21 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள் - 19.10.2019

அண்மைய காலங்களில் இரு வகையான வாதங்கள் உலகை உலுக்கிக் கொண்டு வருகின்றன. ஒன்று தீவிரவாதம். மற்றொன்று பயங்கரவாதம். 



தீவிரவாதம் என்பது ஒரு கொள்கையை வன்முறை மூலமாக நிலைநாட்டச் செய்வது. முற்றிப் போனால் அதுவே பயங்கரவாதம் என்று பெயர் எடுக்கிறது. இந்த இரண்டுமே தேவையற்ற மனிதப் பிடிவாதங்கள்.

ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்குத் தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் மூலமாக மிரட்டல்கள் வரலாம். அப்படி வந்தால் கண்டிப்பாக அதை எதிர்த்துப் போராட வேண்டியது அவசியம்.

இருந்தாலும்  அந்தப் போராட்டத்தில் ஒரு  சமநிலை இருக்க வேண்டும். அதாவது ஒரு சமச் சீர் இருக்க வேண்டும். எப்படி என்று கேட்கிறீர்களா?




அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள் எனும் இந்த இரண்டு உரிமைகளும் மீறப் படாமல்... ஒரு சமநிலையில் அந்தத் தேசியப் பாதுகாப்புப்  போராட்டம் இருக்க வேண்டும்.

நீதிக் கொள்கைகள் என்பது இயற்கையாகவே அமைந்துவிட்ட மனிதக் கொள்கைகள். மனிதம் பேசும் மனசாட்சிக் கொள்கைகள்.

என்னதான் வந்தாலும் போனாலும், அந்த இயற்கையின் நீதி நியாயமானக் கொள்கைகள் நிலை நாட்டப்பட வேண்டும். அதே சமயத்தில் மனித உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் என்றைக்கும் மீறப்படக் கூடாது. சரி.

அரசியலமைப்பு உரிமைகள்; அடிப்படை மனித உரிமைகள். இந்த இரண்டு உரிமைகளும் நிலை நாட்டப் படுவதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. 




அது மட்டும் அல்ல. அந்தப் பாரபட்சம் இல்லாமை என்பது காலா காலத்திற்கும் நீடிக்கப்பட வேண்டும். அதாவது அரசு நிர்வாக அதிகாரிகளும் சரி; காவல் துறை அதிகாரிகளும் சரி; இரு தரப்பும் இணைந்து சேவை செய்ய வேண்டும்.

சோஸ்மா தெரியும் தானே. கடுமையான தடுப்புக் காவல் சட்டம். பலரும் எதிர்த்துப் போராடும் சட்டம்.

பக்காத்தான் அரசாங்கத்தைப் பொருத்த வரையில், அந்தச் சோஸ்மா சட்டம் என்பது மேலே சொல்லப்பட்ட அந்தச் சமநிலைக்குச் சாதகமாக அமையவில்லை என்பதே நம்முடைய கருத்து. மன்னிக்கவும்.

2012-ஆம் ஆண்டில் இந்தச் சோஸ்மா நடைமுறைக்கு வந்தது. அதில் இருந்து நூற்றுக் கணக்கான பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கால வரையறை இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். 




இதற்கு முன்னர் ஐ.எஸ்.ஏ. எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Internal Security Act, Malaysia) அமலில் இருந்தது. 1957-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததும் அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப் பட்டது.

1960 ஜுன் 20-ஆம் தேதி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் சட்டமாக அங்கீகரிக்கப் பட்டது. 1972 ஆகஸ்டு 1-ஆம் தேதி திருத்தப் பட்டது. அதையும் நினைவில் கொள்வோம்.

(Act No. 18 of 1960) Revised: 1972 (Act 82 w.e.f. 1 August 1972)

எந்தவிதக் குற்றச்சாட்டுகளும் இல்லாமல், விசாரணை இல்லாமல், தனிமனிதர் ஒருவரைச் சந்தேகத்தின் பேரில், இரண்டு ஆண்டுகள் தடுத்து வைக்க அந்தச் சட்டம் வகை செய்கிறது.




இந்தச் சட்டத்தின் கீழ், தொழிற்சங்கவாதிகள், மாணவர்த் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், மனித உரிமைப் போராட்டவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். வலைப் பதிவாளர்களும், ஊடகவியலாளர்களும் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

2005-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் 44 ஆண்டு கால வரலாற்றில் 10,662 பேர் கைது செய்யப் பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 4,139 பேர் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப் பட்டு இருக்கிறார்கள். 2,066 பேர் இடம் பெயர்த்தப் பட்டு இருக்கிறார்கள்.

2013-ஆம் ஆண்டு ஜனவரி 31 வரை, அந்தச் சட்டத்தின் கீழ் 10,883 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டு விட்டனர்.

தவிர 1984 - 1993-ஆம் ஆண்டுகளில் (பத்தாண்டுகள்) அந்தச் சட்டத்தின் கீழ் 12 பேர் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள்.




தடுப்புக் காவல் முறையை 1948-இல் மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்கள் நடைமுறைக்கு கொண்டு வந்தனர். மலாயா அவசர காலத்தின் போது மலாயா கம்யூனிஸ்டுக் கட்சியினர் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

அவர்களை ஒடுக்குவதற்காக, தடுப்புக் காவல் முறை மலாயாவில் அமலுக்கு வந்தது. அன்றைய காலத்தில், அதாவது 1948-இல், தடுப்புக் காவல் முறை ஓர் அவசரகாலச் சட்டமாகப் பிரகடனம் செய்யப்பட்டு இருந்தது. அந்தச் சட்டம் இயற்றப் படுவதற்கு மூல காரணமாக இருந்தவர் சர். எட்வர்ட் ஜெண்ட் எனும் பிரித்தானிய உயர் ஆணையர் ஆவார்.

அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஒருவரைத் தற்காலிகமாக, ஓர் ஆண்டு காலத்திற்குத் தடுப்பு காவலில் வைக்க முடியும். வன்முறைகளைக் கட்டுப் படுத்துவதே அந்தச் சட்டத்தின் தலையாய நோக்கமாக இருந்தது. 1960-ஆம் ஆண்டு மலாயாவில் அவசர காலம் முடிவுக்கு வந்தது. மலாயா அவசரகாலச் சட்டமும் நீக்கப் பட்டது.

ஆனாலும் மலாயா அவசரகாலச் சட்டத்திற்குப் பதிலாக, 1960-ஆம் ஆண்டு மலேசிய அரசியலமைப்பின் 149-ஆவது விதியின்படி, புதிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 




இருப்பினும், மலாயா அவசரகாலச் சட்டத்திற்கு இணையான தடுப்புக் காவல் முறை மட்டும், இதுநாள் வரையிலும் தக்க வைக்கப்பட்டு வருகிறது. அனைத்துலக மனித உரிமைக் கழகத்தின் கண்டனத்திற்கும் உள்ளாகி வருகிறது.

மலாயாவின் அவசரகாலத்தின் போதும் அதன் பின்னரும் கம்யூனிசச் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்ப்பதே, உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று வலியுறுத்தப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் மிகைப்படியான அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களும் உறுதியாகவும் திடமாகவும் வாக்குறுதி அளித்து இருந்தார்.

அரசியல்வாதிகள் பலர் கைது செய்யப்பட்டு கமுந்திங், சுங்கை ரெங்கம் தடுப்பு முகாம்களில் காவலில் வைக்கப் பட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள், பொதுமக்களிடையே பலமான அதிருப்திகளையும், மனக் கசப்புகளையும் ஏற்படுத்தி வந்தன. ஆளும் கட்சியின் அரசியல் நிலைத் தன்மையில் குறை காண்பவர்களின் மீது அந்தச் சட்டம் எகிறிப் பாய்ந்தது.




மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், ஒரு நடுநிலையான மக்களாட்சிக்கு உகந்தது அல்ல என்றும்; அது தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்றும்; பரவலான அதிருப்திகள். நெடுநாட்களாகப் பொதுமக்களிடம் நீறு பூத்த நெருப்புகளாய்க் கனன்று வந்தன.

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், திருத்தி அமைக்கப்படும் என்று மலேசியாவின் முன்னாள் உள்துறை டத்தோ ஸ்ரீ இசாமுடின் துன் உசேன் கூறினார். அவர் காலத்திலேயே திருததமும் செய்யப் பட்டது. அந்தத் திருத்தத்தில் உருவானது தான் சோஸ்மா.

அதே அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்திற்குப் பதிலாகத் தான் சோஸ்மா சட்டம் நடைமுறைக்கு வந்தது.

சோஸ்மா சட்டத்தை அறிமுகம் செய்தவர் பிரதமர் நஜீப். 2012 ஜுன் 22-ஆம் தேதி சட்டமாகப் பிரகடனம் செய்யப் பட்டது. மரணதண்டனை வழங்குவதற்கும் சோஸ்மா சட்டம் அனுமதி அளிக்கிறது.

இப்போதைய பக்காத்தான் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர்... ஆட்சிக்கு வந்தால் அந்தச் சோஸ்மா சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப் பட்டது. சொன்னது சொன்னது தான். இருப்பினும்  மக்களுக்கு எதிராக இன்றும் சோஸ்மா பயன்படுத்தப் படுகிறது.




Thus far, as reported, more than 2,000 people have been detained under the Security Offences (Special Measures) Act 2012 (Sosma), 475 under the Prevention of Crime (Amendment) Act 2015 (Poca) and nine under the Prevention of Terrorism Act (Pota) in the country.

மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இவைதான். அண்மையில் சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 12 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

அவர்கள் தவறு செய்து இருந்தால்... செய்ததற்கான சான்றுகள் இருந்தால்... அவற்றின்படி அவர்கள் மீது மற்ற குற்றவியல் சட்டங்களின் கீழ் குற்றப் பதிவுகள் செய்ய வேண்டும்.

அது மட்டும் அல்ல. மற்றும் ஓர் எதிர்பார்ப்பு. விசாரணை இல்லாமல் தடுத்து வைக்க அனுமதி அளிக்கும் மற்ற மற்ற அனைத்துச் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே நம்முடைய தாழ்மையான வேண்டுகோள். 




சந்தேகத்தின் பேரில் அண்மையில் கைது செய்யப்பட்ட பன்னிருவரும் உடனடியாக ஒரு நீதிபதியின் முன் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் மீது முறைப்படி குற்றப் பதிவுகள் செய்யப்பட வேண்டும்.

ஒரு நியாயமான விசாரணை நடைபெற வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரையில் கைது செய்யப் பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

அவையே மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள். அவையே மலேசிய இந்தியர்களின் அவசரமான எதிர்பார்ப்புகள். பக்காத்தான் அரசாங்கம் நிறைவேற்றுமா?

சான்றுகள்:
1. https://www.malaysiakini.com/letters/175537

2.http://www.federalgazette.agc.gov.my/eng_main/main_akta.php?jenis_akta=Baru3.https://www.malaysianbar.org.my/human_rights/national_security_and_constitutional_rights_the_internal_security_act_1960.html



பேஸ்புக் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: 1969 மே 13 நாள் போராட்டம் அப்போது நடந்த தேர்தலில் DAP பெற்ற வெற்றியின் எதிரொலிதான். அந்த கறுப்பு நாளுக்கு வித்திட்டவர்தான் இன்றும் DAP யின் மக்கள் ஆதரவை நிர்மூலமாக்க சொஸ்மாவை கருவியாக்கி இருக்கிறார். சீனர்களையும், இந்தியர்களையும் மறைமுகமாக மிரட்டுகிறார்கள்.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... பயங்கரவாதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எதிராகக் குற்றவியல் சட்டங்கள் (பினல் கோட்) உள்ளன... ஆனால் சந்தேகத்தின் பேரில் கைது செய்ய முடியாது... சான்றுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும்...சோஸ்மாவினால் பொதுவாக அரசியல் எதிரிகள் தான் பாதிக்கப் படுகிறார்கள்...

Varusai Omar: May 13 அப்பொழுது நாள் பர்மா ரோடு, பினாங்கு நிலையத்தில் 3 நாட்கள் வெரும் நாசி லெமாக் மட்டும் உணவு. அதுவும் எங்கள் பொதுத் தலைவர் (டான்ஸ்ரீ) ஜைநால் ஆலாம் அவர்களின் கருணையால்)

ஓம் நம சிவாய >>> M R Tanasegaran Rengasamy: உண்மை ஐயா ..

Thanabaal Varmen: நியாயனமான கோரிக்கை, நிறைவேற்றுமா நம்பிக்கை கூட்டணி???

Muthukrishnan Ipoh:
நம்முடைய வேண்டுகோளை நாம் முன்வைப்போம்... அலிரான், சுகாகோம் போன்ற அரசு சாரா இயக்கங்களும் சோஸ்மாவை அகற்றச் சொல்லி குரல் எழுப்புகின்றன...

Varusai Omar:
அவர்களே குழப்பக் குரிசில்களாக இருக்க, உங்க கோரிக்கை எல்லாம் கேட்க நோ டைம், கவான்!

Thanabaal Varmen >>> Varusai Omar: அதுவும் சரிதான்!!!

Varusai Omar: அவாள் எல்லாம் ரொம்ப பிசி... அவங்க பிரச்சினைகளை தீர்க்க முடியாம... சிண்டு பிடி சண்டை நடப்பதாக நம்ம கருத்து கண்ணாயிரம்...  மூக்கு கடை முனுசாமி சொல்லிக்கினாப்லே...

Varusai Omar >>>Thanabaal Varmen: வேற வழி? நம்ப தலையெழுத்து... காலத்துக்கும் துன்பப்பட்டுத் தொலைக்கனும்னு தமிழன் தலையெழுத்து தனபால்…

Narinasamy Karpaya: அருமையான பதிவு! அரசு உடன் கவனித்தால் நல்லது!

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஐயா...

Ramarao Ramanaidu >>> Narinasamy Karpaya: இதெல்லாம் மகாதிர் கண்ணுக்குத் தெரியாது சார் ...

Narinasamy Karpaya >>> Ramarao Ramanaidu: மொழிபெயர்த்துச் சொல்ல நிச்சயமாக ஆள் இருப்பார்கள்!!

Ramarao Ramanaidu >>> Narinasamy Karpaya: அப்படி என்றால் தமிழில் தான் மொழி பெயர்த்துத்தர வேண்டும் சார் ...

Neela Vanam: மிகச்சரியாக எழுதி இருக்கிறீர்கள் ஐயா

Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க...

Dato Maneyvannan Velue: அம்பு ஏய்தவனிடம் கிளி அடைக்கலம் கேட்டதாம்

Muthukrishnan Ipoh: சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே நல்லது எனும் காலத்துக் கட்டாய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம்... அதுதான் சார் உண்மை...

Balan Muniandy: மதவாதமும் தீவிரவாதமும் உலகில் வென்றதாக வரலாறு இல்லை ,இவை அனைத்துமே அழிவின் அடையாளமகத்தான் இருக்கும்

Muthukrishnan Ipoh: உண்மைதான் தம்பி... மதவாதம் என்பது தீவிரமான ஒரு புதிய இலக்கை நோக்கித் துரிதமாகப் பயணிக்கின்றது... அச்சத்தையும் ஏற்படுத்துகின்றது...

Letchumanan Nadason: நீதி நிலைநிறுத்தப் படவேண்டும். தெளிவான பதிவு.

Muthukrishnan Ipoh: கருத்துகளுக்கு நன்றி... நீதி நிலைக்க வேண்டும்...நம் எதிர்பார்ப்புகள் ஐயா...

Sambasivam Chinniah: Vaazhga Valamudan. Vaazhga Tamil.

Muthukrishnan Ipoh: வணக்கம்... வாழ்த்துகள் ஐயா...

KR Batumalai Robert: Justice.

Muthukrishnan Ipoh: Yes... Justice must be done...

Shree Rau: May GodBless

Muthukrishnan Ipoh: We move till we get a fair trial...

Jsr Chandra: Aiya ippotu ivargalai kappaddra mudiatha

Muthukrishnan Ipoh: சோஸ்மாவின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் விடுவிக்கப் படுவார்கள்...

Muthukrishnan Ipoh: https://ksmuthukrishnan.blogspot.com/.../blog-post_21.html
மலேசிய இந்தியர்களின் மன வேதனைகள்

M Kabilan Mohan; Paramathayalan Naidu; Kavi Arasan;

Muthukrishnan Ipoh: நன்றிங்க

தமிழரசு முனுசாமி: மதவெறிப் பிடித்தவர்களும் இனவாதம் நிறைந்த மனம் உடையவர்களிடம் மனிதம் எதிர்பார்க்கலாமா... காலம் தான் பதில் கூற வேண்டும்.

Muthukrishnan Ipoh: எதிர்பார்க்க முடியாது தான் தம்பி... ஆனாலும் விவேகமான முறைகளில்... பணிவான தோரணங்களில் அழுத்தங்களைக் கொடுப்போமே... வன்செயல்பாடுகளைத் தவிர்ப்போமே...

Balan Muniandy:
நல்லவர் லச்சியம் வெல்வது நிச்சயம் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

M R Tanasegaran Rengasamy: ஆண்டாண்டு காலம் இந்த நாட்டை சுபிட்சமாக்க விசுவாசத்துடன் போராடிய இனத்தை யாரோ ஒருவரை திருப்திப் படுத்த பண்டிகை கால சமயத்தில் கைது செய்து அவஸ்தைப் பட வைக்கிறார்கள். சிறு பிள்ளைகளின் கோரிக்கைகள் கூட அவர்கள் காதில் விழவில்லை. புதியவர்களை நம்பியதுக்கு கைமேல் பலன் கிடைத்து உள்ளது. முதுகில் குத்தி விட்டார்கள். இந்நிலை நிச்சயம் மாறும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மிதமாகக் கொண்டாடுவோம்.

Manikam Manikam Manikam: சொஸ்மா, சொஸ்மா, சொஸ்மா இது எப்ப ஒழியும், அவங்க எப்ப குடும்பத்துடன் இணைந்வார்கள், இறைவனை நோக்கி பிராத்தனை செய்கிறேன், அருப்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை, அருப்பெருஞ்ஜோதி

Venogobaal Kuppusamy: அனைவரும் படித்து செயலூக்கம் பெற வேண்டும்! வாழ்த்துக்கள்!

Murugan Rajoo: கசாப்பு கடைக்காரிடம் கரிசனம் எதிர்பார்க்க முடியுமா

மாரியப்பன் முத்துசாமி: எய்தவன் இருக்க அம்பை நோவதேன்

மாரியப்பன் முத்துசாமி: சத்தியம் வெல்லும்

Ilan Murugan: Tun will not help...

Muthukrishnan Ipoh: It is our duty to put forward our request.. and our feelings...

Khatir Rasen: ஒருவரிடம், நம் எதிர்காலம் - நம்பிக்கை எனும் தடியை கொடுத்தோம். அவர் அதை ஈட்டியாக்கி நம் முதுகில் குத்துகிறார்.

Chandran Vinod: Where is the justice.

Tamggam Janu: உண்மையே வெல்லும்

Natarajan Surendran: பிரதமர் மகாதிர் முகமது இந்த சட்டத்தை நிச்சயமாக ரத்து செய்ய மாட்டார்...

Sanjiv Manoharan: Senjiruvan... Innuma inthe ulagam aveneh nambethu?

Nanda Mg: தீவீரவாதத் தூண்டல்கள் செய்யும் நாடுகள் அல்லது தனி நபர்கள் , இறுதியில் புனிதராகி விடுகின்றனர்! மண்ணுக்கும் விடுதலைக்கும் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது தான் நியாயமா?

Muthukrishnan Ipoh: சத்தியம் ஜெயிக்க வேண்டும்... நீதி நிலைக்க்க வேண்டும்... கடைசி வரை அழுத்தங்களைக் கொடுப்போம் ஐயா...






20 அக்டோபர் 2019

செல்லினம் - தட்டச்சு செய்வது எப்படி?


பேஸ்புக் ஊடகத்தில், திறன்பேசியின் வழியாகத் தமிழில் தட்டச்சு செய்வது பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

முதலில் உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் கணக்கு இருக்க வேண்டும். அது மிகவும் எளிது. மின்னஞ்சல் கணக்கு இல்லாதவர்கள் கூகிள் இணையப் பக்கத்திற்குப் போய் G Mail என்பதைச் சொடுக்குங்கள். அல்லது G Mail என்று தட்டச்சு செய்யுங்கள். g mail sign up என்பதைச் சொடுக்குங்கள்.

Create your Google Account என்று வரும். அதில் தேவையான விவரங்களைப் பதிந்து ஒரு மின்னஞ்சல் கணக்கைத் திறந்து கொள்ளுங்கள். பொதுவாக பேஸ்புக் கணக்கு உள்ளவர்களுக்கு அந்த மின்னஞ்சலையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏற்கனவே யாகூ, ஹாட்மெயில் (அவுட் லுக்), சோகோ, ஐ கிளவுட்... இப்படி ஏதாவது ஒரு மின்னஞ்சல் கணக்கு இருந்தாலும், அந்தப் பழைய கணக்கிலேயே பதிவு செய்யலாம். புதிதாகத் திறக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சரிங்களா.

பின்னர் உங்கள் திறன்பேசி, கைப்பேசியில் Play Store எனும் ஒரு சின்னம் இருக்கும். பார்த்து இருப்பீர்கள். அதைச் சொடுக்குங்கள்.

அங்கே உங்கள் மின்னஞ்சல் கேட்கப் படும். மின்னஞ்சலைப் பதிவு செய்யுங்கள்.

பின்னர் Search என்பதில் Sellinam என்று தட்டச்சு செய்யுங்கள். செல்லினம் செயலியைப் பதிவிறக்கம் செய்து பதிப்பு செய்யுங்கள். சில கேள்விகள் கேட்பார்கள். ஆமாம் என்று தட்டி விடுங்கள். மற்றவற்றைச் செயலியே உங்களுக்காகச் செய்து கொடுக்கும்.

எப்படி தமிழில் தட்டச்சு செய்வது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள http://sellinam.com/archives/406 எனும் முகவரிக்குச் செல்லுங்கள். விவரங்கள் உள்ளன. அவ்வளவுதான். மிகவும் எளிது. இரண்டு மூன்று நிமிட வேலைகள். சரிங்களா.

இந்தச் செயலியை உருவாக்கி உலகத் தமிழர்களுக்கு இலவசமாக வழங்கியவர் மலேசியா திரு. முத்து நெடுமாறன். அவரின் அந்தத் தமிழ் உணர்வுகளுக்கு நன்றி சொல்வோம். 





19 அக்டோபர் 2019

துன் மகாதீர் மீண்டும் பல்டி

(தமிழ் மலர் - 28.09.2019)

தம்முடைய பதவி விலகல் குறித்து முன்னுக்குப் பின் முரணாகத் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் துன் மகாதீர் மீண்டும் பல்டி அடித்து உள்ளார்.



அதிகப் பட்சம் 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பேன். அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகுவேன் என்று மீண்டும் அவர் ஆச்சரியங்களை ஏற்படுத்தி இருக்கிறார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் பதவி விலகி மற்றொரு வேட்பாளரிடம் என் பதவியை ஒப்படைப்பேன். அதிகப் பட்சம் இன்னும் 3 ஆண்டுகள் நான் பதவியில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

நியூயார்க் நகரில் வெளியுறவு மன்றத்தின் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்ட போது பேசிய அவர், இந்த 3 ஆண்டுகளில் சில விஷயங்களை நான் முடிக்க வேண்டி இருக்கிறது என்றார்.

ஐநாவின் 74-ஆவது மாநாட்டில் கலந்து கொள்ள வந்த துன் மகாதீர், தாம் நாள் ஒன்றுக்கு தற்போது 18 மணிநேரம் வேலை செய்வதாகக் கூறினார். இந்தப் பணி மிகவும் கடுமையாக இருக்கிறது. எனக்கு அதிகமான காலங்கள் கிடையாது. அதனால் என் பணிகளை விரைந்து முடிக்க வேண்டி இருக்கிறது என்றார் அவர்.

அடுத்த பிரதமராகக் காத்திருக்கும் அன்வார், அண்மையில் பேசும் போது அடுத்தாண்டு தாம் பிரதமராகலாம். அநேகமாக அடுத்தாண்டு மே மாதத்தில் அது நடக்கலாம் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த துன் மகாதீர், அன்வார் பிரதமர் ஆவதற்கான நாள் குறிக்கப்படும். சொன்னபடி நான் விலகுவேன் என்று கூறி இருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்குள் பதவி விலகுவேன் என்று அவர் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வந்தார். இந்த நிலையில் இங்கு தொடர்ந்து பேசிய அவர், தமக்குப் பிறகு வருகின்ற ஒருவர் சிறப்பாகச் செயல் படுவார் என்று தம்மால் சொல்ல முடியாது என்றார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு முதலில் தாம் விலகிய போது எனக்குப் பிறகு வந்தவர்கள் ஏமாற்றம் அளித்தார்கள். எனவே அடுத்த தலைவர் நன்றாகச் செயல் படுவார் அல்லது சரியாகச் செயல்பட மாட்டார் என்று என்னால் சொல்ல முடியாது. அந்த உத்தரவாதத்தை நான் தர முடியாது.

எனினும் சரியான வழிமுறையை நாம் ஏற்படுத்தி வைத்தால், அந்த கட்டுக்குள் வேலை செய்தால், இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாகும் என்று அவர் கூறினார்.


பேஸ்புக் அன்பர்களின் பதிவுகள்





M R Tanasegaran Rengasamy:
பெருசு வயசு... தெரியாது பல்டி அடிக்கிறாப் போல... அம்னோவிலிருந்து சில எம்.பி. களைத் தத்தெடுத்து, டிஏபி- கெடிலான் கட்சிகளை ஓரங்கட்டி விட்டு, பெர்சத்துவை ஆட்சியில் அமர்த்த ஐயா பிரயாசைப் படுகிறார் போலும். இது நடந்தால் அருமை மகனார் முக்ரீஸ் முன்னணி வரிசைக்கு கொண்டு வரப் படலாம். இதனால் இலவு காத்த கிளியாக அன்வார் ஆக்கப் படலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


Muthukrishnan Ipoh: அரசியலில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம் சார்...


M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh:
நஜிப் அரசை அகற்ற அவருக்கு அன்வார் பிரபலம், டிஏபி ஆதரவு தேவைப் பட்டது. இன்று கெடிலானில் அஸ்மின் அணி அவருக்கு பக்க பலமாக இருக்கிறது. அம்னோவிலும் இவருக்கு கொஞ்சம் ஆதரவு இருக்கிறது.  இதனை வைத்து காயைக் கனக் கச்சிதமாக நகர்த்தவே பெருசு இன்னும் மூன்றாண்டு கால அவகாசம் கோருகிறது. அன்வார் சற்று நெருக்குதல் அளித்தாலும் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்து தம் சாணக்கிய விளையாட்டை ஆட தயங்க மாட்டார்.


Perumal Thangavelu: ஆசை யாரை விட்டது. அடுத்த பொதுத் தேர்தலை நடத்தி விட்டு, மற்றவர் கையில் ஒப்படைப்பார் போலும். வாழ்க நம் பிரதமர்.


Muthukrishnan Ipoh:
நன்றாக இருக்கட்டும்


Varusai Omar >>> Perumal Thangavelu: ஆமாம். நாட்டைக் குட்டிச் சுவராக்கி விட்டு திருவோடு கொடுத்து விட்டுத்தான் அவரும் பிற கொள்ளையர்களும் போவார்கள்.


Varusai Omar:  முத்து, சென்னையில் இப்போ பானீ பூரியும் பேலு பூரியும் தாரராளமா கெடக்கிதாம்! இட்லி தோசை சிங்கப்பூரு மலேசியாவுக்கு டூர் போயிருக்காம்லெ!!?


Sathya Raman >>> Perumal Thangavelu: மற்றவர் என்றால் யார் சாரே?


Khavi Khavi:  வினை விதைத்தவன் வினையறுப்பான். ஓரத்தில் நின்று அமைதியாக பார்த்திருப்பதே எமது தர்மம்.


Muthukrishnan Ipoh:  பல்டி அடிப்பார்கள் அரசியல்வாதிகள்


Khavi Khavi: ஆசிரியரே, அவர்கள் எந்த "ட்டீ" வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளட்டும். தர்மமே வெல்லும், ஒருகாலும் எதிர்மறை முன்னேறியதில்லை என்பதே சத்தியம். பொறுமை பூமி ஆள்வோரின் மொழியாகட்டும்.... !


Narayanan Krishnan:  சிந்துபாத்தும் கிழவனும் கதை தெரியுமா சார்? அந்த கிழவன்தான் இந்தக் கிழவன். இறைவனின் சித்தம் என்னவோ.


Muthukrishnan Ipoh:  ரொம்பவும் குறை சொல்ல வேண்டாமே...


தமிழ்ப் பித்தன்:
சதி நடக்கிறது... நடக்கவும் போகிறது... நடந்துகொண்டும் இருக்கிறது.


Muthukrishnan Ipoh:  நம் விதியை நினைத்து நாம் புலம்பிக் கொள்வோம்...


Mageswary Muthiah:  இது எல்லாம் அள்ளி உட்டான் கதை.


Muthukrishnan Ipoh:  அரசியல் உலகத்தில் என்னவெல்லாம் நடக்கும்


Mbs Maniyam:  ஏமாளிகள், இவனை நம்பி ஓட்டு போட்டவர்களே. இன்னும் வரும் எதிர்பாருங்கள்!


Muthukrishnan Ipoh: வயதில் மூத்தவர்... மரியாதை வழங்க வேண்டும்


Mbs Maniyam: தங்களின் அறிவுரைக்கு நன்றி ஐயா! இந்த பிரதமரின் தவறான செய்கைக்கு பல ஆயிரம் பேர்கள் பலி.இவருக்கு உறுதுணையாக ஓட்டளித்து சிம்மாசனத்தில் ஏற்றியவர்களுக்கும் இதில் சம பங்குண்டு.


Muthukrishnan Ipoh:
இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே...


Varusai Omar: ஆஹாஹா! வர வர நம்ம ஆளுகள்ளாம் ரொம்பவே முன்னேறீட்டாங்க!  எனது ஒரு உண்மையான பதிவுக்கு பல புத்திசாலி நண்பர்களின் பதிவுகளை பார்க்கும்பொது மனதுக்கு மகிழ்ச்சி! ஞாயிறு காலை, திங்களின் ஒளி மழையாய் மென்சாரலுடன் மனதை வருடுகிறதே!!!


Muthukrishnan Ipoh: உங்களுக்கு சப்போர்ட் பண்ண நிறைய பேர் இருக்காங்க சார்... என்னைத் தவிர... ஏன் என்றால் நான் ஆழமாக கமெண்ட் பண்ண முடியாது... ரொம்பவுமே கவனித்துக் கொண்டு வருகிறார்கள்... புரியும் என்று நினைக்கிறேன்...


Sathya Raman: இந்த அரசியல் வாதிகளின் பேச்சும், அல்லூறு தண்ணியும் ஒன்று என்பதை நாம் அறியாததா? முன்னாள் அரசாங்கத்தின் செயல் பாடுகளைச் குறைச் சொல்லியே புதிய கட்சியை ஆரம்பித்தார் பிரதமர் மகாதீர்.

அப்போது பாரிசான் அரசாங்கத்தை எந்த அளவுக்கு மட்டம் தட்ட முடியுமோ அந்த அளவுக்கு மட்டம் தட்டி தன் மகனின் அரசியல் லாபத்திற்காகப் பக்காத்தான் கட்சியினரிடம் கூட்டுச் சேர்ந்து வெற்றி பெற்ற போது ஒரு பேச்சு பேசினார்.

மீண்டும் பிரதமர் பதவி ஏற்ற போது மலேசிய மக்களும் அவரைக் கடவுளாகக் கருதி அவர் சொன்னதை எல்லாம் நம்பினர். பிரதமராக மறுபிரவேசம் எடுத்த போது ஏற்கனவே 22 ஆண்டுக் காலப் பதவியில் இருந்ததைக் காட்டிலும் மலேசிய மக்கள் அவரைத் தாங்கு தாங்கென்று தாங்கினர். தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

அவரின் சின்ன, சின்ன செயல்பாடுகளை ஆராதனை செய்தனர். இதற்கிடையில் பினாங்கிலும், சிலாங்கூரிலும் நல்லபடியே ஆட்சி நடத்தி வந்த முதல்வர்களான லிம் குவாங் எங், அஸ்மின் அலி இருவரையும் தன் கட்டுப்பாட்டில் மத்திய அமைச்சர்களாக நியமித்த மகாதீரின் தந்திர மூளையை அரசியலில் ஆதிக்கம் கொண்டவர்களால் அன்றே அறிந்து கொள்ள முடிந்தது.

நஜிப் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட முக்ரிஸ் மகாதீரை மத்திய அமைச்சராக நியமிக்காமல் தொடந்து கெடா முதலமைச்சர் பதவி கொடுத்த நோக்கம் என்ன?

பிரதமர் பதவியில் இருந்து கொண்டு கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தான்றோன்றித் தனமாய் தன் இஷ்டத்திற்கு முடிவுகளை எடுத்ததால் தான் அன்வாரின் மகள் நூருல் இஷா வெறுப்படைந்து தான் ஏற்றிருந்த பதவிகளைத் துறந்தார்.

மேலும் பக்காத்தானில் நடந்து கொண்டிருக்கும் கட்சி உட்பூசல்களில்னால் ஆதாயம் என்னவோ மகாதீருக்குத் தான். முன்னாள் அம்னோகாரர்களை அரவணைத்து தனது பெர்சத்து கட்சியில் இணைத்து கட்சிக்கு பலவழிகளில் பலம் சேர்த்து வருவது எல்லாம் எதற்காம்?

எல்லாம் தன் மகனைப் பிரதமர் பதவியில் அமர்த்தத் தான் என்பது எல்லாம் உள்ளங்கை நெல்லிகனி போன்றது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடைசி வரை இலவு காத்த கிளி போல் தான். பாவம்! எத்தனை காலம் கடந்தாலும் சிலரது ஆசைகளுக்கு நரை விழுவதில்லை.

"பூனைகளைவிட சிங்கங்கள் அதிக வலிமையானவை என்பதை எலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. "தன்னைவிட மலேசியாவை வழி நடத்த தகுதியானவர் எவருமில்லை என்ற எகதாளம் எண்ணம் கொண்ட டாக்டர் மகாதீர் எல்லா நிலைகளிலும் சூழ்ச்சிக் காய்களை நகர்த்தும் நாரதர் வேலைகளை எப்போதோ ஆரம்பித்து விட்டார் என்பதே உண்மை.

யானை பசிக்கு சோளப் பொரி. எனவே பிரதமர் அவ்வப்போது அடிக்கும் அந்தர் பல்டிகளை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஏன்னா அரசியல்வாதிகளின் பேச்சும் அல்லூறு தண்ணியும் ?????


Muthukrishnan Ipoh: ரொம்ப ரொம்ப முன்னேறிட்டீங்க சகோதரி... நான் எதிர்பார்க்கவில்லை... உங்களிடம் இவ்வளவு அரசியல் தகவல்கள் இருக்கும் என்று... இனிமேல் அரசியல் தொடர்பான சந்தேகங்களுக்கு உங்களைத் தான் தேடி வர வேண்டி இருக்கும்...

>>> பூனைகளைவிட சிங்கங்கள் அதிக வலிமையானவை என்பதை எலிகள் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை >>>

அருமையான கருத்துகள்... என் வலைத் தளத்தில் உங்கள் அனைவரின் பின்னூட்டங்களும் இடம் பெற்று வருகின்றன... நேரம் கிடைக்கும் போது எல்லாம் பதிவேற்றம் செய்து வருகிறேன்... கருத்துகளுக்கு மிக்க நன்றி... தொடர்ந்து எழுதுங்கள்...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: நன்றிங்க சார். சும்மா தமாஷ் பண்ணாதீர்கள் சார். உங்களைப்போன்ற பத்திரிக்கை தொடர்புடைவர்களின் பதிவுகளைப் படிப்பதால் ஒரளவு இந்த அரசியல் அலம்பல்களை அறிய முடிகிறது சார்.

மற்றபடி நீங்கள் கூறும் அளவுக்கு அனைத்தும் தெரிந்தவள் நான் இல்லை சார் . இருந்தாலும் சார் அடிக்கடி வசிஷ்டர் வாயால் பிரமரிஷி பட்டம் போன்று உங்கள் எழுத்துக்களும், வாழ்த்துக்களும் எனக்கு நிறைய ஊக்கத்தையும் மென்மேலும் தகவல் அறிய உதவுகிறது


Muthukrishnan Ipoh: உண்மையிலேயே நிறைய விசயங்களைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள்... உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய தகவல்கள்... இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை... நன்றாக எழுதுகிறாய்... எழுத்து நடை நன்றாக இருக்கிறது... சரம் சரமாய் வரும் கருத்துகள்...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh:
நன்றிங்க சார். எங்களுக்கு எல்லாம் முன்னோடிகளாக உங்களைப் போன்றவர்களின் படைப்புகளே எங்களைப் போன்றவர்களுக்கு என்றென்றும் ஏறும் படிகள்.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: சிறப்பு தோழர், இதைவிட விரிவான விளக்கத்தை யாரும் சொல்லி விட முடியாது.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: 'பூனைகளை விட சிங்கங்கள் மிக வலிமையானவை என்பதை என்பதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை'. அருமையான வரிகள் சகோ... இதை நான் சுட்டுக் கொள்ளலாமா?


Sathya Raman >>> Murugan Murugan Govindasamy: என் தேடுதல்களில் சிக்கிய வாசகங்கள்தாம் இவை. பழமொழிகளையும், பொன் மொழிகளையும் நான் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது சரியல்லவே நண்பரே. தாராளமாக நீங்கள் சுட்டுக் கொள்ளலாம்.


Murugan Murugan Govindasamy >>> Sathya Raman: நன்றி தோழரே


Mageswary Muthiah >>> Sathya Raman: மிகவும் நன்றாகத் தெரிந்து வைத்து இருக்கிறீர்கள். இதுவே உண்மையான காரணமாக இருக்கலாம்.


Varusai Omar: அந்த "பெரிசுக்கு" பல்ட்டி அடிப்பது கைவந்த கலை. ஒன்றைக் கவனித்தீர்களா முத்து? வர வர அவரது பேச்சும் செயல்பாடுகளும் ஒருவித முரட்டுத் தனமான... ஏன்? வெறித் தனமான ஆளுமையுடன் அகங்காரமும் தெறிக்கிறதே? தானே தான் மட்டுமே எல்லாத் திறமையும் கொண்டவன். தன் சொல்ல வேத வாக்கு. தன் முடிவே அறுதியும் இறுதியுமானது என்று மிதப்புடன் செயல் படுவதாகத் தெரியவில்லையா?


Muthukrishnan Ipoh: துல்லியமாக அரசியல் பல்டி ... தெளிவாக இருக்கிறார்


Varusai Omar: என்னா! எப்படியும் தன் தனயனுக்கு அரியாசனத்தில் அமர்த்தி "பட்டம்" சூட்டுவதே பெரிசின் தலையாய கடமை... நோக்கம் உறுதியான முடிபு!


Varusai Omar: ம்ஹும்? புரிகிறது நண்பா! இந்த "பெரிசு" விவகாரம் கொஞ்ச நாளா "காரமாக" மட்டுமல்ல, அந்தகாரத்தை நோக்கிச் செல்வது துல்லிதமாகத் தெரிகிறது நண்பா! அதுவும் உங்களைப் போன்ற ஆழ உழுபவர்களின் ஆய்வுகளும் உடன்வரும் கருத்துக் கருவூலங்களும் நிச்சயம் பிறருக்கு பயனானவை தானே நண்பா?


Muthukrishnan Ipoh: நன்றி... நன்றி... நன்றிங்க தலைவரே....


Manickam Nadeson: முன்பு சர்க்கஸ் இருந்து இருப்பாரோ, சதா பல்டியா இருக்கே.


Muthukrishnan Ipoh: அருமை... அருமை... அருமை...


Selva Mani: ஏ
ழரை பிடிச்சா லேசுல விடாது! அன்வார் இலவு காத்த கிளிதான்!


Muthukrishnan Ipoh: இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பார்ப்போம்... உடனடியாக எந்த முடிவையும் எடுக்கக் கூடாது...


Neela Vanam >>> Muthukrishnan Ipoh: நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா இன்னும் மூன்று வருடம் இருக்கிறது ஏதாவது ஒரு மாற்றம் வரும் ஓட்டு மக்களிடம் உள்ளது


Malathi Nair: Yes sir we understand ur situation.


Moon Noom: பலம் அறிந்து போரிடு பதவிதான் பலம் நாட்டின் நலனுக்காக நேரம் பார்க்காமல் மக்களை சந்தித்தார் அந்த ஒருவரின் செயலுக்காக ஆனால் மற்ற குள்ளநரி கூட்டங்கள் இன்னும் வேரூன்றி உள்ளதே இதை யாரால் சரிகட்ட முடியும்.


Dorairaj Karupiah: சொன்ன சொல் தவறாதவர்... மகா தீர் ஹரிசந்திரன் பக்கத்து வீடு


Muthukrishnan Ipoh; நம்முடைய ஆதரவு அன்வார் அவர்களுக்கே...


Sathya Raman >>> Muthukrishnan Ipoh: இப்போது எல்லாம் நடுநிலையாய்கூட எதையும் முன் கூட்டியே அனுமானிக்க முடியவில்லை சார். இதில் என் நிலைப் பாடே வேறு சார்.

"இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை ரகம் தான். நீங்கள் டத்தோ ஸ்ரீ அன்வாரை ஆதரிப்பதாகச் சொல்கிறீர்கள். இருபது ஆண்டுகள் காலத்திற்கும் மேலாக அரசியலில் துறவறம் ஆக்கப் பட்டவர், அதிக அளவில் அலைகழிக்கப்பட்ட அரசியல் பிரமுகர். நிறைய காயங்களை அனுபவித்தவர்.

இவை எல்லாம் அவரைப் பக்குவப்பட்ட மனிதராய் மாற்றி இருக்கும் என்றே நம்புவோம். ஆனால் அதற்கு அச்சாரமாய் அவரது நாற்காலிக்கு எந்தவித இடர்பாடோ, இடையூறோ வராமல் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்.😁


Kannan Kannan: சதி நடக்கிறது... நடக்கவும் போகிறது. ஏன் என்றால் அவருக்கு பதவியை அவர் மகன்னுக்கு தருவதாக ஆசை.  நம் நாட்டுச் சில தலைவர்கள் பொய் பேசுவதில் சிறந்த தலைவர்கள். இப்போது ஒன்று அப்போது ஒன்று


Muthukrishnan Ipoh:
பெரியவரின் பேச்சு சமயங்களில் குழப்பத்தை உண்டு பண்ணி விடுகிறது...


Kannan Kannan >>> Muthukrishnan Ipoh:
இன்னும் எத்தனை காலம் ஏமாத்துவார் இந்த மலேசியாவில்?










18 அக்டோபர் 2019

மலேசிய இந்தியர்கள் - நெருக்கடியான காலக் கட்டம்

மலேசிய இந்தியர்கள் ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறார்கள். நாளைய தினத்தில் என்ன நடக்கும்... என்ன நடக்கலாம் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு ஒரு தடுமாற்ற நிலை. ஒரு பதற்றமான வழியில் அவர்களின் நகர்வுகள்.



இருப்பினும் சின்னதாய் ஓர் அறைகூவல். அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப் படுவோம். மதிப்பு அளிப்போம். அரசாங்கத்தை எதிர்த்து எதையும் சாதிக்க முடியாது என்பதை நினைவில் கொள்வோம்.

பொறுமையாகவும் விவேகமாகவும் நடந்து கொண்டால் நம்முடைய எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதையும் நினைவில் கொள்வோம்.

கடிவாளம் கையில் இருக்கும் இடத்தில் பிடிமானம் இருக்கும். கடிவாளம் இல்லை என்றால் பிடிமானம் இல்லை. மற்றவர்களைக் கட்டுப் படுத்துவது என்பது இயலாத செயல். இதை நாம் என்றைக்கும் மறக்கக் கூடாது. 




அதே சமயத்தில் நம்முடைய கருத்துகளை விவேகமான முறையில் பதிவு செய்வோம். நம்முடைய உணர்வுகளை நியாயமான முறையில் முன் வைப்போம். உணர்ச்சிகளுக்கு அடிமைப் பட்டு பதிவு செய்வதைத் தவிர்ப்போம்.

நம்முடைய பதிவுகள் எவரையும் புண்படுத்துவதாக அமைந்து விடக் கூடாது. இனம், சமயம் தொடர்பான கருத்துகளில் முரண்பாடான செருகல்களை தவிர்ப்பது மிக்க நல்லது.

விவேகமான முறையில் முன் வைக்கப்படும் கருத்துகளுக்கு என்றைக்குமே மரியாதை உண்டு.




அரசமைப்பு இருக்கிறது. அரசு சாசனங்கள் இருக்கின்றன. அரசியலமைப்பு பாவனையில் என்ன தீர்வுகளைக் காணலாம் என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

அந்தத் தீர்வுகள் நியாயமான வழிமுறைகளில், நியாயமான விமர்சனங்களாக அமைய வேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இருக்கக் கூடாது.

பல்லினச் சமுதாயத்தில் நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் விதைக்கும் வழக்கம் மட்டுமே நலம் பயக்கும். அதுவே சிறுபான்மை இனத்தவரின் பிரச்சினைகளுக்குத் தற்காலிகத் தீர்வுகளைக் காண பேருதவியாகவும் அமையும்.

சிறுபான்மை மக்களிடம் ஒற்றுமை குறைந்தால் நிறைவுகளைக் காண  இயலாது.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
17.10.2019




பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்
Hamba Mu Umar Umar



M R Tanasegaran Rengasamy: பொது இடங்களுக்குச் சென்றால் இன்னமும் மலாய்க்கார ,சீன சமூகத்தினர் நம்மிடம் இயல்பாகவே பழகுகிறார்கள். அண்மையில் என் உறவினர் ஓட்டிச் சென்ற லாரி ஈப்போவில் விபத்துக்கு உள்ளானது.

அவருடன் மனைவி, மகளும் இருந்தனர். நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரிக்கு உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றியவர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரச் சகோதரர்களே.

எனவே வெளியில் எல்லாம் சரியாகவே நடைபெறுகிறது. நீங்கள் சொல்வது போல் இது அரசியல் சலசலப்பு தான். அமைதி காப்போம். நன்றி சார்.


Muthukrishnan Ipoh: நன்றிங்க தனா... மலாய்க்காரர்கள் மிகவும் நல்லவர்கள்... பொதுவாகவே இனிமையாகப் பழகக் கூடியவர்கள்... பெரும்பாலோர் கபடு சூது அறியாதவர்கள்.. இன்றும் பலர் நமக்காகத் துணிந்து நிற்பவர்கள்...

ஏன் என்றால் விவரம் தெரிந்து நம்முடன் ஒரு 150 ஆண்டு காலம் வாழ்ந்து விட்டவர்கள்... நம்முடைய கலை கலாசாரத்துடன் பிணைந்து போனவர்கள்...

சில பல அரசியல்வாதிகளின் சுயநலத் தூண்டுதல்களால் தான் இன்றைய மலாய்க்கார இளைஞர்கள் சிலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்... இதில் குட்டைக் குழப்பிகள் அரசியல்வாதிகள் தான்... சாமான்ய மக்கள் அல்ல...


Periasamy Ramasamy: இதுதான் நிதர்சனம். சுமார் நூறு மலாய் சகோதரர்கள் மத்தியில் துறைமுக தீயணைப்பு பிரிவில் ஒன்றாகப் பணியாற்றிய மூன்றே இந்திய அரசு ஊழியர்களில் நானும் ஒருவன்.

அவர்களின் கலாச்சாரத்துடன் பிணைந்த Senda gurau கேலியும் கிண்டலும் நாமும் சாதாரணமாக எடுத்துக் கொண்டால் யாவரும் இயல்பாக ஒன்றி விடுவோம்.

அதிலும், நமது மலாய் பேச்சுத் வழக்கு அவர்களுடையது போலவே சார்ந்திருக்குமாயின் அவர்கள் நம்மோடு அளவலாவுவதில் மிகுந்த விருப்பம் கொள்வர். அரசியல், மதம், விளையாட்டு, சினிமா, கலாச்சாரம் என்று எதைக் குறித்து அலசினாலும், அவர்களிடம் ஒரு மிதவாதப் போக்கை நாம் எதிர்பார்க்கலாம்.

எங்களில் பலர் இன்று பணி ஒய்வு பெற்று விட்ட போதிலும், அருகருகே வசிப்பவர்கள் இன்னும் அதே தோழமையுடன் பழகுவது குறிப்பிடத் தக்கது.


Muthukrishnan Ipoh: உண்மைதாங்க ஐயா.... 1960 - 1970-ஆம் ஆண்டுகளில் என்னுடன் பயின்றவர்களில் ஒருவர், இந்த நாட்டின் முன்னாள் துணை ஐ.ஜி.பி. இன்றும் வாய்ப்பு கிடைக்கும் போது உரையாடிக் கொள்வோம்.

அன்றைய காலக் கட்டத்தில் படிக்கும் போது தீபாவளிக்கு அவர் என் வீட்டிற்கு வந்து அரட்டை அடித்துக் கொண்டு இருப்பார்... அதே போல ஹரிராயாவுக்கு அவர் வீட்டிற்கு நான் போய் விடுவேன்... சாப்பாடு என்ன சந்தோஷம் என்ன... அந்த மாதிரி அந்தக் காலத்து மலாய்க்காரர்கள் நம்முடன் ஐக்கியமானவர்கள்... அரசியல்வாதிகள் கெடுத்து விட்டார்கள்...


M R Tanasegaran Rengasamy: எனக்கும் ஒரு மலரும் நினைவுகள் உண்டு. அப்பொழுது எனக்கு ஐந்து வயது இருக்கும். ஐந்து வயதிலா எனச் சிலர் புருவத்தை உயர்த்தலாம். எனக்கு ஞாபக சக்தி அதிகம். நெகிரி செம்பிலான், சிரம்பான் அருகே ரெம்பாவ் தோட்டம். தம்பின்- சிரம்பான் சாலையை ஒட்டி அமைந்திருந்தது.

அந்தத் தோட்டத்துக்குப் பக்கத்திலேயே ஒரு கம்பம் இருந்தது. இன்றும் கம்பம் இருக்கிறது. தோட்டம் இல்லை. எங்கள் வீட்டை ஒட்டியே மலாய்காரர் வீடு இருந்தது. ஆயாக் கொட்டகையில் இருக்க பிடிக்காததால் வீட்டைப் பூட்டிவிட்டு, வெளியில் வ்ராந்தாவில் விட்டுச் செல்வார்கள். கொஞ்ச நேரம் தான் வீட்டில் இருப்பேன்.

கம்பத்து வீட்டு மலாய்க்காரர் காலையிலேயே கூப்பிடுவார். காலை பசியாறல் (மரவள்ளிக் கிழங்கு). பெற்றோர் திரும்பும் வரை அங்குதான் இருப்பேன். பெற்றோர் வைத்துச் செல்லும் சாப்பாடு எனக்கு காவலாக இருக்கும் பொன்னி நாய்க்கு வைத்து விடுவேன்.

அந்த மலாய்க்காரரும் அவர்தம் மனைவியும், பிள்ளைகளும் அவ்வளவு பிரியமாக இருப்பர். இது போன்று பல கதைகள் உண்டு. எவ்வளவு அருமையான காலம் அது. பாவிகள் அரசியல்வாதிகள் அனைத்தையும் கெடுத்துவிட்டார்கள்.


Muthukrishnan Ipoh >>> M R Tanasegaran Rengasamy: இதை எல்லாம் கேட்கும் போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது... அந்த மாதிரியான இனிமையான காலங்கள் மீண்டும் மலருமா... அவை கனாக் காலங்களாக மாறி விட்டன...


Narayanan Krishnan: இனவாதம் பேசும் எவனும் மலாய்காரர் அல்ல. இஸ்லாமியர் என்ற தகுதியை வைத்து பூமிபுத்திரா (pseudo malay) தகுதியை அடைந்தவர்கள்.

அவர்கள் எப்பொழுதுமே தங்கள் சாயம் வெளுக்கும் பொழுது தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாகவே முந்திக் கொண்டு மற்ற சிறுபான்மையினர் மீது துவேசம் பரப்புவர். அதில் முதன்மையானவர் பிரதமர்.


M R Tanasegaran Rengasamy >>> Muthukrishnan Ipoh: இரு மாதங்களுக்கு ஒருமுறை நான் பிறந்த மண் Tampin, Kota-வில் உள்ள கோயிலுக்குச் செல்வது வழக்கம். அப்படிச் செல்லும் போது எல்லாம் என் மனைவி மக்களிடம் அந்தக் கம்பத்துக் கதையைக் கூறுவேன். அவர்கள் சலிப்படைவார்கள். எனக்கு மட்டும் அந்தக் கனாக் காலம் களைவதே இல்லை.


Kannan Krisnan >>> M R Tanasegaran Rengasamy: உண்மை ஐயா


Manickam Nadeson >>> Narayanan Krishnan: உண்மைய போட்டு உடைச்சிட்டீங்க.


Tanigajalam Kuppusamy: காலத்திற்கு ஏற்ற நல்ல அறிவுரை. நம் தமிழர்கள் கோப்பிக் கடை அரசியல் அலசலில் இருந்து விடுபட வேண்டும். அரசியல் தொடர்பான பிற இன, சமய, கலாசார எதிர்மறைக் கருத்துகளை வெளியிடுவதையும், பெறுகின்ற பகிர்வுகள் அமைதியைக் குலைக்கும் சாயலில் இருக்குமானால் அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் கருத்துகள், கைபேசி உரையாடல்கள் போன்றவை கூட கண்காணிக்கப் படுகின்றன என்றால் மிகையாகாது.

எனவே, நாம் அதற்கேற்ப நடுநிலையான,நியாயமான கருத்துகளை வெளியிட நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளைய மணிகள் உணர்ச்சி வயப்பட்டு பிற இனத்தவரின் உணர்வைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.


Muthukrishnan Ipoh: மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா... கைக்குள் சமூக ஊடகங்கள்... நினைத்தை எழுதலாம் எனும் போக்கைக் கைவிட வேண்டும்... பெரும் ஆபத்தை ஈர்த்துவிடும்...

>>> பிற இன,சமய, கலாசார எதிர்மறை கருத்துகளை வெளியிடுவதையும், பெறுகின்ற பகிர்வுகள் அமைதியைக் குலைக்கும் சாயலில் இருக்குமானால் அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும். >>>

மிக மிக முக்கியமான கருத்துகள்... நன்றிங்க...


Tanigajalam Kuppusamy: வசிஷ்டரின் அங்கீகாரத்திற்கு மிக்க நன்றி ஐயா.


Muthukrishnan Ipoh >>> Tanigajalam Kuppusamy: வசிஷ்டர் என்று ஓர் அடைமொழியே கொடுத்து விட்டீர்கள்... நன்றிங்க... இருந்தலும் அந்தத் தகுதி நமக்கு இல்லைங்க சார்...


Tanigajalam Kuppusamy: தமிழர்க்கும் தமிழர் வரலாற்றிற்கும் கணினி பயன்பாட்டில் தமிழுக்கும் நீங்கள் ஆற்றி வரும் அளப்பரிய சேவைக்கும் இந்த அடைமொழி பொருத்தமென்றே எனக்குப் படுகிறது.


Anbananthan Renga: வணக்கம் சார், நீங்கள் மேலே சொல்லியதைப் போல், நேற்று ஒரு அரசியல் புள்ளியிடம் சொன்னேன். அதற்கு அவர் சொன்னது “ இது அரசியலுக்கு சகஜம் பா”


Muthukrishnan Ipoh: அரசியலில் நேற்றைய எதிரி இன்றைக்கு நண்பன்... இதை என்றைக்கும் நாம் மறந்துவிடக் கூடாது...


Amz Harun: உண்மை தான் ஐயா. உணர்ச்சி வசப்பட்டு பேசுவதாலும் போஸ்ட் செய்வதாலுமே உலகமெங்கும் பல இன்னல்கள். மலாய் சமூகத்தார் பலரும் Is தொடர்பு என சந்தேகத்தில்  கைது செய்யப்பட்டு உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.


Muthukrishnan Ipoh: உண்மை தம்பி... மலேசிய அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு நாம் கட்டுப்பட வேண்டும்... ஒரு நம்பிக்கையுடன் பயணிப்போம்... நன்றிங்க...


Letchumanan Nadason: உண்மை. பல்லின மக்கள் வாழும் நாடுகளில் உள்ள பிரச்சினைகள். இதனை நிதானமாகவும் பொறுப்பு உணர்ச்சியுடனும் அணுக வேண்டும்.


Muthukrishnan Ipoh: உண்மை ஐயா...


Balan Muniandy: சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ஐயா


Muthukrishnan Ipoh: மிக்க நன்றிங்க தம்பி...


Maha Lingam: நன்றி...வாழ்த்துகள்.ஐயா


Muthukrishnan Ipoh: தங்களுக்கும் வணக்கம்... வாழ்த்துகள்...


Sambasivam Chinniah: Vaazhga Valamudan ayyah. Kaalai vanakam.


Muthukrishnan Ipoh: வணக்கம் ஐயா...


Sundaram Natarajan: Inniya Kaalai Vanakam Anna


Muthukrishnan Ipoh: வணக்கம் வாழ்த்துகள்...


Vadivelu Vadivelu: Nandri Aiyaa,Nalvalthukkal.


Muthukrishnan Ipoh: நன்றிங்க.... வாழ்த்துகள்


Parimala Muniyandy: உண்மைதான்...


Muthukrishnan Ipoh: நன்றிங்க


Perumal Thangavelu: நிதர்சனமான உண்மை. நீதிக்கு தலை வணங்குவோம்


Muthukrishnan Ipoh: வணக்கம் வாழ்த்துகள்


Doraisamy Lakshamanan: நாம் நம் சமுதாயத்திற்குச் சொல்லி விளக்குவதற்கு... நாம் வாரம் ஒருநாள் ஒரு ஆலயத்திலோ ஒரு பள்ளியிலோ ஒன்றுகூடி நம் பிள்ளைகளை உயர்கல்வி பெறுவதற்கான அறிவுரை களும் வழிகாட்டுதல்களும் வழங்குவதற்கு வழி காண வேண்டும்! நாம் பெற்றுள்ள திருக்குறளை வாழ்வியல் நூலாக கற்பிக்கவும், அதே வேளை வாழ்க்கையைச் சிறப்பாக நடத்துவதற்கான வழிமுறைகளைச் சிறுவயது முதலே நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கவும் இப்படி நாம் கூடுவதல்...

