18 ஆகஸ்ட் 2021

தமிழ் நெஞ்சர் பி.கே. குமார் மறைவு

தமிழ் மலர் - 18.08.2021

காலம் மாறுகிறது. ஞாலம் மாறுகிறது. மனிதர்களும் மாறுகிறார்கள். மறைந்தும் கரைந்தும் போகிறார்கள். மறைந்து போகும் மனிதர்களில் நாலு நல்லது செய்தவர்களும் நிறைந்து வாழ்கிறார்கள். அவர்களில் நமக்கு வேண்டியவர்களும் இருக்கிறார்கள். தெரியாதவர்களும் இருக்கிறார்கள். நினைத்துப் பார்க்கும் போது நெஞ்சம் நடுங்குகிறது.


என்ன செய்வது. போக வேண்டிய நேரம். முடியாது என்று சொல்ல முடியாது. மேலே இருந்து வரும் அழைப்பை எவராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஆண்டவன் கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்லவும் முடியாது.

மாற்றங்களின் கால வெள்ளத்தில் கொரொனா ஒன்றே மாறாதது என்பது போல திரும்புகிற திசைகளில் எல்லாம் கொரோனா. கொரோனா. எத்தனையோ உயிர்களைக் காவு கொண்டு வருகிறது. தெரிந்தவர் தெரியாதவர்; அறிந்தவர் அறியாதவர் என்று எத்தனையோ உயிர்கள் மறைந்து வருகின்றன.

அந்தப் பாவனையில் மலேசியத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான மாண்புமிக்க ஒரு தமிழரையும் இழந்து நிற்கிறோம். காலம் செய்த கோலம். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து கொண்டு இருந்த பி.கே. குமார் எனும் ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.

17.08.2021-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு, ஈப்போ தனியார் மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்தார்.


பி.கே. குமார் ஒரு சமூக ஆர்வலர். தொழில்துறை முனைவர். வணிக வள்ளல். மலேசிய நாட்டில் தமிழ் மொழி வளர்ச்சிக்கும்; தமிழ் இன வளர்ச்சிக்கும்; தமிழ்ப் பாரம்பரிய விழிப்பு உணர்வுகளுக்கும் துடிப்புடன் செயல்பட்டு வந்தவர். மலேசியாவில் பல நூறு தமிழர் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து தனிமனிதராக நிகழ்த்திக் காட்டியவர்.

மலேசியாவில் தமிழ்ப் பாரம்பரிய உணவு முறை மறக்கப்படக் கூடாது என்பதற்காக, 2019-ஆம் ஆண்டு இறுதி வாக்கில், பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளில் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தியவர்.

மற்றவர்களின் கையை எதிர்ப்பார்க்காமல் தன் சொந்தச் சேமிப்பில் இருந்து சில பல ஆயிரங்களைச் செலவு செய்தவர்.

தமிழர்க் கலாசார உணர்வுகள் மறைந்துவிடக் கூடாது என்பதற்காக நாடு தழுவிய நிலையில் பல நூறு தமிழர்க் கலை விழாக்களை நடத்தியவர்.


மலேசியத் தமிழர்களுக்கு, குறிப்பாக ஈப்போ புந்தோங் வாழ் தமிழ் மக்களுக்காக மறுமலர்ச்சித் திட்டங்கள் உருவாக வேண்டும் என்று அயராது உழைத்தவர். அரும்பாடு பட்டவர்.

தேசிய அளவில் தமிழர் திருநாள் நிகழ்ச்சிகளை ஈப்போவில் முதன்முதலாக நடத்தியவர். ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழாவை பேராக் மாநில அளவிலும் நடத்திக் காட்டியவர். அவர் அரசியல்வாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆன்மீகவாதிகளையும் எதிர்ப்பார்க்கவில்லை.

மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்காகச் சொந்தப் பணத்தைச் செலவு செய்தவர். பல இலட்சங்களைத் தாண்டிப் போகலாம். அவர்தான் பி.கே.குமார். ஈப்போ வாழ் மக்களுக்கு நன்கு தெரிந்தவர். பலருக்கும் நெருங்கிய தோழர்.

அதையும் தாண்டிய நிலையில் அவர் ’மலேசியம்’ புலனத்தின் நீண்ட கால அன்பர். சலிக்காமல் சளைக்காமல் நல்ல நல்ல பதிவுகளைத் தமிழர்களுக்காகப் பதிவு செய்து வந்தவர்.


அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னாரின் ஆன்மா சாந்தி கொள்ள இறைஞ்சுகின்றோம்.

பி.கே.குமார் 1956 ஏப்ரல் 29-ஆம் தேதி பிறந்தவர். வயது 65. மனைவி முத்து ராசாத்தி. மகன் ஜெயக்குமார். மருமகள் யோகேஸ்வரி தேவி. மகள் தாமரைச் செல்வி. மருமகன் இரா. மாறன். பேரப் பிள்ளைகள்: ஜெ. புவனேந்திர குமார், ஜெ. ஆதீஸ்வரி, மா. சுருதி.

பி.கே.குமார், நாடறிந்த சமூகச் சேவையாளர். பேராக் இந்திய வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர். மலேசியத் தமிழர் சங்கத்தின் துணைத் தலைவர். மலேசியத் தொழில் முனைவர் மையத்தின் தலைவர். ஈப்போ செகதாரியஸ் தங்கும் விடுதி; குமார் வணிக வளாகம் ஆகிய நிறுவனங்களின் தோற்றுநர்.

1990-ஆம் ஆண்டுகளில் மலேசியத் தமிழர் மாநாடுகளின் தலைவர். 1996-ஆம் ஆண்டு தொடங்கி 2003-ஆம் ஆண்டு வரை சுங்கைபாரி அரசினர் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணைத் தலைவர். ஈப்போ வள்ளலார் அன்பு நிலையத்தின் காப்பாளர். இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எப்போதுமே எதையாவது புதுமையாகச் செய்ய வேண்டும் எனும் ஆர்வத் துடிப்பில் நகர்ந்து கொண்டே இருந்தவர். இருபத்து நான்கு மணி நேரமும் வணிகம், வியாபாரம், வர்த்தகம் என்று பேசிக் கொண்டே இருப்பார்.


கடைகளில் அமர்ந்து சாப்பிடும் போதுகூட வணிகம் பற்றித்தான் பேசுவார். சமயங்களில் எனக்கே சலிப்பு ஏற்பட்டு மறைமுகமாகத் தொட்டுக் காட்டியதும் உண்டு. ‘என்னங்க குமார். இங்கேயுமா வணிகம் வர்த்தகம்... சாப்பிடுங்க’ என்று கடிந்து கொண்டதும் உண்டு.

1970-ஆம் ஆண்டுகளில் சிப்பாங் லொத்தியான் தமிழ்ப்பள்ளியில் அடியேன் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்த காலம். அப்போது பி.கே.குமாரின் தந்தையார் பாலகுருசாமி, சிப்பாங் சுங்கை பீளேக் நகரில் ஒரு சின்ன மளிகைக் கடை வைத்து இருந்தார்.

அந்தக் கடைக்குச் சமயங்களில் போவது வழக்கம். இருப்பினும் என்னுடைய மாணவர் பன்னீர்செல்வம் என்பவரின் மூலமாக பி.கே.குமார் அறிமுகம் ஆனார்.

அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் நேசன் நாளிதழின் சிறுவர் அரங்கம் பகுதிக்குப் பொறுப்பாளராக இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைத் திருத்தி வெளியிட்டு வந்தேன். அந்த வகையில் பி.கே. குமாரின் எழுத்துகளைத் திருத்தி பிரசுரிக்கச் செய்தேன். தொடர்ந்து கதைகள் கட்டுரைகள் எழுதினார். அப்போதே பி.கே.குமார் ஓர் எழுத்தாளராகி விட்டார்.


பின்னர் தொடர்பு இல்லாமல் போனது. நானும் ஆசிரியர் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டுப் பத்திரிகைத் தொழிலுக்கு வந்தேன். பின்னர் 40 ஆண்டுகள் கழித்து ஈப்போவில் என் மனைவியைச் சந்தித்து என்னைப் பற்றிக் கேட்டு இருக்கிறார்.

ஒருநாள் வீடு தேடி வந்தார். மாணவன் எனும் பாவனை தோழன் என்று மாறியது. அடிக்கடி வெளியே உணவகங்களுக்கு ஒன்றாகச் சாப்பிடப் போவோம். தட்டுப்படும் போது கைச்செலவிற்கு உதவி செய்து இருக்கிறார். மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் அழைப்பு வந்து சேரும். அவர் ஏற்பாடு செய்த சில நிகழ்ச்சிகளில் நீதிபதியாகவும் சேவை செய்து உள்ளேன். கடைசியாக பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கலைநிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் சிறந்த தமிழாசிரியரைத் தேர்வு செய்யும் பொறுப்பு. பாரபட்சம் இல்லாமல் தேர்வு செய்தோம்.

1977-ஆம் ஆண்டில் ‘திராவிட மாயை’ எனும் நூலை பி.கே. குமார் எழுதி இருக்கிறார். அண்மையில் மேலும் ஒரு நூல். அதன் பெயர் ’வாருங்கள் வணிகச் சமுதாயமாக மாறுவோம்’. அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். அழுத பிள்ளை தான் பால் குடிக்கும். வாய்ப்புகளைத் தேடி நாம்தான் போக வேண்டும்.


வாய்ப்புகளை நாம் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரசாங்கம் இதைச் செய்யவில்லை; அதைச் செய்யவில்லை; எதையும் செய்து கொடுக்கவில்லை என்று சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை உரிமையுடன் போய் கேட்க வேண்டும். இப்படிச் சொன்னவர் தான் பி.கே.குமார்.

கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ்ப் பள்ளிகளுடன் தொடர்பில் இருந்தவர். தொய்வு இல்லாமால் தொடர்ந்து தமிழ்ப்பணி ஆற்றி வந்தவர். நாடளாவிய நிலையில் பல தமிழ்ப் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களைச் சந்தித்துப் பேசி வந்தவர்.

அவரின் பார்வையில், கடந்த 15 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகளின் தோற்றம், சுற்றுப்புறச் சூழல் முற்றிலும் மாறி இருக்கிறது. மாறி விட்டது. பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள்; மிகத் திறமையான தலைமைத்துவம் மிக்க தலைமையாசிரியர்கள்; தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள்; சமூக ஆர்வலர்கள்; அரசு சார்பற்ற இயக்கங்கள்; முன்னாள் மாணவர் சங்கங்கள்; தமிழ்ப்பள்ளி வாரிய அமைப்புகள்; இந்தத் தமிழ் நெஞ்சங்களின் வற்றாத ஆதரவுக் கரங்கள் தமிழ்ப்பள்ளிகளை நோக்கி திசை திரும்பி உள்ளன என்று சொல்கிறார்.


தமிழ் ஊடகங்களும் அசராமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல், தங்களால் இயன்ற பணிகளையும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ரோமாபுரி ஒரே நாளில் கட்டப்பட்டது அல்ல. அது போல இந்தச் சாதனைகளும் ஒரே நாளில் நடைபெற்றவை அல்ல. இப்படிச் சொன்னவர் பி.கே.குமார்.

மலேசியாவில் உள்ள பல தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பாரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சாரும். விளையாட்டுகள் மட்டும் அல்லாமல் மனக் கணக்கு விளையாட்டுகளையும் அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த விசயம் மலேசியாவில் பலருக்கும் தெரியாது.

அந்த வகையில் தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகம் செய்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறார். போற்றுகிறேன் அன்பரே.

