பெண்கள் ஆண்களுக்கு இறைவன் அருளிய அழகிய சீதனங்கள். குடும்பம் எனும் குளத்தில், அந்தச் சீதனங்கள் ஒளிரும் வரையில் அந்தக் குளத்திற்கும் அழகு. அந்தச் சீதனத்திற்கும் அழகு.
ஒரு வீட்டில் ஒரு பெண் துலங்குகிறாள் என்றால் அங்கே ஒரு மரியாதை ஏற்படுகிறது. மதிப்பு உண்டாகிறது. பெருமையும் மலர்கிறது.
பெண் இருக்கும் வரையில் ஓர் ஆணுக்குப் பெருமை. அவள் இல்லை என்றால் அந்த ஆணின் வாழ்க்கை பொலிவு குன்றுகிறது. சுவையும் குன்றுகிறது.
அவளைச் சுகமான பொருளாகப் பார்க்காமல் ஒரு தேவதையின் அவதாரமாகப் பார்ப்போம். வாழ்வியல் யுகத்திற்கான வரப்பிரசாதமாய்ப் பார்ப்போம். அந்த அழகு ஜீவன்களில் சில அசடுகளும் முசுடுகளும் இருக்கவே செய்யும். களைய முயற்சி செய்வோம்.
பெண்கள் வாழும் இல்லத்தை ஒரு கோயிலுக்கு உவமானமாகச் சொல்வது தமிழர்களின் பாரம்பரிய வழக்கம்.
உற்றார் மற்றார் மதிப்பு குறைந்தும் போகலாம். அக்கம் பக்கத்தார் பார்வையும் வாடிப் போகலாம்.
இந்த நாளிலும் எந்த நாளிலும் மனுக்குலத்தின் அந்த அழகுச் சீதனங்களைப் போற்றுவோம். பெருமைப் படுவோம். கைக்கூப்புவோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நன்றி.
(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
14.11.2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக