(மலேசிய நண்பன் 16.6.2010 ஞாயிறு இதழில் பிரசுரம் ஆனது)
கணினியும் நீங்களும் - பகுதி 60
அர்ஜுனன் செல்வராஜா arjunanselvaraja@ymail.com
கே: சார், எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால், தமிழ் எழுதத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுவேன். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு மாற்றும் மென்பொருள் இருக்கிறதா?
ப: தமிழ் மொழியின் மீது உள்ள உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்து கள். கணினி உலகம் எங்கோ போய் விட்டது. நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுக்கும் நிரலி வந்துவிட்டது. அந்த நிரலி உலகில் உள்ள 19 மொழிகளை ஒரே ஒரு விநாடி நேரத்தில் மாற்றிக் கொடுத்து விடுகிறது. http://www.google.co.in/transliterate/indic/Tamil எனும் இடத்தில் அந்த நிரலியின் பயன் பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி மொழி மாற்றம் செய்வதை ஆங்கிலத்தில் Transliteration என்று சொல்வார்கள். தொடக்கத்தில் சற்று குழப்பம் வரலாம். கொஞ்ச நேரம் போராடினால் எல்லாம் சரியாகி விடும்.
நா.பார்த்திபன், செலாயாங், கோலாலம்பூர்
கே: இணையத்தில் நீங்கள் அண்மையில் ரசித்த வலைப் பதிவர்கள் ஜோக் ஏதாவது சொல்ல முடியுமா?
ப: ஒரு செய்தி படித்தேன். தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர் ஒருவர். இவர் சிங்கையில் இருந்து வாரா வாரம் மளிகை சாமான்கள் வாங்க ஜொகூர் பாருக்கு வருவாராம். அவருடைய கடப்பிதழில் ஏதோ பிரச்னை. மலேசிய குடி நுழைவு அதிகாரிகள் அவரை மலேசியாவுக்குள் விட வில்லை. உடனே அவர் தன்னுடைய பான் அட்டையைக் காட்டி இருக்கிறார். PAN Card என்றால் இந்தியாவின் வருமான வரி இலாகா கொடுக்கும் Permanent Account Number.
அதைப் பார்த்ததும் மலேசிய அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்ததாக எழுதி இருக்கிறார். நல்ல ஜோக். http://krpsenthil.blogspot.com எனும் இடத்தில் இருக்கிறது. போய்ப் படித்து பாருங்கள்.
தனபால்
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?
ப: .exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால் அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும்.
நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும். இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.
ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: சார், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அங்கு 28 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. சம்பளப் பட்டுவாடா கணக்கை மைக்ராசாப்ட் Excel நிரலியில் செய்து வருகிறேன். அதன் படியே சம்பளமும் கொடுத்து வந்தேன். யாரென்று தெரியவில்லை. திடீரென்று அந்த கணக்கு கோப்பை Folder ஐ பூட்டி வைத்து விட்டார்கள். ஒரு கடவுச்சொல் Password கொடுத்து கடைசி வரை திறக்க முடியாமல் செய்தும் விட்டார்கள். போன மாதம் சம்பளம் கொடுத்து விட்டேன். என் முதலாளி என்னை ஏசிக் கொண்டு இருக்கிறார்.
ஒரு கணக்கைப் பாது காக்க முடியாத நான் நிறுவன ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் என் வேலைக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது. அந்தக் கணக்குக் கோப்பை மீட்டு எடுக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். வேதனையுடன் எழுதுகிறேன்.
ப: நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருக்கிறீர்கள். நிறுவனத்தின் ஆவணங்களை எப்போதும் Backup எனும் பின்னாதரவு செய்து நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது யார் வேண்டுமானாலும் அந்தக் கணினியைப் பயன் படுத்தி இருக்கலாம். இல்லையா.
வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட வேண்டும். உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது தொல்லை கொடுக்க விரும்பலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தொலைவில் இருந்து ரசித்து மகிழலாம்.
இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அடுத்தவர் வேதனைப் படுவதைப் பார்த்து சந்தோஷப் படும் இரண்டு கால் ஜ“வன்கள் வாழ்கின்ற காலம். ஆக அவர்கள் வெட்கப் படும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி?
http://rs93.rapidshare.com/files/394833431/Office.Password.Unlocker.v4.0.1.6.WinALL.Cracked-YPOGEiOS.rar எனும் இடத்திற்குப் போய் நான் சொல்லும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணினியில் பதிப்பு செய்யுங்கள். அதில் எக்செல் ஆவணத்தின் இடத்தைச் சொல்லுங்கள். ஒரு சில விநாடிகளில் அவர்கள் போட்ட கடவுச் சொல்லைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தச் சொல்லைப் பயன் படுத்தி ஆவணத்தை மீட்டுக் கொள்ளுங்கள். இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜெ.செல்லக்கண்ணு, கோத்தா கெமுனிங், கிள்ளான்
கே: நீங்கள் இவ்வளவு கணினியைப் பற்றி பேசுகிறீர்கள் சொல்கிறீர்கள். சின்ன கேள்வி. உங்களுடைய மடிக்கணினி இன்னும் எத்தனை நாளைக்கு வேலை செய்து தாக்குப் பிடிக்கும் என்பதைப் பற்றி கணித்துச் சொல்ல முடியுமா?
ப: கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த அறிவுப் பேழை. மடியில் தவழும் மனைவியைப் போன்ற ஒரு மகா காவியம். அப்படிப் பட்ட கலா ஓவியத்தைப் போய் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று வாசிக்கலாமா?
பச்சையப்பன் ராஜகோபால், ஸ்ரீ மூடா, ஷா ஆலம்
கே: நம்முடைய CD எனும் குறும் தட்டில் கீறல்கள் விழுந்து விட்டால் அதைப் பயன் படுத்த முடியாமல் போகிறது. அத்துடன் அதனுள் இருக்கும் தகவல்களும் கிடைக்காமல் போகின்றன. முக்கிய தகவல்கள் இருந்தால் கெட்டுப் போன சிடி யிலிருந்து மீட்க முடியுமா?
ப: முடியும். ஓர் இலவசமான நிரலி இருக்கிறது. கீறல்கள் விழுந்த குறுந்தட்டுகளில் இருந்து தகவல்களை மீட்டுத் தருகிறது.
http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html எனும் இடத்தில் சிடி ரோலர் எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதைப் பயன் படுத்தி காணாமல் போன கோப்புகள், படங்கள் போன்றவற்றை மீட்டுக் கொள்ளுங்கள்.
மா.செல்வக்குமாரி, தாமான் பிஸ்தாரி, தஞ்சோங் ரம்புத்தான்
கே: என்னுடைய மகளுக்கு வயது ஐந்து. அவருக்கு அடிப்படை பியானோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். கணினியின் தட்டச்சுப் பலகை மூலமாகச் சொல்லித் தர ஏதாவது நிரலி இருந்தால் சொல்லுங்கள் ஐயா. உண்மையிலேயே நீங்கள் மலேசிய இந்தியர்களுக்கு நல்ல கணினிச் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். இந்தப் பகுதியின் மூலமாக நாங்கள் எவ்வளவோ பயன் அடைந்து வருகிறோம். மலேசிய நணபன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
ப: ஈப்போவில் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது. அதனால் ரொம்ப பேருக்கு சளி இருமல். உங்களுடைய நீண்ட பாராட்டு மடலைப் படித்த எனக்கும் எக்கச் சக்கமாக சளி பிடித்து விட்டது. சமாளித்து விட்டேன். பியானோ பற்றி கேட்டு இருந்தீர்கள். உங்களுக்கு என்றே உருவாக்கின மாதிரி ஒரு நிரலி இருக்கிறது. மிக மிக அற்புதமான நிரலி. http://www.4shared.com/file/PqSiZeqi/FxKeyboard.html எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
சுகுமாறன் நாயர்
கே: தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். விண்டோஸ் 7ல் பயன் படுத்துவது எப்படி?
ப: யூனிகோடு முறையை அனைத்து கணினிகளிலும் பயன் படுத்தும் வகையில் இப்போது முரசு அஞ்சல் நிரலியை உருவாக்கம் செய்துள்ளார்கள். அதை நீங்கள் http://anjal.net/ எனும் இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விலை மலேசிய ரிங்கிட் 99. அதில் நிறைய பயன் பாடுகள் உள்ளன. அருமையான நிரலி. கொடுக்கின்ற காசிற்கு வஞ்சகம் இல்லாமல் செயல் பாடுகளும் அமைகின்றன.
தவிர நியூ ஹாரிசான் எனும் நிறுவனமும் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியைக் கொடுக் கிறார்கள். ஆனால், முரசு அஞ்சலைப் போல சகல வசதிகளும் இல்லை. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதைக் கணினிக்குள் பதிப்பு செய்ததும் ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Settings என்று வரும். அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விடுங்கள். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.
தட்டச்சு பலகையில் Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளை நிற மணியின் சின்னம் தங்க நிறமாக மாறும். அப்படி என்றால் தமிழுக்கு மாறி விட்டது என்று அர்த்தம். அதே பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால் சின்னம் வெள்ளை நிறமாக மாறும். ஆங்கிலத்திற்குப் போய்விட்டது என்று அர்த்தம். தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்.
கணினியும் நீங்களும் - பகுதி 60
அர்ஜுனன் செல்வராஜா arjunanselvaraja@ymail.com
கே: சார், எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால், தமிழ் எழுதத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுவேன். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு மாற்றும் மென்பொருள் இருக்கிறதா?
ப: தமிழ் மொழியின் மீது உள்ள உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்து கள். கணினி உலகம் எங்கோ போய் விட்டது. நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுக்கும் நிரலி வந்துவிட்டது. அந்த நிரலி உலகில் உள்ள 19 மொழிகளை ஒரே ஒரு விநாடி நேரத்தில் மாற்றிக் கொடுத்து விடுகிறது. http://www.google.co.in/transliterate/indic/Tamil எனும் இடத்தில் அந்த நிரலியின் பயன் பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி மொழி மாற்றம் செய்வதை ஆங்கிலத்தில் Transliteration என்று சொல்வார்கள். தொடக்கத்தில் சற்று குழப்பம் வரலாம். கொஞ்ச நேரம் போராடினால் எல்லாம் சரியாகி விடும்.
நா.பார்த்திபன், செலாயாங், கோலாலம்பூர்
கே: இணையத்தில் நீங்கள் அண்மையில் ரசித்த வலைப் பதிவர்கள் ஜோக் ஏதாவது சொல்ல முடியுமா?
ப: ஒரு செய்தி படித்தேன். தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர் ஒருவர். இவர் சிங்கையில் இருந்து வாரா வாரம் மளிகை சாமான்கள் வாங்க ஜொகூர் பாருக்கு வருவாராம். அவருடைய கடப்பிதழில் ஏதோ பிரச்னை. மலேசிய குடி நுழைவு அதிகாரிகள் அவரை மலேசியாவுக்குள் விட வில்லை. உடனே அவர் தன்னுடைய பான் அட்டையைக் காட்டி இருக்கிறார். PAN Card என்றால் இந்தியாவின் வருமான வரி இலாகா கொடுக்கும் Permanent Account Number.
அதைப் பார்த்ததும் மலேசிய அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்ததாக எழுதி இருக்கிறார். நல்ல ஜோக். http://krpsenthil.blogspot.com எனும் இடத்தில் இருக்கிறது. போய்ப் படித்து பாருங்கள்.
தனபால்
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?
ப:
நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும். இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.
ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: சார், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அங்கு 28 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. சம்பளப் பட்டுவாடா கணக்கை மைக்ராசாப்ட் Excel நிரலியில் செய்து வருகிறேன். அதன் படியே சம்பளமும் கொடுத்து வந்தேன். யாரென்று தெரியவில்லை. திடீரென்று அந்த கணக்கு கோப்பை Folder ஐ பூட்டி வைத்து விட்டார்கள். ஒரு கடவுச்சொல் Password கொடுத்து கடைசி வரை திறக்க முடியாமல் செய்தும் விட்டார்கள். போன மாதம் சம்பளம் கொடுத்து விட்டேன். என் முதலாளி என்னை ஏசிக் கொண்டு இருக்கிறார்.
ஒரு கணக்கைப் பாது காக்க முடியாத நான் நிறுவன ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் என் வேலைக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது. அந்தக் கணக்குக் கோப்பை மீட்டு எடுக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். வேதனையுடன் எழுதுகிறேன்.
ப: நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருக்கிறீர்கள். நிறுவனத்தின் ஆவணங்களை எப்போதும் Backup எனும் பின்னாதரவு செய்து நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது யார் வேண்டுமானாலும் அந்தக் கணினியைப் பயன் படுத்தி இருக்கலாம். இல்லையா.
வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட வேண்டும். உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது தொல்லை கொடுக்க விரும்பலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தொலைவில் இருந்து ரசித்து மகிழலாம்.
இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அடுத்தவர் வேதனைப் படுவதைப் பார்த்து சந்தோஷப் படும் இரண்டு கால் ஜ“வன்கள் வாழ்கின்ற காலம். ஆக அவர்கள் வெட்கப் படும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி?
http://rs93.rapidshare.com/files/394833431/Office.Password.Unlocker.v4.0.1.6.WinALL.Cracked-YPOGEiOS.rar எனும் இடத்திற்குப் போய் நான் சொல்லும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணினியில் பதிப்பு செய்யுங்கள். அதில் எக்செல் ஆவணத்தின் இடத்தைச் சொல்லுங்கள். ஒரு சில விநாடிகளில் அவர்கள் போட்ட கடவுச் சொல்லைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தச் சொல்லைப் பயன் படுத்தி ஆவணத்தை மீட்டுக் கொள்ளுங்கள். இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஜெ.செல்லக்கண்ணு, கோத்தா கெமுனிங், கிள்ளான்
கே: நீங்கள் இவ்வளவு கணினியைப் பற்றி பேசுகிறீர்கள் சொல்கிறீர்கள். சின்ன கேள்வி. உங்களுடைய மடிக்கணினி இன்னும் எத்தனை நாளைக்கு வேலை செய்து தாக்குப் பிடிக்கும் என்பதைப் பற்றி கணித்துச் சொல்ல முடியுமா?
ப: கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த அறிவுப் பேழை. மடியில் தவழும் மனைவியைப் போன்ற ஒரு மகா காவியம். அப்படிப் பட்ட கலா ஓவியத்தைப் போய் எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும் என்று வாசிக்கலாமா?
பச்சையப்பன் ராஜகோபால், ஸ்ரீ மூடா, ஷா ஆலம்
கே: நம்முடைய CD எனும் குறும் தட்டில் கீறல்கள் விழுந்து விட்டால் அதைப் பயன் படுத்த முடியாமல் போகிறது. அத்துடன் அதனுள் இருக்கும் தகவல்களும் கிடைக்காமல் போகின்றன. முக்கிய தகவல்கள் இருந்தால் கெட்டுப் போன சிடி யிலிருந்து மீட்க முடியுமா?
ப: முடியும். ஓர் இலவசமான நிரலி இருக்கிறது. கீறல்கள் விழுந்த குறுந்தட்டுகளில் இருந்து தகவல்களை மீட்டுத் தருகிறது.
http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html எனும் இடத்தில் சிடி ரோலர் எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதைப் பயன் படுத்தி காணாமல் போன கோப்புகள், படங்கள் போன்றவற்றை மீட்டுக் கொள்ளுங்கள்.
மா.செல்வக்குமாரி, தாமான் பிஸ்தாரி, தஞ்சோங் ரம்புத்தான்
கே: என்னுடைய மகளுக்கு வயது ஐந்து. அவருக்கு அடிப்படை பியானோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். கணினியின் தட்டச்சுப் பலகை மூலமாகச் சொல்லித் தர ஏதாவது நிரலி இருந்தால் சொல்லுங்கள் ஐயா. உண்மையிலேயே நீங்கள் மலேசிய இந்தியர்களுக்கு நல்ல கணினிச் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். இந்தப் பகுதியின் மூலமாக நாங்கள் எவ்வளவோ பயன் அடைந்து வருகிறோம். மலேசிய நணபன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.
ப: ஈப்போவில் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது. அதனால் ரொம்ப பேருக்கு சளி இருமல். உங்களுடைய நீண்ட பாராட்டு மடலைப் படித்த எனக்கும் எக்கச் சக்கமாக சளி பிடித்து விட்டது. சமாளித்து விட்டேன். பியானோ பற்றி கேட்டு இருந்தீர்கள். உங்களுக்கு என்றே உருவாக்கின மாதிரி ஒரு நிரலி இருக்கிறது. மிக மிக அற்புதமான நிரலி. http://www.4shared.com/file/PqSiZeqi/FxKeyboard.html எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
சுகுமாறன் நாயர்
கே: தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். விண்டோஸ் 7ல் பயன் படுத்துவது எப்படி?
ப:
தவிர நியூ ஹாரிசான் எனும் நிறுவனமும் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியைக் கொடுக் கிறார்கள். ஆனால், முரசு அஞ்சலைப் போல சகல வசதிகளும் இல்லை. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதைக் கணினிக்குள் பதிப்பு செய்ததும் ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள். Settings என்று வரும். அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விடுங்கள். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.
தட்டச்சு பலகையில் Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளை நிற மணியின் சின்னம் தங்க நிறமாக மாறும். அப்படி என்றால் தமிழுக்கு மாறி விட்டது என்று அர்த்தம். அதே பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால் சின்னம் வெள்ளை நிறமாக மாறும். ஆங்கிலத்திற்குப் போய்விட்டது என்று அர்த்தம். தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக