04 செப்டம்பர் 2020

பரமேஸ்வரா சாலை பலேம்பாங்

பரமேஸ்வராவின் பெயரில் இந்தோனேசியா, பலேம்பாங் மாநகரில் ஒரு சாலை உள்ளது. ஜாலான் பரமேஸ்வரா, புக்கிட் பலேம்பாங், பலேம்பாங், சுமத்திரா செலாத்தான் (Jln Parameswara, Bukit Palembang, Palembang, Sumatera Selatan). நடுத்தரமான சாலை. பலேம்பாங் மாநகரில் சின்ன ஒரு குட்டி மலை. பெயர் பலேம்பாங் குன்று. அதன் அடிவாரத்தில் தான் இந்தப் பரமேஸ்வரா சாலை ஓடுகிறது.

1900-ஆம் ஆண்டுகளில் இந்தச் சாலை பிரதான சாலையாக இருந்தது. அப்போதைக்கு அதுதான் பெரிய சாலை.

Aesan Gede Songket Palembang

பலேம்பாங் அதன் சொங்கெட் (Songket) கலைத் துணிகளுக்குப் பெயர் பெற்றது. தங்கம், வெள்ளி நூல்களால் வடிவம் அமைக்கப்பட்டு, கையால் நெய்யப்பட்ட பட்டு அல்லது பருத்தி துணிகள்.

படத்தில் பலேம்பாங் பெண்மணி சொங்கெட் ஆடைகளுடன் அழகிய தோற்றம். அழகான ஆடைகள்.

பலேம்பாங் மாநகரின் அபார வளர்ச்சியினால் பரமேஸ்வரா சாலைக்கு அருகில் பெரிய பெரிய சாலைகள்; நெடுஞ்சாலைகள் எல்லாம் வந்து விட்டன. பெரிய பெரிய தொழிற்சாலைகள்; தனியார் நிறுவனங்களும் வந்து விட்டன.

தவிர பரமேஸ்வரா சாலைக்கு அருகில் மிக நீண்ட சாலை ஜாலான் சுகர்னோ ஹர்த்தா (Jl. Soekarno-Hatta) இருக்கிறது.

பரமேஸ்வரா சாலைக்கு அருகில்
பெரிய சாலைகள் உள்ளன.

ஜாலான் டெமாங் லேபார் டாவுன் (Jl. Demang Lebar Daun);

ஜாலான் புத்ரி கெம்பாங் டாடார் (Jalan Putri Gembang Dadar);

ஜாலான் ஆலாம் ஷா ரத்து பெர்வீரா நெகாரா (Jalan Alam Shah Ratu Perwira Negara);

ஜாலான் ஸ்ரீ ஜெயா நெகாரா (Jalan Sri Jeya Negara)

ஆனாலும் ஜாலான் பரமேஸ்வரா பழைய நிலையில் அப்படியேதான் இருக்கிறது.

மலாக்காவிலும் ஜாலான் பரமேஸ்வராவிற்கு ஏற்பட்ட நிலைதான். மாநகர வளர்ச்சியினால் இந்தச் சாலையும் அமிழ்ந்து விட்டது. அதாவது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

பலேம்பாங் நகரம் தென் சுமத்திராவின் தலைநகரம். 400 சதுர மைல் பரப்பளவு. மக்கள் தொகை 1,834,344 (2019). தென்கிழக்கு ஆசியாவில் மிகப் பழைமையான நகரம்.

1300 ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி. 683-ஆம் ஆண்டில் உருவானது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவ இந்து மதம் சார்ந்த மக்கள் வழிந்து நிரம்பிய இடம். இப்போது 3000 இந்து மதத்தவர் மட்டுமே வாழ்கிறார்கள்.

பலேம்பாங் 1682

ஸ்ரீ விஜயம் (Srivijaya); மஜபாகித் (Majapahit); சைலேந்திரா (Sailendra); பலேம்பாங் சுல்தானகம் (Palembang Sultanate) போன்ற மாபெரும் பேரரசுகளின் அரண்மனைகளில் இருந்த இடம். அரச பரம்பரையினர் நடை பயின்ற இடம்.

பரமேஸ்வரா சாலைக்கு அப்பால் ஸ்ரீ விஜயா (Sriwijaya University) பல்கலைக்கழகம் உள்ளது. இந்தோனேசியாவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்.  ஸ்ரீ விஜயா அரசு பாலிடெக்னிக் (Sriwijaya State Polytechnic) அங்குதான் உள்ளது. அருகில் மூசி பாலம் உள்ளது.

ஸ்ரீ விஜயம் ஆட்சியின் காலத்தில், அதன் அரச சபையில் சொங்கெட் ஆடைகள் அரசு ஆபரணங்கள் ஆகும். ஜாவனிய மக்களின் கலைப் பண்பாடு ஆய கலைகளில் ஒரு கலை என்றுகூட சொல்லலாம். அழகிலும் அழகான கலாசாரத்தின் கலைத் தன்மைகள்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
03.09.2020

சான்றுகள்:

1. https://en.wikipedia.org/wiki/Palembang

2. https://sumeks.co/survei-pelebaran-jalan-parameswara/

3.https://moovitapp.com/index/en/public_transit-Jl_Parameswara-Palembang-site_38771458-5036

4. https://sriwijayatv.com/tag/jalan-parameswara/



3 கருத்துகள்:

  1. நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    தங்கள் தேடல் அருமை. பலருக்கும் பயன்படும் தகவல்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றிங்க ஐயா... நாம் வாழும் காலத்திலேயே நம் வரலாறுகளைத் தேடி எடுத்து ஆவணப் படுத்திவிட வேண்டும்... அதுவே நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு நாம் விட்டுச் செல்லும் சீதனம்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. உங்கள் தொடர்பு எண் வேண்டும்,
    சூலூர். சு. தமிழரசன் MA,BL,செல் எண்
    9566884814,கோவை மாவட்டம்
    தமிழ்நாடு

    பதிலளிநீக்கு