11 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 76

(அன்பு வாசகர்களே, உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. சென்ற அக்டோபர் மாதம் தென்னிந்தியா சுற்றுலா போய் இருந்தேன். கொடைக்கானல், இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களில் இணைய வசதிகள் உள்ளன. இருப்பினும், மலேசிய நண்பன் நாளிதழ் ஆசிரியருடன் இணையத் தொடர்பு கொள்வதில்தான் கொஞ்சம் சிரமம் ஏற்பட்டது. அதனால், இரண்டு வாரங்களுக்கு கேள்வி-பதில் அங்கம் இடம் பெறவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.)

ஜி.இராமன் graman@tm.com.my
கே: சில பெற்றொர்கள் Streamyx இணையத் தொடர்பைப் பொருத்திக் கொள்வதால் பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் பயப்படுகிறார்கள். இதைத் தடுக்க வழி இருக்கிறதா?

ப: இணையத்தில் நல்லதும் இருக்கிறது. கெட்டதும் இருக்கிறது. இருந்தாலும், பிள்ளைகள் பார்க்கக் கூடாத படங்களைப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவர்கள் ஒரு வகையில் பெற்றோர்களே.

பிள்ளைகளைத் தூங்க வைத்துவிட்டு இவர்கள் பார்க்க வேண்டிய படங்களைப் பார்த்து முடித்து, அந்தப்
படங்களுக்கு எத்தனை மார்க் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்யும் போது சேவலும் கூவி விடுகிறது.

அரக்கப் பரக்க படுக்கப் போகும் போது
சி.டி.யை மறந்து விடுகிறார்கள். மறுநாள் பள்ளியில் இருந்து வரும் பிள்ளைகள் அந்தப் படங்களைப் பார்க்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

பழியை எதிர்வீட்டு எல்லம்மா மீதும் பக்கத்து வீட்டு பார்வதியின் மீதும் போட்டு தற்காலிகமாக நிவாரணம் தேடிக் கொள்வார்கள். உள்ளங் கையில் புண்ணை வைத்துக் கொண்டு கண்ணாடி மீது குறை சொல்வது தப்பு.
http://www.sofotex.com/downloads/d94055.html
எனும் இணையத் தளத்திற்குப் போய் Parental Control Flter எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பிள்ளைகள் ஆபாசப் படங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்.


எஸ்.பி.பாலகிருஷ்ணன்   oum9100@yahoo.com.sg
கே: என்னிடம் அசல் விண்டோஸ் XP இருக்கிறது. கண்னியை விற்றவர் அதை என்னிடம் கொடுத்தார். இப்பொழுது கணினியை இயக்கியதும் This copy of window is not genuine என்று வருகிறது. அப்படி என்றால் என்னுடைய விண்டோஸ் செயலி போலியானதா?

ப: நல்ல கேள்வி. உங்களுடைய விண்டோஸ் XP உண்மையானதுதான். அதில் கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம். இருந்தாலும் என்ன நடந்திருக்கலாம். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. என்ன தவறு என்பது எனக்குத் தெரியும். அந்தத் தவறை இங்கே சொன்னால் எனக்குதான் பிரச்னை.

என் நண்பருக்கும் இந்த மாதிரி நடந்திருக்கிறது. உங்களிடம் கணினியை விற்றவர் அசல் விண்டோஸைப் பயன் படுத்தவில்லை என்பதை
அவரிடமே போய் புகார் செய்யுங்கள். பிரச்னையைப் பதற்றம் இல்லாமல் சொல்லுங்கள். தீர்த்து வைப்பார்.

அவர் பிடிவாதம் செய்தால், அதற்கும் வழி
இருக்கிறது. சமாதானமாகப் பேசி பிரச்னைகளைத் தீர்க்கலாம். சிங்கப்பூரில் இந்த மாதிரியான சிக்கலகள் குறைவு. வேதனையாக இருக்கிறது.

Raju Murali   <raju_pollathavan@yahoo.com>
கே: சார், வணக்கம். நான் ஒரு கல்லூரி மாணவன். எனக்குத் தமிழ் மொழியின் மீது மிகவும் பிரியம். எனக்கு சிலப்பதிகாரம், தொல்காப்பியம், திருக்குறள், இராமாயணம், மற்றும் பல நிறைந்த இணையத் தளம் வேண்டும். சார், உதவி செய்யுங்கள்.

ப: உங்களுடைய மின்னஞ்சலில் நீங்கள் ஒரு பொல்லாதவன் என்று பதிவு செய்து இருக்கிறீர்கள். உண்மையிலேயே பொல்லாதவரா. இருந்தாலும் தமிழ் மொழி யின் மீது ஏற்பட்டுள்ளஇணக்கத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். http://www.tamilnation.org/literature/anthologies.htm எனும் இணையத் தளத்திற்குப் போய் தமிழ் இலக்கியத்தில் மூழ்கி முத்துக் குளியுங்கள்.

அங்கே இருந்து பார்த்தால் தமிழ் இலக்கியத்தின் பெருங்கடல் தெரியும். வாழ்த்துகள்.

வனஜா முத்து, ஜாலான் செராஸ், கோலாலம்பூர்
கே: எனக்கு சிறுவர்களுக்கான கணினி விளையாட்டுகள் வேண்டும். அதிகமான விலையில் விற்கிறார்கள். வாங்கிக் கொடுக்க சிரமமாக இருக்கிறது. உங்களுடைய உதவி தேவை சார்?

ப:
இல்லாதவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்வதே நம்முடைய நோக்கம், நம்முடைய இலட்சியம். இந்த வாரம் ஒரு புதிய விளையாட்டின்
இடத்தைத் தருகிறேன். ஒவ்வொரு வாரமும் ஓர் இடம். சரியா. இந்தத் இணையத் தளம் பசிபிக் மாக்கடலில் மேற்கு சமோவா தீவில் இருக்கிறது.

உலகில் உள்ள விளையாட்டுகள், படங்கள், செயலிகள் எல்லாவற்றையும் கோடிக்கணக்கில் வைத்திருக்கிறார்கள்.

ஏழை நாடுகளுக்கு இலவசமாகக் கொடுப்பதே இவர்களுடைய வேலை. அவர்களுடைய கணக்கு ஏழைகள், ஏழை நாடுகள். அவ்வளவுதான். பாலித் தீவிற்குப் போயிருந்த போது தெரிய வந்தது. http://rapidshare.com/files/254436672/Tropix_DL.exe எனும் தளத்திற்குப் போய் Free User என்பதைச் சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள் ளுங்கள். இதைத் தயாரித்தவர்கள் செலவு செய்தது இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவர்களுக்கு கிடைத்த வருமானம் 36 மில்லியன் டாலர்கள். 1800 மடங்கு பணம் பார்த்து விட்டார்கள். இப்பொழுது இலவசமாகக் கிடைக்கிறது.

ஆர்.ஜெகநாதன், சிம்பாங் அம்பாட், தைப்பிங்
கே: Computer எனும் சொல் எப்படி உருவானது? அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா?

ப:
Compute எனும் ஆங்கிலச் சொல்லில் இருந்து பிறந்ததுதான் Computer எனும் சொல். Compute என்றால் கணக்கிடுதல் என்று பொருள். அந்தச்
சொல்லில் இருந்து வந்ததைத் தமிழில் கணினி என்கிறோம்.

கணினி என்பது தூய்மையான தமிழ்ச் சொல். இந்தக் 'கம்பியூட்டர்' எனும் சொல்லுக்கு வேறு மாதிரியாகவும் விளக்கம் கொடுக்கிறர்கள். Computer எனும் சொல்லின் ஒவ்வோர் எழுத்தையும் பிரித்து அதற்கு விளக்கம் இப்படித் தரப் படுகிறது. 
Commonly Operated Machine Particularly Used for The Education and Research.

பொ.செல்லத்தேவன், பத்துக்கேவ்ஸ், கோலாலம்பூர்
கே: 16 Bit, 32 Bit, 64 Bit Operating System என்கிறார்களே அப்படி என்றால் என்ன? எதை வைத்து இந்த எண்களைக் கணக்கிட்டுச் சொல்கிறார்கள்?
ப: Operating System என்றால் ஒரு கணினியை இயக்குகின்ற முறைமை. கணினியை இயக்குவதற்கு பல நிரலிகள் இருக்கலாம். இருந்தாலும் ஆகப் பெரிய இயக்க முறைமைக்குத் தான் Operating System என்று பெயர். Windows Operating System அவற்றுள் ஒன்று. இந்த இயக்க முறைமைதான் ஒரு கணினியைச் செயல் பட வைக்கும் தலையாய இயக்கம். சுருக்கமாகத் தமிழில் இயங்குதளம் என்கிறோம்.

இந்த இயக்க முறைமை இல்லை என்றால் கணினி இயங்காது. இந்த இயக்க முறைமையில் ஒரு குறிப்பிட்ட கால அளவில் எவ்வளவு தகவல்கள் பரிமாறப் படுகின்றன அல்லது எவ்வளவு வேகத்தில் அலசப் படுகின்றன என்பதை இந்த 16, 32, 64 எண்கள் குறிக்கின்றன.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் வந்த கணினிகள் 16 Bit அளவில் இயங்கின. பத்து வருடங்களுக்கு முன்னால் வந்தவை 32 Bit அளவில் இயங்கின. இப்போது வரும் கணினிகள் 64 Bit அளவில் இயங்குகின்றன. கண்ணை மூடிக் கண்ணைத் திறப்பதற்குள் ஒரு மில்லியன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் ஆற்றலை இப்போது வரும் கணினிகள் பெற்று உள்ளன. நிரலி என்பது வேறு. கணினி இயக்க முறைமை என்பது வேறு.

வி.எஸ்.வி.வெங்கடாசலம்  <venkatnelah@gmail.com>கே: சார், என்னுடைய கைப்பேசியில் (Handphone) ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன்படுத்த ஆசைப் படுகிறேன். இணையத்திலிருந்து அந்த அகராதியைப் பதிவிறக்கம் செய்து கைப்பேசியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கைப்பேசியில் தான், கணினியில் அல்ல. என் நண்பர் சொல்கிறார். கணினியைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியும், கைப்பேசி விஷயங்கள் அதிகம் தெரியாது என்று. உங்களால் முடியும் என்று நான் பந்தயம் கட்டி இருக்கிறேன். உங்கள் திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது சார்?
ப:
கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகராதியைப் பயன் படுத்த முடியும். அது ஒன்றும் பெரிய வர்ம சாஸ்திரம் அல்ல. இந்த மாதிரியான சின்ன
விஷயங்களுக்கு எல்லாம் பந்தயம் கட்ட வேண்டாம். ஆரோக்கியம் அல்ல.

http://www.freelang.net/dictionary/tamil.php எனும் இணையத்தளத்திற்குப் போங்கள். ரமேஷ் கௌரி ராகவன் என்பவர் ஓர் அருமையான செயலியை உருவாக்கிக் கொடுத் திருக்கிறார். அவருக்கு முதலில் நன்றி சொல்வோம்.

இந்த அகராதியைக் கணினிக்குள் பதிவிறக்கம் செய்து
கொள்ளுங்கள். அப்புறம் கைப்பேசிக்குள் பதிவேற்றம் செய்யலாம். அதன் பின்னர் உங்கள் கைப்பேசியில் ஆங்கில-தமிழ் அகர வரிசை புன்னகை பூக்கும்.

சில கைப்பேசிகளில் அந்த அகர வரிசையை 3GP முறைமைக்கு மாற்ற வேண்டிய நிலைமை ஏற்படலாம். 2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.

பிரச்னை இருந்தால் மின்னஞ்சல் செய்யுங்கள். மிகவும் சிரமமாக இருந்தால் என் கைப்பேசி 012-5838717 க்கு அழைக்கலாம். தமிழ் எழுத்துருகள் (Fonts), விளையாட்டுகள், ஆவணங்கள் என்று நிறைய இலவசமாகக் கொடுக்கிறார்கள். இணையத்தில் இலட்சக்கணக்கானவர் தமிழுக்காகப் பல வகைகளில் உதவி செய்கிறார்கள்.

சிவனேஸ் ஈஸ்வரி sivanes1526@gmail.comகே: சார், வணக்கம். இணையத்தின் மூலமாக வேலை செய்வது பற்றி இன்று காலை கைப்பேசியில் பேசினேன். அதற்கு நீங்களும் உங்கள் மகன் ஸ்ரீ முருகமுதன் அவர்களும் நல்ல பதில்களைக் கொடுத்தீர்கள். நன்றி. Yayasan Kemajuan Sosial Malaysia எனும் அற நிறுவனத்தில் சில மாதங்கள் Tele Working பற்றி படித்தேன். சொந்தமாக வேலையைத் தேடிக் கொள்ளுமாறு சொல்லிவிட்டார்கள். இணையத்தில் வேலைத் தேடி தரும் நிறுவனங்கள் எத்தனையோ உள்ளன. இருந்தாலும் இவை உண்மையானவையா அல்லது போலியானவையா என்று தெரியவில்லை. நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து உதவி செய்யுங்கள்.
ப:
நீங்கள் இந்தக் கேள்வியை கேட்டு சில வாரங்களாகி விட்டன. Tele Working என்பதை தொலைநிலைப் பணி என்று தமிழில் சொல்லலாம்
அல்லது இணைய வழி வேலை என்றும் சொல்லலாம். இப்போது உலகமே பொருளாதார வகையில் ஒரு மந்தமான நிலையில் இருக்கிறது.

மலேசியப் பிரதமரிடம் பல்கலைக்கழகப் படிப்பு உதவி பெறும் குமாரி.காஞ்சனா


உலகமே அமெரிக்க டாலரைச் சார்ந்து இருப்பதால் ஏற்படும் ஒரு இக்கட்டான நிலைமை. எல்லாம் ஜார்ஜ் புஷ் முன்பு பண்ணிய வேலை. ஒரு சில மாதங்கள் பொறுத்து தொலைநிலைப் பணிகளில் ஈடுபடுவது நல்லது என்று நான் நினக்கிறேன். இருப்பினும்

http://www.typeinternational.com/
http://www.online-dataentry.com/
http://my.88db.com/


எனும் இடங்களுக்குப் போய் முயற்சி செய்து பாருங்கள். உறுதியாக எதையும் சொல்ல முடியாது. உங்களுடைய முயற்சிக்குப் பாராட்டுகள்.

4 கருத்துகள்:

  1. பயனுள்ள தகவல்கள்

    ♫நன்றி♫

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா21/12/10, PM 12:44

    sir howw rr uu?i hope sir in great health.sir i want the good and free photoshop?can sir help me.please,please.sir ur social work is very very helpful to now generation,soo please continue ur social work to a great future indian society.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா21/12/10, PM 12:45

    sir howw rr uu?i hope sir in great health.sir i want the good and free photoshop?can sir help me.please,please.sir ur social work is very very helpful to now generation,soo please continue ur social work to a great future indian society.

    பதிலளிநீக்கு