23 ஆகஸ்ட் 2020

பரமேஸ்வரா பெர்த்தாம் கிராமத்தில் காலமானார்

1414-ஆம் ஆண்டு. பரமேஸ்வராவிற்கு 70-ஆவது வயது. மலாக்கா பெர்த்தாம் எனும் இடத்தில் காலமானார். மலாக்கா துறைமுக மலையில் இருந்து ஏழு மைல் தொலைவில் பெர்த்தாம் எனும் இடம் உள்ளது. இங்குதான் அவர் தன் இறுதி மூச்சை விட்டார்.

https://en.wikipedia.org/wiki/File:Retrato_de_Parameswara.jpg

சீனாவிற்குச் சென்று வந்த மூன்றாண்டுகளில் பரமேஸ்வரா காலமாகினார்.  இவர் பிறந்த ஆண்டு 1344. பிறந்த இடம் சிங்கப்பூர் கென்னிங் மலை (Canning Hill) (மேரு மலை).

பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்ற தேதி 04.08.1411.
(Ming Shi-lu: Volume 12: Page: 1487)

சீன மன்னர் யோங்லே (Yongle Emperor) என்பவரைச் சந்தித்த தேதி 14.08.1411.
(Ming Shi-lu: Volume 12: Page: 1490/91)

சீனாவில் இருந்து மலாக்காவிற்குத் திரும்பிய தேதி 02.10.1411.

(Ming Shi-lu: Volume 12: Page: 1506/07)
http://www.epress.nus.edu.sg/msl/

Ming Shilu (Chinese: 明實錄) also known as the Veritable Records of the Ming dynasty, has a comprehensive 150 records or more on Parameswara (Bai-li-mi-su-la 拜里迷蘇剌) and Malacca.

Wade, Geoff (2005). "The Ming Shi-lu as a source for Southeast Asian History" (PDF).
(https://web.archive.org/web/20050508003932/http://epress.nus.edu.sg/msl/MSL.pdf)

Image Source: https://en.wikipedia.org/wiki/Parameswara_(king)

பரமேஸ்வரா பெர்த்தாம் கிராமத்தில் காலமானார் என்பதை வரலாற்றுச் சான்றுகள் உறுதிபடுத்துகின்றன. வரலாற்று ஆசிரியர்கள் மூவர் சான்று படுத்துகின்றனர்.


1. டோம் பைர்ஸ் (Tome Pires) என்பவர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வரலாற்று ஆசிரியர். போர்த்துகல் நாட்டுத் தலைநகர் லிஸ்பனில் (Lisbon) இருந்து மலாக்கா வந்தவர். இவர் 1512-ஆம் ஆண்டில் இருந்து 1515-ஆம் ஆண்டு வரை மலாக்காவில் தங்கி இருந்தார்.

அப்போது இவர் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் சுமா ஓரியண்டல் (Suma Oriental). பரமேஸ்வரா இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட காலத் தொகுப்பு நூல். 5 தொகுப்புகள். 578 பக்கங்கள்.

1.1. The Suma Oriental of Tome Pires: an account of the East, from the Red Sea to China, written in Malacca and India in 1512-1515.

அந்த நூலின் இரண்டாம் தொகுதியில் மலாக்காவைப் பற்றியும் பரமேஸ்வராவைப் பற்றியும் எழுதி இருக்கிறார். அவர் எழுதியவற்றில் ஒரு பகுதி. 1512-ஆம் ஆண்டில் மலாக்காவைப் பற்றி அவருடைய ஒரு விமர்சனம்.

1.2. The said Paramjcura died in the said place of Bretao fairly happy in a land of such freshness, of such fertility and of such good living, as anyone who comes to Malacca today can see, for it is certainly one of the outstanding things of the world, with beautiful orchards of trees and shades, many fruits, abundant fresh waters which come from the enchanted hills which are within sight of Malacca, and - according to the natives -  hunting of wild elephants, lions, tigers and other monstrous animals, and with domestic animals, not like ours, except for deers.
(Pires 1990: II, 246)

விளக்கம்:
(Paramjcura: Parameswara)
(Bretao: Bertam)


1414-ஆம் ஆண்டு பரமேஸ்வரா தம்முடைய 70-ஆவது வயதில், மலாக்கா பெர்த்தாம் எனும் இடத்தில் காலமானதாக அவர் எழுதி இருக்கிறார்.

2. அர்மாண்டோ கொர்டேசா (Armando Cortesao). ஒரு போர்த்துகீசிய பொறியாளர்; காலனித்துவ நிர்வாகி; போர்த்துகீசிய வரைபட வரலாற்றாசிரியர். இவரும் உறுதிபடுத்துகிறார்.

2.1. Cortesao, Armando (1990), The Suma Oriental of Tome Pires, 1512–1515
(Cortesao 1944: II, 242)

3. மானுவல் கொடின்ஹோ எரடியா (Manuel Godinho de Erédia: 16 July 1563 – 1623). ஒரு போர்த்துகீசிய எழுத்தாளர்; வரைபடவியலாளர். மலாய் தீபகற்பத்தின் தொடக்கக் காலம் பற்றி எழுதியவர்.

3.1. Godinho de Eredia (April 1930); Eredia's Description of Malacca, Meridional India, and Cathay

3.2. 1597-1600 – Report on the Golden Chersonese, or Peninsula, and Auriferous, Carbuncular and Aromatic Islands (a broad account of the Malay Archipelago); Report on Meridional India

மலாக்காவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பெர்த்தாம் (Bertam) இருக்கிறது. இப்போதைக்கும் ஒரு காட்டுப் பகுதிதான். மலாக்கா ஆயர் குரோ (Ayer Keroh) வனவிலங்குப் பூங்காவிற்கு (Melaka Zoo) அருகில் இருக்கிறது. அதன் வழியாக பெர்த்தாம் ஆறு ஓடுகிறது.

பரமேஸ்வரா முதன்முதலில் மலாக்காவிற்கு வந்த போது முதலில் மூவார் காடுகளில் தங்கி இருந்தார். அதன் பின்னர்தான் பெர்த்தாம் காட்டுப் பகுதிக்கு வந்து மலாக்கா ஆற்று முகத்துவாரத்தை அடைந்தார்.

அதன் பின்னர் மலாக்கா சருகு மான் கதை வருகிறது. அடுத்து மலாக்கா மரத்தின் கதை வருகிறது. மலாக்கா வரலாறும் வருகிறது. பரமேஸ்வரா உருவாக்கிய ஓர் அரசகம்; 2008 ஜுலை 7-ஆம் தேதி யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப் படுகிறது. (Malacca Town, recognised as a historic city, was inscribed by UNESCO in 7 July, 2008). அப்படியே ஒரு மாபெரும் மனிதரின் பெயரும் கரைந்து போகின்றது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
22.08.2020

(டோம் பைர்ஸ் எழுதிய சுமா ஓரியண்டல் வரலாற்று நூலைப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பின்னர் அதில் இருந்து மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.)

சான்றுகள்:

1. Godinho de Eredia (April 1930); Eredia's Description of Malacca, Meridional India, and Cathay

2. Geoff Wade, Southeast Asia in the Ming Shi-lu: an open access resource, Singapore: Asia Research Institute and the Singapore E-Press, National University of Singapore

3. Coedes, George (1968). The Indianized states of Southeast Asia. University of Hawaii Press.

4. Christopher H. Wake (1964). "Malacca's Early Kings and the Reception of Islam". Journal of Southeast Asian History. 5 (2): 104–128.

5. The Ming Shi-lu as a Source for the Study of Southeast Asian History - National University of Singapore.



பேஸ்புக் பதிவுகள்

Shan Nalliah: 🙏

Malathi Nair: Often go to Air keroh. This time will visit Bertam... wished and pray no changes in his name... lived and died with the name Parameswara.

Muthukrishnan Ipoh: பரமேஸ்வரா எனும் பெயரை மாற்றம் செய்ய இயலாது... வரலாற்றுடன் இணைந்து விட்டது... நன்றிங்க...

Sathya Raman: மலாக்கா செல்லும் போது எல்லாம் பெர்த்தாமில் வசிக்கும் உறவினர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வது உண்டு. ஆனால் மஜபாகித் வம்சமான பரமேஸ்வரா இறந்த இடம் பெர்த்தாம் என்பதை இந்தப் பதிவில் படித்து தெரிந்து கொண்டது ஆச்சரியமே.

இது முழுக்க, முழுக்க அரிய புதிய தகவல் சார். மீண்டும் சரித்திரப் பதிவுகள் மூலம் இந்தப் பக்கம் வந்தது மகிழ்ச்சி சார். தொய்வில்லாமல் தொடரவும்.

தயவு செய்து இங்கே ஒன்றை தெளிவு படுத்துங்கள். நம் இந்தியர்கள் பலரும் புலம்பும் சங்கதிதான்... "இந்த பரமேஸ்வரா மட்டும் மதம் மாறாமல் இருந்திருந்தால் இந்நேரம் மலேசியாவை இந்தியர்கள் ஆட்சி செய்து கொண்டு இருப்பார்கள்" என்ற ஆதங்கத்தின் அர்த்தம் என்ன?

இதை நான் சிறுமியாக இருந்ததைத் தொட்டு கேட்டு வருகிறேன். ஆய்வு கட்டுரைகளின் ஆதிக்கமும், ஆதித சிந்தனை மிக்கவர் தாங்கள். நம்மவர்களின் இத்தகைய எண்ணங்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது. முடிந்தால் தெளிவு படுத்துங்கள் சார்.

Muthukrishnan Ipoh: வணக்கம் சகோதரி. பெர்த்தாம் கிராமத்திற்கு அருகில் பெர்த்தாம் தோட்டம் உள்ளது. முன்பு என் பெரியப்பா பெரியம்மா வாழ்ந்த இடம். இன்றும் அந்தத் தோட்டம் உள்ளது. அங்கே இருந்து அப்படியே காட்டு வழியாக ஆயர் குரோ வந்து விடலாம்.

சின்ன வயதில் சைக்கிளை எடுத்துக் கொண்டு அப்படி சில முறை பயணம் போய் இருக்கிறேன். அப்போது வனவிலங்கு பூங்காவில் கட்டணம் இல்லை. இலவசம்.

அதனால் நானும் நண்பர்களும் பூங்காவிற்கு அருகிலேயே கூடாரம் போட்டு தங்கி விடுவோம். ஆனால் அந்த இடம் தான் பரமேஸ்வரா நடைபயின்ற இடம் என்று அறியப்படும் போது உங்களைப் போல எங்களுக்கும் வியப்பு...

இன்னும் ஒரு விசயம்... பரமேஸ்வரா மதம் மாறவில்லை... அவருடைய பேரன் தான் மதம் மாறினார்... அதன் பின்னர் மலாக்கா சுல்தானகம் மாற்றம் கண்டது...

Maran Muniandy: You should write a book on these sir

Muthukrishnan Ipoh: எல்லாவற்றையும் தொகுத்து ஒரு நூல் தயாரிப்போம்...

Anba Dtrs: தலைவணங்குகிறேன்...சார்.நீங்கள் நம் சமுதாயத்துக்கு கிடைத்த மாபெறும் பொக்கிஷம்.வாழ்த்துக்கள் சார்.தொடரட்டும் உங்கள் நற்பணி 👍🙏

Muthukrishnan Ipoh: அப்படி எல்லா சொல்ல வேண்டாமே... நிறைய தேடல்கள்... நிறைய படிக்க வேண்டும்... மிக்க நன்றிங்க ஐயா...

Subramaniam Subra: Tks. good idea. follow up. saar

Muthukrishnan Ipoh நன்றிங்க... மகிழ்ச்சி...

Yogavin Yogavins Sir. Ur really great. Ur asset of Indian community in Malaysia.

Muthukrishnan Ipoh: உற்சாகமான சொற்கள் மேலும் உற்சாகத்தை வழங்கும்... நன்றிங்க தம்பி...

Sheila Mohan: சிறப்பான பயனுள்ள கட்டுரை.. நன்றிங்க சார்...

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி.... நன்றிங்க சகோதரி...

Yogavin Yogavins: Because... History Of Melaka very important to Malaysian INDIAN forever. Someover ur pure Melaka born person. Sir, ur rite person. write about true History Of Melaka.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்

Parimala Muniyandy: மிகவும் சிறப்பான பதிவுக்கு மிக்க நன்றிங்க அண்ணா.

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... நன்றிங்க சகோதரி...

Gunasegar Manickam: பயனுள்ள பதிவு...வாழ்த்துக்கள் ஐயா...நன்றி...!!!

Muthukrishnan Ipoh: மிக்க நன்றி... வாழ்த்துகள்...

Maha Lingam: அற்புதம்... நம்மவர்களின் சரித்திர ஆவணத்தில் தான் பல குலறுபடிகள்..‌.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி...

Vimal Sandanam: தகவல்களுக்கு நன்றி ஐயா. அவரை நல்லடக்கம் செய்த இடத்தை கண்டுப் பிடித்துவிட்டீர்களா ? ஐயா. பணி தொடரட்டும்.

Muthukrishnan Ipoh: Cape Rachado என்பது ஒரு காட்டுப் பகுதி. சாலை ஓரத்தில் நின்று பார்த்துவிட்டு ஒரு முடிவு சொல்ல முடியாது. மலையின் உச்சிக்குச் செல்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. முயற்சி செய்வோம்... தவிர சான்றுகள் இல்லாமல் பதிவு செய்வதும் தவறு... நன்றிங்க...

Arojunan Veloo >>> Muthukrishnan Ipoh: சான்றுகள் முக்கியம் ஐயா!

புனிதன் அருணாசலம்: Cape Rachado மலாக்காவில் இருக்கு!! போர்ட்டிக்சன் நெகிரி செம்பிலானில் இருக்கு!! இரண்டு இடத்துக்கும் சுமார் 40 மைல் (ஏறக்குறைய 63 கிலோ மீட்டர்) தூரம் இருக்கும். பரமேஸ்வராவை எங்கு தான் அடக்கம் செய்தனர்?! எனக்கு மயக்கமே மரி!!!

Muthukrishnan Ipoh: பிரச்சினைகள் வேண்டாம்... தாங்களே நேரில் போய் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்...

Vimal Sandanam: உண்மை. நன்றி ஐயா

Malathi Nair: Anna any tomb stone or land mark to identify Parameswara's burial ground. this saturday i'll b in AirKeroh if possible with god's grace will visit.

Letchumanan Nadason: சிறப்பான வரலாற்றுத் தகவல். பகிர்வுக்கு நன்றி ஐயா.

Muthukrishnan Ipoh: நன்றிங்க...

Sarawanan Marappan: Continue your effort sir

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி ஐயா...

Shan Nalliah: Write book about Malaysia experiences,! Biography too!

Muthukrishnan Ipoh: சரிங்க ஐயா...

Siva Selvadurai: Great sir...

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Arojunan Veloo: ஆறுதல் தரும் கட்டுரை! காலத்துக்கேற்ற எழுத்து வாழ்த்துகள் ஐயா!

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி ஐயா...

Elan Ada: தங்கள் சரித்திர தகவல்கள் மிகவும் பயனுள்ளவை.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு மிக்க நன்றிங்க...

Suria Rich: மிக்க நன்றி 🙏 ஐயா

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Maha Lingam: நன்றி.. ஐயா...

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி...

Yogavin Yogavins: I hope u write History of Melaka.

Muthukrishnan Ipoh: பரமேஸ்வரா நூலை விரைவில் எழுதி முடித்துவிட வேண்டும்... இன்னும் ஒரு மாதத்திகுள் எழுதி முடித்து விடலாம்... நன்றிங்க...

M R Tanasegaran Rengasamy: அருமை பதிவு சார். நன்றி.

Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க.... வாழ்த்துகள்...

Krishna Ram: அருமையான பதிவு sir...👍👍👍

Muthukrishnan Ipoh: நன்றி... நன்றிங்க...

Oviyar Lenah: Great 🙏

Muthukrishnan Ipoh: நன்றிங்க...

Ramala Pillai: 🌹👌🙏🌹

Krishnan Ramiah: சிறப்பான பதிவு ஐயா.

Muthukrishnan Ipoh: நன்றிங்க...

Jayabalan M Nathan: வரலாறு அழியக் கூடாது. அதை மிகவும் தெளிவாக எடுத்து உரைத்த தங்களுக்கு பாராட்டுகள்

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி ஐயா...

Yogavin Yogavins: Tenor 🙏

Vejaya Kumaran: wetriyodu walaratum namathu arasarin sarittiram...aasiriyarku waathugal

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள் ஐயா...

Vadivelu Vadivelu: Nandri Aiyya, Nalvalthukal.

Muthukrishnan Ipoh: மிக்க மகிழ்ச்சி ஐயா...

Cikgu K Rama Aruma:i 🙏

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்...

Samyjb Samyjb: மிசியத்தில் இருந்து அகற்றி வெகு நாள் ஆகி விட்டது. நாம் அறிந்தும் அறியாமலும் மௌனமாகி விட்டோம். வெகு விரைவில் தமிழ் பள்ளிகளை மூடும் அபாயம் நீடித்து வருவதால்?

Thiagarajan Subramaniam: பல வரலாற்று தகவல்கள் மறைக்கப்பட்டும் திரிகப்பட்டும் இருக்கும் நிலையில் தங்கள் தேடல்கள் பயனுள்ள ஒன்றாக உள்ளது ஐயா. மிக்க நன்றி ஐயா

Muthukrishnan Ipoh: உண்மையான வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்... நன்றிங்க...

Poovamal Nantheni Devi: மிகச் சிறப்பான தகவல்கள், ஆனால் பள்ளிப் பாடபுத்தக வரலாற்றில் இத்தகவல்கள் இல்லை.

Muthukrishnan Ipoh: நாம் வரலாற்றுச் சான்றுகளுடன் முன் வைக்கிறோம்... அவற்றை நம் பிள்ளைகள் நம் பேரப் பிள்ளைகள் தெரிந்து கொள்ளட்டும்...

Kali Kali Dasan: பெயரை யாவது பரமேஸ்வரா என்று இருக்கிறதா .. இல்லை அதையும் மாற்றி விட்டார்களா...

Muthukrishnan Ipoh: பெயருக்கு உயிர் இருக்கிறது...

Kali Kali Dasan >>> Muthukrishnan Ipoh: நல்லது... நன்றி ஐயா

Kali Kali Dasan >>> Muthukrishnan Ipoh: 4-ஆம் ஆண்டு வரலாறுப் பாடத்தைக் கவனித்தால் வேறு விதமாக இருக்கிறது

Muthukrishnan Ipoh: எதையாவது எழுதிவிட்டுப் போகட்டும்...

Vani Yap: பயனுள்ள பதிவு தோழரே... தெரியாத பல விபரங்களை தெரிய வைத்து விட்டது இந்த பதிவு... மகிழ்ச்சி, நன்றி

Muthukrishnan Ipoh: மிக்க மகிழ்ச்சி... Ming Shilu சீனப் பதிவுகள் பல ஆயிரம் பக்கங்களைக் கொண்டவை. பரமேஸ்வராவைப் பற்றி நிறைய தகவல்கள் உள்ளன... அவற்றில் இருந்து மலாக்காவைப் பற்றிய பதிவுகளை மட்டும் அலசித் தேடிப் பிடிப்பது சிரமமான காரியமே... பல நாட்கள் பிடிக்கும். முயற்சி செய்வோம்... நன்றிங்க...

பெ.சா. சூரிய மூர்த்தி: அருமை அண்ணா...புதிய தகவல்.நன்றி.

Muthukrishnan Ipoh: மிக்க மகிழ்ச்சி...

Pala M Bawani: அருமையான பதிவு.

Muthukrishnan Ipoh: நன்றிங்க.... வாழ்த்துகள்...

Kali Kali Dasan: Image may contain: 1 person, text that says 'Reign An artist's impression of Parameswara, who ruled Singapura in the 1390s. Me Kingdom of Singapura: c.1389-1398 Malacca Sultanate: 1402-1414 Predecessor Sri Maharaja, Raja of Singapura Successor Issue Megat Iskandar Shah of Malacca House Megat Iskandar Shah of Malacca Malacca Father Born Sri Maharaja, Raja of Singapura 1344 Died Singapura, Kingdom of Singapura 1414 (aged 70 71) Malacca, Malacca Sultanate Burial Religion Hindu'

Samyjb Samyjb: வரலாற்றை அழித்து விட்டார்கள்.

Muthukrishnan Ipoh வரலாற்றை அழிக்க முடியாது ஐயா... எப்படி அழிக்க முடியும்... அதற்கு தனி உயிர் உள்ளது....

Samyjb Samyjb >>> Muthukrishnan Ipoh: நன்றி. தேடல் தொடரட்டும். வாழ்த்துக்கள் தங்களின் பணிக்கும் முயற்சிக்கும்.

AnnaDurai Tamarai: 🙏

Raynu Kumar: சிறப்பான பதிவு ஐயா.

Muthukrishnan Ipoh நன்றிங்க.... வாழ்த்துகள்....

Avadiar Avadiar: Ivayellam nam padite varalatru noolkalil satiyamaka illai.Ayya avarkaluku nanri

Muthukrishnan Ipoh: வாழ்த்துகள்... நன்றிங்க...

Nallathamby Kuppan: 🙏

Avadiar Avadiar: 🙏 Arputam Ayya

Muthukrishnan Ipoh மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Subhasany Govindsamy: வணக்கம் ஐயா. சிறப்பான பதிவிற்கு நன்றி

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...

Poovamal Nantheni Devi: 🙏

Palaniappan Kuppusamy: Arumai sir

Muthukrishnan Ipoh: மகிழ்ச்சி... வாழ்த்துகள்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக