தமிழ் மலர் - 27.08.2020
பரமேஸ்வரா என்பவரைப் பலரும் மறந்து வருகிறார்கள். அரசியல் அழற்சியிலும்; மதவாத மலர்ச்சியிலும்; இனவாத இகழ்ச்சியிலும்; அமாவாசை மழையிலும் பரமேஸ்வரா நன்றாகவே நனைந்து விட்டார். காய்ச்சல் வந்து கண்கலங்கி நிற்கிறார். பாவம் அவர்.
மலாக்காவை பாய்-லி-மி-சு-லா தோற்றுவித்தார் என்று சிலர் சொல்கிறார்கள். இஸ்கந்தார் ஷா தோற்றுவித்தார் என்று சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் பரமேஸ்வரா என்கிற மனிதர் இல்லவே இல்லை என்றும் ஒரேயடியாகப் போட்டுத் தள்ளுகிறார்கள்.
இருந்தாலும் பரவாயில்லை. பரமேஸ்வராவின் பெயரைச் சொல்லி ஈக்கான் பாக்கார்; மாக்கான் பாக்கார் என்று சிலர் உணவகங்களை நடத்தி காசு பார்க்கிறார்கள். மகிழ்ச்சி அடைவோம்.
வரலாறு பொய் சொல்வது இல்லை. மலாக்காவைப் பாதுகாக்க பரமேஸ்வரா எவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார். அதை வரலாறு வஞ்சகம் பார்க்காமல் சொல்கிறது. இதைப் பார்த்து நாமும் மகிழ்ச்சி அடைவோம்.
சயாமியர்களின் தாக்குதலில் இருந்து மலாக்காவைத் தற்காக்க பரமேஸ்வரா சில கடல் பயணங்கள் செய்து இருக்கிறார். மஜபாகித் அரசின் தாக்குதலில் இருந்து மலாக்காவைத் தற்காக்க சில பல சாணக்கிய நகர்வுகளையும் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில் மலாக்காவைத் தற்காக்க அவர் சீனாவிற்கு இருமுறை பயணங்கள் செய்தார்.
பரமேஸ்வரா எப்போது சீனாவிற்குப் போனார். அங்கே என்ன நடந்தது போன்ற உண்மையான விவரங்கள் சீனா மிங் ஷி-லு வரலாற்றுப் பதிவுகளில் எழுதி வைக்கப்பட்டு உள்ளன.
மிங் ஷி-லு (Ming Shi-lu) என்பது சீனா மிங் வம்சத்தின் வரலாற்றுப் பதிவுகள். ஆங்கிலத்தில் Veritable Records. 1368-ஆம் ஆண்டில் இருந்து 1644-ஆம் ஆண்டு வரையிலான சீனா நாட்டு வரலாற்றுப் பதிவுகள். சீனாவை ஆட்சி செய்த மிங் பேரரசர்களின் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த மிங் ஷி-லு பதிவுகளில் உள்ளன.
(Geoff Wade (tr.) Southeast Asia in the Ming Shi-lu: An Open Access Resource - https://www.persee.fr/doc/arch_0044-8613_2005_num_70_1_3985)
பரமேஸ்வராவும் அவரின் வாரிசுகளும் மலாக்காவை 1398-ஆம் ஆண்டில் இருந்து 1511-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்து இருக்கிறார்கள். அவர்களின் ஆட்சிக் காலத்தில் சீனாவை ஆட்சி செய்த மிங் அரசர்களின் விவரங்கள் வருகின்றன. இந்த மிங் அரசர்களின் பதிவு மிகவும் முக்கியமானது. ஏன் தெரியுங்களா?
பரமேஸ்வரா என்பவர் இல்லை என்று சொல்கிறார்களே அவர்களுக்கு இந்தச் செய்திகள் போய்ச் சேர வேண்டும். பரமேஸ்வரா என்று ஒருவர் இருந்து இருக்கிறார். அவர் சீனாவிற்கு இரு முறை பயணம் செய்து இருக்கிறார் எனும் தகவல்களும் போய்ச் சேர வேண்டும்.
1. ஹோங்வூ (Hongwu) - 1368–1398
2. ஜியான்வென் (Jianwen) - 1398–1402
3. யோங்லே (Yongle) - 1402–1424
4. ஹொங்சி (Hongxi) - 1424–1425
5. ஜுவாண்டே (Xuande) - 1425–1435
6. இங்ஜோங் (Yingzong) - 1435–1449
7. ஜிங்தாய் (Jingtai) - 1449–1457
8. செங்குவா (Chenghua) - 1464–1487
9. ஹாங்ஷி (Hongzhi) - 1487–1505
10. ஜெங்டே (Zhengde) - 1505–1521
11. Jiajing - 1521–1567
12. Longqing - 1567–1572
13. Wanli - 1572–1620
14. Taichang - 1620
15. Tianqi - 1620–1627
16. Chongzhen - 1627–1644
1368-ஆம் ஆண்டு தொடங்கி 1644-ஆம் ஆண்டு வரை மிங் வம்சம் (Yongle Emperor Ming dynasty) சீனாவின் ஆளும் வம்சமாக இருந்தது. மகா மிங் வம்சம் (Great Ming) என்று அழைப்பது உண்டு. சீனாவின் கடைசி வம்சமாகும். இவர்கள் ஹான் இனத்தைச் சேர்ந்த சீனர்கள்.
மிங் வம்சாவழியினரில் மிக முக்கியமானவர் யோங் லே (Yongle Emperor). பட்டியலில் மூன்றாவதாக வருபவர். இவருடைய அசல் பெயர் ஜு டி (Zhu Di). இவர் 1402 முதல் 1424 வரை சீனாவை ஆட்சி செய்தார்.
யோங்லே (Yongle) மாமன்னர் காலத்தில் தான் பரமேஸ்வரா சீனாவிற்குச் சென்று இருக்கிறார். ஒரு முறை அல்ல. இரு முறைகள். முதல் முறை: 03.10.1405. இரண்டாவது முறை: 04.08.1411
பரமேஸ்வராவின் சீனப் பயணத்தின் போது செங் ஹோ (Zheng He); இன் சிங் (Yin Qing) ஆகிய இருவரும் அவருக்குத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.
மிங் ஷி-லு வரலாற்றுப் பதிவுகள் அனைத்தும் கையெழுத்து (calligraphy) பிரதிகள். 40,000 பக்கங்கள் கொண்டவை. மிகப் பெரிய ஒரு வரலாற்று மலை.
Source: https://networks.h-net.org/node/22055/links/117616/southeast-asia-ming-shi-lu
1368 - 1644-ஆம் ஆண்டுகளில் சீனாவுடன் தொடர்புகள் வைத்து இருந்த தென்கிழக்கு ஆசியா, ஆசியா நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் பதிவுகளில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
எல்லாப் பதிவுகளும் சீன மொழியில் (Classical Chinese) இருக்கின்றன. சீன மொழி தெரியாதவர்கள் தகவல்களை மீட்டு எடுப்பதில் சிரமப் பட்டார்கள். இருப்பினும் ஜீப் வேட் (Geoff Wade) எனும் ஓர் ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர் 1993-ஆம் ஆண்டு, அந்தப் பதிவுகளை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
(Geoff Wade is a historian with interests in Sino-Southeast Asian historical interactions and comparative historiography)
(The Ming Shi-lu is a collective name for the successive reign annals of the emperors of Ming China (1368-1644). Each of the shi-lu comprises an account of one emperor's reign, and was compiled after that emperor's death on the basis of a number of sources created during the reign. These collected texts, which run to close to 40,000 pages of unpunctuated, manuscript Classical Chinese constitute one of the most important primary texts of the Ming dynasty, and contain a wealth of materials unrecorded in other sources.)
1368 - 1644-ஆம் ஆண்டுகளில் சீனாவுடன் தொடர்பு கொண்டு இருந்த தென்கிழக்கு ஆசியா, ஆசியா நாடுகளின் வரலாற்று நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் பதிவுகளில் உள்ளன.
எல்லாப் பதிவுகளும் சீன மொழியில் (Classical Chinese) இருந்தன. இன்னும் இருக்கின்றன. சீன மொழி தெரியாதவர்கள் தகவல்களை மீட்டு எடுக்க மிகவும் சிரமப் பட்டார்கள். இருப்பினும் ஜீப் வேட் (Geoff Wade) எனும் ஆஸ்திரேலிய வரலாற்று ஆசிரியர் 1993-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
(Geoff Wade is a historian with interests in Sino-Southeast Asian historical interactions and comparative historiography)
தென்கிழக்கு ஆசியா நாடுகளின் வரலாற்றுப் பதிவுகளில் 3000 பதிவுகளைச் சீன மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார். 1993-ஆம் ஆண்டு தொடங்கிய மொழிபெயர்ப்பு 2013-ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் பிடித்தன. ஏறக்குறைய 40 கல்வியாளர்கள் அவருக்கு உதவியாக இருந்து உள்ளார்கள். அரும் பெரும் முயற்சி.
அந்த வகையில் சீனா பெய்ஜிங் பல்கலைக்கழகத்தில் இருந்த சீனக் கையெழுத்துப் பதிவுகளில் 3000-க்கும் மேற்பட்ட பதிவுகள் ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டன. மொழி பெயர்க்கப்பட்ட அந்தப் பதிவுகள், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்திடம் (National University of Singapore) ஒப்படைக்கப் பட்டன.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்; ஆசியா ஆய்வு நிறுவனத்துடன் (Asia Research Institute) இணைந்து ஒரு தரவு தளத்தை (Database) உருவாக்கின. இன்று வரையிலும் பராமரித்து வருகின்றன.
இந்தப் பதிவுகள் மட்டும் இல்லை என்றால் பரமேஸ்வரா எனும் பெயர் ஒருக்கால் காணாமல் கரைந்து போய் இருக்கலாம். சொல்ல முடியாது. ஏன் என்றால் வரலாறுகள் அடிபட்டு வரும் காலத்தில் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம்.
அந்த மிங் ஷி-லு பதிவுகளில் பரமேஸ்வராவைப் பற்றியும் மலாக்காவைப் பற்றியும் 150-க்கும் மேற்பட்ட பதிவுகள் உள்ளன. சீனாவில் பரமேஸ்வராவிற்கு என்ன மரியாதைகள் செய்யப் பட்டன; அவர் எப்படி கவனித்துக் கொள்ளப் பட்டார் எனும் விவரங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவை பரமேஸ்வரா பற்றிய உண்மையான ஆவணங்கள். ஆங்கிலத்திலும் பதிவு செய்யப்பட வேண்டி உள்ளது.
பரமேஸ்வரா சீனாவிற்கு இரண்டாவது முறையாகப் பயணம் செய்த போது அவருக்கு என்ன மாதிரியான மரியாதைகள் செய்யப் பட்டன. அவற்றைப் பற்றி சீனா மிங் ஷி-லு (Ming Shi-lu) பதிவுகள் என்ன சொல்கின்றன. தெரிந்து கொள்வோம்.
பரமேஸ்வராவைப் பற்றிய சீனா மிங் ஷி-லு (Ming Shi-lu) பதிவுகள்
தேதி: 4 Aug 1411
#1. As Bai-li-mi-su-la, the king of the country of Melaka, was coming to Court, the eunuch Hai Shou as well as Huang Shang, a director in the Ministry of Rites, were sent to banquet him in reward.
#1. மலாக்கா நாட்டின் மன்னரான பாய்-லி-மி-சு-லா அரச சபைக்கு வந்து கொண்டு இருக்கிறார். அமைச்சர் ஹை ஷோ (Hai Shou) மற்றும் சடங்கு அமைச்சின் இயக்குநர் ஹுவாங் ஷாங்க் (Huang Shang) ஆகியோர் அவருக்கு விருந்து அளிக்க அனுப்பப் பட்டனர்.
விளக்கம்:
Bai-li-mi-su-la - பாய்-லி-மி-சு-லா என்றால் பரமேஸ்வரா. மிங் ஷி-லு சீனப் பதிவுகள் அவரைப் பாய்-லி-மி-சு-லா என்றே அழைக்கின்றன. இந்த நிகழ்ச்சி 1411-ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது பரமேஸ்வராவுக்கு 68 வயது. அவர் இந்து மதம் சார்ந்த பெயரைக் கொண்டு இருந்தார் என்பதை இந்தப் பதிவுகள் உறுதிபடுத்துகின்றன.
Ming Shi-lu: Volume 12: Page: 1487
*******
தேதி: 14 Aug 1411
#2.1. Bai-li-mi-su-la, the king of the country of Melaka, leading his wife, children and attendant ministers, a total of over 540 persons, came to Court.
#2.1. மலாக்கா நாட்டின் மன்னரான பாய்-லி-மி-சு-லா அவரின் மனைவி, குழந்தைகள் மற்றும் உதவி அமைச்சர்களை வழிநடத்தி அரச சபைக்கு வந்தார்.
#2.2. Previously, on being advised of the king's impending arrival, the Emperor had been concerned as he knew that, without qualms, the king had left his homeland and travelled far across the seas.
#2.2. மலாக்கா நாட்டின் மன்னர் தன் தாயகத்தை விட்டு வெளியேறி கடல்களுக்கு அப்பால் வெகுதூரம் பயணம் செய்தார் என்பதைச் சீனா நாட்டு மாமன்னர் ஏற்கனவே அறிந்து இருந்தார். அது குறித்து சீனா நாட்டு மாமன்னர் கவலைப் பட்டார்.
#2.3. Thus, he immediately sent officials to go and look after him and ordered the authorities to make arrangements for him at the Interpreters Institute.
#2.3. உடனடியாகச் சென்று அவரைப் பார்த்துக் கொள்ளுமாறு தன் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அவருக்காக மொழிபெயர்ப்பாளர் நிறுவனத்தில் ஏற்பாடுகள் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு கட்டளை இட்டார்.
#2.4. On this day, the king presented a memorial, had an audience and offered tribute of local products. The Emperor personally banqueted and rewarded the king at Feng-tian Gate and provided a banquet for the king's consort and officials elsewhere.
#2.4. இந்த நாளில், (14.08.1411) மலாக்கா மன்னர் சீன மாமன்னரைச் சந்தித்தார். மலாக்காவில் தயாரிக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்புகளைச் சீன மாமன்னருக்கு அன்பளிப்பாக வழங்கினார். சீன மாமன்னர் தனிப்பட்ட முறையில் பெங்-தியான் வாயிலில் மலாக்கா மன்னருக்கு விருந்து; வெகுமதிகள் வழங்கி சிறப்பு செய்தார். மலாக்கா மன்னரின் துணைவியாருக்கும் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் சீன மாமன்னர் விருந்து வழங்கினார்.
#2.5. He also ordered the Court of Imperial Entertainments to daily supply the guests with meats and Imperial wines.
#2.5. விருந்தினர்களுக்கு தினமும் புலால் மற்றும் பேரரசுக்குரிய பழரசங்களை வழங்குமாறு சீன மாமன்னர் அரச சபைக்கு உத்தரவிட்டார்.
#2.6. The Ministry of Rites was ordered to confer upon the king two suits of clothing embroidered in gold, a set of qi-lin robes, gold and silver utensils, drapes, mats and bedding.
#2.6. தங்கத்தில் பின்னல் வேலைகள் செய்யப்பட்ட இரண்டு ஆடைகள்; குய்-லின் அங்கிகள்; தங்கம் மற்றும் வெள்ளி பாத்திரங்கள்; திரைச்சீலைகள்; பாய்கள் மற்றும் படுக்கைத் துணிகள் ஆகியவை பாய்-லி-மி-சு-லா ராஜாவுக்கு வழங்க சடங்கு அமைச்சகம் உத்தரவிடப்பட்டது.
#2.7. Patterned fine silks, silk gauzes and suits of clothing, as appropriate, were conferred upon the king's consort, children, nephews, ministers and attendants.
#2.7. சிறப்பாக வடிவம் அமைக்கப்பட்ட சிறந்த பட்டுகள்; பட்டுத் துணிகள் மற்றும் ஆடைகள்; பாய்-லி-மி-சு-லா ராஜாவின் மனைவி, குழந்தைகள், மருமகன்கள், அமைச்சர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு வழங்கப் பட்டன.
Source: Ming Shi-lu: Volume 12: Page: 1490/91
*******
தேதி: 20.08.1411
#3.1. A gold and jade belt, ceremonial insignia and a horse with saddle were conferred upon Bai-li-mi-su-la, the king of the country of Melaka. Headwear and robes were conferred upon the king's consort.
#3.1. ஒரு தங்கம் மற்றும் பச்சை மாணிக்கக்கல் அரைக்கச்சை; சடங்கு சின்னம் மற்றும் சேணம் கொண்ட குதிரை ஆகியவை மலாக்கா நாட்டின் மன்னரான பாய்-லி-மி-சு-லாவுக்கு வழங்கப் பட்டன. தலைக்கவசம் மற்றும் அங்கிகள் மலாக்கா ராஜாவின் மனைவிக்கு வழங்கப் பட்டன.
Source: Ming Shi-lu: Volume 12: Page: 1495
*******
தேதி: 18.09.1411
#4.1. Bai-li-mi-su-la, the king of the country of Melaka, the envoys from the countries of Bengal and Calicut, and the chieftains sent by the Mu-bang Military and Civilian Pacification Superintendency in Yun-nan and other places were banqueted at Wu Gate.
#4.1. மலாக்கா நாட்டின் மன்னர் பாய்-லி-மி-சு-லா, வங்காளம் மற்றும் கோழிக்கோடு நாடுகளைச் சேர்ந்த தூதர்கள்; மற்றும் யூநானானில் உள்ள மு பேங் இராணுவம் மற்றும் பொதுத்துறை சார்ந்த முன்னோடி கண்காணிப்பாளர்களால் அனுப்பப்பட்ட தலைவர்களுக்கு வூ கேட் நுழையாயிலில் விருந்து.
Source: Ming Shi-lu: Volume 12: Page: 1503
*******
தேதி: 02.10.1411
#5.1. As Bai-li-mi-su-la, the king of the country of Melaka, was taking his leave of the Court, he was banqueted at Feng-tian Gate.
#5.1. மலாக்கா நாட்டின் மன்னரான பாய்-லி-மி-சு-லா அரச சபையில் இருந்து விடைபெற்ற போது, அவருக்கு பெங் - தியான் நுழைவாயிலில் விருந்து வழங்கப் பட்டது.
#5.2. The king's consort and attendant officials were banqueted separately. Imperial orders of encouragement were conferred upon the king as follows: "You, king, travelled tens of thousands of li across the ocean to the capital, confidently and without anxiety, as your loyalty and sincerity assured you of the protection of the spirits.
#5.2. மலாக்கா ராஜாவின் துணைவியார் மற்றும் உதவி அதிகாரிகளுக்குத் தனித்தனியாக விருந்து வழங்கப் பட்டது. அரசு சார்ந்த வாழ்த்துகளும் அன்பளிப்புகளும் பின்வருமாறு மலாக்கா ராஜா பாய்-லி-மி-சு-லாவுக்கு வழங்கப் பட்டன: "ராஜாவான நீங்கள் எவ்வித கவலையும் இல்லாமல் நல்லாவிகளின் துணையுடன் பல்லாயிரக் கணக்கான மைல்களைக் கடலில் கடந்து தலைநகருக்குப் பயணித்து உள்ளீர்கள்.
#5.3. I have been glad to meet with you, king, and feel that you should stay. However, your people are longing for you and it is appropriate that you return to soothe them.
#5.3. மலாக்காவின் ராஜா பாய்-லி-மி-சு-லா, உங்களுடன் சந்திப்பு நடத்தியதில் நான் (சீனாவின் மாமன்னர்) மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். இருப்பினும் உங்கள் மக்கள் (மலாக்காவில்) உங்களுக்காகக் காத்து இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நீங்கள் மலாக்காவிற்குத் திரும்பிச் செல்வதே சாலச் சிறந்தது.
#5.4. The weather is getting colder and the winds are suited for sailing South. It is the right time. You should eat well on your journey and look after yourself, so as to reflect my feelings of concern for you.
#5.4. வானிலை குளிர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் தெற்கே பயணம் செய்வதற்கு காற்று பொருத்தமாகவும் அமைகின்றது. இது சரியான நேரம். உங்கள் மீது எனக்கு அக்கறை உணர்வு உள்ளது. அந்த வகையில் உங்கள் பயணத்தின் போது நீங்கள் நன்றாகச் சாப்பிட வேண்டும். உங்கள் உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
#5.5. Now I am conferring upon you, king, a gold and jade belt, ceremonial insignia, two "saddled horses", 100 liang of gold, 500 liang of silver, 400,000 guan of paper money, 2,600 guan of copper cash, 300 bolts of embroidered fine silks and silk gauzes, 1,000 bolts of thin silks, two [bolts?] of "mixed gold" (渾金) patterned fine silks, and two long-sleeved "kneeling gowns" interwoven with gold thread. These are for your receipt."
#5.5. மலாக்காவின் ராஜா பாய்-லி-மி-சு-லாவாகிய உங்களுக்கு ஒரு தங்கம்; பச்சை மாணிக்கக் கல் அரைக் கச்சை; சடங்கு சின்னம்; சேணம் கொண்ட குதிரை; 100 லியாங் தங்கம்; 500 லியாங் வெள்ளி; 400,000 குவான் காகிதப் பணம்; 2,600 குவான் செப்புப் பணம்; 300 பட்டு இழைகள்; 1,000 சுருள் மெல்லிய பட்டுகள்; இரண்டு தங்க வடிவிலான சிறந்த பட்டுகள்; மற்றும் தங்க நூலால் பின்னப்பட்ட இரண்டு நீண்ட முழங்கால் அணிகள் ஆகியவற்றை இப்போது நான் வழங்குகிறேன்.
#5.6. In addition, headwear and a set of robes, 200 liang of silver, 5,000 guan of paper money and 60 bolts of brocaded fine silks, silk gauzes and thin silks as well as four suits of clothing made from patterned fine silks and silk gauzes interwoven with gold threads were conferred upon the king's consort.
#5.6. மேலும் கூடுதலாக ஒரு தலைத்துணி; ஒரு தொகுப்பு அங்கிகள்; 200 லியாங் வெள்ளி; 5,000 குவான் காகிதப் பணம்; 60 சுருள் பொன் - வெள்ளி - சரிகைப் பட்டு; அழகிய மெல்லிய பட்டுகள்; அழகிய சித்திரப்பூ வேலைப்பாடுகள் கொண்ட சிறந்த பட்டுகள்; தங்க நூல்களால் செய்யப்பட்ட நான்கு பட்டு ஆடைகள் ஆகியவை மலாக்கா ராஜா பாய்-லி-மி-சு-லாவின் மனைவிக்கு வழங்கப் படுகின்றன.
#5.7. Headwear and belts were conferred upon the king's sons and nephews. Silver, paper money, copper cash and variegated silks, as appropriate, were conferred upon his accompanying ministers. As the envoys from Calicut and other countries were also taking their leave, they too were all banqueted and farewelled. It was also ordered that they be given patterned fine silks interwoven with gold thread, clothing embroidered in gold, "gold-spangled" drapes, parasols and other goods to confer upon the kings of their countries.
#5.7. மலாக்கா ராஜா பாய்-லி-மி-சு-லாவின் மகன்கள் மற்றும் மருமகன்களுக்கு தலை ஆடைகள்; இடைக் கச்சைகள் வழங்கப் படுகின்றன. அவருடன் வந்த அமைச்சர்களுக்குப் பொருத்தமான வண்ண மயமான பட்டுத் துணிகள்; வெள்ளி; காகிதப் பணம்; செப்புப் பணம் ஆகியவை வழங்கப் படுகின்றன. கோழிக்கோடு மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தூதர்களும் விடைபெற வேண்டி இருப்பதால் அவர்களுக்கும் விருந்துகள் விருதுகள் வழங்கப் படுகின்றன.
Ming Shi-lu: Volume 12: Page: 1506/07
02.10.1411-ஆம் தேதி தான் பாய்-லி-மி-சு-லா எனும் பரமேஸ்வரா சீனாவிற்குக் கடைசியாகச் சென்றது. அப்போது அவருக்கு வயது 67 அல்லது 68 இருக்கலாம். அதன் பின்னர் மலாக்கா ஆயர் குரோ பெர்த்தாம் கிராமத்தில் காலமானார். அவர் மறைந்து 600 ஆண்டுகள் ஆகின்றன.
மலாக்கா என்றால் பரமேஸ்வரா. பாய்-லி-மி-சு-லா என்றால் பரமேஸ்வரா. மலாக்கா இருக்கும் வரையில் பாய்-லி-மி-சு-லா எனும் பரமேஸ்வரா அதே மலாக்காவில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
27.08.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக