipoh >>> Jeyabalan Ramasamy: நிறைய படிக்க வேண்டும். நிறைய தேட வேண்டு. நிறைய நேரத்தையும் ஒதுக்க வேண்டும். தேடிப் பிடித்ததைத் தமிழில் எளிய முறையில் கொண்டு வர வேண்டும். இயன்ற வரையில் தேடிப் பிடிப்போம். மிக்க நன்றிங்க.
Sarkunavathi Panchanathan: Real hard work, paaraatukkal!
Muthukrishnan Ipoh >>> Sarkunavathi Panchanathan: அன்பான ஆதரவான சொற்கள். நன்றிங்க.
Raghavan Raman: வாழ்த்துகள்
Muthukrishnan Ipoh >>> Raghavan Raman: தங்களுக்கும் வாழ்த்துகள்
Raghawan Krishnan: Very Factual. Great.
Muthukrishnan Ipoh >>> Raghawan Krishnan: நன்றிங்க.
Vejayakumaran: ஓம் நமசிவாய
Muthukrishnan Ipoh >>> Vejayakumaran: வாழ்த்துகள்
Vincy Selvam: Very useful and deep research sir. Thank you
Muthukrishnan Ipoh >>> Vincy Selvam: மிக மகிழ்ச்சி. தொடர்ந்து பயணிப்போம் சகோதரரே.
Vimal Sandhanam: சிறப்பு ஐயா. உங்களின் உழைப்பு பாராட்டுக்குரியது ஐயா. வாழ்த்துகள் ஐயா.
Muthukrishnan Ipoh >>> Vimal Sandhanam: மிக்க மகிழ்ச்சி. தொடர்வோம்.
Samra Samg: அருமை ஐயா.. அழகாக பதிவு செய்துள்ளீர்கள்.. அதிகபடியான உழைப்பு சிரமத்திற்கு இடையே நீங்கள் செய்யும் இந்த தமிழ் வரலாறுகளை மணக்கச் செய்யும் சேவையால் பெருமை கொள்கிறோம் ஐயா.. போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்தை தந்த உங்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா.. 🙏
Muthukrishnan Ipoh >>> Samra Samg: நன்றிங்க. இயன்ற வரையில் பத்திரப் படுத்த வேண்டும். நூலாகாக் கொண்டு வரும் போது நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய அன்பளிப்பாக விட்டுச் செல்வோம்.
Isham Balqis: Does anyone knows the true real story nowdays???
Muthukrishnan Ipoh >>> Isham Balqis: அரிது ஐயா.
Selvi Munisamy: போதி தர்மரைப் பற்றி விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா... 🙏
Muthukrishnan Ipoh >>> Selvi Munisamy: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க.
Poovamal Nantheni Devi: அருமையான பதிவு
Muthukrishnan Ipoh >>> Poovamal Nantheni Devi: நன்றிங்க
Krishnavani Veni: Super sir 👍💪🙏
Muthukrishnan Ipoh >>> Krishnavani Veni: நன்றிங்க
Kala Balasubramaniam:
Ganesan Nagappan:
Ravindran Suppiah: அன்பரே வணக்கம். தாங்கள் பதிவு செய்யும் செய்திகள் அனைத்தும் மிக மிக சிறப்பானவை. மற்றும் பாராட்டப்பட வேண்டியவை. அற்புதம். ஆனால் உங்களிடம் ஒரு குறை இருக்கிறது. ஏனென்றால் தாங்கள் தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் வந்தவர்கள் என பல இடங்களில் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறீர்கள். அது தவறு. நீங்கள் தயவு செய்து, லிமோரியா கண்டம் மற்றும் குமரி கண்டம் இருந்த காலத்திற்குச் சென்றால் தமிழர்கள் வந்தவர்கள் அல்ல என்று புலப்படும்.
இதுதான் உண்மையும் கூட. மலாயா நம் தமிழர்களின் பூமி. அந்தச் சமயத்தில் ஒரு நிலப் பரப்பில் தான் விரிவு அடைந்திருந்தது. நம் பாரதம் ஆஸ்திரேலியா நியுஷிலாந்து வரை ஒரே நிலப்பரப்பு. அங்கேதான் சங்க நிதி, பதும நிதி, முத்தமிழ் சங்கம் எல்லாம் குடி கொண்டிருந்தது.
Muthukrishnan Ipoh >>> Ravindran Suppiah: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க ஐயா. தங்களின் ஆதங்கம் புரிகிறது. முதலில் ஒரு கருத்து. மலாயாவுக்கு வந்த தமிழர்கள் குமரிக் கண்டத்தில் இருந்து வரவில்லை ஐயா. அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்கள்.
அப்படி இருக்கும் போது எப்படிங்க குமரிக் கண்டம்; லுமேரியா கண்டத்தில் இருந்து வந்தவர்கள் என்று சொல்ல முடியும்.
தமிழர்களின் பூர்வீகம் குமரிக் கண்டம். உண்மை. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் மலாயாவுக்கு வந்தவர்களை லுமேரியா கண்டத்தில் இருந்து வந்தார்கள் என்று எப்படிங்க சொல்வது.
Vejayakumaran: ஓம் நமசிவாய
Poovamal Nantheni Devi: அருமையான பதிவு
Krishnavani Veni: Super sir 👍💪🙏
Ganesan Nagappan:
👏
பதிலளிநீக்கு