29 March 2020

கொரோனா வைரஸ்: mRNA -1273 மருந்து

கொரோனா வைரஸுக்குத் தற்காலிகமாகத் தடுப்பூசி மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. மகிழ்ச்சியான செய்தி. இருந்தாலும் இப்போது பரிசோதனைக் கட்டத்தில் தான் உள்ளது. அதற்கு எம்.ஆர்.என்.ஏ. 1273 (mRNA -1273) என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.


அமெரிக்காவின் மொடெர்னா (Moderna) என்கிற நிறுவனம், அந்தத் தடுப்பூசியின் முதல் கட்டப் பரிசோதனையில் இறங்கி உள்ளது. இந்த நிறுவனம் அமெரிக்கா, மாசசூசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் உலகம் முழுமைக்கும் 41 ஆய்வு நிறுவனங்கள் களம் இறங்கி உள்ளன. அவை அனைத்தும் உலகச் சுகாதார நிறுவனத்தில் (World Health Organisation) பதிவு பெற்ற மருத்துவ நிறுவனங்கள்.

எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசிக்கான முதல் மனிதச் சோதனை கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிறுவனம் தான் புதிய தடுப்பூசி மருந்திற்கு முதல் அடியை எடுத்து வைத்து இருக்கிறது.முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் 18 வயது முதல் 55 வயது வரையிலான 45 நபர்கள் முதற்கட்டப் பரிசோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டனர்.

அவர்களில் முதல் நபருக்கு 2020 மார்ச் 17-ஆம் தேதி செலுத்தப் பட்டது. 6 வாரங்களுக்குப் பரிசோதனைகள் நடைபெறும். சோதனைக்குத் தேர்வு செய்யப் பட்டவரின் கையில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்து செலுத்தப் படுகிறது.

இன்றைய வரையிலும் கட்டம் கட்டமாகச் சிலருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

ஊசி போட்டவர்களுக்கு காய்ச்சல், உடல்நலக் குறைவு எதுவும் ஏற்படுகிறதா என்று கண்காணித்து வருவார்கள். 2020 ஏப்ரல் மாதக் கடைசியில் எம்.ஆர்.என்.ஏ. 1273 தடுப்பூசி மருந்தின் வீரியம் தெரிந்துவிடும். அதாவது ஆறு வாரங்களில் அந்த மருந்தின் வீரியம் தெரிந்துவிடும்.இந்தச் சோதனை வெற்றி பெற்றால் மருந்து தயாரிப்புகள் உடனடியாகத் தொடங்கப்படும். இருந்தாலும் முழு அளவிலான தயாரிப்பிற்கு 12 முதல் 18 மாதங்கள் வரை பிடிக்கலாம்.

கொரோனா கோவிட் mRNA -1273 தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்களில் ஈடுபட்டு இருக்கும் சில கல்விக் கழகங்கள் அல்லது தனியார் நிறுவனங்கள்.

1. Moderna, அமெரிக்கா,
2. DIOSynVax, இங்கிலாந்து
3. Imperial College London, இங்கிலாந்து
4. Oxford University, இங்கிலாந்து
5. CureVac, ஜெர்மனி
6. BioNTech, ஜெர்மனி
7. CanSino Biologics, சீனா
8. Migal Galilee Research Institute, இஸ்ரேல்
9. Inovio Pharmaceuticals, அமெரிக்கா
10. Johnson & Johnson, அமெரிக்கா
11. Novavax, அமெரிக்கா
12. University of Queensland, ஆஸ்திரேலியா
13. VIDO-InterVac, கனடா

இணைப்பு >>>இந்தியாவில் சில தனியார் நிறுவனங்களும் கல்விக் கழகங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில்

1. Serum Institute of India (SII) Serum Institute of India,

2. Zydus Cadila,

3. Bharat Biotech ஆகிய மூன்று கழகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.

mRNA -1273 அல்லது Messenger Ribonucleic Acid என்றால் என்ன என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
28.03.2020பேஸ்புக் பின்னூட்டங்கள்


Magendran Rajundram: உலக சுகாதார நிறுவனம் தடுப்பு ஊசியை பரிசோதிக்கும் வாய்ப்பை மலேசியாவுக்கு தந்து இருப்பதாக அறிகிறேன் ஐயா.

Muthukrishnan Ipoh: அந்தச் செய்தி போன வாரம் கிடைத்தது... உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக் கொள்வதற்கு முன்னாலேயே பல நாடுகள் உடனடியாக ஆய்வுப் பரிசோதனைகளில் இறங்கி விட்டன...

Magendran Rajundram >>> Muthukrishnan Ipoh: நன்றி ஐயா

Muthukrishnan Ipoh: மலேசியா இன்னும் பரிசோதனயில் இறங்கவில்லை... நோய் தொற்றி இருக்கலாம் எனும் சந்தேகப் பேர்வழிகளை அரசாங்கம் வலை போட்டு தேடுவதற்கே நேரம் போதவில்லை... அதையும் நினைவில் கொள்வோம்...

Letchumanan Nadason: ஆறுதலான தகவல். நன்றி.

Thina Garan: நோயை உருவாக்கிய பின்.. மருந்தே அவர்களே கொடுக்கிற மாதிரி இருக்கு....... பணம்... 'China sold 432 million euros (3548 crores) in medicines to Spain. The real game has started now. LUSHSUX The real face of China'

Maari Aye: தகவலுக்கு நன்றி

Endran Puven: Aiyaa,oru kelvi..quba endra naadu marunthu thayarithu veithullathagavum aanal america antha naatuku tadai uttharavu pottullathagavum kelvi patten.athu pattriye vilakkam tarumaaru thaalmaiyodu kehtu kolgiren

Muthukrishnan Ipoh: அந்த மருந்தின் பெயர் Interferon Alpha-2B Recombinant. கியூபாவும் சீனாவும் சேர்ந்து கூட்டாக உருவாக்கிய மருந்து. சீனாவில் பல நூறு பேர் மீண்டு வந்தனர். ஆனால் முழு நிவாரணம் அளிக்கும் மருந்து அல்ல என்று அமெரிக்கா மறுத்து விட்டது...

அது மட்டும் அல்ல. சில லத்தீன் அமெரிக்க நாடுகளில் குறிப்பாக வெனிசூலா நாட்டில் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஆள் கடத்தல் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கியூபாவை அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அதனால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை. பாவம் கியூபா...

Sathya Raman: கொரோனா வைரஸுக்கு 1273 தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வில் வெளிநாடுகளும் அதன் நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் தீவிரமாக ஈடுப்பட்டு வருவது தெரிகிறது. ஆனால் அந்த வரிசையில் இந்தியாவும், மலேசியாவும், மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள்கூட இல்லையே சார்?🤔

Muthukrishnan Ipoh: இந்தியாவில் சில தனியார் நிறுவனங்களும் கல்விக் கழக்ங்களும் கொரோனா தடுப்பூசி பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில்

    1.Serum Institute of India (SII) Serum Institute of India,

    2.Zydus Cadila,

  3.Bharat Biotech ஆகிய மூன்று கழகங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. எப்படியும் ஓர் ஆண்டு காலம் பிடிக்கும்.

கட்டுரைப் பட்டியலில் முதன்முதலாக ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட கழகங்களைப் பற்றி தான் உள்ளது. முழுமையான பட்டியலைப் பின்னர் பதிவு செய்கிறேன்... கருத்துகளுக்கு நன்றி.

Melur Manoharan: "பயனுள்ள" தகவல்...!

Jainthee Karuppayah: நன்றிங்க சார் 1273.... மரணத்திற்குப் பிறகு மருந்து....

Muthukrishnan Ipoh:
என்ன செய்வது... மரணத்திற்கு முன் எல்லா நாடுகளும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன...

1 comment:


  1. அருமையான விளக்கம்

    ReplyDelete