21 நவம்பர் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 78

(இந்தக் கேள்வி பதில் அங்கம் இன்று 21.11.2010 மலேசிய நண்பன் நாளிதழில் வெளிவந்தது)

எம்.அன்பரசன், ஈப்போ (குறும் செய்தி 22.09.2010)
கே: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணி புரிகிறேன். என் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் கணினியைப் பயன் படுத்துகிறேன். திடீரென்று கடவுச் சொல்லை மறந்து விட்டேன். கடவுச் சொல் எதுவும் கொடுக்காமல் எந்த ஒரு கணினியிலும் நுழைய முடியும் என்கிற இரகசியம் உங்களுக்குத் தெரியும் என்று என் நண்பர் சொல்லி இருக்கிறார். எப்படி என்பதை என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். தயவு செய்து உதவி செய்யுங்கள். ரொம்ப அவசரம் சார்.

ப: உங்கள் அவசரம் புரிகிறது சார். உதவி செய்வதில் தப்பு இல்லை. இருந்தாலும் நேற்று வரை ஞாபகத்தில் இருந்த கடவுச் சொல் எப்படி பொழுது விடிந்ததும் மறந்து போகும்.

அந்த அளவுக்கு ஞாபக மறதி வரக் கூடாது பாருங்கள் சார். அதுவும் ஓர் அலுவலகத்தில் ஒரு முக்கியமான பதவியில் இருக்கிறீர்கள். இன்றைக்கு ஓர் இம்மிக் கடவுச் சொல்லை மறக்கின்றீர்கள். நாளைக்கு உங்கள் மனைவி மக்களை மறக்க் மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்.

தப்பாக நினைக்க வேண்டாம். உங்கள் அலுவலகத்தில் பணி புரியும் மற்றவர்களின் கணினிகளுக்குள் நுழைவதற்கு நீங்கள் ஒரு மகாபெரும் திட்டத்தில் இறங்கி இருக்கலாம் என்று என் உள் மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறது.

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா
(குறும் செய்தி 14.08.2010)
கே: சார், என்னுடைய பேரக் குழந்தைகளுக்கு கணினி விளையாட்டுகள் என்றால் ரொம்ப பிடிக்கும். எத்தனை சி.டிக்கள் வாங்கினாலும் புதுமையானதாகக் கேட்கிறார்கள். குழந்தைகள் பயன் படுத்தக் கூடியவையாக இருக்க வேண்டியது என்பது முக்கியம். இதன் வழி பல பெற்றோர்கள் நன்மை அடைய முடியும். அதனால், உங்கள் உதவியைக் கேட்கிறேன்.

ப: குழந்தை களுக்கு இலவசமாக விளையாட்டுகளைக் கொடுக்கும் இளையத் தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. சில இணையத்தளங்களின் முகவரிகளைத் தருகிறேன்.

இலவசம் என்பதால் கண்ட கண்ட விளையாட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவற்றில் நல்லவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

www.mininova.org
http://sharereactor.com
www.brothersoft.com


கீழே காணும் இணைய முகவரியில்  மீன் பிடிப்பது சம்பந்தமான ஒரு விளையாட்டு இருக்கிறது. அருமையான விளையாட்டு. என்னுடைய இணைய வலைக்குச் சென்றால் நேரடியாக அங்கே இருந்து தொடர்பு கிடைக்கும்.

http://hotfile.com/dl/77042994/8e8ed12/Angeln_Simulation_Portable.rar.html

இன்னொரு விளையாட்டு

http://hotfile.com/dl/81844005/533b271/B17_Gunner.rar.html
எனும் இடத்தில் இருக்கிறது. இது போர் விமானத்தில் பறந்தவாறு எதிரிகளின் விமானங்களைச் சுடும் விளையாட்டு. Regular Download என்பதைச் சொடுக்கி விட்டு ஒரு நிமிடம் காத்திருங்கள். பதிவிறக்கம் செய்ய சிரமம் என்றால் என் இணையத் தளத்திற்குச் சென்றால் சுலபமாக இருக்கும்.

சந்திரலேகா த/பெ சந்திரமோகன், தைப்பிங்
கே: நான் ஒரு தமிழ்ப் பள்ளியில் படிவம் ஆறு படிக்கும் மாணவி. உங்களுடைய கேள்வி பதில்களை வாரம் தவறாமல் படித்து வருகிறேன். கணினியில் ஓர் அளவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய வேண்டும். எனக்கு தமிழ்-ஆங்கில மின் அகராதி வேண்டும். கணினியில் பதித்துக் கொண்டு பாடங்களைச் செய்யலாம்.

ப: அன்புள்ள சந்திரலேகா, உங்களுடைய நீண்ட மின்னஞ்சல் கடிதம் என் மனதைத் தொட்டு விட்டது. கடிதத்தைத் தமிழிலேயே பிழை இல்லாமல் தட்டச்சும் செய்து இருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய கணினித் திறமை மென்மேலும் சிறந்து விளங்க என்னுடைய வாழ்த்துக்கள்.

உங்களுக்காக ஒரு தமிழ்-ஆங்கில மின் அகராதியைத் தேர்வு செய்து உள்ளேன். கீழ்காணும் இடத்தில் அந்த மின் அகராதி இலவசமாகக் கிடைக்கிறது. போய் பதிவு இறக்கம் செய்து கொள்ளுங்கள்.

http://mayuonline.com/eblog/2009/02/14/download-free-pals-tamil-e-dictionary/

எதுவும் பிரச்னை என்றால் என்னுடைய அலைபேசிக்கு அழையுங்கள்.

ரகுநாதன், பெட்டாலிங் ஜெயா
கே: தமிழில் Key Board மென்பொருள் மலாக்காவில் எங்கே கிடைக்கும்?

ப: கோலாலம்பூரில் கூட கிடைக்காது என்று நினைக்கிறேன். மலாக்காவில் கிடைக்குமா என்று தெரியவில்லை. விசாரித்துப் பாருங்கள். இன்னும் ஒரு விஷயம். இப்போது தமிழில் கணினித் தட்டச்சு பலகை வெளி வருவது மிகவும் இல்லை.

ஏனென்றால், இப்போது வரும் கணினிகள் மிகவும் நவீனமாகி விட்டன. Phonetics எனும் 'ஒலியியல் முறை'யைப் பயன் படுத்தித் தமிழில் தட்டச்சு செய்யலாம். அஞ்சல் முரசை எப்படி பயன் படுத்துகிறீர்களோ அதே மாதிரி.

தனியாகத் தமிழ்த் தட்டச்சுப் பலகையை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது வருபவை எல்லாம் Phonetic Key Boards எனும் 'ஒலியியல் விசைப் பலகைகள்' ஆகும்.

http://www.brothersoft.com/tamil-keyboard-54576.html

எனும் இடத்தில் மின் தமிழ் தட்டச்சுப் பலகையை இலவசமாகக் கொடுக்கிறார்கள். இது ஒரு On Screen Keyboard.

அப்படி என்றால்  தட்டச்சுப் பலகை கணினியில் தெரியும் என்று அர்த்தம்.  தமிழில் 'திரை விசைப் பலகை'  என்று சொல்லலாம். அது சரி. பெட்டாலிங் ஜெயாவில் இருந்து கொண்டு ஏன் மலாக்காவில் கிடைக்குமா என்று கேட்கிறீர்கள்.

வெங்கடாசலம் <vengada.salam@yahoo.com>
கே: PDF கோப்புகளை Doc கோப்புகளாக மாற்ற ஏதாவது நிரலி இலவசமாகக் கிடைக்குமா?

ப: PDF என்றால் Portable Document Format. தமிழில் தளம் சாரா ஆவண முறைமைக் கோப்பு என்று அழைக்கலாம். ஒரு கணினியில் உள்ள சில ஆவணங்களைப் படங்களாக மாற்றி அடுத்த கணினியில் பயன் படுத்தும் முறைமைக்குப் பெயர் தான் பி.டி.எப். முறைமை.

வேறு எந்தக் கணினியிலும் அந்த ஆவணம் படத் தொகுப்பாகத் தான் தெரியும். இந்த முறைமையில் உள்ள ஆவணங்களை வேறு ஒரு முறைமைக்கும் மாற்றலாம். அதாவது Document, HTML, Power Point போன்ற முறைமைகளுக்கு மாற்ற முடியும்.

அப்படி மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்று தனியாக ஒரு சிறப்பு நிரல் தேவை. இந்த நிரலிகளை ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கிறார்கள். இருந்தாலும்

http://www.tukanas.com/softwares/filesconverter.exe


எனும் இடத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.


முகமது அப்துல்லா <m.abdullah36@yahoo.co.in>
கே: நம்முடைய கைப்பேசியில் உள்ள பேட்டரி தீர்ந்து விடுகிறது. அவசரமாக ஒருவரை அழைக்க வேண்டும். பேட்டரி சார்ஜர் கைவசம் இல்லாத போது என்ன செய்வது?

ப: கைப்பேசியின் மின்கலத்திற்கு புது ஊட்டம் (Recharge) செய்ய மறந்து போய் வெளி இடங்களுக்குச் செல்வது பலருக்கு வாடிக்கையான விஷயம். அந்த மாதிரியான கட்டத்தில் பேட்டரி எல்லாம் தீர்ந்து போய் கைப்பேசியே சொந்தமாக அணைத்துக் கொள்ளும் நிலைமை கூட வரலாம்.

இந்த இக்கட்டான நேரத்தில் *3370# எனும் எண்களைச் சொடுக்கி விடுங்கள். ஒரு சில விநாடிகளில் உங்கள் மினகலத்தின் சக்தி 50 விழுக்காடு அதிகரித்து நிற்கும்.

அப்புறம் நீங்கள் ஒரு பத்து பதினைந்து அழைப்புகள் வரை அழைக்க முடியும். சரியா. இந்த சூட்சமம் நோக்கியா கைப்பேசிகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும்.

சுரேஜ் தேவ்  <h2_o@rocketmail.com>
கே: கணினியை அடிக்கடி On, Off செய்வதால் அதன் ஆயுள் காலம் குறையும் என்று சொல்கிறார்கள். உண்மையா?


ப: கணினியை On செய்வது என்றால் மின்சாரப் பொத்தானைச் சொடுக்கி அதற்கு மின்சாரம் கொடுப்பது. Off  என்றால் கணினிக்குச் செல்லும் மின்சாரத்தைத் துண்டித்து விடுவது.

இதைப் பற்றி சென்னையில் இருக்கும் கணினி அறிஞர்கள் சிலரிடம் இதைப் பற்றி விசாரித்தேன். அவர்களிடம் இரண்டு விதமான கருத்து கள் உள்ளன.

ஒவ்வொரு முறையும் கணினிக்கு மின் இணைப்பைக் கொடுக்கும் போது அதற்கு Thermal Shock எனும் வெப்ப அதிர்வு ஏற்படுகிறது. நல்ல தூக்கத்தில் இருக்கும் ஒருவரைத் திடீரென்று அடித்துத் தட்டி எழுப்பினால் எப்படி இருக்கும். அந்த மாதிரியான கதைதான் இங்கேயும்.

அதனால் கணினிக்குள் இருக்கும் தாய்ப் பலகையின் சிப்புகள் கெட்டுப் போகலாம். Hard Disk எனும் வன் தட்டு மின் அதிர்வால் கெட்டுப் போகலாம். இது ஒரு சில அறிஞர்களின் கருத்து.

இன்னொரு தரப்பினர் இப்படி சொல்கிறார்கள். கணினியின் மின் இணைப்பை நிறுத்தாமல் விட்டால் வன் தட்டு சுழன்று கொண்டே இருக்கும். அதனால் வன் தட்டு கெட்டுப் போக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். சரி.

என்னுடைய கருத்து இது தான். அடுத்த இரண்டு மூன்று மணி நேரத்திற்கு கணினியில் வேலை எதுவும் இல்லை என்றால் கணினியை அடைத்து விடுவது நல்லது.

இன்னும் ஒரு மணி நேரத்தில் வேலை இருக்கிறது என்றால் கணினியை அடைக்க வேண்டாம். Monitor எனும் கணினித் திரையை மட்டும் அடைத்து விடுங்கள்.

2 கருத்துகள்: