மலேசியா - தினக்குரல் நாளிதழ் - 16.02.2014 - ஞாயிற்றுக்கிழமை
கணேசன் கணபதி, தாமான் இண்டா, தாப்பா
கே: உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில் கேட்ஸ். அவர் ஒரு கஞ்சன் என்று கேள்விப் பட்டேன். உண்மையா?
ப: நீங்கள் கேள்விப் பட்டது ரொம்பவும் தப்புங்க. பார்ப்பதற்குத்தான் அவர் ஒரு கஞ்சனைப் போலத் தெரியும். முன்பு நானும் அப்படித்தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால், அவர் கஞ்சன் இல்லை. கொடை நெஞ்சங்களில் இவரும் ஓர் அவதாரம் என்றுதான் சொல்ல வேண்டும்.
கணினி மூலமாக பல ஆயிரம் கோடி டாலர்களைச் சம்பாதித்தார் என்பது உண்மைதான். சின்னச் சின்ன கணினி நிறுவனங்களைக் களை எடுத்தார் என்பதும் உண்மைதான். ஆனால், கோடிகளைச் சம்பாதித்த பிறகு, மனிதர் மாறிப் போனார் என்பதும் உண்மை தான். இருந்தாலும் இப்போது நிறைய தான தர்மங்களைச் செய்து வருகிறார்.
அவருடைய உண்மையான சொத்து மதிப்பு 29,400 கோடி மலேசிய ரிங்கிட். இதில் 8,600 ஆயிரம் கோடிகளை ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தானம் செய்து விட்டார். அதனால் உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப் பட்டார்.

இப்போது 20,800 கோடிகளை வைத்து இருக்கிறார். அதில் கூட 95 விழுக்காட்டுப் பணத்தையும் உலக மக்களுக்கே தானம் செய்யப் போவதாகவும் சொல்லி இருக்கிறார். அவரைப் போய் கஞ்சன் என்று சொல்லலாமா. அது நமக்கே நியாயமாகப் படுகிறதா?
பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் மெலிண்டா கேட்ஸ் அறக் கட்டளையை நிறுவி இருக்கிறார்கள். இதுவரை ஏறக்குறைய 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர்.
பில்கேட்ஸும் அவருடைய மனைவியும் இணைந்து பில் மெலிண்டா கேட்ஸ் அறக் கட்டளையை நிறுவி இருக்கிறார்கள். இதுவரை ஏறக்குறைய 32 பில்லியன் அமெரிக்க டாலரை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி இருக்கின்றனர்.
அந்தப் பணத்தைக் கொண்டு நம்முடைய பெட்ரோனாஸ் கோபுரங்களைப் போல நான்கு கோபுரங்களைக் கட்டலாம். ஒரு பில்லியன் என்பது 300 கோடி. இவரைப் பற்றி http://www.billgatesmicrosoft.com/networth.htm எனும் இணையத் தளத்தில் நிறைய தகவல்கள் உள்ளன.
பில்கேட்ஸ் Business At The Speed of Thought என்ற நூலை எழுதினார். 25 மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது. 60 நாடுகளில் விற்பனையாகிறது. அதற்கு முன் அவர் எழுதிய The Road Ahead என்ற நூலும் அதிகமாக விற்பனையானது.

இரு நூல்களின் மூலமாகக் கிடைத்த பணத்தை அப்படியே அற நிதிகளுக்கு கொடுத்து விட்டார். அவருடைய அறப் பணிகளை மனுக்குலம் மறக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக