யோக்ஜாகர்த்தா சுல்தானகம் (Yogyakarta Sultanate) 1755-ஆம் ஆண்டில் இருந்து 1945-ஆம் ஆண்டு வரை இந்தோனேசியா, ஜாவா தீவை ஆட்சி செய்த ஒரு முடியாட்சி. அரண்மனைச் சபையில் இந்திய ஜாவானிய பெண்களின் நாட்டியங்கள் நடைபெறுவது வழக்கம். (Ooi, Keat Gin - 2004)
யோக்ஜாகர்த்தா சுல்தானகத்தை கெரத்தோன் நாகயோகயாகெர்தோ ஹாடினிங்கிராத் (Keraton Ngayogyakerto Hadiningrat) என்று ஜாவானிய மொழியில் அழைத்தார்கள். 1945-ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்களின் ஆட்சியில் இருந்தது. இந்தோனேசியா சுதந்திரம் பெற்றதும் இந்தோனேசியக் குடியரசில் ஒரு மாநிலப் பகுதியாக இணைந்தது. (Kahin, Audrey - 2015)
யோக்ஜாகர்த்தா சுல்தானகம் முன்பு காலத்தில் மத்தாராம் பேரரசின் (Mataram) ஒரு பகுதியாக இருந்தது. மத்தாராம் பேரரசு ஒரு ஜாவானிய இந்து பௌத்தம் கலந்த (Javanese Hindu–Buddhist) பேரரசு. அந்தப் பேரரசை மேடாங் பேரரசு (Medang Kingdom) என்றும் அழைத்தார்கள்.
கி.பி. 850-ஆம் ஆண்டுகளில் மேடாங் பேரரசு இரு அரசுகளாகப் பிரிக்கப் பட்டது. ஜாவாவில் ஓர் அரசு. ராக்காய் பிக்காதான் (Rakai Pikatan) என்பவரின் தலைமையிலான ஓர் அரசு. இது சிவ வழிப்பாட்டு அரசு (Shivaist Buddhist dynastyynasty). மேடாங் அரசு என்று அழைக்கப்பட்டது. இந்த அரசுதான் பிரம்பனான் ஆலயத்தை கட்டியது.
மற்றொன்று சுமத்திராவில் பாலபுத்ரதேவா (Balaputradewa) என்பவரின் தலைமையிலான ஸ்ரீ விஜய புத்த வழிபாட்டு அரசு (Srivijaya Buddhist Buddhist Buddhist dynastyynasty). இரண்டுமே சக்தி வாய்ந்த அரசுகள்.
இவற்றில் ஜாவா மேடாங் அரசின் வழித்தோன்றல் தான் ஜொக்ஜாகர்த்தா சுல்தானகம். சமயம் மாறினாலும் பாரம்பரிய நடனங்கள்; கலாசாரப் பின்னணிகளில் இந்து மதத்தின் தாக்கங்கள் இருந்தன.
பெரும்பாலான நாட்டியப் பெண்கள் பொட்டு வைத்து நாட்டியம் ஆடுவது வழக்கம். அரசவையில் பதின்ம வயது சிறுமிகளின் நாட்டியங்கள் அடிக்கடி நடைபெற்றன. 1863-ஆம் ஆண்டு யோக்ஜாகர்த்தா சுல்தானகத்தைச் சேர்ந்த நாட்டியச் சிறுமிகளின் படத்தைப் பார்க்கிறீர்கள்.
படத்தை எடுத்தவர் ஐசிடோர் வான் கின்ஸ்பெர்கன் (Isidore van Kinsbergen). டச்சுக்காரர். Photographer: Isidore van Kinsbergen (1821–1905)
Permission details: This media file originates from the image database media-kitlv.nl of the Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies (KITLV). Date: 1863
Sources:
1. Dancers of the sultan in Jogjakarta, Leiden University Library, Royal Netherlands Institute of Southeast Asian and Caribbean Studies. Isidore van Kinsbergen - KITLV, image 408103 Collection page Southeast Asian & Caribbean Images (KITLV)
2. https://artsearch.nga.gov.au/detail.cfm?irn=191641
3. Ooi, Keat Gin (2004). Southeast Asia.[Volume two, H-Q]. [Volume one, A-G] : a historical encyclopedia from Angkor Wat to East Timor.
4. Kahin, Audrey (2015). Historical dictionary of Indonesia. Lanham : Rowman & Littlefield.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக