30 செப்டம்பர் 2021

கோலா சிலாங்கூர் கெம்சி தோட்டம் - 1882

கோலா சிலாங்கூர் கெம்சி தோட்டம் (Kempsey Estate Kuala Selangor), கோலா சிலாங்கூர் நகரில் இருந்து எட்டு மைல் தொலைவில் உள்ளது. 1882-ஆம் ஆண்டில் உருவான தோட்டம். அப்போது அந்தத் தோடத்தின் பரப்பளவு 640 ஏக்கர். அந்தத் தோடத்தில் முதலில் ரப்பர் பயிர் செய்யப்படவில்லை.

435 ஏக்கரில் காபி; மிளகு; தென்னை பயிர் செய்யப் பட்டது. 1899-ஆம் ஆண்டில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது. இலங்கையைச் சேர்ந்த Rubber Growers' Company, Ltd. Ceylon எனும் கம்பெனியிடம் இருந்து ரூபாய் 500,000 மூலதனத்தில் இந்தத் தோட்டம் வாங்கப் பட்டது.   

Kempsey Estate was established in 1882. The plantation is about eight miles from Kuala Selangor. The area of ​​the Kempsey estate is 640 acres. Coffee planted in 435 acres; Pepper; Coconut also cultivated. However, it was only in 1899 rubber was grown. The estate previously owned by Rubber Growers' Company, Ltd., floated in Ceylon with a capital of Rs. 500,000.

நீங்கள் பார்க்கும் இந்தப் படம் 1912-ஆம் ஆண்டு அதே கோலா சிலாங்கூர் கெம்சி தோட்டத்தில் எடுக்கப் பட்டது. படத்தில் ஐவரில் ஒருவர் கங்காணி. மற்ற நால்வரில் ஒருவர் இளம் பெண்மணி. மற்ற நால்வரும் ஆண்கள். அனைவருக்கும் 25 - 35 வயது.

This picture shown was taken in 1912 at Kuala Selangor Kempsey Estate. One of the five in the picture is caretaker Kangani. One was a young woman. The other four were men. All were 25 - 35 years old.

1912 ஆம் ஆண்டு ஜெக்குவஸ் ஹூபர் (Jacques Huber) எனும் சுவிஸ் நாட்டு ஆய்வாளர் மலாயா ரப்பர் ஆய்வுப் பணிகளுக்காகச் சிலாங்கூர் வந்தார். கெம்சி தோட்டத்திற்கும் போய் இருக்கிறார். அப்போது அவர் எடுத்த படங்கள். அவை இப்போது பிரேசில் பாரானெஸ் அருங்காட்சியகத்தில் (Museu Paraense) உள்ளன.

In 1912, the Swiss researcher Jacques Huber came to the Kempsey estate. The picture he took at the time is now on display at the Museu Paraense in Brazil. The Museu Paraense Emílio Goeldi is a Brazilian research institution and museum located in the city of Belem, state of Para, Brazil

1900-ஆம் ஆண்டுகளில் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தமிழர்கள் பால் தோம்புகளைத் தலையில் சுமந்து சென்றார்கள். பெண்மணி வைத்து இருக்கும் பெரிய பானையிலும் மரத்திற்கு மரம் சென்று பால் சேகரித்தார்கள்.

In the 1900s, Tamils ​​who worked in rubber plantations carried latex containers on their heads. The woman collected latex in a large pot as per shown in picture.

கெம்சி காபி தோட்டத்தில் வேலை செய்வதற்காக 1880-ஆம் ஆண்டில் 50 தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். காடுகளைச் சுத்தம் செய்வதற்காக ஜாவாவில் இருந்து 15 ஜாவானியர்கள் வரவழைக்கப் பட்டார்கள். பின்னர் அவர்கள் ரப்பர் தோட்டங்களில் இணைத்துக் கொள்ளப் பட்டார்கள்.

In the 1880s, 50 Tamils ​​were brought to work in the Kempsey Coffee Estate. 15 Javanese from Java were summoned to clear the forest. They were then incorporated into rubber plantations.

கெம்சி தோட்டத்தில் 1906-ஆம் ஆண்டு 4500 பவுண்டு ரப்பர்; 1907-ஆம் ஆண்டு 7000 பவுண்டு ரப்பர் விளைச்சல். அத்துடன் 3000 டின் காபி கொட்டைகள் அறுவடை செய்யப் பட்டன.

The yield at Kempsey Estate is 4500 pound rubber in 1906; 7000 pounds in 1907. Plus 3000 tins of coffee nuts harvested there.

அந்தத் தோட்டத்தில் நான்கு தொழிலாளர் லயன்கள்; ஒரு சேமிப்புக் கிடங்கு; ஒரு நிர்வாகி பங்களா இருந்தன. நிர்வாகியாக முரே (J. Murray) என்பவர் இருந்தார். இவர் இலங்கையில் பிறந்த ஆங்கிலேயர்.

They were four sets of workers lines; a storage warehouse; a manager's bungalow at the estate during that period. The manager was J. Murray. He was born in Sri Lanka.

கெம்சி தோட்டத்திற்கு அருகில் இருந்த தோட்டங்கள்

1. ஜானி தோட்டம் (Jany Estate)
2. கோலாசிலாங்கூர் தோட்டம் (Kuala Selangor Estate)
3. லிண்டோர்ஸ் தோட்டம் (Lindores Estate)
4. சாலிமார் தோட்டம் (Shalimar Estate)
5. ராஜகிரி தோட்டம் (Raja Ghiri Estate)
6. கம்போங் பாரு தோட்டம் (Kampong Baharu Estate)
7. கம்போங் குவாத்தான் தோட்டம் (Kampong Kuatan Estate)
8. சுங்கை சிலாங்கூர் தோட்டம் (Sungai Selangor Estate)
9. மோன்மவுத் தோட்டம் (Monmouth Estate)
10. தஞ்சோங் பாசிர் தோட்டம் (Tanjong Pasir Estate)
11. ரோஸ்வல் தோட்டம் (Rosevale Estate)
12. சுங்கை ரம்பாய் தோட்டம் (Sungai Rambai Estate)
13. கமாசான் தோட்டம் (Kamasan Estate)
14. அசாம் ஜாவா தோட்டம் (Asam Jawa Estate)

Estates around Kempsey Estate:

1. Jany Estate
2. Kuala Selangor Estate
3. Lindores Estate
4. Shalimar Estate
5. Raja Ghiri Estate
6. Kampong Baharu Estate
7. Kampong Kuatan Estate
8. Sungai Selangor Estate
9. Monmouth Estate
10. Tanjong Pasir Estate
11. Rosevale Estate
12. Sungai Rambai Estate
13. Kamasan Estate

In 1912, a Swiss researcher named Jacques Huber came to Selangor for research. He also went to Kempsey Estate. The picture shown taken by him at the time. This film image is now in the Museu Museum in Brazil.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
30.09.2021

சான்றுகள்:

1. Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources; Wright, Arnold; New York: Cornell University Library 1908;
 
2. Kempsey Estate - http://ofa.arkib.gov.my/ofa/group/asset/2035723

3.http://reader.library.cornell.edu/docviewer/digital?id=sea:233#page/426/mode/1up

4. Extract from Seaports of India and Ceylon, By Allister Macmillan


===
*Translated in English*
*Kempsey Estate Kuala Selangor - 1882*

The Kempsey Estate Kuala Selangor was established in 1882. The plantation is about eight miles from Kuala Selangor. The area of ​​the Kempsey estate is 640 acres. Coffee planted in 435 acres; Pepper; Coconut also cultivated. However, it was only in 1899 that rubber was grown. The estate previously owned by Rubber Growers' Company, Ltd., floated in Ceylon with a capital of Rs. 500,000.

This picture shown was taken in 1912 at Kuala Selangor Kempsey Estate. One of the five in the picture is caretaker Kangani. One of the other five was a young woman. The other four were men. Everyone was 25 - 35 years old.

In 1912, the Swiss researcher Jacques Huber came to the Kempsey estate. The picture he took at the time is now on display at the Museu Paraense in Brazil.

In the 1900s, Tamils ​​who worked in rubber plantations carried latex containers on their heads. The woman collected latex in a large pot as per shown in picture.

In the 1880s, 50 Tamils ​​were brought to work in the Kempsey Coffee Estate. 15 Javanese from Java were summoned to clear the forest. They were then incorporated into rubber plantations.

The yield at Kempsey Estate is 4500 pound rubber in 1906; 7000 pounds in 1907. Plus 3000 tins of coffee nuts harvested there.

They were four sets of workers lines; a storage warehouse; a manager's bungalow at the estate during that period. The manager was J. Murray. He was born in Sri Lanka.

Estates around Kempsey Estate

1. Jany Estate
2. Kuala Selangor Estate
3. Lindores Estate
4. Shalimar Estate
5. Raja Ghiri Estate
6. Kampong Baharu Estate
7. Kampong Kuatan Estate
8. Sungai Selangor Estate
9. Monmouth Estate
10. Tanjong Pasir Estate
11. Rosevale Estate
12. Sungai Rambai Estate
13. Kamasan Estate

In 1912, a Swiss researcher named Jacques Huber came to Selangor for research. He also went to Kempsey Estate. The picture shown taken by him at the time. This film image is now in the Museu Museum in Brazil.

Prepared by:
Malacca Muthukrishnan
30.09.2021

===

*Translated in Bahasa Malaysia*
*Kempsey Estate Kuala Selangor - 1882*
Kempsey Estate Kuala Selangor ditubuhkan pada tahun 1882. Ladang ini terletak kira-kira lapan batu dari Kuala Selangor. Kawasan estet Kempsey seluas 640 ekar. Kopi ditanam di kawasan seluas 435 ekar; Lada; Kelapa juga diusahakan. Namun pada tahun 1899 baru getah ditanam. Ladang yang sebelumnya dimiliki oleh Rubber Growers Company, Ltd., di Ceylon dengan modal Rs. 500,000.

Gambar yang ditunjukkan ini diambil pada tahun 1912 di Kuala Selangor Kempsey Estate. Salah satu daripada lima gambar tersebut adalah pengasuh atau mandur Kangani. Salah satu daripada lima orang adalah seorang wanita muda. Empat yang lain adalah lelaki. Semua orang berumur 25 - 35 tahun.

Pada tahun 1912, penyelidik Switzerland Jacques Huber datang ke ladang Kempsey. Gambar yang diambilnya sekarang dipamerkan di Museu Paraense di Brazil.

Pada tahun 1900-an, orang Tamil yang bekerja di ladang getah membawa baldi getah di atas kepala mereka. Wanita mengumpulkan susu getah dalam periuk besar seperti yang ditunjukkan dalam gambar.

Pada tahun 1880-an, 50 orang Tamil dibawa bekerja di Kempsey Coffee Estate. 15 orang Jawa dari Jawa dipanggil untuk membersihkan hutan. Mereka kemudian dimasukkan ke ladang getah.

Hasil di Kempsey Estate ialah getah 4500 paun pada tahun 1906; 7000 paun pada tahun 1907. Ditambah 3000 tin kacang kopi yang dituai di sana.

Tempat tinggal pekerja adalah empat teres; satu gudang simpanan; satu banglo pengurus di estet dalam masa tersebut. Pengurusnya ialah J. Murray. Dia dilahirkan di Sri Lanka.

Estet di sekitar Kempsey Estate

1. Jany Estate
2. Ladang Kuala Selangor
3. Ladang Lindores
4. Kawasan Shalimar
5. Ladang Raja Ghiri
6. Ladang Kampong Baharu
7. Ladang Kampong Kuatan
8. Ladang Sungai Selangor
9. Ladang Monmouth
10. Ladang Tanjong Pasir
11. Ladang Rosevale
12. Ladang Sungai Rambai
13. Ladang Kamasan

Pada tahun 1912, seorang penyelidik Switzerland bernama Jacques Huber datang ke Selangor untuk penyelidikan. Dia juga pergi ke Kempsey Estate. Gambar yang ditunjukkan diambil olehnya ketika itu. Gambar filem ini kini terdapat di Muzium Museu di Brazil.

Malacca Muthukrishnan
30.09.2021


 

 

19 செப்டம்பர் 2021

அக்கரையில் சினிமா அலப்பறைகள்

தமிழ் மலர் - 19.09.2021  

உலகில் ஏழு அதிசயங்கள். அண்மையில் எட்டாவது அதிசயம். ஒரு சினிமா நடிகருக்கு கட் அவுட் வைத்து; ஆடுவெட்டி அபிசேகம் செய்த அதிசயம். உலகிலேயே இப்படி ஓர் அதிசயம் வேறு எங்கும் நடந்ததாகச் சரித்திரமே இல்லை. தமிழ்நாட்டில் நடந்து இருக்கிறது. தமிழ் மண்ணின் அதிசயம் அல்ல. ஓர் உலக அதிசயம்.  

ஏற்கனவே ஓர் அதிசயம் நடந்தது. ஒரு நடிகைக்கு கோயில் கட்டி, பவளமாலை கட்டி, பட்டுச் சேலை உடுத்தி, நாலு வேலைக்கு மணி அடித்து, நாலு பேருக்கு அன்னதானம் பண்ணி; புனர் புஷ்காரம் செய்து; கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்கள். அது ஒரு வழியாக அடங்கிப் போனது. இப்போது வேதாளம் மறுபடியும் முருங்கைமரம் ஏறி இருக்கிறது.


ஆடு செத்தால் மனுசன் தின்றான். தப்பு இல்லை. மாடு செத்தால் மனுசன் தின்றான். தப்பு இல்லை. தோல் அறுத்து மேளம் கட்டினான். தப்பு இல்லை. மூக்குப் பிடிக்கத் தின்றுவிட்டு அட்ரா அட்ரா நாக்க மூக்கு பாடினான். தப்பு இல்லை.

ஆனால் அவனே இப்போது சினிமா நடிகர்களுக்கு ஆட்டு இரத்த அபிஷேகம் செய்கிறானே, அதுதாங்க ரொம்பவும் தப்பு. அக்கரையில் சினிமா அலப்பறைகள் இக்கரையில் தாங்க முடியலடா சாமி...

தமிழனைக் காட்டு மிராண்டிகள் என்று ஒரு பெரியவர் முன்பு சொன்னார். சொன்னதில் தப்பே இல்லை. சில ஜென்மங்களின் வெறித் தனமான மடத் தனமான செயல்களை முன்கூட்டியே அந்தப் பெரியவர் கணித்து விட்டார் போலும். அந்தப் பெரியவரைக் கை எடுத்து கும்பிடுகிறேன்.

ரஜினி ஒரு நடிகர். நடிக்கும் நடிப்பிற்காகப் பணம் பெறுகிறார். அவ்வளவு தான். ஒரு பக்கம் ஊழியம். மறுபக்கம் ஊழியத்திற்கு ஊதியம். பவுடர் பூசுவது ஓர் அவதாரம் என்றால் அது பவுடர் பூசுபவர்களின் வாழ்வாதாரம். புரியுதுங்களா. அவர் நடிக்கிறார். சம்பாதிக்கிறார். அவ்வளவுதான்.


ரஜினி நடித்த படங்கள் வெளியாகும் போது எல்லாம், அப்போது பதாகைகளுக்கு கேக் ஊட்டுதல்; பெண்கள் மண்சோறு சாப்பிடுதல்; காவடி எடுத்தல்; பால் குடம் தூக்குதல்; கட் அவுட் பாலாபிஷேகம் செய்தல். தற்போது ஆடு வெட்டி பலி கொடுத்து இரத்த அபிசேகம் செய்து இருக்கிறார்கள்.

இந்த 2021 செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி. அன்றைய தினத்தில் அண்ணாத்த படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் சிலருக்கு மகிழ்ச்சிப் பிரளயம்.

திருச்சியில் ஆடு பலி செய்து ஆர்ப்பாட்டமாய்க் கொண்டாடி உள்ளனர். அதாவது கட் அவுட் முன் ஆட்டை வெட்டி இரத்த அபிசேகம் செய்து உள்ளனர்.

என்னங்க இது. முன்பு எல்லாம் ஐம்பது அடி உயரத்திற்கு போஸ்டர், கட் அவுட் வைத்தார்கள். அவற்றுக்கு கிரேன் வைத்து மாலை போட்டார்கள். அப்புறம் நூறு அடி உயர கட் அவுட் வைத்து, அதில் ஏறி கேக் ஊட்டினார்கள்.


அப்புறம் நூற்றைம்பது அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டுக் குடம் குடமாய்ப் பால் ஊற்றினார்கள். அப்புறம் நூற்று எண்பது அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டு முகத்தில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்தார்கள்.

இப்போது இருநூறு அடி உயரத்திற்கு கட் அவுட் போட்டு, மாலை போட்டு, கீழே ஆட்டை வெட்டி இரத்த அபிசேகம் செய்து இருக்கிறார்கள். வெட்கத் தனமான செயலாகத் தெரியவில்லையா? பைத்தியக்காரச் செயலாகத் தெரியவில்லையா? தலைகுனிய வைக்கும் விசயமாகத் தெரியவில்லையா?

அதே சமயத்தில் திரைப் பிரபலங்கள் சிலர், தங்களின் நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்களாக நாணயமானவர்களாக இருக்கின்றனர். மறந்துவிட வேண்டாம். அவர்களுக்கு எப்போதும் நம்முடைய தனி மரியாதை உண்டு.

கொஞ்ச நாட்களுக்கு முன்னர், தெலுங்கு நடிகர் கிச்சா சுதீப்பு என்பவருக்காக அவரின் ரசிகர்கள், எருமை மாட்டை வெட்டிப் பலி கொடுத்து சாதனை செய்தார்கள். அதற்கு அப்போதே பலத்த எதிர்ப்பு.

அதற்குப் போட்டியாக இப்போது ரஜினிக்காக ஆடு வெட்டி அலப்பறை செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 2.0 எனும் படத்திற்காக ரஜினியின் ரசிகர்கள் ஆடு கோழி பலி கொடுத்தனர்.


பீட்டா விலங்குகள் நல அமைப்பு கண்டனம் (People for the Ethical Treatment of Animals) தெரிவித்து இருந்தது. இவை எல்லாம் அக்கரை சமாசாரங்கள் என்று ஒதுக்கிவிட முடியாது. கடல் காற்றின் சாரல் இங்கேயும் அடிக்கிறது.

இக்கரையைக் கொஞ்சம் பார்க்க வேண்டுமே. ராகங்கள் பதினாறு என்று சொல்வார்கள். இப்போது மலேசியாவில் ஒரு புதிய ராகம் உதயமாகி இருக்கிறது. மலேசிய ஒலிபரப்பு ஊடகத் துறையில் ஒரு வானொலியில் தான் அந்த ராகம்.

ஒரு பாட்டுப் போட்டால் ஒன்பது முறை ‘தலைவா தலைவா’ என்று ஒருதலை ராகம். அடுத்த ஒரு பாடல் போட்டால் ‘தலைவா தலைவா’ என்று இருதலை ராகம். அட கொக்கா மக்கா. அப்புறம் சின்னத் தலைவா ராகங்கள். எங்கே போய் முட்டிக் கொள்வதோ தெரியவில்லை.


மலேசியம் ஒரு வாட்ஸ் அப் சமூகப் புலனம். அதில் சாய் ராஜேந்திரன் என்பவர் ஒரு குரல் பதிவை நேற்றிரவு பதிவு செய்து இருந்தார். ஆழ்மனத்து ஆழ்கருத்துகள் கொண்ட சமயப் பக்தியாளர். பந்தா பகட்டு இல்லாத நல்ல மனிதர். அவர் என்ன சொல்கிறார். நீங்களும் கேளுங்கள்.

‘நம்ப மலேசியில் ஒரு வானொலி இருக்கிறது. பிரபலமான வானொலி. அந்த வானொலியில் அறிவிப்பாளர்களாகச் சேவை செய்பவர்கள் சிலர், ஒரு நடிகரைத் தங்களுடைய தலைவராகக் கொண்டாடுகிறார்கள்.

எந்த வகையில் அந்த நடிகர் ஒரு தலைவர் ஆனார் என்று எனக்குத் தெரியவில்லை. இன்னொருவர் சின்ன தலைவராம். காலையில் தலைவரோட பாட்டைப் போடுகிறோம் என்கிறார்கள்.

தலைவர் எனும் போது நாட்டுக்கு நல்லது செய்த யாரோ ஒரு தலைவர் என்று நினைத்துக் கொண்டேன். கடைசியில் பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான நடிகர்தான் அவர்களின் தலைவராம்.


சினிமா மோகத்தில் பொங்கி வழிகிறது அந்த வானொலி நிலையம். முதலில் இவர்கள் இங்கே அந்த வானொலி நிலைய அறிவிப்பாளர்கள் திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.

எத்தனையோ தடவை சொல்லியாச்சு. கண்டிச்சாச்சு. திரும்பத் திரும்ப நம் மலேசியத் தமிழர்களைத் தவறான ஒரு பாதைக்குக் கொண்டு போகிறார்கள். இவர்கள் தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.  

சாய் இராஜேந்திரனின் கருத்துகளுக்கு சுங்கை சிப்புட் முருகன்; மலாக்கா மலையாண்டி; சித்தியவான் கணேசன்; தனசேகரன் தேவநாதன்; நாகராஜா; கடாரம் தேவிசர; வேலாயுதம்; வெங்கடேசன்; கோலாசிலாங்கூர் ராதா பச்சையப்பன் போன்றோர் ஆதரவு தெரிவித்து உள்ளார்கள்.


அவர்களில் ஒருவர் சுங்கை பூலோ கரு. ராஜா. அவர் ’அந்த நிலையத்தின் நிகழ்ச்சிகளை நான் கேட்பது இல்லை. இப்படி ஒரு வானொலி இயங்குவதை நான் மறந்து விட்டேன். இன்று திரும்பவும் ராஜேந்திரன் நினைவுப் படுத்திவிட்டார்’ என்று சொல்கிறார்.

கோணங்கிகளிடம் வாக்குவாதம் செய்வதில் எந்தப் பிரயோசனமும் கிடையாது என்று நினைக்கிறேன் என மற்றும் ஓர் அன்பர் பதிவு செய்து உள்ளார். சரி.

திரையில் தோன்றி வீரவசனம் பேசுபவரின் பிம்பத்தை உண்மை என்று சிலர் நம்பி விடுகிறார்கள். அவர் மட்டும் அல்ல. பொதுவாகவே ’செலிபிரிட்டி’ மோகம் கொண்டவர்கள் சிலர் ஊடகத் துறைகளில் இருக்கிறார்கள்.


உசுப்பேத்தி ரணகளம் பண்ணுவதற்கு சில ஊடக அல்லக்கைகள் என்று நான் சொல்ல மாட்டேன். தாங்க முடியலடா சாமி.

தமிழர்களைத் தவறான பாதைக்குக் கொண்டு செல்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்ட சாய் இராஜேந்திரன் போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள். நன்றி.

அன்பான வேண்டுகோள். எந்த ஒரு நடிகனையும் எப்படியாவது அர்ச்சனை செய்துவிட்டுப் போங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் பொது ஊடகங்களில் உங்களின் சுய விருப்பங்களை அர்ச்சனை பண்ணாமால் இருப்பதே நியாயம்.
சின்னவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என்று பல இலட்சம் தமிழர்கள் வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கிறார்கள். நினைவில் கொள்ளுங்கள்.


வானொலி ஊடகங்களில் ஒரு சினிமா நடிகரை ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு தடவை உச்சி முகர்ந்து உபநியாசம் செய்வது நல்லது அல்ல. சினிமாத் தலைவர் மோகம் அந்த அறிவிப்பாளருக்குள் மட்டுமே இருக்கட்டும். அதைப் பகிரங்கப் படுத்தி ரசிகர்களை வேதனைப் படுத்த வேண்டாம். ரசிர்களின் சிந்தனைகளில் நல்லதைப் பரப்புங்கள். புண்ணியம் சேரும்.

என்றைக்குமே என்னைச் சீண்டினால் தவிர, தனிமனிதத் தாக்குதலில்  ஈடுபடுவது இல்லை. ஆனால் ஓர் இனத்தையே சீண்டிப் பார்த்தால் சும்மா இருக்க முடியாது. கருத்துக்களைத் தெரிவிப்பதில் தவறு இல்லை. கோபப்படவில்லை. கொப்பளிக்கிறேன்.

சினிமா என்பது ஒரு பெரிய மாயை. அதில் சிக்கிக் கொண்டால் மீள்வது  கடினம். நம்மை ஆளக்கூடிய தகுதியை நடிகர், நடிகையின் கையில் ஒப்படைத்து விட்டால் அப்புறம் எப்படிங்க.


ஒரு வகையில் நாம் நம் கவலைகளை மறப்பது சினிமாவின் மூலமாகத் தான். அது கொடுக்கும் போதையில் தான் நாம் எதார்த்தத்தையும் விட்டு விலகிச் செல்கிறோம்.

யாராக இருந்தாலும் சரி. சாமான்ய மனிதராக இருக்கட்டும் அல்லது நன்றாக படித்தவராக இருக்கட்டும். பேதம் வாதம் பார்க்காமல் சினிமா மாயையில் சிக்கி விடுகிறார்கள். பின்னர் அவதிப் படுகிறார்கள்.

சினிமா மாயையில் சிக்கிக் கொண்டால் அவ்வளவு எளிதில் அந்த மாயையில் இருந்து விடுபட முடியாது. ஏன் தெரியுங்களா.

பணத்திற்காகப் பவுடர் பூசும் நடிகர், நடிகைகளை இறைத் தகுதிக்கு ஏற்றி வைத்துத் தெய்வமாகப் பார்ப்பது; பாயாசம் காய்ச்சி பால் அபிஷேகம் செய்வது; ஆட்டுக் கடா வெட்டி ஆட்டு இரத்ததில் ஆராதனை செய்வது; அசத்தல் போலியை அசல் உண்மை என்று உச்சி முகர்வது. சரி அல்ல.


