07 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள்: சுங்கை சிப்புட் ஹேர்வூட் தென்னைத் தோட்டம் 1866

1860-ஆம் ஆண்டுகளில் சுங்கை சிப்புட் ஹேர்வூட் தென்னைத் தோட்டம் உருவாக்கப்பட்டது. அங்கே ஒரு தேங்காய் எண்ணெய் தயாரிப்பு ஆலையும் உருவானது. ஏறக்குறைய 40 தமிழர்கள்; 50 சீனர்கள்; அந்தத் தொழிற்சாலையில் வேலை செய்தார்கள். வருடத்தைக் கவனியுங்கள். 1860-ஆம் ஆண்டுகள்.

Sungai Siput Hearwood Coconut Plantation was established in the 1860s. A coconut oil production factory was also set up there. About 40 Tamils and 50 Chinese worked in that factory. Note the year. 1860s.

1820-ஆம் ஆண்டுகளில் பேராக் மாநிலத்தில் ஈய உற்பத்தி செழிப்புற்ற காலம். சுங்கை சிப்புட் ஹேர்வூட் தோட்டத்திற்கு அருகிலும் ஈயச் சுரங்கங்கள் தோன்றின. ஹேர்வூட் தென்னைத் தோட்ட ஆலையில் வேலை செய்த சீனர்கள், ஈயச் சுரங்கங்களில் வேலை செய்வதற்கு இடம் பெயர்ந்தார்கள்.

1820s were the heydays of tin production in the state of Perak. Many tin mines mushroomed adjacent to Sungai Siput Hearwood estate. The Chinese, who worked at the Hearwood coconut plantation, moved to work in the tin mines.

அதனால் ஹேர்வூட் தென்னைத் தோட்டத்தில் ஆள் பற்றாக்குறை. ஆகவே தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள். 1866-ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி.

Hence the shortage of manpower in the Hearwood estate. So in 1866 the Tamils were brought to the estate.

பின்னர் 1897-ஆம் ஆண்டு தென்னைத் தோட்டமாக இருந்த ஹேர்வூட் தோட்டம் ரப்பர் தோட்டமாக மாறியது. 3000 ஏக்கர் பரப்பளவு. தைப்பிங்கைச் சேர்ந்த சுங் ஆ யோங் (Chung Ah Yong) என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. முதலில் 500 ஏக்கரில் ரப்பர் பயிர்நடவு. 1908-ஆம் ஆண்டில் 12,000 ரப்பர் மரங்கள் இருந்தன.

Later, in 1897, the Hearwood estate which had been a coconut plantation, was converted into a rubber plantation. 3000 acres. It belonged to Chung Ah Yong of Taiping. At first rubber planted on 500 acres. In the year 1908 there were 12,000 rubber trees.

ஒரு மரத்தில் இருந்து 3 1/2 பவுண்டு ரப்பர் பால் கிடைத்தது. நிர்வாகியாக ஹார்டவுன் (Hardouin) என்பவர் இருந்தார். இவரின் நிர்வாகத்தின் கீழ் தேங்காய் எண்ணெய் புகழ் பெற்றது. எலுமிச்சைப் புல் மற்றும் பிற பயிர்களும் கணிசமான அளவிற்கு பயிரிடப் பட்டன. மேலும் நல்ல வருவாய். 1908-ஆம் ஆண்டு 200 தமிழர்கள்; ஜாவானியர்கள் வேலை செய்தார்கள். துணை நிர்வாகியாக விஜயசூரியா என்பவர் பணி புரிந்தார்.

3 1/2 pounds of rubber milk was produced from a tree. The manager was Hardouin. Coconut oil became famous under his administration. Lemon grass and other crops were also cultivated to a considerable extent. More income for the este owner. in 1908 there were 200 Tamils; and a few Javanese worked. An estate overseer Vijayasuriya worked as the deputy administrator of the estate.

இப்போது சொல்லுங்கள். 1860-ஆம் ஆண்டுகளில் சுங்கை சிப்புட் ஹேர்வூட் தென்னைத் தோட்டத்திற்குக் குடி வந்தவர்கள் வந்தேறிகளா? வரலாறு படைத்த தமிழர்களை வந்தேறிகள் என்று சொல்லலாமா? சொல்கிறவர்களுக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா? மலாயா தமிழர்கள் வந்தேறிகள் அல்ல. இந்த நாட்டை வளப்படுத்துவதற்கு வந்தவர்கள். அந்த உண்மைகள் வரலாற்றுச் சான்றுகள் மூலமாக உறுதிப்படுத்தப் படுகின்றன.    

Were the immigrants to Sungai Siput Hearwood estate in the 1860s are pendatangs? Can anyone claim that those Indians who made history in this Malaya were pendatangs? Facts are confirmed by historical evidences.

Fact: Malaya Indians are not Pendatangs.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.12.2020

1. Twentieth Century Impressions of British Malaya; Wright, Arnold Lloyd's Greater Britain Publishing Company, Limited, 1908, pg 377.

2. Report of the Committee on Emigration from India to the Crown Colonies and Protectorates, Part–III 1909, (Papers laid before the Committee No. 1).

3. N. Gangulee, Indians in the Empire Overseas: A Survey The New India Publishing House Ltd, London,1947.

4. Tinker, Hugh. The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920) Oxford University Press, London 1974.

5. Penang Chinese Commerce in the 19th Century: The Rise and Fall of the Big Five. Wong Yee Tuan, 2015.



 

05 டிசம்பர் 2020

மலாயா தமிழர்கள்: செபாராங் பிறை, புக்கிட் தம்பூன் மீனவர்கள் - 1891

1880-ஆம் ஆண்டுகளில் பினாங்கு, புக்கிட் தம்பூன் ஆற்று ஓரங்களில் தமிழர்கள் மீனவர்களாக வாழ்ந்து உள்ளார்கள். ஆறுகளில் பயன்படுத்தப்பட்ட தொங்காங் படகுகளில் படகுத் துறை ஊழியர்களாகவும் வேலை செய்து உள்ளார்கள்.

In 1880s Tamils had lived as fishermen on the banks of the Penang Bukit Tambun rivers. They also worked as ferry crews on Tongkong boats used on those rivers.

1891 ஜூலை 31-ஆம் தேதி பாரிஸ் நகரத்தில் Societe De Geographie எனும் கழகம் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அந்தக் கண்காட்சியில் மலாயாவைப் பற்றி இரு புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டன. அவற்றில் ஒரு படத்தில் தமிழர் ஒருவர் காட்சிப்படுத்தப் படுகிறார் (Societe De Geographie Paris 31 Jul 1891).

On July 31, 1891, the Society of Societe De Geographie held an exhibition in Paris. Two photographs about Malaya were on display at the exhibition. One of them shown a Tamil man. (Societe De Geographie Paris is the world's oldest geographical society. It was founded in 1821. This picture has appeared in 1891, as Bulletin de la Société de Géographie.)

1800-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் பினாங்கு, செபாராங் பிறை பகுதிகளின் மிளகு, கொக்கோ, மரவள்ளி, கரும்பு, காபி, ரப்பர்த் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்தப் பட்டார்கள். அந்தத் தோட்டங்களில் இருந்து தமிழர்கள் பலர் வெளியேறினார்கள்.

In the 1800s, Tamils were employed in the pepper, cocoa, cassava, sugarcane, coffee and rubber plantations of Penang and Sebarang Prai. Many Tamils left the plantations.

1900-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத் தோட்டங்களில் இருந்து வெளியேறியவர்கள் 728 பேர். இவர்களில் 335 பேர் கைது செய்யப் பட்டார்கள். பினாங்கு பத்து காவான் (Batu Kawan) தோட்டத்தில் மட்டும் தலைமறைவான தமிழர்கள் 183 பேர். இவர்களில் 112 பேர் கைது செய்யப் பட்டார்கள். எஞ்சிய 60 பேர் கடைசி வரையில் தலைமறைவு ஆனார்கள்.

In 1900, 728 workers left estates in Penang State. Of these, 335 were arrested. There are 183 Tamils went hiding from Penang Batu Kawan estate alone. Of those, 112 were arrested. The remaining 60 went into hiding permenantly.

அவர்களில் பலர் உள்ளூர்க் கிராமங்களில் குடியேறினார்கள். கால ஓட்டத்தில் மீனவர்கள் ஆனர்கள். இதுவும் ஒரு வரலாறு தான். ஆக அவர்களை வந்தேறிகள் என்று அழைக்கலாமா? தப்பு அல்லவா. அப்படி அழைத்தால் அது நன்றி கெட்ட தனம் அல்லவா?

Many of them settled in local villages. Some became fishermen in the course of time. This is also a history. So can we call them Pendatang? Is it not wrong. Isn’t it ungrateful crap to call them such?

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
05.12.2020

Sources and References:

1. The New Malaysian Sugar Plantation Industry: P. P. Courtenay, Vol. 69, No. 4 (October 1984), pp. 317.

2. French planter at Bukit Tambun by Jules Claine, 1890s. Jacques de Morgan
Bibliothèque Nationale de France / Gallica collection.

3. Bulletin de la Société de Géographie. Societe De Geographie. Paris 31 Jul 1891.

4. https://ksmuthukrishnan.blogspot.com/2020/10/1842.html

5. Marilyn Gracey Augustine, In Search of a better destiny – Emigration of Tamils to Malayan Peninsula (1786-1910), 2008.


04 டிசம்பர் 2020

கிடோங் தோட்டம் பீடோர் பேராக் - 1890

மலேசியா, பேராக், பீடோர், கிடோங் தோட்டம் மலேசியாவில் மிகப் பழமையான தோட்டங்களில் ஒன்றாகும். பீடோர் நகரத்தில் இருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ளது. 1890-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ரப்பர் தோட்டம். வேறு பயிர்கள் பயிர் செய்யப் பட்டனவா எனும் தகவல்கள் கிடைக்கவில்லை.

Malaysia, Perak, Bidor, Gedong Estate is one of the oldest estates in Malaysia. It is two miles from the city of Bidor. This estate was established in the 1890s. No information was available on other crops  planted in this estate.

1896 அல்லது 1897-ஆம் ஆண்டு ரப்பர் தோட்டமால உருவாக்கப்பட்டு இருக்கலாம். 1000 ஏக்கர் பரப்பளவு. கீடோங் பீடோர் ரப்பர் கம்பெனிக்குச் (Gedong Bedor Rubber Company) சொந்தமாக இருந்தது. நிர்வாகியாக சி.ஜி.பிண்ட்லே (C. G. Findlay). முதலில் 300 ஏக்கரில் 45,000 ரப்பர்க் கன்றுகள் நடப்பட்டன.

The rubber plantation may have been established in 1896 or 1897 and is 1,000 acres in extent. Owned by Gedong Bedor Rubber Company. C. G. Findlay was the manager. 45,000 rubber saplings were first planted on 300 acres.

மலைத் தொடரின் அடிவாரத்தில் ஓர் அழகிய தோட்டம். அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட தோட்டம். 1897-ஆம் ஆண்டில் அந்தத் தோட்டத்தில் 45 தமிழர்கள் வேலை செய்து இருக்கிறார்கள். பீடோர் கிடோங் தோட்ட முன்னோடித் தமிழர்களுக்கு முதல் வணக்கம் சொல்வோம்.

A beautiful estate at the foot slopes of a mountain range. An esate with beautiful sceneries. In 1897, there were 45 Tamils working in this estate. Let us salute those pioneer Tamils of this Bidor, Gedong Estate.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
04.12.2020

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya; Wright, Arnold Lloyd's Greater Britain Publishing Company, limited, 1908, pg 420

2. Report of the Committee on Emigration from India to the Crown Colonies and Protectorates, Part–III 1909, (Papers laid before the Committee No. 1), p: 111.

3. N. Gangulee, Indians in the Empire Overseas: A Survey The New India Publishing House Ltd, London,1947, p 175 26Ibid., p 199

4. Tinker, Hugh. The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920) Oxford University Press, London 1974, p 208.





 

03 டிசம்பர் 2020

மலாக்கோப் தோட்டம் பினாங்கு செபாராங் பிறை - 1872

மலேசியாவில் மிகப் பழைமையான தோட்டங்களில் ஒன்றாகும். 1860 அல்லது 1870-ஆம் ஆண்டுகளில் தோற்றுவிக்கப்பட்டு இருக்கலாம். அந்தக் காலக் கட்டத்தில் புகைப்பட சாதனங்களின் பயன்பாடுகள் குறைவு. அதனால் மலாக்கோப் தோட்டத் தொழிலாளர்களின் படிமங்கள் உள்ளூர் தரவுகளில் இல்லாமல் போய் விட்டன.

Malakoff Estate in Province Wellesley is one of the oldest rubber estates in Malaysia. It may have originated in the 1860s or 1870s. The use of photographic equipments were rare during those days. As that images of Malakoff Estate workers are also not available from the local archives and as well as from external foreign archives.

இருப்பினும் ஜி. ஆர். லம்பேர்ட் & கம்பெனி (G. R. Lambert & Co) புகைப்பட நிறுவனம் 1875 அல்லது 1876-ஆம் ஆண்டில் எடுத்த புகைப்படங்கள் கிடைத்து உள்ளன. 1872-ஆம் ஆண்டு படம் என்று பதிவு செய்து உள்ளேன்.

However photographs taken by Lambert & Company (G. R. Lambert & Co) sometimes in 1875 or 1876 are available. The year recorded here as 1872.

பினாங்கு செபாராங் பிறை மலாக்கோப் தோட்டத்தில் (Malakoff Estate Province Wellesley),  முதன்முதலில் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டது. நல்ல தரமான மரவள்ளிக் கிழங்குகளை உற்பத்தி செய்து இருக்கிறார்கள். உலகத் தரம் வாய்ந்த மரவள்ளிக் கிழங்கு மாவை மலாயாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள்.

Cassava was first cultivated in Malakoff Estate. They produce good quality cassava tubers. World class cassava dough is exported from Malaya to European countries.

1878-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒரு வேளாண்மைக் கண்காட்சி நடைபெற்றது. அதில் மலாக்கோப் தோட்ட மரவள்ளிக் கிழங்கு மாவு காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்தக் கண்காட்சியில் உற்பத்தி தகுதிக்கான சிறப்பு பரிசுகளும் விருதுகளும் கிடைத்து உள்ளன.

In 1878 an agricultural exhibition was held in Paris, France. Malakoff Estate's cassava flour was on display. It won special prizes and awards for productivity at the exhibition.

வருடத்தைக் கவனியுங்கள். 1878. ஆக இந்த ஒரு சான்றுப் படிமமே போதும். மலாக்கோப் தோட்டத்தின் வரலாறு பழைமையானது என்பதை அந்தச் சான்று  மெய்ப்பிக்கின்றது.

Note the year. 1878. This one proof is just enough. This evidence confirms that the history of the Malakoff Estate dates back to a much longer period.

1907-ஆம் ஆண்டு மலாயா வேளாண்மை பற்றி Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources எனும் நூல் எழுதப்பட்டது. அந்த நூலின்  377-ஆம் பக்கத்தில் மலாக்கோப் தோட்டத்தின் அமைப்பைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார்கள்.

'Twentieth Century Impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources' was written in 1907. It is about Malayan agriculture. On page 377 of the book, there are some vital facts about the structure of Malakoff Estate.

மலாக்கோப் தோட்டத்தின் பரப்பளவு 5,380 ஏக்கர். சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவு 2,211 ஏக்கர். அவற்றில்;

The area of Malakoff Estate was 5,380 acres. The total area of cultivated land was 2,211 acres. Among them;

969 ஏக்கர் மரவள்ளிக் கிழங்குச் சாகுபடி.

969 acres of cassava cultivation.

318 ஏக்கர் தென்னைச் சாகுபடி.

318 acres of coconut cultivation.

658 ஏக்கர் கலப்புச் சாகுபடி. (மரவள்ளிக்கிழங்கு; தென்னை கலப்பு)

658 acres of mixed cultivation. (Cassava; Coconut inter-planted)

245 ஏக்கர் ரப்பர் சாகுபடி.

245 acres of rubber cultivation.

21 ஏக்கர் வெற்றிலைச் சாகுபடி.

21 acres of betel cultivation.

இதில் ஒரு பெரிய வியப்பு. வெற்றிலை பயிர் செய்து இருக்கிறார்கள். அந்தக் காலக் கட்டத்தில் பினாங்குத் தமிழர்களில் பெரும்பாலோர் வெற்றிலை பயன்படுத்தி உள்ளார்கள்.

A big surprise. They have cultivated betel. Most probably in those days most of Penang Tamils were affected to betel addiction.

மலாக்கோப் தோட்டத்தில் தமிழர்களின் எண்ணிக்கை ஆண்கள் 69. பெண்கள் 52. பிள்ளைகள் 45. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு ஜாவானியர்களும், சீனர்களும் வேலை செய்து உள்ளார்கள்.

The number of Tamils in Malakoff Estate was 69 males. Females 52. Children 45. To a certain extent  Javanese and Chinese were employed.

தமிழர்கள் வாழ்ந்த வீடுகள் நன்கு பராமரிக்கப்பட்டு உள்ளன. அவர்களின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு உள்ளது. தோட்டத்தில் ஒரு மருத்துவமனையும் பராமரிக்கப்பட்டு உள்ளது. நிர்வாகியாக திரு. ஜார்ஜ் ஸ்டோத்தார்ட். இவர் புரவின்ஸ் வெல்லஸ்லி; பேராக் மாநிலங்களில் வேளாண்மைத் துறையில் பல வருட அனுபவம் பெற்றவர்.

The houses where the Tamils lived were well maintained. Emphasis had been placed on their health. A hospital was also maintained in the estate. Mr. George Stotthard was the manager of the estate. He had many years of experience in the field of agriculture in the states of Perak and Province Wellesley.

மலாக்கோப் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள தோட்டங்கள்: பெர்த்தாம் தோட்டம்; சின் டெல்க் தோட்டம்; புக்கிட் தோ ஆலங் தோட்டம்; என்ஜி சென் தோட்டம்; ஹைலேங் தோட்டம்; சூங் லை ஹாக் தோட்டம்; எங் சூன் தோட்டம்; ஹாக் எங் தோட்டம்.    

Estates adjacent to Malakoff Estate: Bertam Estate, Sin Telk Estate, Bukit Toh Alang Estate, Ng Sen Estate, Haileng Estate, Choong Lye Hock Estate, Eng Soon Estate, Hock Eng Estate.

மலாயா தமிழர்களின் வரலாறு நீண்ட நெடிய வரலாறு. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்த வரையில் தமிழர்களின் வரலாறு 1786-ஆம் ஆண்டு பிரான்சிஸ் லைட் காலத்தில் இருந்து தொடங்குகிறது. 235 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட ஓர் இனத்தை வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். சொல்வதில் நியாயம் இல்லை. உண்மை நிலைக்க வேண்டும். சத்தியம் வெற்றி பெற வேண்டும்.

The history of the Malayan Indians has a long story. As far as the state of Penang is concerned, the history of the Indians dates back to the Francis Light period of 1786. A race which has a recent history of 235 years, yet being refereed as pentang. A mockery in history

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
02.12.2020

Sources and References


1. Allen's Indian mail and register of intelligence for British and foreign India, 1878,7/12. Published on Jan 1878. Pages 664.

2. Report of the Committee on Emigration from India to the Crown Colonies and Protectorates, Part–III 1909, (Papers laid before the Committee No. 1), p: 111.

3. N. Gangulee, Indians in the Empire Overseas: A Survey The New India Publishing House Ltd, London,1947, p 175 26Ibid., p 199

4. Tinker, Hugh. The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920) Oxford University Press, London 1974, p 208.

5. Marilyn Gracey Augustine, In Search of a better destiny – Emigration of Tamils to Malayan Peninsula (1786-1910), 2008.

6. http://seasiavisions.library.cornell.edu/catalog/seapage:233_383





01 டிசம்பர் 2020

மலாக்கா ஜாசின் டைமண்ட் ஜூப்ளி தோட்டம் - 1886

ஜாசின் டைமண்ட் ஜூப்ளி தோட்டம் (Diamond Jublee Estate Jasin Malacca) மலாக்காவில் இருந்து 24 மைல் தொலைவில் உள்ளது. மிக அருகாமையில் ஜாசின் நகரம். இந்தத் தோட்டம் 1886-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது.

The Diamond Jublee Estate is located 24 miles from Malacca. The nearest town is Jasin. The estate was established in 1886.

ஆசியாடிக் ரப்பர் உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டம் (Asiatic Rubber and Produce Company, Ltd). தற்சமயம் சைம் டார்பி நிறுவனத்திற்குச் சொந்தாமானது.

This estate owned by Asiatic Rubber and Produce Company, Ltd. Currently owned by Sime Darby.

1897-ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி இங்கிலாந்தின் விக்டோரியா மகாராணியாருக்கு வைர விழா கொண்டாடப் பட்டது. அதன் நினைவாக இந்தத் தோட்டத்திற்கு டைமண்ட் ஜூப்ளி என்று பெயரும் வைக்கப் பட்டது.

Diamond Jubilee of Queen Victoria of England was celebrated on June 22, 1897. Thus this estate was named Diamond Jubilee in its memory.

தொடக்கத்தில் அது ஒரு தேயிலைத் தோட்டம். பின்னர் கொக்கோ பயிர் செய்யப்பட்டது. பின்னர் மரவள்ளிக் கிழங்குத் தோட்டமாக உருமாற்றம். இறுதியாக ரப்பர் பயிர் செய்யப்பட்டது. 1980-களில் எண்ணெய்ப்பனை. தோட்டத்தில் இரு ஆறுகள் ஊடுருவிச் செல்கின்றன. தோட்டத்திற்குத் தேவையான நீர் அந்த ஆறுகளில் இருந்து பெறப்படுகிறது.

In the beginning it was a tea plantation. Then cocoa was planted. Later transformed into a cassava plantation. Finally the rubber crop introduced. Oil palm in the 1980s. Two rivers flow through the estate. The water required for the esate is obtained from those rivers.

1900-ஆம் ஆண்டில் டைமண்ட் ஜூப்ளி தோட்டத்தில் 600 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். 400 சீனர்கள். 200 தமிழர்கள். ஒரு சில மலாய்க்காரர்கள். 1886-ஆம் ஆண்டு தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். சீனர்கள் ஜொகூர் பகுதியில் இருந்து வந்தார்கள்.

In 1900 Diamond Jubilee estate employed 600 workers. 400 Chinese. 200 Tamils. A few Malays. In 1886 the Tamils were brought to this estate. The Chinese came from the Johor region.

1900-ஆம் ஆண்டுகளில் அந்தத் தோட்டத்தின் பரப்பளவு 3,706 ஏக்கர். முதன்முதலில் 1,262 ஏக்கர் அளவில் மரவள்ளி பயிர் செய்யப் பட்டது. பின்னர் 2,444 ஏக்கரில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. மொத்தம் 365,000 ரப்பர் மரங்கள்.

In the 1900s the area of the estate was 3,706 acres. Cassava was first cultivated on 1,262 acres. Later rubber was planted on 2,444 acres. Total 365,000 rubber trees.

1886-ஆம் ஆண்டில் 2,200 பீக்கள் மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்யப் பட்டது. 1906-ஆம் ஆண்டு 11,103 பீக்கள் மரவள்ளிக் கிழங்கு. அப்போது ஒரு பீக்கள் மரவள்ளிக் கிழங்கின் விலை 9 மலாயா டாலர்.

2,200 piculs of cassava were harvested in 1886. 11,103 piculs of cassava in 1906. Then the price of a picul of cassava was 9 Malayan dollars.

ஆசியாடிக் ரப்பர் நிறுவனம் 140,000 ஸ்டெர்லிங் மூலதனத்தில் அந்தத் தோட்டத்தைத் தோற்றுவித்தது. தோட்டத்தின் இயக்குநர்களாக ஈ. எம். ஷால்டோக்; எப். எல். கிளெமென்ட்ஸ்; ஆர்.எப். எஸ். ஹார்டி; ஜி. எச். ஆல்ஸ்டன்; இலங்கை கொழும்பு லீ, ஹெட்ஜஸ் நிறுவனத்தினர் (Messrs. E. M. Shaltoch, F. L. Clements, R. F. S. Hardy, and G. H. Alston. Messrs. Lee, Hedges & Co., Colombo) பதவி வகித்தனர்.

Asiatic Rubber Company started the estate with a capital of 140,000 sterling. The directors of the estate: Messrs. E. M. Shaltoch, F. L. Clements, R. F. S. Hardy, and G. H. Alston. Messrs. Lee, Hedges & Co., Colombo.

அதன் தலைமையகம் இலண்டனில் இருந்தது. 1886-ஆம் ஆண்டு தோட்டத்தின் நிர்வாகியாக சிட்னி மூர்ஹவுஸ் (Sydney W. Moorhouse) என்பவர் பணியாற்றினார்.

Its headquarters were in London. In 1886 Sydney W. Moorhouse became the manager of the estate.

1880-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் மலாக்கா தோட்டப் பகுதிகளில் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 140 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சிகள்.  தமிழர்களுக்குப் பின்னர்; 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்தவர்கள் சிலர் இவர்களைப் பார்த்து வந்தேறிகள் என்று சொல்கிறார்கள். அப்படிச் சொல்வதில் ஓர் இங்கிதம் இல்லாமல் போகிறது. உண்மையையும் மறைக்க முடியாது. வரலாற்றையும் மறைக்க முடியாது.

Tamils settled in the state of Malacca as early as of 1880s. The migration that took place almost 140 years ago. Some people who came after 50 years later called these Tamil as pendatang. There is no basis in saying so. The truth cannot be hidden; and history cannot be hidden either.

மலாயா தமிழர்களின் புலம்பெயர்வுத் தேடல்கள் தொடரும். தொடர்ந்து பயணிப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
01.12.2020

References:

1. Messrs. Harrison and Lampard, of London Archives. (LONDON METROPOLITAN ARCHIVES
HARRISONS AND CROSFIELD LIMITED AND ASSOCIATED COMPANIES)

2. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources Page 487. http://reader.library.cornell.edu/docviewer/digital

3.http://reader.library.cornell.edu/docviewer/digital?id=sea:233#page/493/mode/1up