வணிகம் செய்ய விருப்பம் வந்து விட்டால், அச்சம் சந்தேகங்களை விட்டு ஒழித்து விட வேண்டும். மனத் தடைகளை முதலில் அகற்றிவிட வேண்டும். வணிகம் செய்ய அடிப்படைத் தேவை துணிச்சல். நம்மால் முடியும் என்கிற துணிச்சல். மனத் தடைகளை நீக்குங்கள். தெளிவுடன் இருங்கள். எந்த வியாபாரம் செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் விருப்பப் பட்டே செய்யுங்கள்.


விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்தத் தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியும். முன்னேற்றம் தானாகவே வந்து சேரும் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

பல்லின சமுதாயத்தினர் வாழும் மலேசிய நாட்டில் சகோதரத் துவத்துவம் மிகவும் முக்கியமானது. அந்தச் சகோதரத் துவத்துவத்தை நல்லிணக்கம் மூலமாகத் தான் கட்டிக் காக்க முடியும்.

அதே சமயத்தில் பல இனங்களுக்கு இடையில்  ஒற்றுமை உணர்வை வளர்க்க வேண்டும். பல இனங்களை ஒன்று சேர்க்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் செல்வர் பி.கே. குமார் அறைகூவல் விடுத்து வந்துள்ளார்.

அரசியல்வாதிகள் அவர்கள் பங்கிற்குச் சமூகச் சேவைகள் செய்தாலும் அரசியல் துறையில் சாராதவர்களும் சமூகச் சேவைகளில் ஈடுபட வேண்டும். நாட்டுக்கும் மக்களுக்குக்கும் நல்லதைச் செய்வதைத் தங்களின் தலையாயச் சமூகப் பணியாகக் கருத வேண்டும். 


போட்டி விளையாட்டுக்களின் வழி இளம் சமுதாயத்தினர் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும். இனங்களுக்கு இடையிலான சமூகப் புரிந்துணர்வை வளர்க்க முடியும்.

எதிர்காலத் தலைமுறையினரிடம் இன வேறுபாடுகளைத் தவிர்க்க வேண்டியது இந்தக் காலத்துத் தலைமுறையினரின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் பி.கே. குமார் வலியுறுத்தி வந்தார்.

ஒருநாள் மாலை வேலை. மலேசியாவில் உள்ள தமிழர்களுக்காக ஒரு கட்டுரை எழுதுங்கள். அதில் நான் சொல்லும் இந்தக் கருத்துகளையும் மறக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார். நானும் மறந்து விட்டேன்.

அவர் இறப்புச் செய்தி வந்ததும் அவர் கேட்டுக் கொண்டதும் நினைவிற்கு வந்தது. அவர் போய் விட்டார். இருந்தாலும் அவர் சொன்ன கருத்துகள் இங்கே மீண்டும் உயிர் பெறுகின்றன.

பி.கே.குமார் கடைசியாக என்னிடம் சொன்னது. பதிவு செய்கிறேன். மலேசிய வாழ் அனைத்து இந்திய மாணவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். இப்போதைக்கு உங்களின் பங்கு ஒன்றே ஒன்று தான். படிப்பது மட்டுமே. அதை மட்டும் சரியாகச் செய்யுங்கள்.


கஷ்டமோ நஷ்டமோ; எப்பேர்ப்பட்ட துன்பங்கள் வந்தாலும் படிப்பதை மட்டும் தயவு செய்து நிறுத்தி விடாதீர்கள். உதவி செய்ய பலர் இருக்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.

மலேசியாவின் மூன்று தலையாய இனங்கள். அவற்றில் அரசியல் செல்வாக்கு ஒரு புறம்; பொருளாதாரச் செல்வாக்கு இன்னொரு புறம். அந்த வகையில் எதிர்காலத்தில் நாம் பற்பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அப்போது கல்வியின் வலிமையைக் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மலேசியத் தமிழர்களாகிய நாம் இந்த விநாடி வரையில் சலிக்காமல் சளைக்காமல் நம் தமிழ் மொழி உரிமைகளுகாகத் தொடர்ந்து போராடுகிறோம். போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.

அரசியலமைப்பில் தமிழ் மொழிக்கு முறையான அங்கீகாரம் உள்ளது. அந்த அங்கீகார உரிமையை நாளிதழ்கள் வழியாகவும்; ஊடகங்கள் வழியாகவும் உலகத்தின் பார்வைக்குக் கொண்டு செல்கிறோம். உலக அரங்கில் அந்த உரிமைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

வயிற்றில் சுமந்த வலி அம்மாவுக்குத் தெரியும். தோளில் சுமந்த வலி அப்பாவுக்குத் தெரியும். பக்கத்து வீட்டு பாப்பாத்திக்குத் தெரியுமா. அல்லது பசார் மலாம் பக்கிரிசாமிக்குக்குத் தெரியுமா. மீசையில் மண் ஒட்டினாலும் குற்றம். ஒட்டா விட்டாலும் குற்றம். அப்படிச் சொல்கிறவர்களிடம் நாம் மாற்றுக் கருத்துகள் சொல்ல முடியாது. அவர்களைத் தூக்கிப் போட்டுவிட்டு நாம் பாட்டிற்குப் போய்க் கொண்டே இருப்போம்.

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை; அந்தத் தாய்மொழிப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை; அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்கிற மேடை முழக்கம். அப்படிச் சொன்னவர்: பாஸ் கட்சியின் மகளிர் பிரிவுத் துணைத் தலைவர். சலாமியா மாட் நூர் (Ustazah Salamiah Mohd Nor). 2019 ஜுன் 22-ஆம் தேதி குவாந்தான் இந்திரா மக்கோத்தா அரங்கத்தில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 65-ஆம் ஆண்டு பொதுக் கூட்டம்.


அதைக் கேட்டு ஆவேசம் அடைந்து கண்டக் குரல் எழுப்பினார் பி.கே.குமார். பத்திரிகை செய்தியாளர்களை அழைத்து கண்டனத்தைத் தெரிவித்தார். மறுநாள் பத்திரிகையில் அவரின் செய்திகள் வெளியாகின.

அதில் அவர் சொன்னது: நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் தேவை இல்லை. அந்தப் பள்ளிகள் இன ஒற்றுமைக்குப் பங்களிப்புகள் எதுவும் செய்யவில்லை. அதனால் அந்தப் பள்ளிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்குப் பதிலாக அரபு மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு வர வேண்டும் என்று பேசி இருக்கிறார். ரொம்பவும் தப்பு. ஆட்சேபம் தெரிவித்தார்.

அவருடைய மனத்தாங்கலையும் பதிவு செய்கிறேன். மலேசிய இந்தியர்களுக்கு அரசியல் வலிமையும் இல்லை. பொருளாதார வலிமையும் இல்லை. ஒரே ஒரு வலிமை தான் இருக்கிறது. அதுதான் கல்வி எனும் வலிமை. அதுவே மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் எதிர்கால வலிமைக் கேடயம். அதுவே பி.கே. குமார் அவர்களின் மனவேதனை.


அன்பர்களே ஒரு தாழ்மையான வேண்டுகோள். நம் இனத்தில் பலரை இழந்து கொண்டு வருகிறோம். இந்தக் கொரோனா எப்போது ஓயும் என்று தெரியவில்லை. வெளியே செல்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். கவனமாகப் பயணியுங்கள்.

பி.கே.குமார் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர். ஆகவே இரண்டு ஊசிகள் போட்டுக் கொண்டால் கொரோனா தாக்காது என்று தவறாகக் கருத வேண்டாம். கவனம். கவனம்.

மலேசியத் தமிழர்களை வணிக விரும்பிகளாக உருமாற்றம் காண வேண்டும் என்று கனவு கண்ட பி.கே.குமாரின் கனவுகள் நனவாக வேண்டும். பி.கே. குமார்... அன்பரே, அருமைத் தோழரே, தமிழ் கூறும் நல்லுலகம் உங்களை என்றைக்கும் மறவாது. ஓர் ஆசிரியரின் கண்ணீர் அஞ்சலிகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
18.08.2021


பேஸ்புக் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் சிவாயநம.

Mageswary Muthiah: ஆழ்ந்த இரங்கல்.

Kala Balasubramaniam:
Om Shanthi

Kanaka Ambal: ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமசிவாய

Mariamal Surinarayanan: Om Namasivaya

Jeeva Muthu: ஆழ்ந்த அனுதாபங்கள்..

Manimala Tamil: Om Namah Shivaya

Muniandy Andy: ஓம் நமச்சிவாய

Mageswary Muthiah: ஓம் நமசிவாய.

Francis Silvan: நல்ல மனிதர்... எனது தொலைகாட்சி நாடகத்தில் நடித்து இருக்கிறார்.. சமுகப் பற்றாளர்... எனது படைப்புக்களின் தீவிர ஆதரவாளர்...

Sarasvathy Arjunan: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Barnabas: ஆழ்ந்த இரங்கல். சகோதரரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுகிறோம்.

Sara Rajah: ஓம் நமசிவாய

Parimala Muniyandy: ஆழ்ந்த இரங்கல்

வே சங்கர்: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமசிவாய

Arni Narendran: Om Shanthi - Condolences to bereaved family

Magentiran Nawamani: நல்ல மனிதர்

Maha Lingam: ஆழ்ந்த அனுதாபங்கள்.. ஓம் நமசிவாய..

Gunasegaran Karuppiah: தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை. வாழ்க அவர் நாமம். 🙏🏼

Letchumanan Nadason: ஆழ்ந்த இரங்கல்.

Sheila Mohan: அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஓம் நமச்சிவாய...

Malathi Nair: Deepest condolances to bereaved family

Anbarasan Shanmugam: ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

Raghawan Krishnan: RIP the Great Soul

Chitra Ramasamy: ஆழ்ந்த இரங்கல். ஓம் நம சிவாய 🙏🙏🙏

Jeyabalan Ramasamy: ஆழ்ந்த இரங்கல் ஓம் நமச்சிவாய 🙏

Mani Kumar: நன்றாக பழகக் கூடியவர்... ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

MA Chandran: ஒரு நிகழ்ச்சி முடிந்து இவர் வீட்டுக்குப் போனபோது அனைவருக்கும் முகமலர விருந்தளித்து அனுப்பிய பண்பாடறிந்த தமிழர்.

’சினிமா மோகமும் திராவிட மாயையும்’ தலைப்பில் அவர் எழுதிய நூலைக் கேட்டேன். ’இப்போ கைவசமில்லை எப்படியும் உங்களுக்கு அனுப்புவேன்’ என்றார். அனுப்பாமலேயே மறைந்து விட்டார்.

ஒரு தமிழின பொழிப்பற்றாளர் மறைவு மிக வருத்தத்தைத் தருகிறது. அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆழந்தி இரங்கல். ம.அ.சந்திரன்

Parameswari Doraisamy: ஆழ்ந்த இரங்கல்

MP Tarah: எதையும் பெரிதா எடுத்துக் கொள்ளாதவர். யாருக்கும் தலை வணங்காதவர். நிறைய நல்ல நல்ல கட்டுரைகளை எழுதியவர். நல்ல மனிதர். பி. கே. குமார் அவர்கள்.

Mariamal Surinarayanan: தமிழ்ப் பள்ளிகள் இழந்துவிட்ட சிறந்த தமிழர்

Palar Thangamarimuthu: ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி

Gunaraj George: Shivaya Namaha

Prabagaran Praba: May be an image of one or more people and text that says 'ஆழ்ந்த இரங்கல்... கண்ணீர் "அஞ்சலி"'

Nyana Moorthy: ஓம் நமசிவாய

Ramayah Muru: ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரியன் குடும்பத்தினருக்கு.

Vimal Sandhanam: பார் வாழும் மட்டும் புகழ் நிலைக்கும். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Mohamedu Ali: உங்கள் கட்டுரை நன்று. சிறப்பான பதிவு. சார். என்னைத் தொடார்பு கொள்ளுங்கள். 0176837865. அலி. K.k. நன்றி.

Prabu Prabu: 🙏🙏🙏

Mohamedu Ali:
சிறப்பான பதிவு

Rajaletchumy Munusamy: 🙏🙏🙏

Thanabalen WaiRawan: ஆழ்ந்த இரங்கல் 🙏🏻ஓம் நம சிவாய🙏🏻 🙏🏻

Ayadorai Teresa: 🙏🙏🙏








 

15 ஆகஸ்ட் 2021

நாலு கட்டைப் பாடலில் நாகூர் ஹனிபா

தமிழ் மலர் - 15.08.2021

இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை


சாகாவரம் பெற்ற ஒரு சாகித்திய சங்கீர்த்தனம். தில்லைத் திரவியத்தில் ஒரு திவ்வியப் பிரபந்தம். சாதி மதங்களைக் கடந்து போன ஒரு பவித்திர ஒப்பந்தம். இன்றும் ஒலிக்கும்; இனி என்றும் ஒலிக்கும். இறையருள் இருக்கும் வரையிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

என்னே ஒரு கணீர்க் குரல். என்னே ஒரு குரல் வளம். என்னே ஒரு கம்பீரத் தொனி. நாலு கட்டைப் பாடல். நாலு திக்கும் நர்த்தனமாடிய ஒரு மந்திரப் புன்னகை. எட்டுக் கட்டைப் பாடல்களினால் ஏழிசை மன்னர்களையும் கலங்கடித்த கம்பீரச் சாரீரம்.


சொல்லப் போனால் நாகூர் ஹனிபா ஒரு வைரம் பாய்ந்த கட்டை. விழுதுகளைத் தாங்கிய ஓர் ஆலமரம். சாய்ந்து நாளாகி விட்டது. வாழ்த்தலாம். வேறு எதையும் செய்ய முடியாது.

இந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் நெஞ்சம் இனிக்கின்றது. கனக்கின்றது. ரசிக்கும் போது மணக்கின்றது. மலர்கின்றது. ரசித்த பின்னர் ருசிக்கின்றது. இசைக்கின்றது. வாழ்த்த வயது இல்லை. சிரம் தாழ்த்திக் கூப்புகிறேன்.

நாகூர் ஹனிபா சாதி சமயங்களைக் கடந்து போன ஒரு மாமனிதர். சடங்கு சம்பிரதாயங்களைத் தாண்டிப் போன ஒரு நல்ல மனிதர். அவரை வெறும் ஒரு பாடகனாக மட்டும் பார்க்கக் கூடாது. சமயத்தையும் தாண்டிச் சென்று சாதனை படைத்த ஒரு புனிதராகத்தான் பார்க்க வேண்டும். நாம் வாழும் காலத்தில் அவர் ஒரு சகாப்தம். மறக்க வேண்டாம்.


அவரின் அந்த இடத்தை நிரப்ப இன்னும் ஒருவர் அவ்வளவு விரைவில் வருவாரா. தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. அவர் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்கு இப்போதைக்கு எவரும் இல்லை. இனிமேல் வரலாம். அப்படி ஒருவர் வருவாரா என்பதும் ஒரு கேள்விக்குறி. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

’நாகூர் ஹனிபா தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டு சேர்த்த ஒரு தனிமனித வானொலி.’ இப்படிச் சொன்னவர் யார் தெரியுங்களா. அவர்தான் பெரும் புகழ் பெரியார். அப்படி ஒரு புக்ழாரம் செய்து உள்ளார்.

பொதுவாக தமிழ்ப் பாடல்களில் சுருதி, லயம், ராகம் இருக்கும். பாடல்களின் மும்மூர்த்திகள் என்று சொல்வார்கள். அதனால் தான் இசையில் சுருதி என்பதை மாதா என்றும்; லயம் என்பதை பிதா என்றும் அழைக்கிறார்கள். பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வதை லயம் என்பார்கள். சுருதி இல்லாமல் பாட்டுக்கு எப்படி மதிப்பு இல்லையோ; அதே போல் லயம் இல்லாமல் பாட்டிற்கும் மதிப்பு இல்லை.


ஆனாலும் நாகூர் ஹனிபாவின் பாடல்களில் அந்தச் சுருதி லயங்களை மிஞ்சிய உணர்ச்சிகள் இருக்கும். அந்த உணர்ச்சிகள் இப்போதும் சரி; இனி எப்போதும் சரி பிரளயங்களாக ஆர்ப்பரிக்கும். இது உண்மையிலும் உண்மை. ஒரு சத்தியமான உண்மை என்றுகூட சொல்லலாம். அப்பேர்ப்பட்ட அழுத்தமான உணர்ச்சிக் குமிழ்கள் அவரின் பாடல்களில் தொற்றி நிற்கும்.

இசை லயங்களில் மூன்று வகை உள்ளன. விளம்பித லயம்; மத்திம லயம்; துரித லயம். இந்த மூன்று லயங்களையும் நாகூர் ஹனிபாவின் சுரிதி லயங்கள் தனியாகவே தாண்டி நிற்பதைக் காணலாம். அவருடைய பாடல்களைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது சரியாக இருக்கும்.

இன்னும் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன். ஒரு தாளத்தில் உள்ள அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை மீண்டும் போட்டு முடிப்பார்கள். அதை ஆவர்த்தம் என்று சொல்வார்கள். ஆவர்த்தம் என்பதை ஆவர்த்தனம் அல்லது தாளவட்டம் என்றும் சொல்லலாம்.


ஆதி தாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு இலகுவையும்; இரண்டு துருதங்களையும் போட்டு முடித்தால் ஓர் ஆவர்த்தனம் ஆகும். இந்த ஆவர்த்தன தாளவட்டங்கள் எல்லாமேநாகூர் ஹனிபாவின் பெரும்பாலான பாடல்களில் ஊன்றிச் செல்வதை நன்றாகப் பார்க்கலாம். சரி.

அழகிய தமிழ் மொழிக்கு அழுத்தமான எழுத்துக்ளை அழுத்திப் போட்டு அவற்றுக்கு மீசை வைத்தவர் பாரதியார். அவரைப் போலவே தன் குரல் வளத்தால் தமிழ் அன்னைக்கு தலைப் பாகை கட்டி அழகு பார்த்தவர் இந்த வெள்ளிநரை நாயகன் நாகூர் ஹனிபா.

பதினைந்து வயதில் பள்ளிக்கூடத்தில் பாட ஆரம்பித்தவர். அப்புறம் திருமண வீடுகள்; மேடைக் கச்சேரிகள் என்று அடுக்கடுக்காய் தொடர்ந்து பாடினார். அவர் காலத்து 75 ஆண்டுகளில் 5000 திருமண வீடுகளில் பாடி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று சொல்வார்கள். அவரிடம் அந்த மாதிரியான ஒரு மனப்பக்குவம் இருந்தது. சரி.


நாகூர் ஹனிபா இலைமறைக் காயாக வாழ்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. பிரபலமான ஒரு பாடகர். திராவிடக் கொள்கையில் அலாதியான பிடிப்பு கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடக்கக் காலம் முதல் மிக முக்கியமான பங்கு வகித்தவர். இசை முரசு என்று இனிமையாக அழைக்கப் படுகிறார்.

நாகூர் இ. எம். ஹனிபா (Nagore E. M. Hanifa), தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிப்பட்டினம் என்கிற ஊர். அங்கே தான் 1925 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்மஸ் தினத்தில் பிறந்தார். தகப்பனாரின் பெயர் முகம்மது இஸ்மாயில். தாயாரின் பெயர் மரியம் பீவி. குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை.

(சான்று: https://en.wikipedia.org/wiki/Nagore_E._M._Hanifa)

இஸ்மாயில் முகம்மது ஹனிபா என்ற தன்னுடைய பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று வைத்துக் கொண்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமாகத் தலைதூக்கிய  காலக் கட்டத்தில் இவர் தன்னுடைய குரலையே ஆயுதமாகப் பயன்படுத்திப் போராடினார். வெற்றியும் கண்டார்.

(சான்று: http://www.thehindu.com/features/friday-review/music/when-his-life-was-a-song/article5785079.ece - Hanifa’s rise to fame as the ‘voice’ of the Dravida Munnetra Kazhagam (DMK)


செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே!
முன்னம் போட்ட சூடு என்ன
மறந்ததோ உனக்கு?
என்றும் இந்தி ஏற்க மாட்டோம்
ஓடிப்போ வடக்கு!

நாகூர் ஹனிபா பாடிய உணர்ச்சிமிகு பாடல். அந்தப் பாடலைத் தமிழ் உலகம் என்றைக்குமே மறக்காது.

1955-ஆம் ஆண்டில் வெளி வந்த திரைப்படம் குலேபகாவலி; 1961-ஆம் ஆண்டில் பாவ மன்னிப்பு; 1992-ஆம் ஆண்டில் செம்பருத்தி, 1997-ஆம் ஆண்டில் ராமன் அப்துல்லா. இப்படி நிறைய திரைப் படங்களில் பாடி இருக்கிறார்.

எல்லோரும் கொண்டாடுவோம்

உன் மதமா என் மதமா

நட்ட நடு கடல் மீது

இறைவனிடம் கையேந்துங்கள் போன்ற மணிமணியான பாடல்கள்.

நாகூர் ஹனிபா தி.மு.க.வின் தொடக்க காலத்தில் இருந்தே கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். உழைப்பில் விசுவாசத்தைப் பார்த்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தி.மு.க.-விற்கு அர்ப்பணித்த ஓர் அதிசயமான மனிதர்.

கடைசியில் உயர்ந்த குரலில் உச்சத் தொன்யில் உரக்கப் பாடிப் பாடியே இரத்த வாந்தி எடுத்தவர். அந்த ஓங்கார உச்சத்தில் அவருடைய செவிப்பறை கிழிந்து போனது. கடைசியில் உடல் நலிந்து நலம் மெலிந்து, அப்படியே மறைந்து போனது அந்தத் தன்மானச் சிங்கம்.

ஒன்று மட்டும் உண்மை. இவராக எந்த ஒரு வாய்ப்பையும் தேடிப் போனது இல்லை. இவராக எந்த ஒரு வசதியையும் தேடிப் போனது இல்லை. வந்தது வரட்டும் என்று சொல்கிறவர். அவற்றை எல்லாம் தாண்டிய நிலையில் திராவிடக் கொள்கையே அவருக்கு ஒரு பொற் குவியலாகத் தெரிந்தது. அப்படியே உருமி மேளமாகவும் திரிந்தது.

ஒரு செருகல். தமிழக அரசியல் வரலாற்றில் பிழைக்கத் தெரியாத அப்பாவி மனிதர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால், அதில் நாகூர் ஹனிபாவின் பெயரைத் தான் முதல் இடத்தில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அப்பாவி. வெளுத்தது எல்லாம் பால் என்று நினைக்கிற மனசு. பிழைக்கத் தெரியாத மனிதர் என்று பேர் வாங்கியவர். இந்தப் பக்கம் இக்கரையில் அப்படி ஒரு பட்டியல் போட்டால் அதில் மறக்காமல் என்னையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்களேன். கோலா சிலாங்கூரில் இருந்து கோலா கங்சார் வரை பலரும் சொல்லிச் சொல்லியே ஒருவழி பண்ணி விட்டார்கள்.

நாகூர் ஹனிபா நினைத்து இருந்தால் என்றைக்கோ தமிழ்நாட்டின் அமைச்சராகி இருக்கலாம். அதுவும் இல்லையா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராகவும் ஆகி இருக்கலாம். அதுவும் இல்லையா. பொருளாளராகவும் ஆகி இருக்கலாம். நாகூர் ஹனிபாவிடம் எல்லாத் தகுதிகளும் இருந்தன. அதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

ஹனிபாவுக்கும் கலைஞர் கருணாநிதிக்கும் இடையே இருந்த உறவு இருக்கிறதே அது இன்று நேற்று வந்த உறவு அல்ல. கலைஞர் கருணாநிதி அரைக்கால் சட்டை போட்டுத் திரிந்த ஒரு காலம் இருந்தது. அந்தக் காலத்தில் இருந்தே இருவருக்கும் அப்படி ஒரு நல்ல நட்பு. ஹனிபா மறைந்த செய்தியைக் கேட்டு முதல் ஆளாய்ப் பனித்த கண்களுடன் நின்றவர் கலைஞர் கருணாநிதி.

நாகூர் ஹனிபா கலைஞரை எப்போதும் மு.க. என்று செல்லமாகத் தான் அழைப்பார். இன்னும் ஒரு விசயம். நாகூர் ஹனிபா தன் ஒரு கையைப் பேராசிரியர் அன்பழகன் தோளிலும் இன்னொரு கையைக் கலைஞர் தோளிலும் போட்டுக் கொண்டு உரையாடும் உரிமை பெற்றவர். அந்த அளவிற்கு உரிமை.

இருந்தாலும் பாருங்கள். நாகூர் ஹனிபாவிற்கு ஏதாவது ஓர் உயர்ப் பதவியை, கலைஞர் கொடுத்து இருக்கலாம். நாகூர் ஹனிபா அந்த மாதிரி பட்டம் பதவிகளைத் தேடிப் போகிற மனிதரும் அல்ல. இருந்தாலும் ஏன் கொடுக்கவில்லை. அது ஒரு பெரிய கேள்வியாகவே இன்று வரை தொற்றி நிற்கிறது.

கலைஞர்  கருணாநிதி தன் இளமைக் காலங்களில் பெரும்பாலும் நாகூர் பகுதியில் சுற்றித் திரிந்தவர். அந்த நாகை பகுதியிலேயே காலத்தையும் நேரத்தையும் கழித்தவர். நாகை மக்களுடன் ஒன்றாய்க் கலந்து வாழ்ந்தவர்.

முன்பு காலத்தில் நாகூரில் கௌதிய்யா சங்கம் எனும் பெயரில் ஒரு சங்கம் இருந்தது. இன்னமும் இருக்கிறது. அந்தச் சங்கத்தின் தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு, கலைஞர் கருணாநிதி சுற்றித் திரிந்த காலம் ஒன்று இருந்தது.

நாகூரில் வாழும் மூத்த குடிமக்கள் இன்றும் அதை நினைவு படுத்திச் சொல்வார்கள். ஆக அந்த வகையில் கலைஞரின் வளர்ச்சியில் இஸ்லாமியச் சகோதரர்களின் பங்கு கணிசமான அளவில் இருந்து இருக்கிறது. அதை கலைஞரும் மறுக்கவில்லை.

கோபாலபுரத்தில் கலைஞருக்கு ஒரு வீடு இருக்கிறது. தெரியும் தானே. அந்த வீட்டின் இப்போதைய மதிப்பு 8 கோடி ரூபாய். அந்த வீட்டைக் கூத்தாநல்லுர் கமால் சகோதரர்கள் தான் அன்பளிப்பாகக் கொடுத்தார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

கமாலுத்தீன், ஜெஹபர்தீன், அலாவுத்தீன் இவர்கள் மூவரும் தான் கமால் பிரதர்ஸ் என்கிற கமால் சகோதரர்கள். அந்தக் காலத்துப் படத் தயாரிப்பாளர்கள்.

1957-ஆம் ஆண்டு புதையல் எனும் திரைப்படத்தைக் கமால் சகோதரர்கள் தயாரித்து வெளியிட்டார்கள். அந்தப் படத்திற்கு கருணாநிதி கதை வசனம் எழுதி இருந்தார். அந்தச் சமயத்தில் குளித்தலை தொகுதியில் கலைஞர் கருணாநிதி வெற்றி பெற்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த நேரம்.

அந்த வீட்டை கலைவாணர் என்.எஸ்.கே. தான் வாங்கித் தந்தார் என்று சிலர் சொல்வது உண்டு. அது தவறுங்க. ரகசியத்தைப் பிறகு சொல்கிறேன். புது வீட்டிற்குப் புகுமனை செய்யும் போது கலைஞருடன் கூடவே இருந்து நாகூர் ஹனிபா உதவிகள் செய்து இருக்கிறார். இந்த உண்மை பலருக்கும் தெரியாது.

கமால் சகோதரர்களுக்கு வியட்நாம் நாட்டின் சைகோன் நகரத்தில் வணிகத் தொழில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு வியட்நாமிய போர். அதனால், சைகோன் நகரம் வீழ்ச்சி அடைந்தது. வியாபாரத்தில் நஷ்டம்.

அதன் பின்னர் கமால் சகோதரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து கமால் பிரதர்ஸ் என்கிற பட நிறுவனத்தைத் தொடங்கினார்கள். தொடர்ந்து மூன்று படங்களைத் தயாரித்தார்கள். 1957-ஆம் ஆண்டு ’புதையல்’. 1960-ஆம் ஆண்டு ’தெய்வப்பிறவி’. 1964-ஆம் ஆண்டு ’வாழ்க்கை வாழ்வதற்கே’.

படத் தயாரிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற்றுத் தரவில்லை. நொடித்துப் போனதுதான் மிச்சம். இவர்களுக்கு கடைசி காலத்தில் யாருமே உதவி செய்யவில்லை. இந்தக் கட்டத்தில் தான் நாகூர் ஹனிபா ஐயா வருகிறார். எப்படி என்பதை நாளைய கட்டுரையில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.08.2021

பேஸ்புக் பின்னூட்டங்கள்

Sara Rajah: super ayya

Vejayakumaran: சினிமாவிலும் பாடியிருப்பாரே.. வாழ்த்துக்கள்

Sheila Mohan: இறைவனிடம் கையேந்துங்கள்... என்றென்றும் நினைவில் நிற்கும் பாடல்... ஐயாவின் குரலும்.. மிக அருமையான கட்டுரை.. நன்றிங்க சார்..!

Vani Yap: கட்டுரை படிக்க சிறப்பாக உள்ளது ஐயா.... நாகூர் ஹனீபா அவர் சமயம், சடங்குகள், சம்பிரதாயம் அனைத்தும் கடந்து தமிழ் மொழிக்கு அழகு சேர்த்தவர் என்று படிக்கும் போது பெருமையாக உள்ளது.... இனி இவர் போல் ஒருவர் வருவாரா... சாத்தியம் குறைவே ஐயா... சிறப்பு மிகுந்த பதிவு.. மிக்க நன்றி

Vani Yap: எனது இளவயதில் பிரமிக்க வைத்த அவரது பாடல்கள், இன்றளவும் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து உள்ளது....😊👌

Jothy Subramaniam: கம்பீரமான குரல் வளம் கொண்டவர். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் சமய பேதங்கள் கடந்து அனைவரையும் வசீகரித்த பாடல்.

Rsmaniam Subra: 👌

Bobby Sinthuja: ஐயா, அருமையான பாடல் தமிழ் மக்கள் மத்தியில் என்றென்றும் நிலைத்து நிற்கும் பாடல் வரிகள்...

Venogobaal Kuppusamy: கட்டுரை மிக அருமை! தங்களின் இசை ஞானம் அபாரம்! வாழ்த்துகள்

Parimala Muniyandy: அருமை... என்றென்றும் மனதில் நிற்கும் பாடல்...

Arni Narendran: Mumbai - Masjid Bandar - I heard his live concert in the early 1980s. A Divine Golden Voice. 🌷

Alagumani Mathivanan: கம்பீரமான குரல்

Punithasamy Sittan: நாடோடி நண்பா போகாதே என்றென்றும் காதல் சாகாதே சிறப்பாக பாடி இருப்பார்.


 

11 ஆகஸ்ட் 2021

ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு

ஒரு மைனா குஞ்சு மாதுளம் பிஞ்சு
மாமனை கொஞ்ச வந்தாளாம்
அவ நைசா பேசி செவ்விள நீரும்
தேன்கனி சாரும் தந்தாளாம்
டண்டக்கு டண்டான்


வானம் வெளுக்கும்
நேரம் வரைக்கும்
மோக கடலில்
நெஞ்சம் மிதக்கும்


மிஞ்சு சத்தம் மெட்டி சத்தம்
கொஞ்ச கொஞ்ச தேடி வந்தது
யாரை யாரை
அது யாரை யாரை

பொட்டு வச்சு எட்டு வச்சு
வக்கணையா கூட வந்தது
தேடி தவிச்சது யாரடி
மூடி மறச்சத கூறடி
சோடி கிளி ரெண்டும் சேர்ந்துச்சாம்
சோக கதை அங்கு தீர்ந்துச்சாம்

 

08 ஆகஸ்ட் 2021

தேன் சிந்தும் வானமாய் தென்மதுரை தேன்மொழியாள்

தமிழ் மலர் - 08.08.2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்


சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்றுப் பாடல். இதில் வள்ளுவரின் அருள் மொழியையும் இணைத்துக் கொண்டால்...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்…


அந்த வகையில் ஆசிரியம் என்பது ஒரு தெய்வீகப் பணி; ஓர் உன்னதமான பணி. யாதும் ஊரே யாவரும் கேளிர்ப் பணி. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறந்த பணி. அதுவே ஓர் அறப்பணி; ஓர் உயிர்ப்பணி.

அந்தப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்தவர் பத்துமலைத் தமிழ்ப்பள்ளியின் ஆசிரியை தேன்மொழி பெரியசாமி. அன்பான தமிழ்ப்பெண். தெய்வக் கருணை பெற்ற அற்புதமான தமிழ்ப்பெண். அழகிய தமிழ்ப் பெண்மணி.

இறுதி எல்லைக் கோட்டைத் தாண்டும் வரையில் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்று வாழ்ந்து காட்டியவர். அப்படிப்பட்ட நல்ல ஒரு தமிழ்ப் பெண்ணை மலேசியத் தமிழர்கள் இழந்து நிற்கிறார்கள். இவரைப் போல பலரையும் நாம் இழந்து தவிக்கிறோம்.

நதியில் விளையாடி கொடியில் தலை சீவி, மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். குமுதா இராமன். சின்ன வயதிலேயே போய்ச் சேர்ந்து விட்டார். அவருக்குப் பின்னர் மேலும் ஒரு தமிழ்ப்பெண்.

முன்பின் அறிமுகம் இல்லாத முகங்களாக இருக்கலாம். முன்பின் பார்க்காதவர்களாக இருக்கலாம். முன்பின் தெரியாதவர்களாக இருக்கலாம். ஆனால் ஒரு தமிழரின் இழப்பு என்பது நம் மலேசியத் தமிழ் இனத்திற்கே ஓர் இழப்பு.

ஏற்கனவே பலரை இழந்து விட்டொம். கொரோனா தாண்டவத்தில் இன்னும் இழந்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு தமிழரின் உயிரை எப்படியாவது இழந்து கொண்டு வருகிறோம். வேதனை. வேதனை.

நம் இனத்தில் ஒரு தமிழரை இழக்கின்றோம் என்றால், அது நம்முடைய வாரிசுகளின் சுவடுகளில் ஒன்றை இழக்கின்றோம் என்று பொருள்.

2019-ஆம் ஆண்டு புள்ளி விவரங்கணிபடி மலேசியாவில் 8,873 தமிழாசிரியர்கள் சேவை செய்கிறார்கள். இதில் ஓர் இலக்கம்; ஓர் எண் குறைந்தாலும் அது நம் இனத்திற்கு மட்டும் இழப்பு அல்ல. உலகத் தமிழர்களுக்கு ஓர் இழப்பு. நம்முடைய எதிர்காலச் சந்ததியினருக்கே பெரிய இழப்பு.

இந்த நாட்டில் நம் தமிழர் இனம் சன்னம் சன்னமாய்க் குறைந்து வருகிறது. தெரிந்த விசயம். என்ன காரணம் என்று நமக்கும் தெரியும். வாய் இருந்தும் பேச முடியாத இனமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாயில்லா பூச்சிகூட வாய் திறந்து சத்தம் போடுகிறது. ஆனால் நாம் அந்தச் சத்தத்தைகூட வெளியே கொட்ட முடியாமல் மௌனமாய் அழுது கொண்டு போகிறோம். புரியும் என்று நினைக்கிறேன்.

இந்த நிலையில் ஒவ்வொருவராய்ப் போய்க் கொண்டு இருந்தால் என்ன சொல்வது. என்ன செய்வது. அழுது ஆர்ப்பரிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதுங்க.

இந்தக் கலிகாலத்தில் கொரோனா தொற்று என்பது ஓர் அழையா விருந்தாளியாய், இல்லாத பொல்லாத இழப்புகளுக்கு வடிகால் வடித்துக் கொண்டு போகிறது. இந்த நிலையில் இந்தப் பக்கம் அரசியல் கோமாளிக் கூத்துகள்; அரசியல் சதிராட்டங்கள். அர்த்தம் இல்லாத அரசியல் தில்லுமுல்லுகள். எக்கச்சக்கமான தவளைகள் கூட்டம். சமாளிக்க முடியவில்லை. நம்ப கதைக்கு வருவோம்.

ஆசிரியை தேன்மொழி பெரியசாமியின் புகைப்படத்தை ஊடகங்களில் பார்த்தேன். மனம் ரொம்பவும் வலித்தது. என் மகள் வயதுப் பெண். வாழ வேண்டிய வயது. பத்து பிள்ளைகளுக்குப் பாதை போட்டு பத்து நல்லது செய்ய வேண்டிய வயது. சொல்லாமல் கொள்ளமல் பறந்து போய் விட்டார். என் மனசில் அது ஒரு காயம். வலிக்கிறது.

ஆசிரியை தேன்மொழி பெரியசாமி, பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கு மட்டும் அல்ல மலேசியாவில் உள்ள அனைத்துத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கிடைத்த ஓர் அரிய பொக்கிஷம். ஓர் அரிய சீதனம். நான் சொல்லவில்லை. பெர்லிஸ் கங்கார் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் உதயக்குமார் சொல்கிறார். ஆசிரியை தேன்மொழியுடன் சம காலத்தில் பணிபுரிந்தவர்.

ஆசிரியை தேன்மொழி மண்ணில் பிறந்த ஒரு வான்வெளி சகாப்தம்; சத்தம் இல்லாமல் விண்ணுலகத்தில் மறைந்து போனார் என்று பதிவு செய்கிறார். இவர் மட்டும் அல்ல. தேன்மொழி பற்றி பதிவுகள் அனுப்பிய அனைவருமே அப்படித்தான் வேதனைப் படுகிறார்கள். நினைவலைகளில் நெஞ்சங்கள் காய்ந்து போவது இல்லை.

பத்துமலைப் பள்ளியிலும் சரி; மலேசியாவில் உள்ள 527 பள்ளிகளிலும் சரி; தேன்மொழியைப் போல சிறந்த ஆசிரியர்கள் பலர் உள்ளனர். இல்லை என்று சொல்லவில்லை. தரணி போற்றும் சிறந்த ஆசிரியர்கள் உள்ளனர். மணி மணியான ஆசிரியர்கள்.

அண்மையில் பேராக் மாநிலத்தில் ஒரு தமிழர்க் கலைநிகழ்ச்சி. வணிக விழிப்புணர்வாளர்; தமிழரினச் சேவையாளர் ஈப்போ பி.கே.குமார் தலைமையில் நடந்த நிகழ்ச்சி. அதில் சிறந்த தமிழாசிரியர்களைத் தேர்வு செய்யும் தலைமை நீதிபதி பொறுப்பு. நூறு தமிழாசிரியர்களின் சாதனைப் பட்டியலை என்னிடம் வழங்கினார்கள்.

அந்தத் தமிழாசிரியர்களின் சாதனைகளைப் பார்த்துப் படித்த போது மலைப்பு; திகைப்பு; வியப்பு. அற்புதமான ஆசிரியர் மணிகள். அற்புதமான ஆசிரியர்ச் செல்வங்கள். ஒரு புள்ளி இடைவெளியில் பத்து ஆசிரியர்கள் முதல் நிலையில் நின்றார்கள். மனதை இறுக்கிக் கொண்டு முதல் மூன்று இடங்களைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைமை.  

கதவைத் திற காற்று வரும் என்று சொல்வார்கள். ஆனால் கதவைத் திறக்க வேண்டாம். காற்றைத் தேடி நாங்கள் போகிறோம் என்று நம் தமிழ் ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் சாதனை படைத்து வருகிறார்கள். நெஞ்சம் கனக்கிறது.

ஆசிரியப் பெருமக்களின் அர்ப்பணிப்பு ஈடுபாடுகள். அதில் அவர்களின் கடமை உணர்வுகள். அதையும் தாண்டிய நிலையில் அவர்களின் சமுதாயப் பற்று கலந்த இனப் பற்று. அதற்கு மேலும், அவர்களின் மொழிப் பற்று. ஆக இப்படி அத்தனைப் பற்றுகளும் தமிழாசிரியர்களின் கற்பித்தல் வாழ்வியலில் கலந்து பயணிக்கின்றன.

இருப்பினும் தேன்மொழி எனும் மறைந்து போன ஓர் உயிருக்கு ஆராதனை செய்வதால் எந்த வகையிலும் குறை இல்லை. ஆயிரம் வாசல் இதயங்களில் ஒன்றாய், நல்ல ஓர் இதயத்தை ஆலாபனை செய்கிறோம். நம் மொழிக்காக; நம் குழந்தைகளுக்காகச் சேவைகள் செய்து உள்ளார். நினைத்துப் பார்ப்போம்.

ஆசிரியை தேன்மொழியின் இழப்பு, பத்துமலைத் பள்ளிக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று சொல்லி தொடர்கிறேன். அவர் பணிபுரிந்த பள்ளிகளின் தலைமைத்துவத்திற்கு மதிப்பு மரியாதை கொடுத்தவர். எந்த மறுப்பும் தெரிவிக்காமல் தன் கடமைகளைச் சிறப்பாகச் செய்து முடிப்பதில் வல்லவர் என்று பெயர் எடுத்தவர்.

மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு கற்றல் கற்பித்தலை வழங்குவதிலும் சிறந்து விளங்கினார். புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கியவர். மாவட்டம் மற்றும் மாநில ரீதியில் மாணவர்கள் பங்கெடுக்கும் வாய்ப்புகளை இயன்ற அளவிற்கு வழங்கி உள்ளார். அது மட்டும் அல்ல.

பெற்றோர்களிடம் ஒரு நல்லுறவை அமைத்துக் கொண்டவர். மாவட்ட கல்வி இலாகாவில் உள்ள அதிகாரிகளும், அவரின் திறமையைப் பாராட்டிப் பேசுவது உண்டு. மாநிலக் கல்வி இலாகாவில் அவருக்கு என ஒரு சிறப்பான வாய்ப்பு வழங்கப் பட்டது.


ஒரு சிறப்பு நிரல் திரட்டு (modul) தயார் செய்து கொண்டு இருந்தார். அதுவும் கூடிய விரைவில் வெளியீடு காண இருந்தது. ஆனால் அதற்குள் இவர் விடைபெற்றுக் கொண்டார்.

பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களுடன் எல்லா நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார். பத்துமலை தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை திருமதி செ. அரசிராணி. அவர் இப்படிச் சொல்கிறார்.

தேன்மொழி எனும் பெயரைப் போலவே தேன் சிந்தும் வானத்தைப் போன்றவர். மிகவும் எளிமையாகப் பழகக் கூடிய சுபாவம். 2009-ஆம் ஆண்டு பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றலாகி வந்தார். மூன்று ஆண்டு காலமாகப் படிநிலை 1 மாணவர்களுக்குத் தேசிய மொழி கற்றுக் கொடுத்தார்.

2011-ஆம் ஆண்டு புதிய கட்டடம் நிறுவப்பட்டு, பாலர் பள்ளி ஆசிரியராக அமர்த்தப் பட்டார். ஒரு நல்லாசிரியர் என அவரைச் சொன்னால் மிகையாகாது. குழந்தைகளுடன் இணைந்து அவர்களின் குணங்களை உணர்ந்து அவர்களுக்கு வேண்டிய விசயங்களை முறையாகச் செய்யக் கூடியவர்.

வகுப்பறைச் சூழலைச் சிறப்பாக அமைத்துக் கொண்டார். மாணவர்களின் தேவைகளை முதன்மையாகக் கருதக் கூடியவர். முதலாம் படிநிலைக்குச் செல்லவிருக்கும் மாணவர்களை முழுமையாகத் தயார் செய்து அனுப்பும் திறன் கொண்டவர். அன்னாரின் இழப்பு அவரின் குடும்பத்துக்குப் பேரிழப்பு; அதே வேளையில் பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்கும் பேரிழப்பு.

நாம் ஒரு சிறந்த ஆசிரியரை இழந்து விட்டோம். இந்த வேளையில் அவர்தம் குடும்பத்தினருக்கும் பள்ளிக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் மனம் தளர வேண்டாம், அவரின் குழந்தைகளின் வடிவில் அவர் நம்முடனே பயணிப்பார்.

சிறந்த ஓர் ஆசிரியரை இழந்ததில் எனக்கு மிகுந்த வருத்தமே. அன்னாருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அவரின் குழுந்தைகளுக்குச் சிறந்த கல்வி வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம். நன்றிங்க அரசிராணி.

ஆசிரியை தேன்மொழியின் கணவர் திரு. துரைராஜ். பிள்ளைகள் அனு ஸ்ரீ; மற்றும் இரமணா. இப்போது கோலாலம்பூர் செலாயாங்கில் உள்ளனர். அங்கு இருந்துதான் தேன்மொழி, பத்துமலைத் தமிழ்ப்பள்ளிக்குச் சென்று வந்தார்.

2003-ஆம் ஆண்டு சுல்தான் அப்துல் ஹலிம் சுங்கை பட்டாணி, கெடா ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் சேர்ந்து பயின்றவர் தேன்மொழி. தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸ் பட்டமும் பெற்றார்.

இவர் 2007-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் செண்டாயான் தோட்ட தமிழ்ப்பள்ளியில் சேவை செய்தவர். அதன் பின்னர் பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கு வந்தார்.  

இவருடைய அணுகுமுறைகள் அனைத்துமே தமிழ்ப்பள்ளி; தமிழ் மாணவர்கள். அந்த இலக்கை நோக்கி தம் சேவைப் பயணத்தை அமைத்துக் கொண்டார். அந்த வகையில் இவரிடம் நிறைய அர்ப்பணிப்பு உணர்வுகள். அதில் மாற்ருக் கருத்துகள் இல்லை. மேலும் ஒரு முக்கியமான தகவல்.

இப்போதைய தமிழாசிரியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுகளைப் புகழாரம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறேன். அது காலத்தின் கட்டாயம் அல்ல. காலத்தின் கடப்பாடு. மலேசியத் தமிழாசிரியர்களை இப்போது புகழாமல் வேறு எப்போது புகழ்வதாம். சொல்லுங்கள்.

வாங்குகிற சம்பளத்திற்கு வஞ்சகம் இல்லாமல் வேலை செய்தால் போதும் என்பது அந்தக் காலம். அந்தக் காலம் மாறிப் போய் வருகிறது. இப்போது உள்ள தமிழாசிரியர்கள் பெரும்பாலோர்; ஊதியத்தையும் சன்மானத்தையும் பெரிதாகப் பார்க்காமல் ஊழியச் சன்மார்க்கத்தைத் தான் பெரிதாகப் பார்க்கிறார்கள்.

அது இந்தக் காலத்து தமிழாசிரியர்களின் இன மனப்பாங்கு. உண்மைங்க. ஆனாலும் சம்பளத்திற்கு மாரடிக்கும் சில இரண்டு கால் ஜீவன்கள் ஆங்கங்கே நடமாடிக் கொண்டு இருக்கவே செய்ன்றன. இல்லை என்று சொல்லவில்லை. இரண்டு கால் ஜீவன்கள் என்றுதான் சொல்கிறேன். கூலிக்கு மாரடிக்கும் மனிதர்கள் என்று சொல்லவில்லை.

இப்போதைய நிலையில்; இப்போது நாடு போய்க் கொண்டு இருக்கும் நிலையில்; சமூதாயத்தின் நலனைக் கருத்தில் கொள்ளும் தமிழாசிரியர்கள் தான் பெரும்பாலும் அதிகமாய் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஆதாயம் பார்க்காத அர்ப்பணிப்பு ஜீவன்கள். கைகூப்புகிறேன். தமிழர்களின் சுவாசக் காற்றில் விசுவாசத்தைப் பார்க்கின்றனர்.

இன்னும் ஒரு விசயம். அண்மைய காலங்களில் மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆசிரியப் பெருமக்களிடம் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர்களிடம் இனப் பற்றும் மொழிப் பற்றும் மேலோங்கி நிற்கிறது. இதை மலேசியத் தமிழ்ச் சமுதாயம் நன்றாகவே உணர்ந்து வருகிறது. மீண்டும் ஒரு செருகல்.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் தம் இலக்கை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களின் காய்களை நகர்த்தி வருகின்றன. அண்மைய காலங்களில் ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிப் பயணிக்கத் தொடங்கி உள்ளன.

மலேசியத் தமிழாசிரியர்களை இப்படி எழுதி உச்சி குளிரச் செய்கிறேன் என்று சிலர் ஆதங்கம் கொள்ளலாம். அந்தப் பாவனையில் வேறு மாதிரி எதையாவது சொல்லிவிட்டுப் போகலாம். கவலை இல்லை. உண்மையைத் தான் எழுதி இருக்கிறேன். பொறாமை புண்சிரிப்பு இல்லாத மனிதர்கள் எந்த இனத்தில் தான் இல்லை. குறை கண்டுபிடிப்பதற்காகவே சில ஜென்மங்கள் உயிர் வாழ்கின்றன. கண்டு கொள்ள வேண்டாம். அவர்களைப் பார்த்தும் பார்க்காமல் போய்க் கொண்டே இருப்போம்.

தமிழ் மொழிப் பற்றுதலை மலேசியத் தமிழாசிரியர்கள் அனைவரும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். மிக முக்கியம்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவ தெய்வங்களின் வாழ்க்கையில் ஒளியையும் தெளிவையும் வழங்கி, தெய்வங்களாகத் துலங்கும் மலேசியத் தமிழாசிரியர்களுக்கு மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.

தேன்மொழிக்கு ஒரு தோழியின் கவிதை... நட்பின் மணித் துளியாய் வாழ்ந்த காலம்; கடந்த நாட்கள் இன்று களவாடப் பட்டன. தூரப் போன உன் முகம் தொலைந்தாலும்; கொண்ட பண்பின் ஆழம் மாறாது. மண்விட்டு உடல் பிரிந்தாலும்; மணம் வீசும் நட்பின் பாசம் என்றும் காணும். இறைவன் சித்தம் என ஏற்றுக் கொண்ட மனம் இன்று; சில கண்ணீர்த் துளிகளைச் சுமந்து வரும் உன் வழியில்! இறைவன் மடியில்  இளைப்பாறுக!

நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு. ஆனால் தேன்மொழியின் நினைவுகளுக்கு ஒருபோதும் ஓய்வுகள் இல்லை. அந்த வகையில் ஒவ்வோர் இதயமும் மற்றோர் இதயத்தை நினைத்து நேசித்து கொண்டுதான் இருக்கும், அவரைப் பிரிந்து வேதனைப் படும் அன்னாரின் குடும்பத்தாருக்கு நம்முடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக நடந்த இளம் தென்றலாய்க் கலைந்தும் கலையாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

அவர் மறைந்தாலும் அவரின் நினைவுகள் எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும். மலேசிய மண்ணில் மறைந்தும் மறையாத ஓர் அழகிய தமிழ்ப்பெண் தேன்மொழி.

தேன் சிந்தும் வானமாய்; தென்மதுரையின் தேன்மொழியாக; இறைவன் அடிகளில் தேன்மொழி அமைதி கொள்வாராக!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
08.08.2021



பேஸ்புக் பதிவுகள்

Sathya Raman: வணக்கம் சார். ஒன்றுமே தெரியாத அறிவிலிகளையும் புடம் போட்ட அறிவாளிகளாக, புத்திசாலிகளாக, கல்வி மான்களாக உரமேற்றி உருப்படியாக வைப்பவர்கள் ஆசிரியர்கள் என்றால் அது வெறும் வார்த்தை புகழ்ச்சி இல்லை.

முட்டாள்களையும் தங்களின் முயற்சியால் முன்னுக்கு கொண்டு வரும் ஆசிரியர்களும் இருக்கும் பள்ளியில்தான் பாராபட்சதோடு படித்துக் கொடுப்பதில் பற்று இல்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு இடையிலை பள்ளியில் தமிழ் வகுப்புக்கு பள்ளி நிர்வாகம் பச்சை கொடி காட்டி இருந்தாலும் வகுப்புக்கு மட்டம் போடும் பல ஆசிரியர்கள், ஆசிரியைகள் இன்னமும் நம்மிடையே இருக்கவே செய்கிறார்கள்.

அப்படியே அத்திப் பூத்தாப் போல் வந்தாலும் தெளிவாக வகுப்பை நடத்துவது இல்லை. கடமைக்கு நேரத்தை கடக்க செய்வார்கள்.

இந்த அனுபவம் என் மகளுக்கு நடந்ததை நான் அறியப் பட்டேன். என் மகள் ஐந்தாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது அந்தாண்டு தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப் பாடமாக எடுக்க முன்வந்த மாணவர்களை உதாசினப்படுத்தி... அவர்களுக்கு முறையாகப் பாடம் சொல்லிக் கொடுக்க தவறிய ஆசிரியையை சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் நாலு நல்ல வார்த்தையில் வசைபாடிய சம்பவங்களும் உண்டு.

தமிழ் பள்ளிகளில் தன்னிகரற்ற ஆசிரியர்கள் அதிகமாக இருக்கவே செய்கிறார்கள். ஆறாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விகிதத்திற்காக அற்பணிப்போடும், அக்கறையோடும் மாணவர்களை வழி நடத்துவதில் சீனர்களை அடுத்து நம் தமிழாசிரியர்களும் தொண்டாற்றுவது போற்றுதல்குரியது.

எக்காரணத்தைக் கொண்டும், எது வந்த போதும் தமிழாசிரியர்களை நாம் இழந்து விக்கூடாது என்றே எதிர்ப் பார்கிறோம். ஆனால் இயற்கையும், நோயும் நம்மை மிஞ்சி நிற்கிறதே?

இந்த கொடிய நோய்க்கு சமீப காலமாக நம் இந்தியர்களும் அதிகமாக பலியாகி வருவது மனதை பதற வைக்கிறது.

ஒரு காலத்தில் இருபது லட்சத்திற்கு மேலாக இருந்த நம் இனம் இன்று சரிவை சாவில் எதிர் நோக்கி இன அழிவை சந்தித்துக் கொண்டிருப்பது சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

யார் விட்ட சாபமோ
யார் விட்ட தூபமே?
அந்த கடவுளுக்கு வெளிச்சம்.

கல்வி என்பது தகவல்களை சேகரிப்பது அல்ல. அறிவைப் பெருகி கொள்வது. அத்தகைய அறிவுக் கண்ணை மனிதனுக்கு திறந்துவிடும் மாசற்ற மாணிக்கங்களான தமிழாசிரியர்கள் மென்மேலும் நம் நாட்டில் நலம்சூழ வாழ வாழ்த்துக்கள்

இவ்வேளையில் சகோதரி தேன்மொழி அவர்கள் சான்றோர்கள் போற்றிய நல்ல, வல்ல தமிழாசிரியையாகத் தன் கடமையை ஆற்றி, காலத்தின் கோலத்தால் இறைவனின் இளைப்பாற சென்ற துயர்ச் செய்தி தொண்டையை அடைகிறது.

என் தமிழுக்கு வந்த இழப்பை எண்ணி வருந்தி அன்னாரின் ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவதோடு, அவரைப் பிரிந்து துயர் கொண்டு இருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைக் கனத்த இதயத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் .

ஆசிரியை தேன்மொழி பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றிங்க சார். 🙏🙏🙏

Muthukrishnan Ipoh >>>> Sathya Raman: வணக்கம் சகோதரி. தங்களின் நீண்ட பதிவைப் பார்த்தேன். படித்தேன். மனம் மிகையாகக் கனக்கவில்லை. அழுதது.

நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர் இறந்து விட்டார்கள். பலருக்கும் சின்ன சின்ன வயது.

என் குடும்பத்திலேயே ஒரு நான்கைந்து பேர் இறந்து விட்டார்கள். இறப்பிற்குப் போக முடியாத சூழ்நிலை.

மலாக்காவில் ஓர் இறப்பு என்றால் கிள்ளானில் ஓர் இறப்பு. சுங்கை பட்டாணியில் ஓர் இறப்பு. பினாங்கில் ஓர் இறப்பு. எந்த இறப்பிற்கும் போக முடியாத நிலை. என்ன செய்வது?

பல நூறு மைகளுக்கு அப்பால் இருந்தவாறே கண்ணீர் சிந்திவிட்டுப் போகும் நிலை.

எனக்குத் தெரிந்து எனக்கு நன்கு அறிமுகமான நான்கு தமிழர் வழக்கறிஞர்கள் (60 வயதுக்கும் மேற்பட்டவர்கள்) கோவிட்டினால் இறந்து விட்டார்கள். நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. கிரகிக்கவும் முடியவில்லை.

ஆகக் கடைசியாக் இதைத் தட்டச்சு செய்யும் போது நாட்டின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர் குனேஷ் காலமான செய்தி வருகிறது. வேதனை. வேதனை. வேதனைப் படுவதத் தவிர வேறு எதுவும் செய்கிற மாதிரி இல்லைங்க.

எப்போது இந்தத் தாக்கம் முடிவிற்கு வரும். தெரியவில்லை. எல்லா பாரத்தையும் ஆண்டவனிடம் மீதுபோட்டு விடுவோம். ஆண்டவன் என்ன நினைக்கிறாரோ என்ன செய்கிறாரோ அவர் அதைச் செய்து விட்டுப் போகட்டும். தங்களின் நீண்ட பதிவிற்கு நன்றிங்க சகோதரி சத்யா.

இதைப் பதிவு செய்து கொண்டு இருக்கும் போது நண்பர் ஒருவரின் தம்பி... ஒரு மருத்துவர். செலாயாங் மருத்துவமனையில்... இறந்து விட்டதாகச் செய்தி வருகிறது. ஒன்றுமே புரியவில்லை.

Sathya Raman >>>> Muthukrishnan Ipoh: ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை சார். இளமையில் இறப்பு என்பது பெரும் கொடுமை. இந்தக் கொடிய நோய்க்கு நம்மவர்களை அதிகம் இழப்பது வேதனை மிகுந்தது. அதிலும் சமுதாயத்தில் நல்ல நிலைகளில் இருப்பவர்களை.

காலம் என்ன கணக்கு வைத்து காரியம் ஆற்றுகிறதோ? எல்லா சங்கடங்களும், துயரங்களும் விரைவில் மாறும் என்று மனப்பால் குடிப்போம். வருத்தங்களை யாவும் விலகிட வேண்டுதல் வைப்போம். வேண்டுதலை தவிர வேறென்ன செய்ய முடியும்?

Sathya Raman >>>> Muthukrishnan Ipoh: இன்னும் எத்தகைய வார்த்தைகளை கொண்டு ஆறுதல் படுவது என்று தெரியாமல் விக்கித்து நிற்கிறது மனம். எம் இனத்தில் இந்த காலன் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க காத்திருக்கிறதோ?
சுயகவனம் ஒன்றே இதற்கு தீர்வு சார்.

மருத்துவரின் இழப்பு ஈடு செய்ய இயலாதது. அன்னாரின் ஆத்மா நல்லபடி சாந்திக்கொள்ளட்டும்.ஆழ்ந்த அனுதாபங்கள் அவரின் குடும்பத்திற்கு 🙏🙏🙏

Bobby Sinthuja: Rip

Banu Linda: தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் பணி அளப்பரியது.. அதுவும் தற்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களை போற்ற வேண்டும்..

Muthukrishnan Ipoh >>>> Banu Linda: உண்மை சகோதரி. அவர்களிடம் ஓர் இன மொழி விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது.

Vasanthi Mohanakumar: சிறந்த ஆசிரியர்

Muthukrishnan Ipoh >>>> Vasanthi Mohanakumar: ஆமாங்க. ஆசிரியர்கள் பலரும் சொல்கின்றனர். தமிழ் மொழிப் பற்றாளர்.

Arni Narendran: A Selfless Server of Humanity 🙏🌿

Muthukrishnan Ipoh >>>> Arni Narendran: மலேசியத் தமிழர்களுக்கு ஓர் இழப்பு

Bobby Sinthuja: ஐயா, கொரோனா இன்னம் எத்தனை பேரை காவுகொள்ள போகின்றதோ... Stay safe...

Muthukrishnan Ipoh >>>> Bobby Sinthuja: இந்தக் கிருமி புதிய வடிவம் பெற்று புதிய தாக்கங்களை ஏற்படுத்துவதால் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் மருத்துவ நிபுணர்களே தடுமாறி நிற்கிறார்கள்.

B.k. Kumar: கண்ணீர் அஞ்சலி. இதயம் கனக்கிறது. இன்றைக்கு மற்றுமோர் பேரிடி நண்பர் ஒருவரின் 30 வயது டாக்டர் மகன் மரணம். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

Sathya Raman >>>> B.k. Kumar: பல சிரமங்களுக்கு இடையில் கல்விக்காக நம் பிள்ளைகள் அயராது உழைத்து முன்னேறுவது எளிதானது அல்ல. அந்தக் கஷ்டங்களுக்கான பலனை எதிர்பார்த்துப் பிரகாசமான எதிர்காலத்தை சுவாசிப்பதற்குள் இப்படி ஒரு பேரிடி நடந்து இருக்கவே கூடாது. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. ஆழ்ந்த அனுதாபத்தை தவிர 🙏🙏🙏😢

Muthukrishnan Ipoh >>>> B.k. Kumar: ஓம் சாந்தி.

B.k. Kumar: இன்றைக்கு மற்றுமோர் பேரிடி. நண்பர் ஒருவரின் 30 வயது டாக்டர் மகன் மரணம். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை.

Raghawan Krishnan: Nation and Indian Community lost a well dedicated Teacher. RIP her Great SOUL.

Muthukrishnan Ipoh >>>> Raghawan Krishnan: நல்ல ஒரு சேவையாளரை இழந்து விட்டோம்.

Bhagia Lekshmy: She is excellent and loving teacher.

Muthukrishnan Ipoh >>>> Bhagia Lekshmy: உண்மைதான் சகோதரி. அவர் ஆத்மா சாந்தி கொள்ளட்டும்.






31 ஜூலை 2021

இந்தோசீனா மகாராணியார்கள் ராஜலெட்சுமி ஜெயாதேவி

தமிழ் மலர் - 31.07.2021

பூனான் அரசு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒட்டு மொத்த இந்தோசீனாவையும் ஆட்சி செய்த பழம்பெரும் பண்டைய அரசு. கம்போடியா; வியட்நாம்; லாவோஸ்; தாய்லாந்து; பர்மா; வட மலாயா; ஆகிய ஆறு நிலப் பரப்புகளையும் சம காலத்தில் கட்டிப் போட்டு ஆட்சி செய்த பெரிய ஓர் அரசு.

எப்பேர்ப்பட்ட அரசாக இருக்க வேண்டும். கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். பூனான் அரசு ஒரு பல்லவத் தமிழர் அரசு. இந்து மதம் சார்ந்த அரசு. நினைவில் கொள்வோம். பூனான் அரசிற்கு மதிப்பு கொடுப்போம். மரியாதை செய்வோம்.

அந்த அரசை மாமன்னர்கள் மட்டும் ஆட்சி செய்யவில்லை. சில பல மகாராணியார்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

மகாராணியார் ஸ்ரீ மீரா,

மகாராணியார் சோமா,

மகாராணியார் ராஜலெட்சுமி,

மகாராணியார் ஜெயாதேவி,

மகாராணியார் சிசுவதி

எனும் அழகுப் பெயர்களில் அற்புதமான பெண்மணிகள். ஆச்சரியமாக இருக்கிறது.

இவர்களில் முதலாவதாக வருபவர் மகாராணியார் சோமா (Queen Soma). கெமர் மொழியில் நியாங் நியாக் (Neang Neak) என்று அழைக்கிறார்கள். இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 68 - 100. அதாவது 1950 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தோசீனாவை ஆட்சி செய்து இருக்கிறார். கணவரின் பெயர் கவுந்தியா (Kaundinya I).

(Queen Soma was the ruler of the Kingdom of Funan and the first monarch of Cambodia.)

இந்தோனேசியாவில் தான் மகாராணியார்கள் ஆட்சி செய்தார்கள் என்றால் இந்தோசீனாவிலும் பெண்களின் ஆளுமைகள் விட்டு வைக்கவில்லை. அங்கேயும் உச்சம் பார்த்து இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மட்டும் பெருமை இல்லை. ஆண்களுக்குப் பெருமையிலும் பெருமை. பெண்களுக்குப் பெருமை என்றால் அது ஆண்களுக்கும் பெருமை தானே.

பூவோடு சேர்ந்து நார் மணக்கிறது என்று சொல்ல வேண்டாம். இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து கொண்டு ஒன்றாக நன்றாக மணக்கின்றன.

பூனான் அரசு, இந்தோசீனா மண்ணில் முதல் அரசு. இந்தோசீனா ஆளுமைகளில் முதன்மை அரசு. இந்தோசீனா கலாசாரங்களில் மூத்த அரசு. இந்தோசீனா நாடுகளில் முதிர்ந்த அரசு. அதுதான் புவி போற்றும் பூனான் அரசு. அதுவே இந்தோசீனாவில் பல்லவத் தமிழர்களின் தலையாய அரசு.

ஆனால் என்ன. பழைய அதே காம்போதி ராகம் தான். காலத்தின் கோலத்தினால் அந்தப் பேரரசு காணாமல் போய் விட்டது. கன்னா பின்னாவென்று கரைபுரண்டு ஓடிய காலப் பிரளயத்தில் கரைந்து உடைந்து காணாமல் போய் விட்டது.

அரிச்சுவடி அடையாளங்கள் ஆங்காங்கே சின்னதாய்த் தெரிகின்றன. இருந்தாலும் பரவாயில்லை. முதல் மரியாதை செய்வோம். ஏன் என்றால் இந்த அரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர். பெயர் கவுந்தியா (Kaundinya). இவருக்கு உதவியாக இருந்தவர் அவரின் மனைவியார் சோமா மகாராணியார்.

பூனான் பெயரைப் பார்த்தால் சீனப் பெயர் மாதிரி இருக்கிறது. அப்புறம் எப்படி அதைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் என்று மலைக்க வேண்டாம். உண்மை அதுதான். பூனான் பேரரசைத் தோற்றுவித்தவர் ஒரு பல்லவர் தான். தொடர்ந்து படியுங்கள்.

பூனான் பேரரசு 2100 ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் தோன்றிய ஒரு குட்டி அரசு. அப்படியே பல்கிப் பெருகி ஒரு பேரரசு ஆனது. இந்த அரசு தான் இந்தோசீனாவில் உருவான முதல் அரசு.

இந்த அரசு தோன்றுவதற்கு முன்பு மலாயா கிளாந்தான் மாநிலத்தில் பான் பான் (Pan Pan) எனும் ஓர் அரசு இருந்தது. இதுவும் ஒரு பல்லவர் அரசு தான். அந்தக் காலத்தில் வட மலாயா பகுதியில் இருந்த கிளாந்தான், திராங்கானு மாநிலங்களை ஆட்சி செய்த அரசு. ஒரு சின்ன இடைச் செருகல்.

தென்கிழக்காசிய நாடுகளில் புத்த மதம் தோன்றுவதற்கு முன்பாக இந்து மதம் சார்ந்த இந்திய அரசுகளே ஆழமாய்த் தடம் பதித்து ஆலாபனைகள் செய்து உள்ளன. காலப் போக்கில் மற்ற மதங்களின் செல்வாக்கினால் அந்த மதம் அப்படியே சரிந்து போனது.

பூனான் அரசைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னர் பான் பான் அரசைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் பான் பான் அரசில் இருந்து போன கவுந்தியா என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்தார். இவருக்கு கவுந்தி முனிவர் எனும் மற்றொரு பெயரும் உண்டு. சரி.

முன்பு காலத்தில் கிளாந்தான், திராங்கானு மாநிலங்களைத் தவிர தாய்லாந்தில் இருக்கும் சூராட் தானி (Surat Thani), நாக்கோன் சி தாமராட் (Nakhon Si Thammarat) எனும் இரு மாநிலங்களையும் பான் பான் பேரரசு ஆட்சி செய்து இருக்கிறது. கல்வெட்டுச் சான்றுகள் உறுதி படுத்துகின்றன.

Pan Pan is a lost small Hindu Kingdom believed to have existed around the 3rd to 7th Century CE believed to have been located on the east coast of the Malay peninsula somewhere in Kelantan or Terengganu.