அறிவைப் பக்குவமாகப் பயன்படுத்தினால் எல்லாம் சரியாக வரும். சினிமா என்பதை ஒரு பொழுது போக்கு அம்சமாகப் பார்க்க வேண்டும். அதை வாழ்க்கையோடு இணைந்த ஒரு விசயமாகப் பார்ப்பதுதான் தவறு. அதை குறைத்தால் மோகம் குறையும்.

நண்பர் ஒருவர் சொல்கிறார்: படம் பார்த்ததோட சரி. வெளிவந்தவுடனே அதை மறந்துவிட வேண்டும். அவ்வளவு தான். ஆனால் ஒரு சிலர் பண்ணுகின்ற அலப்பறை இருக்கே சாமி... முடியல.

பேனருக்கு பால ஊத்துறான். கேக் ஊட்டி விடுறான். நல்லவேளை. நடிகன் பின்பாகத்தைக் காட்டவில்லை. காட்டி இருந்தால் அதற்கும் அபிசேகம் செய்வானுங்க போல இருக்கிறது.


நடிகரின் பேனருக்கு போடும் மாலை ஒரு 2000 ரிங்கிட் இருக்கும். ஆனா அவர்களின் சொந்தகாரன் சாவுக்கு 10 ரிங்கிட் மாலைக்கு போடுவதற்கே கட்சி கட்டுவார்கள். ஒன்று இவர்களாகத் திருந்த வேண்டும். இல்லாவிட்டால் நடிகர்கள் களம் இறங்கி ரசிகர்களைத் திருந்த வைக்க வேண்டும்.

உஹும்... அது நடக்கிற மாதிரியாகத் தெரியவில்லை. ரசிகர்கள் இருந்தால் தானே படம் ஓடும். படம் ஓடினால் தானே நடிகர்களின் பிழைப்பும் ஓடும். புலிவாலை நிமிர்த்தவே முடியாது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் சினிமா என்பது ஒரு வணிகப் பண்டம். அதன் மேல் மோகம் கொள்வதைப் போன்ற ஓர் அபத்தம் வேறு எதுமே இல்லை. திரைப்பட நடிகர்கள் மீது தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கும் முட்டாள்தனமான மோகம் என்று தணியும் என்று கேட்கலாம்.


என்றைக்கு ஒரு ரசிகனுக்கு அவடைய வாழ்க்கைக்கு எது முக்கியமான தேவை என்று தேடிப் போக ஆரம்பிக்கிறானோ அப்போதுதான், அன்றைக்குத்தான் தமிழ்ச் சமூகத்தில் இருக்கும் முட்டாள் தனமான சினிமா மோகம் குறையும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. நோ சான்ஸ்!

என்று தணியுமோ இந்தச் சுதந்திரத் தாகம் என்று பாரதியார் பாடினார். அவர் இப்போது இருந்தால் என்று தணியுமோ இந்தச் சினிமா சீரியல் மோகம் என்று பாடி இருப்பார். நல்ல வேளை அவர் இல்லை. நடிகைகளுக்கு கோயில் கட்டுவார்கள்; நடிகர்களுக்கு ஆடுவெட்டி சாமி கும்பிடுவார்கள் என்று தெரிந்தோ என்னவோ அவர் முன்கூட்டியே போய்ச் சேர்ந்து விட்டார்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
19.09.2021



 

13 செப்டம்பர் 2021

உலகின் ஏழை அதிபர் ஜோஸ் முஜிகா

ஒரு நாட்டின் அதிபராக மிக உயர்ந்த பதவி வகித்தவர். ஆனால் அவர் பதவி விட்டுப் போகும் போது ‘போகாதீர்கள்... கடைசி வரை நீங்கள்தான் எங்களுக்கு அதிபராக இருக்க வேண்டும்’ என்று அந்த நாட்டு மக்களே கண்ணீர்விட்டு அழுதார்கள்.

அந்த வகையில் உலகின் எளிமையான அதிபர் என எடுத்துக்காட்டாய் திகழ்பவர்தான் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸ் முஜிகா (José Mujica). 40-ஆவது அதிபர்.


இப்போது அவருக்கு வயது 86. உருகுவே அரசு வழங்கிய அதிபருக்கான ஆடம்பர மாளிகையைத் தவிர்த்தவர். மனைவிக்குச் சொந்தமான பண்ணை வீட்டிலேயே வாழ்ந்து கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டார்.

அவருக்குச் சொந்தமான நிலம் இல்லை. வீடு இல்லை. ஏழ்மையிலும் எளிமையான வாழ்க்கை. அரசாங்கம் இவருக்கு மாதா மாதம் 60,000 ரிங்கிட் ஓய்வூதியம் வழங்குகிறது. இருப்பினும் அந்தப் பணத்தில் 90%, அதாவது 54,000 ரிங்கிட்டை ஏழைகளுக்கும் அறக் கட்டளைகளுக்கும் நன்கொடையாக வழங்கி விடுகிறார்.

இன்றும் தன் பண்ணைத் தோட்டத்தில் சொந்தமாகக் காய்கறிகளைப் பயிரிட்டு சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்கிறார். மனைவியுடன் சேர்ந்து மலர் விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.


இவர் உருகுவே நாட்டின் போராட்டவாதி. துப்பாமாரோஸ் (Tupamaros) கொரிலா படையின் முக்கியப் புள்ளியாக இருந்தவர். நாட்டின் மறுமலர்ச்சிக்காகப் போராடியவர். 12 ஆண்டுகள் சிறைவாசம்.

ஒரே ஒரு கார்தான் சொத்து. 2010-ஆம் ஆண்டு ஜோஸ் முஜிகா தனது சொத்து கணக்கை சமர்ப்பித்த போது, 1987-ஆம் ஆண்டில் வாங்கிய ‘வோக்ஸ் வேகன் – பீட்டில்’ காரை மட்டுமே தன் சொத்தாகக் காட்டினார். அதன் மதிப்பு சுமார் 1800 அமெரிக்க டாலர்கள்.

இந்தக் காரை நாட்டின் அருங்காட்சியத்தில் வைப்பதற்கு மக்கள் நிதி திரட்டினர். அதற்குள் ஒரு மில்லியன் டாலருக்கு யாரோ ஒருவர் ஏலம் எடுத்து விட்டார். அந்தப் பணத்தில் தனக்கு ஒரு காசுகூட வேண்டாம் என்றும்; அந்தப் பணத்தை ஏழை அறவாரியங்களுக்கு வழங்குமாறு ஜோஸ் முஜிகா சொல்லி விட்டார்.


பதவி விட்டு விலகியதும், அரசாங்கம் அவருக்குச் சில பாதுகாவலர்களை வழங்கியது. இருந்தாலும் இரண்டே இரண்டு போலீஸ்காரர்கள் போதும்; என்னைப் பிடிக்காதவர்கள் இந்த நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் என் உயிருக்கு பெரிய ஆபத்து எதுவும் இல்லை என்கிறார்.

2010-ஆம் ஆண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் உருகுவே நாடின் அதிபராக இருந்தவர். 2015-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார். பதவிக் காலம் முடிந்து, அரசு அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி தன் சொந்த பண்ணை வீட்டுக்குத் திரும்பினார்.

அப்போது ஆயிரக் கணக்கான மக்கள் சாலை ஓரங்களில் நின்று கண்ணீர் மல்க அவரை வழி அனுப்பி வைத்தார்கள். இப்படியும் ஓர் அதிபரா? இவர் ஒருமுறை இக்கரை மலை நாட்டிற்கு வந்தால் சிறப்பு.


அரசியல் வியாதிகள் எப்படி எப்படி எல்லாம் சொத்துக்களை வாங்கிக் குவித்து இருக்கிறார்கள்; நாட்டை எப்படி எல்லாம் கூறு போட்டு விற்கிறார்கள் என்று பார்த்துவிட்டு சென்றால் நல்லது. கக்கன் அவர்களின் மறுபிறவியாக இவரைப் பார்க்கிறேன்.

இவரைப் பற்றி ஒரு முழுக்கட்டுரை தமிழ் மலர் நாளிதழில் விரைவில் வெளிவரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
13.09.2021


12 செப்டம்பர் 2021

கடாரத்து பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை

தமிழ் மலர் - 12.09.2021

அலெக்சாண்டர் பிறந்தது கி.மு. 323. அசோகர் பிறந்தது கி.மு. 269. ஜுலியஸ் சீசர் பிறந்தது கி.மு. 100. கிளியோபாட்ரா பிறந்தது கி.மு. 51. இந்த வரலாற்று அதிசயங்கள் பிறப்பதற்கு முன்னதாகவே கடாரத்தில் ஒரு நடன தேவதை பிறந்து விட்டாள். அவளுடைய பெயர் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை.

கடல் மேல் கடாரம் இசை பாட; கரை மேல் தாரகை இடை ஆட; இரண்டும் கலந்த உறவில் என் நெஞ்சம் ஒடிந்து போகுதே! வாழ்க கடாரம். வாழ்க லிந்தாங் தேவதை.

1957-ஆம் ஆண்டில்; கெடா மாநிலத்தில் பத்து லிந்தாங் (Batu Lintang) எனும் கிராமப்புறப் பகுதியில் ஒரு நாட்டியச் சிலையைக் கண்டு எடுத்தார்கள். அழகான சிலை. அச்சு அசல் குலைந்தாலும் மச்சு பிச்சு மயக்கும் சிலை. அந்தச் சிலைக்குப் பெயர்தான் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகைச் சிலை.


1200 ஆண்டுகள் பழைமையானது. பூஜாங் வரலாற்றைப் பற்றி காலா காலத்திற்கும் கதைகள் சொல்லிக் கொண்டு இருக்கும் கலைச்சிலை. இந்தச் சிலையைப் போல இன்னும் பல சிலைகள், கடாரத்து மண்ணில் இன்றும் புதைந்து கிடக்கின்றன.

1830-ஆம் ஆண்டுகளிலேயே மிகப் பழைமையான தொல் பொருள்கள்; தொன்மை வாய்ந்த சிலைகளாய் புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. எனினும் 1936-ஆம் ஆண்டில் தான் முறையான அகழாய்வுகள் தொடங்கின.

ஒரு வருடம் கழித்து 1937-ஆம் ஆண்டில் அந்த ஆய்வுகள் நிறுத்தப் பட்டன. 1941-ஆம் ஆண்டு மீண்டும் ஆய்வுகள். இரண்டாம் உலகப் போரின் போது ஆய்வுகள் மீண்டும் நிறுத்தப் பட்டன. அதன் பின்னர் தொடங்கிய ஆய்வுகள் இன்றும் தொடர்கின்றன.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (UNESCO) பூஜாங் சமவெளிக்கு உலக பாரம்பரியத் தளம் எனும் தகுதியை வழங்க முன்வந்தது.

எதிர்பார்த்து போலவே கிடப்பில் போடப் பட்டது. தூசி தட்டி எழுப்புவார்களா தெரியவில்லை. அதற்குள் இன்னொரு பூஜாங் பிறந்து வந்து அதுவும் பெரிய மனுசியாகிப் போகலாம்.


கெடாவின் சுங்கை பத்து பகுதியில் தான் அதிகமான தொல்பொருள் ஆய்வு களங்கள் உள்ளன. ஏறக்குறைய 100 இடங்கள் என்று சொல்லலாம். அடுத்து அதிகமான இடங்கள் குனோங் ஜெராய் எனும் ஜெராய் மலை அடிவாரத்தில் காணப் படுகின்றன.

கெடா மாநிலத்தில் குருண் நகருக்கு அருகில் மெர்போக் சிறுநகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் பூஜாங் சமவெளி. இதன் பரப்பளவு 224 சதுர கிலோ மீட்டர். அதாவது சிங்கப்பூரின் பரப்பளவில் பாதி.

வடக்கே குனோங் ஜெராய். தெற்கே சுங்கை மூடா ஆறு. சில கிலோ மீட்டர் மேற்காகத் தள்ளிப் போனால் மலாக்கா நீரிணை. சுங்கை மெர்போக் ஆறு, மலாக்கா நீரிணையில் இணையும் இடத்தில் அந்த ஆற்றின் அகலம் நான்கு கி.மீ.

சுங்கை பத்து எனும் இடத்தில் கிடைக்கப் பெற்ற மண்பானைகள், மண்சட்டிகள், கப்பல் கம்பங்கள், கப்பல் தூண்கள்; இரும்புத் தூண்கள்; வெண்கலப் படிமங்கள் எல்லாம் 2600 ஆண்டுகள் பழைமையானவை என்று உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது கி.மு. 582 ஆண்டில் உள்ளவை.


அசோகர் அலெக்ஸாண்டர் கிளியோபாட்ரா காலத்திற்கு முன்பாகவே பூஜாங் சமவெளியில் வரலாறுகள் பேசப்பட்டு உள்ளன. சுங்கை பத்து ஆய்வு மையம் (Sungai Batu Archeological Complex), சுங்கை பட்டாணி நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

(The Sungai Batu Archaeological site in the Bujang Valley is now certified as dating back to 582 BC instead of 535 BC previously, making it by far the oldest recorded civilisation in the South East Asian region and among the oldest in Asia.)

சுங்கை பத்துவின் மண் சிதைவுகள்; கரியச் சிதைவுகளை மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துலக தொல்பொருளியல் ஆய்வுத் துறை (Centre for Global Archaeological Research of Universiti Sains Malaysia (USM) ஆய்வுகள் செய்தது.


இதுவரையிலும் சில நூறு அல்லது சில ஆயிரம் தொல் பொருட்கள் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளன. இன்னும் பல ஆயிரம் பொருட்கள் மண்ணுக்குள் புதைந்து மர்மமாய்க் கிடக்கின்றன. அவ்வாறு மீட்டு எடுக்கப்பட்ட சிலை தான், 1200 ஆண்டுகள் பழைமையான பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலை.

குனோங் ஜெராய் மலை அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான கற்சிலைகள் இன்னும் புதைந்து கிடக்கின்றன என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். அவற்றுள் பெரும்பாலானவை இந்து புத்தமத வழிப்பாட்டுச் சிலைகளாக இருக்கலாம்.

அதே போல மெர்போக் ஆற்று முகத்துவாரத்திலும் மூடா ஆற்றின் முகத்துவாரத்திலும் நிறைய சிலைகளைக் கண்டு எடுத்து இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் இருந்து இங்கு வந்தவர்கள் அந்தச் சிலைகளை உருவாக்கி இருக்கலாம்.


பூஜாங் பள்ளத்தாக்கு அகழாய்வுப் பணிகளில் மிக முக்கியமானவர் டாக்டர் எச்.ஜி. குவார்டிச் வேல்ஸ் (Dr. H.G. Quartich Wales). இவர் தாய்லாந்து மன்னர் ராமா (Rama VII) அவர்களுக்கு ஆலோசகராக இருந்தவர்.

1951-ஆம் ஆண்டில் இவர் ஒரு நூலை எழுதினார். அதன் பெயர் மகா இந்தியாவை உருவாக்குதல்: தென்கிழக்கு ஆசிய கலாச்சார மாற்றத்தில் ஓர் ஆய்வு (Making of Greater India: a study in South-East Asian culture change).

அதில் இந்தியாவில் இருந்து பூஜாங் பள்ளத்தாக்கிற்கு வந்தவர்கள் வணிகம் செய்வதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டு இருந்தார்கள். அப்படி வந்தவர்கள் வெகு காலமாக இங்கே தங்கி இருக்கிறார்கள்.

ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு மேலாக வணிகப் போக்குவரத்து இருந்து உள்ளது. அதன் பிறகு தான் 1025-ஆம் ஆண்டில் சோழர்களின் படையெடுப்பு நடந்து உள்ளது.


ஆக கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது பூஜாங் பள்ளத்தாக்கில் ஏறக்குறைய 2300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னிந்தியர்களின் குடியேற்றம் நடந்துள்ளது என்று எச்.ஜி. குவார்டிச் வேல்ஸ் சொல்கிறார்.

தென்னிந்தியாவின் ஆட்சிகளையும் கொஞ்சம் பார்ப்போம். தென்னிந்தியாவில் முதலாம் நூற்றாண்டில் இருந்து 3-ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர்களும் சோழர்களும் ஆட்சி செய்து இருக்கிறார்கள்.

4-ஆம் நூற்றாண்டில் இருந்து 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர் ஆட்சி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்து 13-ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் ஆட்சி.

இவர்களின் ஆட்சி காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளுடன் கொண்ட உறவுகள் பெரும்பாலும் வணிக உறவுகள். அந்த வணிக உறவுகள் மூலமாக கடாரத்தில் தென்னிந்தியர்களின் கலையும் கலாசாரமும் வளர்ந்து உள்ளன.

இந்தக் காலக் கட்டத்தில் தான் தென்னிந்திய அர்ச்சகர்கள்; ஆரிய இனத்தவர்; தமிழக மன்னர்களின் போர் வீரர்கள் வந்து போய் இருக்கிறார்கள். தென்னிந்திய அரசர்களும் வந்து போய் இருக்கிறார்கள்.


அந்த வகையில் பூஜாங் பள்ளத்தாக்கில் அப்போது வாழ்ந்த உள்ளூர் மக்களும் தமிழர்களின் கலாசாரத்தையும்; சிவ வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டு இருக்கின்றனர்.

இந்தக்காலக் கட்டத்தில் புத்த மதம் முதலில் வரவில்லை. சிவ வழிபாடு வந்த பின்னர் தான் புத்தம் வந்து இருக்கிறது. நினைவில் கொள்வோம்.

இந்தியர்கள் என்று பொதுவாகச் சொல்ல வேண்டி இருக்கிறது. பூஜாங் சமவெளிக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் வந்து இருக்கிறார்கள். சோழர்கள்; பல்லவர்கள்; பாண்டியர்கள் என பலரும் வந்து போய் இருக்கிறார்கள்.

ஆகவே அப்படி வந்தவர்களை எல்லாம் ஒரே பார்வையில் இந்தியர்கள் என்றே சொல்ல வேண்டி வருகிறது.


அப்போதைய அரசியல் முறைப்படி ஓர் அரசரைப் பொது மக்கள் தெய்வமாக மதிக்க வேண்டும். துதிக்க வேண்டும். அது ஒரு வகையில் எழுதப் படாத சாசனம். அதைத் தான் பூஜாங் மக்களும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள்.

சோழன் வென்ற கடாரம் எனும் ஆய்வு நூலில் வரலாற்று ஆசிரியர் டத்தோ நடராஜன் எழுதி இருக்கும் ஒரு பகுதியை இங்கே பதிவு செய்கிறேன்.

‘மகாராஜாவை தெய்வீகமான தேவராஜாவாகக் கருதும் அரசியல் முறை ஏற்றுக் கொள்ளப் பட்டது. அரண்மனை விழாக்கள்; சடங்குகள்; இசைக் கச்சேரிகள்; இராமாயணம்; மகாபாரதம் எனும் இதிகாசங்கள் ஆகியவை உள்ளூர் கலாசாரத்தோடு கலந்தன. அவர்களின் மொழியில் சமஸ்கிருதச் சொற்களும் தமிழ்ச் சொற்களும் கலந்தன.

பூஜாங் பள்ளத்தாக்கில் கண்டு எடுக்கப்பட்ட எல்லாக் கல்வெட்டுகளும் சமஸ்கிருத மொழியில்; ஆனால் பல்லவத் தமிழ் எழுத்துகளில் உள்ளன. சமஸ்கிருதமும் தமிழும் அரசவைப் பிராமணர்களாலும் மேல்குடியினராலும் சமயச் சடங்களுக்காகப் பயன்பட்டு இருக்கலாம்.


இந்தியர்களிடம் இருந்து பெறப்பட்ட கலாசாரத் தாக்கம் பூஜாங் பள்ளத்தாக்கு முழுமைக்கும் பரவி இருந்தது. எல்லாக் கலாசார ஊக்குவிப்புகளும் இந்தியாவில் இருந்தே வந்தன. வர்த்தகப் பெருவழியே கலாசாரப் பெருவழியாகவும் ஆயிற்று. இவ்வாறு டத்தோ நடராஜன் கூறுகிறார். சரி. நாட்டியத் தாரகை கற்சிலைக்கு வருவோம்.

சுங்கை மெர்போக் படகுத் துறையில் (Kompleks Jeti Sungai Merbok) இருந்து மலாக்கா நிரிணைக்குப் படகில் செல்லும் போது ஆற்றின் இரு புறமும் அண்ணாந்து பார்க்கும் அளவிற்குக் காண்டா காடுகள் உயர்ந்து நிற்கும்.

ஆயிரக் கணக்கான ஏக்கர் பரப்பளவில் இலட்சக் கணக்கான காண்டா மரங்களும்; காட்டு மரங்களும் வரிசை வரிசையாய் அழகு காட்டுவதைப் பார்க்கலாம்.

இந்த ஆற்றில் மூன்று முறை படகுப் பயணம் செய்த அனுபவம் உள்ளது. சும்மா சொல்லக் கூடாது. ஆற்றில் வீசும் காற்று, கடலில் வீசும் காற்று போல ஆளைத் தள்ளும். கொஞ்சம் ஏமாந்தால் ஆற்றிலேயே தள்ளிவிடும். அதனால் பாதுகாப்புப் பட்டைகளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்தியக் கடலோடிகள்; தென்னிந்திய அரசர்கள்; இந்தோனேசிய அரசர்கள்; அரபு நாட்டு வணிகர்கள்; சீனா நாட்டு புத்தச் சமயப் போதகர்கள் பயணம் செய்த இதே ஆற்றில் நாமும் பயணம் செய்கிறோம் என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கும்.


மெர்போக் ஆற்றுப் பயணத்தில் பாதி தூரம் கடந்ததும் புக்கிட் லிந்தாங் ஆற்று முகத்துவாரம் இடது புறத்தில் எதிர்படும். இந்த இடத்தில் தான் பத்து லிந்தாங் நாட்டியத் தாரகை கற்சிலையைக் கண்டு எடுத்தார்கள்.

இந்த இடத்திற்கு ஒரு முறை போய் இருக்கிறேன். பந்தாய் மெர்டேகா எனும் கடற்கரை ஓய்வு நகரத்திற்குப் போகும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த இடம் உள்ளது.

(Figure of a dancer carved in high relief found at Batu Lintang, south of Kedah in 1957 by Dr.Sullivan and Dr.H.A. Lamb.)

1957-ஆம் ஆண்டு வரலாற்று ஆய்வாளர்கள் டாக்டர் சுலிவான் (Dr.Sullivan); டாக்டர் லாம்ப் (Dr.H.A. Lamb); அந்தச் சிலையைக் கண்டு எடுத்தார்கள். இப்போது அந்தச் சிலை கோலாலம்பூர் தேசிய அரும் காட்சியகத்தில் உள்ளது.

கடாரத்து நாகரிகத்தை மறுபடியும் நினைவு கூர்கிறேன். தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பழைமையான நாகரிகம் என்றும்; ஆசியாவின் பழைமையான நாகரிகங்களில் முதன்மையானது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

(The Sungai Batu Archeological Complex, claimed to be Southeast Asia’s oldest civilization (older even than Borobudur and Angkor Wat), is said to be the lost world of Kedah Tua (Ancient Kedah), a kingdom complete with iron ore mines, smelting factory, a port, palace, burial sites and a thriving city.)

பத்து லிந்தாங் நாட்டியத் தாரகைச் சிலை, மெர்போக் ஆற்றுப் பகுதியில் கண்டு எடுக்கப் பட்டதாகும். தவிர செமிலிங் காட்டுப் பகுதிகளில் நிறைய தொல் பொருள்களையும் கண்டு எடுத்து இருக்கிறார்கள்.

ஆய்வுப் பணிகளுக்காகப் பல முறை செமிலிங் காட்டிற்குள் போய் இருக்கிறேன். மறக்க முடியாத அனுபவங்கள். ஓர் அனுபவத்தை மீண்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தனிப்பட்ட தகவலாக இருந்தாலும் அதில் வரலாறும் சற்றே கலந்து போகிறது.

செமிலிங் காட்டிற்குள் ஒரு முறை நடந்த நிகழ்ச்சி. நானும் என் நண்பரும் போய் இருந்தோம். அங்கு ஒரு பெரிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. வெயில் காலங்களில் அந்த நீர்வீழ்ச்சி, காய்ந்து போன கற்பாறை போல இருக்கும்.

அந்த நீர்வீழ்ச்சியின் உச்சியில் நான்கைந்து சின்னச் சின்னக் கரும் பாறைகள் அருகருகே இருக்கும். மேலே உச்சிப் பகுதியில் பாழடைந்து போன ஒரு பலகை வீடும் இருந்தது.

அது ஒரு மாதிரியான காற்றுச் சேட்டை கொண்ட குடிசை என்று பின்னர் தெரிய வந்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் மீனாச் செடிகள். லாலான் புற்கள். காற்று இல்லாமலேயே ஆடும் சின்னச் சின்ன மரங்கள். பறவைகள் சத்தம் இல்லை.

சமயங்களில் தனிமையில் அமர்ந்து அந்தக் கானகத்துக் காற்றைச் சுவாசிக்கும் போது ஒருவிதமான அச்சம் ஏற்படும். அன்றைக்கு ஒரு நாள்... பகல் மணி பன்னிரண்டு இருக்கும். நீர்வீழ்ச்சியின் உச்சத்தில் இருந்த உச்சிப் பாறையில் அமர்ந்து இருந்தேன்.

அப்போது யாரோ எனக்குப் பின்னால் வந்து மூச்சு விடுவது போல இருந்தது. என்னுடன் வந்த நண்பர் நீர்வீழ்ச்சியின் கீழே இருந்தார். அவர் மேலே ஏறி வரவில்லை.

ஒரு மாதிரியான வெப்பக் காற்று. திரும்பிப் பார்த்தால் யாரும் இல்லை. ஒரு தடவை அல்ல. இரண்டு மூன்று தடவைகள். எனக்குப் பயம் வந்துவிட்டது.

அப்புறம் என்ன. திரும்பிப் பார்க்காமல் அரக்கப் பரக்க கீழே வந்து சேர்ந்தேன். னல்லவேளை வழுக்கி விழவில்லை. பூஜாங் அரும் பொருள் காட்சியகத்தில் இருந்த அதிகாரிகளிடம் நடந்ததைச் சொன்னேன்.

நடு மத்தியான நேரம். நல்ல நேரம் அல்ல. இந்த நேரத்தில் நீங்கள் போய் இருக்கிறீர்கள். காற்றுச் சேட்டைகளாக இருக்கலாம். சொல்ல முடியாது என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்கள். இன்றைய வரைக்கும் அந்த நிகழ்ச்சியை நினைத்தால் சற்றே பயமாக இருக்கும்.

வாய்ப்பு கிடைத்தால் உச்சிக்குப் போய்ப் பாருங்கள். ஆனால் ஒரு சின்ன நினைவுறுத்தல். காற்று சேட்டை கரடிச் சேட்டை என்று கவிழ்ந்து அடித்து விழுந்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல. கடாரத்தின் கடைசி ராஜா ஸ்ரீ விஜய அரசர் விஜயதுங்க வர்மன் தான் பதில் சொல்ல வேண்டி வரும்.

அவரும் ரொம்ப பிசி. பூஜாங் வரலாற்றுக்கு உலக பாரம்பரியத் தகுதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நடையாய் நடந்து கொண்டு இருக்கிறார். மாநில அரசாங்கத்திற்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டு இருக்கிறார். பாவம் விஜயதுங்க வர்மன்!

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
12.09.2021


சான்றுகள்:

1. Journal of the Malayan Branch of the Royal Asiatic Society Vol. 31, No. 1 (181) (May, 1958), pp. 188-219

2. https://commons.wikimedia.org/w…/File:Muzium_Negara_KL10.JPG (Arca penari ukiran timbul dijumpai di Batu Lintang, Kedah Selatan pada tahun 1957 oleh Dr. M. Sullivan dan Dr. H.A. Lamb.)

3. Nilakanta Sastri, K.A. (2000). A History of South India. New Delhi: Oxford University Press. ISBN 0195606868.

4. Vasudevan, Geeta (2003). Royal Temple of Rajaraja: An Instrument of Imperial Chola Power. Abhinav Publications. ISBN 0-00-638784-5.

பின்னூட்டங்கள்

தனசேகரன் தேவநாதன்: இன்றைய தமிழ் மலரில் தலைவரின் கைவண்ணம் வாங்கிப் படிக்க மறவாதீர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பி கணேசன் ஆசிரியரின் ஏற்பாட்டில் ஐயா டத்தோ. நடராஜா அவர்களின் விளக்கமும்  அவரின் புத்தக அறிமுகமும் நடைபெற்றது அதற்கு முன்பே அடியேன் பூஜாங் பள்ளதாக்கு பகுதிக்கு சென்று ஒரு சொல்ல இயலா அனுபவத்தை பெற்று வந்தேன்

உங்கள் கட்டுரை அதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்து விட்டது ஐயா மலேசிய தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக கால் பதிக்க வேண்டிய இடம் பூஜாங் பள்ளதாக்கு. நன்றி ஐயா 🌹💞🙏👌💪💪💪💪

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: மலேசியத் தமிழர்கள் அனைவரும் ஒரு முறையாவது போய்ப் பார்க்க வேண்டும். மலையகத்தில் தமிழர்கள் முதன்முதலில் கால் பதித்த இடம்... கடாரத்து வரலாறு கொஞ்சம் கொஞ்சமாய் மறைக்கப்பட்டு வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் இல்லாமலே போகலாம்.

கொரோனா முடியட்டும். ஒரு சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்வோம். கண்டிப்பாகப் போய்ப் பார்க்க வேண்டும். கருத்துகளுக்கு நன்றிங்க தனா...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  இத்தாலி நாட்டில் இருந்து ஒரு தமிழரின் பதிவு...


டாக்டர் சுபாஷிணி: அருமையான கட்டுரை. மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் பற்றிய பல்வேறு மிக முக்கிய தகவல்களை இக்கட்டுரை வழங்குகிறது. தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆய்வுகளில் இணைக்கின்றோம். 😊🌷

தனசேகரன் தேவநாதன்:  நன்றி அம்மா மலேசிய தமிழ் பள்ளி மலேசிய தமிழர்களின் அடையாள ஆவணம். ஆரம்ப கல்வி தொடங்கி
உயர்க்கல்வி கூடம் வரை. அதாவது கோ.சா அவர்களின் தமிழ் எங்கள் உயிர் என்ற போராட்டம் காலம் மட்டும்மல்ல.

இன்றுவரை பலரின் தியாகங்கள் தான் இந்நாட்டில். தமிழ் நிலை பெற்று வாழ்கிறது. உங்களது பங்கும் அடித்தளத்தை பலமாக்கட்டும் வாழ்த்தும் பாராட்டுகளும் நன்றியும். வாழ்க வாழ்க 💞🙏👌🌹💪💪💪💪💪

உதயக்குமார் கங்கார்: கட்டுரை மிகச் சிறப்பு ஐயா, வரலாற்று தகவல்கள்.

செல்லையா செல்லம்: கட்டுரை மிக சிறப்பு  உங்களுடைய எழுத்துப் படிவங்களை நான் தவறாமல் வாசிக்கிறேன்   

சத்யா பிரான்சிஸ்: மிகச் சிறப்பான வரலாற்று கட்டுரை..

வேலாயுதம் பினாங்கு: அருமை ஐயா...👍👍☝

பெருமாள் கோலாலம்பூர்: நீங்க காட்டுக்கு உள்ளே உச்சி நேரத்தில் தனிமையில் இருந்தால் அது போன்ற உணர்வுகள் வந்து போகலாம். திகிலான நிகழ்வு நீங்கள் மிரண்டு போனீர்களா, அதிர்ந்து போனீர்களா.

வேலாயுதம் பினாங்கு: அண்மையில், குனோங் ஜெராய் பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் பல மண் அறிப்புக்கள் ஏற்பட்டு சில சரித்திர பொருட்கள் வெளியே வர / தெரிய வாய்ப்புக்கள் உள்ளது ஐயா. மலை உச்சியில் இருந்து கடும் வேகத்தில் நீர் அடித்து வந்ததாகத் தகவல். 🙏🙏

பெருமாள் கோலாலம்பூர்: உண்மை தான்  ஆய்வு செய்தால் ஏதாவது தட்டுப்படும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  பிற்பகல் மணி பன்னிரண்டு. நான் மட்டும் தான் இருந்தேன். ஆகக் கீழே... அடிவாரத்தில் நண்பர் இருந்தார். முதலில் பயம் இல்லை. மிக மிக அமைதி. மூச்சு விட்டால்கூட கேட்க முடிந்தது. அப்போது ஒரு மாதிரியான உணர்வு. அவ்வளவு சுலபத்தில் பயப்பட மாட்டேன்.

எத்தனையோ தடவை அடர்ந்த மலைக் காடுகளுக்குள் தனியாகப் போய் வந்து இருக்கிறேன். ஆனால் அந்த இடத்தில் வித்தியாசமான உணர்வுகள். விவரித்துச் சொல்ல முடியவில்லை. இன்றும் அதை நினைத்துக் கொண்டால் பயம் வரச் செய்கிறது.

தேவிசர கடாரம்: அருமையான வரலாறு... 👌👍🏻 ஆச்சரியத்தோடும் ஆவலோடும் படித்தேன்...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  எத்தனை மார்க் கொடுக்கலாம்... 😃

தனசேகரன் தேவநாதன்:  தமிழக அரசு வெளியிட்ட அறிக்கைப்படி செயல் படுமானால்... உலக மக்களுக்குத் தமிழரின் சாதனைகள் வெளிப்படும். ஐயா போன்றவர்களின் கடின உழைப்பிற்குப் பயன் உண்டாகும்

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  நானும் கேள்விப் பட்டேன். எடுத்துப் போய் இருக்கிறார்களாம். விவரம் தெரியவில்லை. டத்தோ நடராஜா அவர்களுக்கு போன் செய்தேன். அவரும் போய் இருக்கிறார். எதையும் பார்க்க கிடைக்கவில்லை என்றார்.

பெருமாள் கோலாலம்பூர்: இல்லை, தலைவரே மூதாதையர் நம்ம வாரிசு வந்திருக்காரு போய் பார்ப்போம் என தேடி ஓடி வந்து இருப்பார்களோ. மாநிலம் விட்டு மாநிலம் Rentas kawasan வந்தால் நம் புலன நண்பர்களோடு ஒரு சுற்றுலா போய் வரலாமே

தேவிசர கடாரம்: இந்த கட்டத்தில் என்னையும் ஒரு வித திகில் சூழ்ந்து கொண்டது...

பெருமாள் கோலாலம்பூர்: பாத்துமா... வேப்பிலை கையில் ஒரு கொத்து வைத்து கொள்ளுங்கள்...

தேவிசர கடாரம்: நானே வருவேன் ... இங்கும் அங்கும்

ராதா பச்சையப்பன்: இந்த பாடலை நாங்க அங்கு போய் படித்தால், அங்கு உள்ளது  லாரிதான் 🏃🏼‍♀️🏃🏼‍♀️🏃🏼‍♀️😃👍👌.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  முதலில் கீழடி நாகரிகத்தை முழுமையாகக் கண்டுபிடித்துச் சொன்னாலே பெரிய விசயம் ஐயா. கடாரத்தில் அவ்வளவு எளிதில் ஆய்வு செய்ய விட மாட்டார்கள்.

எவ்வளவோ முயற்சிகள் செய்தும் குனோங் ஜெராய் உச்சிக்குப் போக முடியவில்லை. அங்கே ஒரு சிவன் ஆலயம் இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள். இப்போது இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள்.

சுங்கை பத்து பகுதியில் ஒரே சமயத்தில் பத்து பதினைந்து இடங்களில் பினாங்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு உள்ளார்கள். ஒவ்வொரு களத்திலும் கூடாரங்கள் அடித்து களப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு கூடாரத்திலும் நூற்றுக் கணக்கான மண்குப்பிகள்... சிறுசிறு மண் களையங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு தரவு எண்கள் பொறித்து அடுக்கி வைக்கிறார்கள். எண்ணிப் பார்க்கவே முடியாது. நூறுகள் அல்ல. ஆயிரங்களில் மண் குப்பிகள்... வரிசை வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

சுங்கை பத்துவின் நீளம் ஒரு பத்து மைல் இருக்கும். ரோடு போய்க் கொண்டே இருக்கும். இரு புறங்களிலும் எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்... மரங்கள். அங்குதான் களப்பணி கூடாரங்களை அமைத்து இருக்கிறார்கள்.

சில களப்பணிக் கூடாரங்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். ஆனால் ஜாகா இருப்பார்கள். அவர்களிடம் நைசாகப் பேசி உள்ளே சென்று விடுவோம். நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவ்வளவு பொருள்களை தோண்டி எடுத்து வைத்து இருக்கிறார்கள். எண்ணவே முடியாது.

ஏறக்குறைய 100 இடங்கள் உள்ளன. சுங்கை பத்து பகுதியைச் சுற்றி வர எப்படியும் ஒரு மாதம் பிடிக்கும். சின்ன இடம் அல்ல. பெரிய இடம். 50 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. அங்கு தான் செமிலிங் காடுகள் உள்ளன. அங்குதான் எனக்கு அப்படி ஓர் அனுபவம்.

தேவிசர கடாரம்: படிக்கும் போதே போய்  பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது...

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  இந்தக் காடுகளில் தான் சோழப் படையெடுப்பு நடந்து உள்ளது. பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கலாம். விஜயதுங்க வர்மனின் படைகள் ஒரு புறம்... இராஜேந்திர சோழனின் படைகள் ஒரு புறம். இதை என் நண்பரிடம் சொன்னேன். அவர் மேலே வருவதற்கு மறுத்து விட்டார். 😃

போகுவரத்து வாகனங்களின் சத்தம் இருந்தாலும் உட்பகுதிக்குள் தனியாக யாருமே போக மாட்டார்கள்.

செமிலிங் காடுகள் ரொம்பவும் அமைதியாக இருக்கும். பயமாகவும் இருக்கும். இரண்டு பேர் போனாலும் கொஞ்சம் துணிச்சல் வேண்டும்.

பெருமாள் கோலாலம்பூர்: [10:31 pm, 12/09/2021] Perumal Kuala Lumpur: குனோங் ஜெராய் மலயேறி உள்ளேன். முதல் அனுபவம். நடந்து தான் குழுவாகச் சென்றோம். உச்சியில் Telekom Tower. இருக்கிறது. ஓரிரு வீடுகளைக் காண முடிந்தது.

அங்கு பயிர் செய்யப்படும் காய்கறிகள் கெடா சுல்தானுக்கு அனுப்பப் படுமாம். அங்கு கோயில் எதனையும் காணவில்லை. அது1967ல் மலையேறியது.

பெருமாள் கோலாலம்பூர்: [10:33 pm, 12/09/2021] Perumal Kuala Lumpur: இப்பொழுது பொது மக்கள் காரில் செல்கிறார்களாம்

ராதா பச்சையப்பன்: இப்படி எல்லாம் பயம் காட்டினால் எங்கனம் நாங்கள் போய் செமிலிங் காடுகளையும், காய்ந்து போன நீர்வீழ்ச்சிகளையும் பார்ப்பதாம். 😳😳🤔🤔.

வெங்கடேசன்: உள்ளே செல்லும் போது அங்குள்ள சக்திகளிடம் அனுமதி கேட்டுச் செல்ல வேண்டும்

பெருமாள் கோலாலம்பூர்: போகலாம். தினமும் பொதுமக்கள் போகிறார்கள். மியூசியம் உள்ளது. பக்கத்திலே காட்டாற்று நீர் கொட்டுகிறது. பெரும் பாறைகளைக் காணலாம். கானகக் காட்சியில் மயங்கலாம்

ராதா பச்சையப்பன்: நன்றி சகோதரரே, 👌👍🙏🌹.

குனோங் ஜெராய் உச்சிக்குப் போக இரண்டு காட்டுப் பாதைகள் உள்ளன. Tapah Forest Reserve Trail - Singkir Forest Reserve Trail. இரண்டு பாதைகள்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நான் சிங்கிர் காட்டுப் பாதையைப் பயன்படுத்தினேன். சிவன் கோயில் உடைக்கப்பட்டு விட்டதாக பின்னர் சொன்னார்கள். எவ்வளவோ முயற்சி செய்தோம். எங்களால் பார்க்க இயலவில்லை. பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து கோயிலை மறைத்து விட்டதாகச் சிலர் சொன்னார்கள்,

வெங்கடேசன்: காடுகளுக்கு உள்ளும் அமானுஷ்ய சக்திகள் உண்டு கவனமாக இருக்க வேண்டும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: 1997 / 1998 கோவில் உடைக்கப்பட்டது ஐயா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்:  நானும் கேள்விப்பட்டேன். உறுதிபடுத்த முடியாமல் இருந்தது. ஜெராய் மலை உச்சியில் சிவன் கோயில் இருந்தற்கான ஒரு படத்தை கம்பியூட்டர் மூலமாக வரைந்து விட்டார்கள். பயம் காட்டவில்லை. உண்மைதான் சொல்கிறேன். குழுவாகப் போனால் பயப்பட வேண்டாம்.

பெருமாள் கோலாலம்பூர்:
நல்ல தகவல். இன்று என் கனவில் ராஜ ராஜ சோழன் வந்தால் நாளை என் செய்தி தலைப்பாக இருக்கும்.

கணேசன் சண்முகம் சித்தியவான்: [10:51 pm, 12/09/2021] Ganeson Shanmugam Sitiawan: ஐயா இச்செய்தி இன்று எடுக்கப்பட்டது

கணேசன் சண்முகம் சித்தியவான்:
[10:52 pm, 12/09/2021] Ganeson Shanmugam Sitiawan: கெடா மாநில பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் கூற்று. ஜெராய் மலைத் தொடரில் நடைபெறும் வழிபாடுகள், தியானங்கள், பூஜைகள் நிறுத்தப்பட வேண்டும். இஸ்லாத்துக்கு எதிரானது. அண்மையில் பெரும் வெள்ளத்துக்கு காரணமும் இங்கு நடைபெறும் பூஜைகள்தான் காரணமாம்.


மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: நாலு நம்பர் எடுப்பது... மண்டி பூங்ஙா... ஆடு வெட்டுவது கோழி வெட்டுவது... இப்படி படை எடுத்துச் செல்வதால் அங்குள்ள மக்களுக்கும் தொல்லை... நம்ப ஆட்களில் சிலர் மேலே கொட்டகை அடித்து குடியும் கும்மாளமுமாக பிடிபட்டார்களாம்.  ஒன்றும் சொல்கிற மாதிரி இல்லை.

வேலாயுதம் பினாங்கு: மலாக்கா, புலாவ் பெசாரிலும் இதே பிரச்சினை... தான்.






 

11 செப்டம்பர் 2021

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள்

தமிழ் மலர் - 11.09.2021

1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய் மொழிக் கல்வி முறை அமலில் இருந்தது. அதை அவர் விரும்பவில்லை.

தமிழர், சீனர் பிள்ளைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தன. அதனால் அவர்களுக்கு என்று தனியாகப் பள்ளிகள் தேவை இல்லை என்கிற ஒரு கருத்தை வெளியிட்டார்.
 

இந்தக் கட்டத்தில் சிலாங்கூர் மாநில ரெசிடெண்டாக டிரேச்சர் (W.H. Treacher) என்பவர் இருந்தார். இவர் தான் 1893-ஆம் ஆண்டு கிள்ளானில் இருக்கும் ஆங்கிலோ சைனீஸ் பள்ளியைத் தோற்றுவித்தவர் (ACS - Anglo Chinese School KLANG).

இவரும் தடாலடியாக ஒரு கட்டளை போட்டார். மலாய்ப் பள்ளிகளுக்கான கல்விச் செலவை மலாயா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும். அதைத் தவிர்த்து மற்றபடி மற்ற இனங்களின் தாய் மொழிக் கல்விச் செலவுக்கு அரசு பொறுப்பு ஏற்காது என்று கண்டிப்பாகச் சொன்னார். தமிழர்களும் சீனர்களும் தடுமாறிப் போனார்கள்.

இந்தக் கட்டத்தில் தான் தமிழ்ப் பள்ளிகளைத் தற்காக்க ஒரு சட்டம் உதவிக்கு வந்தது. 1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour ordinance) சட்டம். ஆங்கிலேயர்கள் உருக்கிய சட்டம். அந்தச் சட்டமே அவர்களைத் திசை திருப்பியது. அதனால் ஆங்கிலேய ஆளுநர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று சொல்ல முடியாது. தடுமாற்ரம் அடைந்தார்கள்.

1912-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டம் (Labour Ordinance 1912). மலாயா ஆங்கிலேய அரசால் அமல்படுத்தப்பட்ட சட்டம். இந்தச் சட்டம் தான் சரியான நேர்த்தில் தமிழ்ப் பள்ளிகளின் ஆபத்து அவசரத்திற்கு உதவி செய்தது.

1912-ஆம் ஆண்டு மலாயா தோட்டத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு ஒரு சட்டத்தை இயற்றி இருந்தார்கள். அந்தச் சட்டத்தில் ஒரு பிரிவு: ஒரு தோட்டத்தில் 7 வயதில் இருந்து 14 வயது வரையிலான பிள்ளைகள் 10 பேர் இருந்தால் போதும்; ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்ட வேண்டும் என்கிற சட்டப் பிரிவு.

(The British and rubber in Malaya, c 1890–1940 Jim Hagan and Andrew Wells University of Wollongong: The 1912 Labour Ordinance compelled the planters to set up ad-hoc schools for children of the plantation labour.)

ஆக இந்த 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டத்தின் வழி மலாயாவில் இருந்த ஒவ்வொரு தோட்ட நிர்வாகமும் கண்டிப்பாகத்  தமிழ்ப் பள்ளிகளை நிறுவ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டு இருந்தன.


அந்தக் கட்டத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் பல பிரிவுகள் இருந்தன. அதாவது டிவிசன்கள். எடுத்துக்காட்டாக கெடா மாநிலத்தில் சுங்கை பட்டாணி பகுதியில் டப்ளின் தோட்டம். ஏழு டிவிசன்கள். ஸ்கார்புரோ தோட்டத்த்த்தில் ஆறு டிவிசன்கள். ஜொகூர் சா ஆ தோட்டத்தில் ஆறு டிவிசன்கள்.

ஒவ்வொரு டிவிசனுக்கும் தனித்தனியாகப் ஒவ்வொரு பள்ளிக்கூடம் அமைக்கப் பட்டது. அந்த மாதிரி நிறைய பள்ளிகள் தோன்றின. 1920-ஆம் ஆண்டில் மட்டும் மலாயாவில் 122 தமிழ்ப்பள்ளிகள் உருவாகி விட்டன.

என்ன சொல்ல வருகிறேன் என்றால், 1912-ஆம் ஆண்டுத் தொழிலாளர் சட்டம் என்பது அப்போது அந்தக் காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சட்டம். இன்னும் அமலில் உள்ளது.

ஆக அந்தத் தொழிலாளர் சட்டம் உதவிக்கு வந்ததால், 1925-ஆம் ஆண்டு வரையில் மலாயா நாட்டுத் தோட்டங்களில் 235 தமிழ்ப் பள்ளிகள் புதிதாக நிறுவப்பட்டன.


தோட்டப் புறங்களில் தோட்ட நிர்வாகங்களே தமிழ்ப் பள்ளிகளை நிறுவின. பட்டணங்களில் தனியார் நபர்கள்; பொது இயக்கங்கள் போன்றோர் தமிழ்ப் பள்ளிகளை நிறுவினார்கள். சரி.

காலனித்துவ ஆட்சியில் இருந்து மலாயா சுதந்திரம் அடைந்த போது பற்பல சட்டத் திருத்தங்களைச் செய்தார்கள். ஆனால் மேலே சொன்ன அந்தத் தொழிலாளர் சட்டத்தில் மட்டும் மாற்றம் செய்யவில்லை. அதை அப்படியே விட்டு விட்டார்கள்.

1930-ஆம் ஆண்டு முதல் முறையாக தமிழ்ப் பள்ளிகளைக் கண்காணிக்க ஆய்நர் (Inspectorate of Tamil School) ஒருவர் நியமிக்கப் பட்டார். ஜி.ஆர். பில்வர்  என்பவர் பொறுப்பு வகித்தார்.

1937-ஆம் ஆண்டில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆங்கிலேய அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளுக்குச் சிறப்பு செயற்குழு ஒன்றை நிறுவியது.

இந்தச் செயற் குழுவின் பரிந்துரையின் கீழ் வருடத்திற்கு ஒரு மாணவருக்கு ஆறு டாலராக இருந்த நிதி ஒதுக்கீடு எட்டு டாலராக உயர்த்தப் பட்டது. அத்துடன் 1938-ஆம் ஆண்டு வரை 547 தமிழ்ப் பள்ளிகள் நாடு முழுவதும் நிறுவப்பட்டன. பெரிய ஒரு முன்னேற்றம்.


1938-இல் 13 அரசு தமிழ்ப்பள்ளிகள், 511 தோட்டத் தமிழ்ப்பள்ளிகள்; 23 சமயப் பரப்புத் தமிழ்ப்  பள்ளிகள். ஆக மொத்தம் 547 தமிழ்ப்பள்ளிகள். அந்தப் பள்ளிகளில் 22,820 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 15,584. பெண்கள் 7236.

இப்படி வேகமாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சி இரண்டாம் உலக போரினால் தடைப் பட்டது. 1942-ஆம் ஆண்டு ஜப்பானியரின் ஆட்சிக் காலம். பெரும் பாதிப்புகள். பல தமிழ்ப் பள்ளிகள் மூடப் பட்டன. 644-ஆக இருந்த தமிழ்ப் பள்ளிகள் 1943-ஆம் ஆண்டில் 292-ஆக குறைந்து போயின.

பின்னர் அந்த எண்ணிக்கை கூடியது. 1947-இல் 741 தமிழ் பள்ளிகள். 33,954 மாணவர்கள் பயின்றார்கள். இவர்களில் ஆண்கள் 20,834. பெண்கள் 13,120.

1956-இல் 47,407 மாணவர்கள். ஆண்கள் 26,128. பெண்கள் 21,279.

1957-இல் 50,766 மாணவர்கள். ஆண்கள் 26,153. பெண்கள் 24,613.

தமிழ்ப்பள்ளிகளின் எண்ணிக்கை 1930-இல் 333; 1938-இல் 547; 1947-இல் 741; 1957- இல் 888. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கல்வி கொள்கையின் மாற்றம் மற்றும் தொழிலாளர் இடம்பெயர்வு. அதனால் பல பள்ளிகளை மூடப்பட்டன. அந்த வகையில் 1963-இல் 720 பள்ளிகள். இப்போது இந்த 2021-ஆம் ஆண்டு 526 பள்ளிகள் மட்டுமே உள்ளன. சரி.

1951-ஆம் ஆண்டில் ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எஸ்.ஜே. பர்னஸ் (Sydney Francis Barnes) என்பவரின் தலைமையில் மலாயாவில் கல்வி ஆய்வு செய்யப் பட்டது. (Report of the Committee on Malay Education, Federation of Malaya).

அதன்படி ஓர் அறிக்கை வெளியிடப் பட்டது. அறிக்கையின் பெயர் பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). அந்த அறிக்கையில் மலாய் மொழி அல்லாத தாய் மொழிப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை என கூறப்பட்டது. இதனைச் சீனச் சமூகமும்; இந்தியச் சமூகமும் கடுமையாக எதிர்த்தன.

பார்ன்ஸ் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர்ச் சமூகத்தின் சார்பில் ஒரு கல்விக்குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழுவில் ம.இ.கா. தலைவர் தேவாசர்; சைவப் பெரியார் இராமநாதன் செட்டியார்; ஆதி நாகப்பன்; தவத்திரு சுவாமி சத்தியானந்தா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இந்தக் கல்விக் குழுவினர் பார்ன்ஸ் கல்வி அறிக்கைக்கு எதிராக தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெர்னஸ் அறிக்கையில் இருக்கும் சிக்கல்களைக் களைய அப்போதைய கல்வி அமைச்சர் ரசாக் தலைமையில் மேலும் ஒரு கல்வி குழு நியமிக்கப்பட்டது. அதுவே இப்போது பலராலும் அறியப்படும் ரசாக் திட்டம்.

இதை ரசாக் அறிக்கை (Razak Report) என்றும் அழைக்கலாம். மலாயா சுதந்திரம் அடைந்த போது கல்வி அமைச்சராக இருந்தவர் துன் அப்துல் ரசாக். மலாயா கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழுவிற்குத் தலைவராக இருந்தவர்.

மலாயா கல்விக் கொள்கையில் ஒரு சீர்த்திருத்தைக் கொண்டு வர வேண்டும் எனும் நோக்கத்தின் அடிப்படையில் ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் ரசாக் அறிக்கை ஒருங்கிணைக்கப் பட்டது. மலாயா கல்விக் கட்டமைப்பின் அடிப்படையாக அந்த ரசாக் அறிக்கை விளங்குகிறது. அதன் மூலம் சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி வழங்கப் பட்டது.

மறுபடியும் சொல்கிறேன். சீன, தமிழ்ப் பள்ளிகள் தொடர்ந்து இயங்கும் விதி; 1957-ஆம் ஆண்டு கல்வி அரசாணை பிரிவு 3-க்குள் அடங்குகிறது. அதற்கு ரசாக் அறிக்கை வழிவகுத்துக் கொடுக்கிறது.

ரசாக் அறிக்கை வருவதற்கு முன்னர் இரு வேறு அறிக்கைகள் இருந்தன. முதலாவது பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report). இரண்டாவது பென் பூ அறிக்கை (Fenn-Wu Report).

இந்த இரு அறிக்கைகளில் பார்ன்ஸ் அறிக்கையைப் பெருவாரியான மலாய்க்காரர்கள் ஆதரித்தார்கள். பென் பூ அறிக்கையைச் சீனர்களும் தமிழர்களும் ஆதரித்தார்கள். இனங்களுக்கு இடையில் இணக்கப் பிணக்குகள் தோன்றின. அதைச் சரி கட்டவே ரசாக் அறிக்கை தயாரிக்கப் பட்டது.

சுருக்கமாகச் சொன்னால் ரசாக் அறிக்கை என்பது ஒரு சமரசக் கல்வி அறிக்கை ஆகும். இரு தரப்புகளையும் சமரசப் படுத்தும் ஒரு திட்டம்.

ரசாக் அறிக்கை வழியாக மலாய், ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் தொடக்க நிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய், ஆங்கிலப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாக இயங்க முடியும். மலாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகள் தேசியப் பள்ளிகளாக அழைக்கப் பட்டன.

ஆங்கிலம், சீனம், தமிழ்ப் பள்ளிகள் தேசிய மாதிரி பள்ளிகளாக அழைக்கப் பட்டன. அதுவே இன்னும் இந்த நாட்டின் கல்வி அமைவு முறையின் அடித்தளமாக விளங்கி வருகிறது

எல்லாப் பள்ளிகளுக்கும் அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கப் பெறும். எந்தப் பள்ளியாக இருந்தாலும் ஒரே ஒரு பொதுவான தேசியக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.

ஆக அந்த வகையில் 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் 550-இன் கீழ் தேசிய மாதிரி பள்ளிகள் இயங்குவதற்கு உரிமை வழங்கப் பட்டது. தேசிய மாதிரி பள்ளிகள் என்றால் ஆங்கில, சீனம், தமிழ்ப் பள்ளிகள் ஆகும். இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் மட்டுமே தமிழ் மொழியின் உரிமைகளைக் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் தமிழ் மொழி மெல்ல மெல்லக் கரைந்து போகும்.

அந்த வகையில் தமிழ் மொழியும்; தமிழ் இனமும் எப்போதுமே ஒன்றை ஒன்று சார்ந்து நிற்பவை. ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை.

தமிழ் பள்ளிகளின் உரிமை எந்தச் சூழ்நிலையிலும் பாதிப்பு அடையக் கூடாது. அதே போல ஒரு மொழியை அழித்து விட்டு; இனம் என்கிற ஓர் அடையாளத்தை எந்த இனமும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. முடியவே முடியாது. ஆக மொழியை இழந்தவர்கள் என்றைக்கும் ஓர் இனமாக கருதப் படுவது இல்லை.

தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடப்பாடு. தமிழ்ப் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டியது அவர்களின் கடன்பாடு. இது தமிழின் நியதி அல்ல. தமிழர் இனத்தின் உரிமை நிலைப்பாடு.

தமிழ் பள்ளிகளின் உரிமைகளைக் காப்பாற்றினால் தான்; தமிழ் மொழியைக் காப்பாற்ற முடியும். தமிழ் பள்ளிகள் இல்லை என்றால் தமிழ் மொழி இல்லை. தமிழ் மொழி இல்லை என்றால் தமிழர்கள் இல்லை. முதலில் இதை உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ் மொழி மேலே எழுந்து வர முடியாமல் செய்வதற்குப் பற்பல திட்டங்கள் தீட்டப் பட்டன. அந்தத் திட்டங்களை அப்போது யார் கொண்டு வந்தார்கள்; இப்போது யார் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கடந்த 205 ஆண்டுகளாகத் தமிழ் மொழி கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. அந்தக் கால இடைவெளியில் பற்பல இடையூறுகள்; பற்பல சவால்கள்; பற்பல போராட்டங்கள். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகள் 1900-ஆம் ஆண்டுகளில் சில இடர்பாடுகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

எப்போதும் எதையும் சொல்கிற மாதிரி இல்லை. அரசியல்வாதிகள் சிலரின் குண்டக்க மண்டக்க குத்தூசிகள் எப்போது வேண்டும் என்றால் குத்தலாம். குடையலாம்.

உலகம் முழுவதும் தமிழர்கள் பரந்து விரிந்து வாழ்கின்றார்கள். எங்கே வாழ்ந்தாலும் அவர்கள் தங்களின் தாய் மொழியைக் கட்டி காக்கும் மரபை விட்டுக் கொடுக்கக் கூடாது. அப்படி விட்டுக் கொடுத்தால் அங்கே தமிழர் இனத்தின் விந்துயிர்கள் வேர் அறுக்கப் படுகின்றன என்பதை நினைவில் கொள்வோம்.  

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
(11.09.2021)



 

07 செப்டம்பர் 2021

மலாயா அகத்தியர் சிலை

தமிழ் மலர் - 07.09.2021

சிதைவுகளில் பல சிதைவுகள். இனச் சிதைவு; மொழிச் சிதைவு; உணர்வுச் சிதைவு; பண்பாட்டுச் சிதைவு; பாரம்பரியச் சிதைவு; ஆளுமைச் சிதைவு; கட்டுச் சிதைவு; கூட்டுச் சிதைவு. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்தச் சிதைவுகளில் தலைச் சிதைவாக அமைவது வரலாற்றுச் சிதைவு. அதாவது ’ரூம்’ போட்டு ’டிஸ்கசன்’ பண்ணி ’பிளேன்’ போட்டுச் சிதைக்கும் சிதைவு. தாராளமாகச் சொல்லலாம்.


இதில் இருப்பதை இல்லாமல் செய்வது இருக்கிறதே அதுதான் சிறப்பான வரலாற்றுச் சிதைவு. இந்தக் காலத்தில் மட்டும் அல்ல. எல்லாக் காலத்திலும் வரலாற்றுச் சிதைவுகளும், நல்லபடியாக நாலுகால் பாய்ச்சல் போட்டு வந்து இருக்கின்றன.

அந்த வகையில் மலையூர் மலைநாட்டிலும் தமிழர்கள் சார்ந்த வரலாறு அன்று மறைக்கப் பட்டன. இன்று மறைக்கப் படுகின்றன. முயற்சிகள் செய்யப் படுகின்றன. இப்படி எழுதுவதால் ‘அரெஸ்ட்’ பண்ணி அடைத்து வைக்கலாம். பிரச்சினை இல்லை. முழுசா நனைந்த பின்னர் முக்காடு தேவை இல்லை.

மலாயா தமிழர்களின் நாகரிகம், தமிழர்களின் பண்பாடுகளைச் சிதைக்க, ஒரு கூட்டம் இரவு பகலாகத் தூக்கம் கெட்டு, கொசுக்கடி பட்டு ஆளவட்டம் போடுகிறது. உண்மைதானே!


சமரசத்துக்கு இடம் அளிக்காமல்... அதிகாரத்துக்கு அடி பணியாமல்... நேர்மையான முறையில் செய்திகளை மக்களிடம் கொண்டுப் போய்ச் சேர்ப்பதே நம் கடமை.

வரலாறு என்பதைப் பிரித்துப் பாருங்கள். வரல் ஆறு என்று வரும். வரல் என்றால் நிகழ்வு. ஆறு என்றால் பாதை. நடந்து வந்த பாதையின் நிகழ்வுகளே வரலாறு. உண்மையில் என்ன நடந்தது என்பதைச் சொல்வதுதான் வரலாறு.

வரலாற்றுச் சிதைவு என்பது ஓர் இனத்தின் சிதைவு. ஒரு மொழியின் சிதைவு.  என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் என்று சொல்லிக் கொண்டு கட்டுரைக்கு வருகிறேன்.

சிம்மோர் அகஸ்தியர் சிலையைப் பற்றி ஏற்கனவே பதிவு செய்து இருக்கிறேன். இருப்பினும் காலத்தின் கட்டாயம். மீண்டும் பதிவு செய்ய வேண்டி வருகிறது.

மலாயா வரலாற்றில் கங்கா நகரம் என்பது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாற்றுப் புகலிடம். தமிழர்களின் பார்வையில் கங்கை நகரம். கலிங்கர்களின் பார்வையில் கலிங்கா நகரம். உலக வரலாற்றுப் பார்வையில் கங்கா நகரா. இப்போதைக்கு கங்கா நகரம்.


இந்த கங்கா நகர வரலாற்றில் தான் சிம்மோர் அகஸ்தியர் சிலையும் வருகிறது. ஒரே வார்த்தையில் சொன்னால் கங்கா நகரமும்; சிம்மோர் அகஸ்தியர் சிலையும் மறைக்க முடியாத மாபெரும் காலச் சுவடுகள்.

அந்தக் காலச் சுவடுகளில் புற்கள் முளைக்கலாம். பூண்டுகள் முளைக்கலாம். காடுகள் செழிக்கலாம். நதிகள் வழியலாம்.

இருந்தாலும் இன்றைக்கும் சரி; இனி என்றைக்கும் சரி; கங்கா நகரம் எனும் பெயர் மட்டும் அப்படியே ஆலம் விழுதுகளைப் போல ஆர்ப்பாட்டம் இல்லாமல் அழகாய்ப் பயணிக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு வரலாற்று உண்மை.

1962-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேராக், சிம்மோர் பள்ளத்தாக்கில் (Chemor Valley), ஜாலோங் (Jalong, Chemor, Perak, Malaysia) எனும் இடத்தில் ஓர் அகத்தியர் சிலையைக் கண்டு எடுத்தார்கள்.


அந்தச் சிலையின் எடை 34 பவுண்டுகள். அதாவது 15.4 கிலோ. உயரம் 1 அடி எட்டரை அங்குலம். 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்கலச் சிலை. மலேசியாவில் கண்டு எடுக்கப்பட ஓர் அரிய வரலாற்றுப் படிமம். இந்தச் சிலை இப்போது கோலாலம்பூர் மலேசிய அரும்பொருள் காட்சியகத்தில் உள்ளது.

கங்கா நகரத்து வரலாற்றில் ஓர் ஆழமான உண்மையை இந்தச் சிலை வழங்கி உள்ளது. கங்கா நகரம் என்பது இந்து மதம் (சிவ வழிபாடு) சார்ந்த ஓர் அரசு என்பதை இந்தச் சிலை உறுதி படுத்தி உள்ளது. உலக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கனவே இந்தக் கருத்தை வலியுறுத்தி உள்ளனர்.

கி.பி. 1025-ஆம் ஆண்டில் கங்கா நகரம் சிதைவுற்றது. அதன் பின்னர் அந்த அரசு ஆட்சி செய்த பகுதிகளின் அருகாமையில் சின்னச் சின்ன ஆளுமைகள் உருவாகின. அவை புத்த மதம் சார்ந்தவை.

சீனாவில் இருந்து வந்த சீனர்கள் கங்கா நகரப் பகுதிகளில் புத்த மதத்தைப் பரப்பினார்கள். புத்த மதம் வருவதற்கு முன்னர் கங்கா நகர அரசு இந்து மதம் சார்ந்த அரசாக இயங்கி வந்து உள்ளது.


அந்தக் கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கில் இந்து கோயில்கள் நிறையவே இருந்து உள்ளன. அரச ஆசியாடிக் கழகத்தின் மலேசியக் கிளையின் ஆய்விதழ் (Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society - JMBRAS) சான்றுகள் உள்ளன.  அவை ஆர். ஓ. வின்ஸ்டெட் (R. O. Winstedt) எனும் மலாயா ஆய்வாளரின் சான்றுகள். ஒரு செருகல்.

உலகிலேயே மிகப் பெரிய ஈயப் பள்ளத்தாக்கு பேராக் மாநிலத்தில் உள்ள கிந்தா பள்ளத்தாக்கு. ஈயக் கனிமத்திற்குப் பேர் போன இடம்.

1900-ஆம் ஆண்டுகளில் ஈயம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டதும், உலக மக்களின் பார்வை இந்தப் பக்கமாய்த் திரும்பியது. ஆயிரக் கணக்கான சீனர்கள், கிந்தா பள்ளத்தாக்கிற்குப் படை எடுத்தார்கள்.

கரடுமுரடான காடுகள் அழிக்கப் பட்டன. பச்சைப் பசும்புல் லாலான் மேடுகள் எரிக்கப் பட்டன. ஓடைகள், சமவெளிகள், பொட்டல் காடுகள் போன்றவை பள்ளங்கள் தாண்டிய பாலைவனமாக மாறின.


அங்கே ஈய லம்பங்கள் ஈசல் காடுகளாய் இளைப்பாறின. ஈயம் விளையாடி சீனர்கள் பலர் பெருத்த பணக்காரர் ஆனார்கள். இது ஈப்போ நகரத்தின் ஈய வரலாறு.

காடு விளைந்தாலும் மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போகும் என்று சொல்வார்கள். ஆனால் கிந்தா பள்ளத்தாக்கில் அப்படி அல்ல.

கிந்தா பள்ளத்தாக்கின் கானகங்களில் இருந்த இந்து, புத்தக் கோயில்கள் மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கலாம்; அந்தக் கோயில்களில் இருந்த சிலைகளும் ஆழ் மண்ணுக்குள் அப்படியே ஆழ்ந்து போய் இருக்கலாம். வேதனையான கணிப்பு.

இருப்பினும் அந்தப் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து, புத்த மத வெண்கலங்கச் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

அந்த வகையில் கிந்தா பள்ளத்தாக்கு ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் இந்திய மயமாக்கப்பட்ட ஒரு முக்கியமான இராச்சியத்தின் அடித் தளமாக இருந்து இருக்கலாம். அதுவே வரலாற்று ஆசிரியர்கள் பலரின் ஒருமித்தக் கருத்து.

பேராக் ஆற்றின் துணை நதிகளான கிந்தா மற்றும் பெர்ணம் நதிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் முக்கிய ஆறுகள். இந்த ஆறுகளில் ஆண்டுதோறும் பெரிய பெரிய வெள்ளங்கள் ஏற்படுவது உண்டு.

தவிர ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அந்தப் பள்ளத்தாக்கில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்ளன. அதனால் கிந்தா பள்ளத்தாக்கில் இருந்த வழிப்பாட்டுத் தளங்கள் ஒவ்வோர் ஆண்டும் ஆழத்தில் மேலும் ஆழமாகப் புதைப்பட்டுப் போய் இருக்கலாம்.

வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாகக் காலம் காலமாக வண்டல் மண் குவிந்து வருவதால் கங்கா நகரத்தின் பண்டைய குடியிருப்புகள் புதைபட்டுப் போய் இருக்கலாம்.

இருந்தாலும் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் வெண்கலச் சிலைகளைச் சுரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அந்தச் சிலைகள் அனைத்தும் தரைப் பகுதியில் இருந்து கீழே மிக ஆழமான இடங்களில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டவை. சரி. ஜாலோங் வெண்கலச் சிலைக்கு வருவோம்.

சிம்மோர் பள்ளத்தாக்கில் ஈயம் தோண்டி எடுப்பதற்காக, அப்போதைய மலாயா அரசாங்கம் பல இடங்களைப் பொது மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்தது.

சிலை கிடைத்த இடம் தே செங் சியூ (Teh Seng Chew) எனும் சீனருக்குச் சொந்தமான நிலமாகும். ஈயம் தோண்டுவதற்காக அவருக்குக் கிடைத்த அரசாங்க நிலம். தே செங் சியூ சுங்கை சிப்புட் பகுதியைச் சேர்ந்தவர்.

அந்தச் சீனருக்கு கிடைத்த இடத்தில் ஈயம் இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. அதனால் அந்த இடத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யலாம் என முடிவு செய்தார். அதற்காகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி நிலத்தைச் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.

முதலில் ஒரு டிராக்டர் காட்டுப் புதர்களைச் சுத்தப் படுத்திப் போய்க் கொண்டு இருக்கும். அந்த டிராக்டருக்குப் பின்னால் ஒரு குழுவினர் மண்வெட்டிகளைக் கொண்டு மண்ணைக் கிளறும் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்போது திடீரென ஓர் உலோகப் பொருள், ஒரு தொழிலாளரின் மண்வெட்டியில் பட்டுத் தெறித்தது.

அடையாளம் தெரியாத ஓர் உருவத்தின் சிலை. அந்தத் தொழிலாளி சற்று ஐதீக நம்பிக்கைவாதி. அவர் அந்தச் சிலையைத் தொடவில்லை. பயந்து கொண்டு அவருடைய கண்காணிப்பாளரை அழைத்து விசயத்தைச் சொன்னார்.

அந்தச் சிலையைப் பற்றிய செய்தி கண்காணிப்பாளர் மூலமாக நிலத்தின் சொந்தக்காரர் தே செங் சியூவிற்குப் போய்ச் சேர்ந்தது. அப்போது அவர் சுங்கை சிப்புட்டில் இருந்தார்.

அவரும் அந்த இடத்திற்கு விரைந்து வந்தார். அந்தச் சிலையைப் பார்த்து அவரும் அதிசயித்துப் போனார். சிலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கும் போது டத்தோ (துன்) சம்பந்தன் அவர்களின் நினைவு வந்தது.


தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் துன் சம்பந்தன் அவர்களுக்கு மிகுந்த ஆர்வம். இந்தக் கண்டுபிடிப்பைப் பற்றி தே செங் சியூ, அமைச்சருக்குத் தெரிவித்தார்.

துன் சம்பந்தன் அப்போது அஞ்சல் தொலைத் தொடர்பு அமைச்சர் (Minister for Posts and Telecommunications). அந்தச் சமயத்தில் கோலாலம்பூரில் இருந்தார். அந்தச் சிலை கோலாலம்பூருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

துன் சம்பந்தன் அவர்கள் அந்தச் சிலையைப் படம் பிடித்து மலேசிய அரும் காட்சியகங்களின் இயக்குநருக்கு அனுப்பி வைத்தார். அப்போது முபின் செபர்ட் (Mubin Sheppard) என்பவர் இயக்குநராக இருந்தார். இவர் மலாயாவில் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்.

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையின் படங்கள் உலகளாவிய நிலையில் நான்கு வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டன.

ஆய்வாளர்கள் நால்வர்களின் விவரங்கள்:

1. டாக்டர் ஏ.பி. தோன்புரி, தாய்லாந்தின் கிரிஸ்வோல்ட் மற்றும் பிரீஸ்வுட் அறக்கட்டளை, மேரிலாந்து, அமெரிக்கா. (Dr. A.B. Griswold of Thonburi, Thailand and the Breezewood Foundation, Maryland, U.S.A.)

2. ஸ்ரீ சி.சிவராமமூர்த்தி, தேசிய அருங்காட்சியகத்தின் மேலாளர், ஜனபத், புதுடில்லி, இந்தியா. (Shri C. Sivaramamurthi, Keeper of the National Museum, Janpath, New Delhi.)

3. டாக்டர் டி காஸ்பரிஸ், லண்டன் பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல்; ஆப்பிரிக்க ஆய்வுகள் துறை, லண்டன், இங்கிலாந்து (Dr. de Casparis from the School of Oriental and African Studies, University of London)

4. டாக்டர் பி.எச். பாட், லெய்டன், ரிஜக்ஸ் அரும்காட்சியத்தின் இயக்குனர், நெதர்லாந்து (Dr. P.H. Pott, the Director of the Rijksmuseum, Leiden, Netherlands)

சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலையைப் பற்றி ஆய்வுகள் செய்யப் பட்டன. 11-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிலை என்பதை நால்வரும் உறுதி படுத்தினார்கள்.

அதன் மூலமாகத் தீபகற்ப மலாயாவின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலக் கட்டத்தில் இந்து மதத்தின் சிவ வழிபாட்டைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வுகளின் முடிவுகள்

1. டாக்டர் கிரிஸ்வோல்ட் (Dr. A.B. Griswold) கருத்துகள்: அந்த ஜாலோங் வெண்கலச் சிலை (Jalong Bonze) மலாயாவில் செய்யப் பட்டு இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. அந்தச் சிலை எங்கே கிடைத்ததோ அங்கே இருந்து மிக அருகாமையில் உள்ள ஓர் இடத்தில் தான் அந்தச் சிலையும் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

7-ஆம் - 9-ஆம் நூற்றாண்டு காலத்தில் செய்யப்பட்டு இருக்கலாம். இந்தச் சிலைக்கும் ஸ்ரீ விஜய பேரரசில் கண்டு எடுக்கப்பட்ட சிலைகளுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உள்ளன.

2. சி. சிவராமமூர்த்தி (C. Sivaramamurthi): இது அகத்திய முனிவரின் சிலை.

3. டாக்டர் டி காஸ்பாரிஸ் (Dr. de Casparis): அகத்திய முனிவரின் தோற்றம் என்பது மிகச் சரி. ஆனாலும் சிலையின் உதடுகள் ஓர் இந்தோனேசியர் அல்லது ஒரு மலாய்க்காரரின் உதடுகளின் சாயலில் உள்ளன. ஒரு ரிஷியின் தோற்றமும் உள்ளது. மஜபாகித் பேரரசில் காணப் பெற்ற சிலைகளுக்கு ஒத்துப் போகிறது.

4. டாக்டர் பி.எச். போட் (Dr. P.H. Pott): இந்து ஜாவானிய வெண்கலைச் சிலைகளில் சிவகுரு (Siva-Guru) சிலைகள் உள்ளன. அந்தச் சிலைகளில் ஒன்றைப் போல சிம்மோர் ஜாலோங் வெண்கலச் சிலை அமைந்து உள்ளது.

கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்: சிம்மோர் ஜாலோங் வனக் காப்பகப் பகுதியின் மலை அடிவாரத்தில் சுண்ணாம்புக் குகைகள் உள்ளன. அந்தப் பகுதியில் ஓராங் அஸ்லி மக்கள் வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள்.  

அவர்களை விசாரித்துப் பார்த்ததில் காட்டுக்குள் ஒரு பெரிய கோயில் இருந்ததாகச் சொல்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் தலைமுறை தலைமுறையாக அந்தக் கோயிலைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள். ஒரு புராணக் கதையாகவும் இருந்து உள்ளது.

இருப்பினும் சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதியில் எங்கோ ஓர் இடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான இந்து கோயில் இருக்கலாம். இந்த வெண்கலைச் சிலைக்கும் அந்தக் கோயிலுக்கும் தொடர்புகள் இருக்கலாம்.

இந்தச் சிலை ஏன் அந்த சிம்மோர் ஜாலோங் காட்டுப் பகுதிக்குப் போக வேண்டும்? மலை அடிவாரத்தின் மண்ணுக்குள் புதைந்து கிடக்க வேண்டும். தைப்பிங் அல்லது பீடோர் பகுதியில் இருக்க வேண்டிய சிலை எப்படி சிம்மோர் ஜாலோங் காட்டுக்குள் போனது?

இந்தக் கேள்விகளுக்கு வரலாற்று அடிப்படையில் பதில் காண வேண்டும்.

அத்துடன் ராயல் ஆசியாட்டிக் வரலாற்றுப் பதிவுகளைத் தொடர்ந்து அணுக்கமாகப் படித்து வருகிறேன். 1885-ஆம் ஆண்டில் இருந்து மலாயாவைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகள் அடங்கி உள்ளன. அவற்றுள் Royal Asiatic Society. Vol. XVIII 1940 தொகுதியில் தான் அகத்தியர் வெண்கலச் சிலையைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

சிம்மோர் ஜாலோங் மலை அடிவாரப் பகுதிக்குச் சென்று களப் பணியில் ஈடுபடலாம் என முடிவு செய்து உள்ளேன். போதுமான அனுமதிப் பத்திரங்கள் தேவை. ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். கொரோனா தாக்கம் குறைந்ததும் பயணங்கள் தொடரும்.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
07.09.2021

இந்தக் கட்டுரைக்கான சான்றுகள்:


1. "Treasure Trove Among the Tapioca: A Tenth Century Malayan Bronze”, MH, 8, 1 (1962) 11-13

2. A.B. Griswold,”The Jalong Bronze”, FMJ, 7, 1962, 64-66.

3. Journal of the Malayan Bramch of the Royal Asiatic Society. Vol. XVIII 1940, Singapore Printers Limited 1940.

4. Art, archaeology and the early kingdoms in the Malay Peninsula and Sumatra: c.400-1400 A.D. Vol: 1. Nik. Hassan Shuhaimi.

5. https://www.metmuseum.org/art/collection/search/77663