(சான்று: Dougald J. W. O'Reilly (2007). Early Civilizations of Southeast Asia. Rowman Altamira. ISBN 0-7591-0279-1.)

ஏறக்குறைய 1700 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அதுவே மலாயா தீபகற்பத்தில் ஒரு பல்லவர் அரசாங்கம் அரசாட்சி செய்து இருக்கும் ஒரு வரலாற்றுச் சாசனம் என்றுகூட சொல்லலாம். நம்ப முடிகிறதா. ஆனால் நம்பித் தான் ஆக வேண்டும். ஏன் தெரியுங்களா. வரலாறு பொய் சொல்லாது. பொய் சொல்லவும் தெரியாது.

ஆக அந்த வரலாற்றில் இருந்து மறைந்து போன பல்லவர்களின் சுவடுகளை மீட்டு எடுக்கும் போது சில உண்மைகள் கசக்கவே செய்யும். அதற்காக உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியுமா. சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.

இந்தப் பான் பான் அரசு தோன்றுவதற்கு முன்னதாகவே பேராக் மாநிலத்தில் புருவாஸ் பகுதியில் கங்கா நகரம் (Gangga Negara) எனும் பல்லவ அரசு உருவாகி விட்டது. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கங்கா நகரம் உருவானது. அதையும் நினைவு படுத்துகிறேன்.

பூனான் என்பதைச் சீன மொழியில் பூனோங் (Bunong) என்கிறார்கள். கெமர் மொழியில் நோகோர் புனோம் (Nokor Phnom). தாய்லாந்து மொழியில் பூனான் (Funan). வியட்நாமிய மொழியில் பூ நாம் (Phu Nam). மலை இராச்சியம் என்று பொருள்.

இருப்பினும் இந்திய மயமாக்கப்பட்ட அந்தப் பண்டைய பேரரசிற்கு புவியியலாளர்கள் வழங்கிய பெயர் பூனான். இதன் தலைநகரம் வியாதாபுரம் (Vyadhapura). ஆட்சிக் காலம் கி.பி. 50/68 – கி.பி. 550/627).

பயன்பாட்டு மொழிகள்: பழைய கெமர் மொழி; சமஸ்கிருதம்.

பயன்பாட்டு மதங்கள்: இந்து மதம்; பௌத்த மதம்; ஆன்ம வாதம் (Animism).

இதற்குப் பின்னர் வந்த அரசு: சென்லா அரசு (Chenla).

பூனான் பேரரசு, கி.மு. 100 ஆண்டுகளில், இன்றைய மீகாங் ஆற்று வடிநிலத்தில் (Mekong Delta); சீனா; இந்தோனேசியா; இந்தியா போன்ற நாடுகளுடன் கடல்வழி வர்த்தகத்தைக் கொண்டு இருந்ததாகவும் சொல்லப் படுகிறது. உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்தப் பேரரசு இந்து மதத்தைத் தழுவி ஆட்சி செய்து வந்தது. இந்தப் பேரரசின் மன்னர்கள் சிவன், திருமால் வழிபாட்டை ஆதரித்தனர். சைவமும் வைணவமும் ஓங்கி வளர்ந்து உச்சம் பார்த்தன. பௌத்தம் இரண்டாம் நிலையில் இருந்தது.

4-ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் மலர்ந்தது என்று சீன இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 586-ஆம் ஆண்டில் ஒரு கல்வெட்டு கிடைத்தது. சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டது. இரத்னபானு; இரத்னசிம்மா எனும் இரு சகோதரப் புத்த பிக்குகள் அதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

சீன அரசவையில் நினைவுச் சின்னம் அமைக்க அப்போதைய கம்போடிய அரசர் ஜெயவர்மன் விருப்பப் பட்டார். அதற்காக நாகசேனா எனும் இந்தியப் புத்த பிக்குவைச் சீனாவுக்கு அனுப்பி வைத்தார். ஆக அந்த வகையில் 450-ஆம் ஆண்டிற்குப் பிறகு தான் பூனானில் பௌத்தம் தோன்றி இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

பூனான் பேரரசில் இந்து மதம் தலையாய மதமாக இருந்து இருந்தாலும், பௌத்த மதம் இரண்டாம் நிலை மதமாகவே இருந்து உள்ளது. கம்போடியா லாவோஸ் நாடுகளில் கிடைக்கப் பெற்ற கல்வெட்டுகள் உறுதி படுத்துகின்றன.

அது மட்டும் அல்ல. பூனான் பேரரசு மன்னர்கள் சீனப் பேரரசருக்குப் பவளத்தில் வரையப்பட்ட சிவன் படங்களைக் கொடுத்து இருக்கிறார்கள்.

கி.பி. 590-ஆம் ஆண்டில் கம்போடியாவைப் பவவர்மன் எனும் அரசர் ஆட்சி செய்து வந்தார். தன் தம்பி சித்திரசேனன் என்பவரின் உதவியால் பூனான் அரசர் யுத்ரவர்மனைத் தோற்கடித்தார். இன்னும் ஒரு தகவல்.

கம்போடியாவை ஆட்சி செய்த பவவர்மன்; சித்திரசேனன் ஆகியோரின் கல்வெட்டுக்களும்; கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்துப் பல்லவ மன்னர்களின் கல்வெட்டுக்களும் பலவகைகளில் ஒத்துப் போகின்றன.

பவவர்மன் ஒரு சிவபக்தர். அதனால் கம்போடியா நாட்டில் நான்கு சிவ ஆலயங்களைக் கட்டி இருக்கிறார். அது மட்டும் இல்லை. கம்போடியாவில் பல கோயில்களில் சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து இருக்கிறார். இந்து மதப் பாடல்களைப் பாடும் படி கட்டளை போட்டு இருக்கிறார்.

கம்போடியாவில் இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைப் பாராயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். பவவர்மனுக்குப் பின் வந்த அவருடைய தம்பி மகேந்திர வர்மனும் ஒரு சிவ பக்தர். சரி. பூனான் வரலாற்றுக்கு வருவோம்.

1942-ஆம் ஆண்டு தென் வியட்நாம், மீகோங் வடிநிலத்தில் ஒக்கியோ (Oc Eo) எனும் தொல்பொருள் தளம் கண்டுபிடிக்கப்பட்டது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட காலத்தில் இந்த ஒக்கியோ நகரம் ஒரு பரபரப்பான துறைமுகமாக இருந்து இருக்கலாம்.

பூனான் பேரரசில் தென்னிந்திய பல்லவ வம்சாவழியினரின் தாக்கங்கள் அதிகமாகவே இருந்து உள்ளன. வியட்நாமில் கிடைக்கப் பெற்ற பல்லவ கிரந்த கல்வெட்டுகள் மூலமாக அந்தப் பல்லவத் தாக்கங்கள் உறுதி செய்யப் படுகின்றன.

பூனான் பேரரசு என்பது பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்படும் சுவர்ணபூமியாகக் கூட இருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கும் காரணங்கள் முன்வைக்கப் படுகின்றன.

2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்; புனோம் பென் (Phnom Penh) அரச பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வோங் சோதேரா (Dr Vong Sotheara) என்பவர், ஒரு கல்வெட்டைக் கண்டுபிடித்தார். கி.பி 633-ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் “கெமர் பேரரசின் சுவர்ணபூமியின் பெரிய மன்னர் ஈசனவர்மன் (King Isanavarman). இவர் மகிமையும் துணிச்சலும் நிறைந்தவர். அவர் ராஜாதி ராஜன் ஆவார்.

அவர் சுவர்ணபூமியை எல்லையாகக் கொண்ட கடல் வரை ஆட்சி செய்கிறார். அண்டை நாடுகளில் உள்ள மன்னர்கள் இவரின் கட்டளைக்கு மதிப்பு கொடுக்கிறார்கள்” என்று எழுதப்பட்டு இருந்தது.

கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் பான் பான் எனும் அரசு இருந்தது. அந்த அரசில் இருந்து வெளியேறிய அந்தியன் (Huntian) அல்லது கவுந்தியா (Kaundinya) என்பவர் தான் பூனான் அரசைத் தோற்றுவித்து இருக்கலாம் என்று சீன வரலாற்று ஆவணங்கள் சொல்கின்றன. அந்த ஆவணங்களில் முக்கியமானது லியாங் புத்தகம் (Book of Liang).

இந்த லியாங் புத்தகம் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. பூனான் அஸ்திவாரக் கதையை அச்சு அசலாகப் பதிவு செய்கிறது. "கவுந்தியா என்பவர் ஜியா எனும் தென் நாட்டில் இருந்து வந்தார். (ஜியா என்பது பான் பான் பேரரசைக் குறிக்கிறது)

அவர் ஒரு கனவு கண்டார். காலையில் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒரு வில் இருப்பதைக் கண்டார். அந்த வில்லை எடுத்துக் கொண்டு அவர் ஒரு கப்பலில் ஏறினார். வெகு தூரம் பயணம் செய்து ஓர் இடத்தில் தரை இறங்கினார். அது ஊர் பெயர் தெரியாத ஒரு நாடு.

அந்த நாட்டை சோமா (Queen Soma) எனும் மகாராணியார் ஆட்சி செய்து வந்தார். அந்த ராணியார் கப்பலையும் கவுந்தியாவையும் கைப்பற்ற விரும்பினார். முடியவில்லை. ஒரு போராட்டம்.

இருந்தாலும் கவுந்தியா போராடி வெற்றிப் பெற்றார். பின்னர் சோமா மகாராணியாரைத் தன் மனைவியாக்கிக் கொண்டார்.

அதன் பின்னர் சோமா மகாராணியார் அந்த நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பை கவுந்தியாவிடம் வழங்கினார் என்று லியாங் புத்தகம் கூறுகிறது. கவுந்தியாவின் மற்ற பெயர்கள்: கொண்டன்னா (Kondanna); கொண்டின்யா (Kondinya). பூனான் பேரரசை 18 மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களில் சிலர்:

1. சோமா மகாராணியார் (Queen Soma)

2. கவுந்தியா (Kaundinya I)

3. ஸ்ரீ மீரா (Srei Meara)

4. சந்தனா (Candana) 

5. ஸ்ரீ இந்திரவர்மன் (Srei Indravarman)

6. கவுந்தியா ஜெயவர்மன் (Kaundinya Jayavarman)

7. ருத்ரவர்மன் (Rudravarman)

8. ராஜலெட்சுமி (Queen Kambuja-raja Lakshmi)

9. ஜெயாதேவி (Queen Jayadevi)

10. சிசுவதி (Sisowath Chamchakrapong)

இந்தப் பெண்ணரசிகளைப் பற்றி அடுத்து வரும் கட்டுரைகளில் தெளிவாக விளக்குகிறேன். இந்தப் பல்லவப் பெண்களின் ஆளுமை வரலாற்றில் இருந்து கரைந்து போய் இருக்கலாம். ஆனால் வரலாற்றில் இருந்து என்றும் மறையப் போவது இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
31.07.2021


சான்றுகள்:

1. Queen Soma was the ruler of the Kingdom of Funan and widely claimed as the first monarch of Cambodia - https://en.wikipedia.org/wiki/Queen_Soma

2. Jeldres, Julio A. (2 April 1999). "Cambodia's Monarchy: The search for the successor". The Phnom Penh Post.

3. The Constitution of the Kingdom of Cambodia" (PDF). World Intellectual Property Organization.

4. https://en.wikipedia.org/wiki/History_of_Laos#Funan_kingdom

5. Kaundinya, Preah Thaong, and the "Nagi Soma": Some Aspects of a Cambodian Legend