பல்லின மக்களோடு மகிழ்ச்சியாக இணைந்து வாழ்வதற்கு நம் பிள்ளைகளைப் பழக்குவதற்கு ஒரு நல் வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடிவதோடு... நம் தாய்மொழியும் நம் தமிழ்ப் பண்பாடும் நம் பிள்ளைகளுக்கு வாழ்வியலாக அமையும் என நம்பத் தொடங்குவோம்!


Doraisamy Lakshamanan: எதிரதாய் காக்கும் அறிவினோர்க்கு இல்லை அதிர வருவதோர் நோய் -குறட்பா.

ஒரு சமுதாயமே களமிறங்கிச் செய்ய வேண்டிய மிக முக்கியப் பணி நம் மொழி மற்றும் பண்பாட்டுப் பெருமையை நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதற்கு திருக்குறளே ஏற்ற நூல், எந்த இனமும் மதிக்கும் நூல், எல்லா மொழியினர்க்கும் ஏர்ப்புடைய நூல்.

வாரத்தில் ஒருநாள் நாம் நம் தமிழ்ப்பள்ளிகளின் விடுமுறை நாளான சனிக்கிழமைகள் தோறும் ஒன்றுகூடி நாம் நம் சமுதாயத்திற்குத் தெரிவிக்க வேண்டிய எல்லாத் தகவல்களையும் தயங்காமல் தெரிவிக்கலாம்.

நம் சமயத்தின் நூலாகவே இந்து சங்கமே திருக்குறளை மூன்று மொழிகளிலும் கற்பிக்கத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களை நியமித்துக் கற்பிக்கலாம். மித்ரா பிரதமர் துறை வழி நிதியதவியும் பெற இந்து சங்கம் முயன்றால் உறுதியாகச் செயல் படுத்த முடியும்!


Inbachudar Muthuchandran: தற்போது நம் சமுதாயம் தோட்டப் புறங்களில் இல்லை. தொழிற்சாலைகளில் தான் வேலை செய்கின்றார். அவர்களுக்கு சீனர்கள் தான் தவக்கேயாக இருக்கின்றார்கள். அரசு ஊழியர்களில் ஒரு தமிழர் ஒய்வு பெற்றால் அதற்கு பதிலாக மற்றொரு தமிழரை வேலைக்கு எடுக்க மாட்டார்கள்.

இது ம.இ.கா. காலத்தில் இருந்து இன்று வரை தொடர்ந்து வருகின்றது. மற்றும் தற்போது மலாய் மொழியுடன் காட் வனப்பெழுத்து. படிக்க வைத்தால் தேசிய வகை தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் கூட இருக்க மாட்டார்கள்.

புதிய நம்பிக்கை கூட்டணி அரசு என்ன செய்யப் போகிறது என்று பார்ப்போம் தாங்கள் கூறுவது போல் அரசியல் சாசனத்தை நம் தமிழ் மக்கள் கடைப்  பிடித்து கொண்டு தான் உள்ளார்கள். பொதுவில் மலாய்க்கரர்கள் நல்லவர்கள் தான்.

ஆனால் இனம் என்று பார்த்தால் அண்மையில் நடந்த மலாய் தன்மான காங்கிரசு போல தான், ஒன்று சேர்ந்து இனம் கண்டு செயல் படுவார்கள். தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள். அதனால் இந்த நாட்டில் தங்களது அடையாளத்தை கூட இழந்து வருகின்றார்கள்.


Durai Muniandy: உணமைதான் நம்மிடையே ஒற்றுமை என்பது மிக மிக குறைவு.


VT Rajan: ஆம், நீங்கள் சொல்வது தான் உண்மை ஐயா.. பொறுமை கொள்வோம்..


Nagoo Narasiman: உண்மை. இத்தகைய நிதானமான பொறுப்பை நாம் எப்பொழுதும், வரும் காலங்களில் கடைபிடிக்க வேண்டும்.


Muthukrishnan Ipoh: நிதானமாகப் பயணித்து நியாயத்தைப் பார்ப்போம்... நன்றிங்க...

Shanthi Ganapathy: நன்றி...வாழ்த்துகள். ஐயா.


Savithri Savi: உண்மையான வார்த்தைகள்.

Hamba Mu Umar Umar




Most Relevant is selected, so some comments may have been filtered out.





15 அக்டோபர் 2019

சோஸ்மா சட்டம் 2012

அக்கரைச் சோதனைகளில் இக்கரை வேதனைகள் - 2

சோஸ்மா சட்டம் 2012 என்று அழைக்கப்படும் குற்றச் செயல் பாதுகாப்புச் சட்டம்; (Security Offences Special Measures Act 2012: Sosma) எனும் சட்டத்தின் கீழ், மலேசியாவில் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கைது நடவடிக்கை. 


விசாரணை இல்லாமல் எவரையும் தடுத்து வைக்க சோஸ்மா சட்டம் வழி வகுக்கிறது. இந்தச் சட்டத்தைக் கொடூரமான சட்டம் (Draconian Act) என்றும் மலேசியர்கள் பலர் சொல்வார்கள்.

அந்தச் சட்டத்திற்கு இன்றைய வரைக்கும் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். திருத்தங்கள் செய்யப்பட்ட வேண்டும் எனும் பல்தரப்பு அறைகூவல்கள் தொடர்கின்றன. இருப்பினும் அவை யாவும் விழலுக்கு இறைத்த நீராய் கதை பேசுகின்றன.

மலேசியாவில் (ISA) எனும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் (Akta Keselamatan Dalam Negeri - Internal Security Act) முன்பு நடைமுறையில் இருந்தது. அதன் புது வடிவமே சோஸ்மா. நஜீப் அவர்களால் மலேசிய நாடாளுமன்றத்தில் 2012-ஆம் ஆண்டு அரங்கேற்றம் கண்ட சாசனம்.
 

முக்கியமான விசயத்திற்கு வருகிறேன். 12 பேர் கைது தொடர்பாகக் காவல் துறையினர் வெளியிட்டு வரும் அறிக்கைகள் உண்மையாக இருக்கலாம். நாம் அவற்றை மறுக்கவில்லை.

காவல் துறையினர் அவர்களின் கடமையைச் செய்கிறார்கள். செய்தும் வருகிறார்கள். வரவேற்கிறோம். பாராட்டுகிறோம். அவர்களின் கடமை உணர்வுகளுக்கு மலேசிய இந்தியர்கள் கட்டுப்பட வேண்டி உள்ளது. இது காலத்தின் கட்டாயம்.

அன்றையக் காலக் கட்டத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாய்ப் பயணித்த மலேசியர்கள் சிலர் இருந்து இருக்கலாம். இது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி.
 

இன்றையக் காலக் கட்டத்தில் வன்முறைத் தாக்குதல்களை நடத்துவதற்குச் சிலர் திட்டமிட்டார்கள். இது இப்போது இங்கே முன் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு.

இந்த இரு பதிவுகளையும் நாம் மறுக்கவில்லை. மறுபடியும் சொல்கிறேன். இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுவும் தீர்க்கமாக ஆராயப்பட வேண்டும். விசாரணை நடத்தப்பட வேண்டும். ஒருவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் வரையில் அவர் நிரபராதியே.

இருந்தாலும் இந்தக் கைது நடவடிக்கையைச் சுற்றி தேங்கி நிற்கும் சிற்சில சூழல்களையும்; அது தொடர்பான நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பாரபட்சம் இல்லாமல் விமர்சிக்க வேண்டிய நிலையிலும் இருக்கிறோம். நினைவில் கொள்வோம்.

கைதானவர்களில் சிலர் பயங்கரவாதத்திற்குத் துணை போனார்கள் என்பது ஒரு குற்றச்சாட்டு. அதுவே பெரும்பாலான மலேசிய மக்களின் புருவங்களை நெருட வைத்து இருக்கிறது. அதற்கு முக்கியமாக அமைவது ஒரே ஒரு காரணம் தான்.
 

பல்லாண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர். நடந்து முடிந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஓராண்டு அல்ல; ஈராண்டுகள் அல்ல. பத்தாண்டுகள் முடிந்து விட்டன.

விடுதலைப் புலிகளின் இலக்கு என்ன? அவர்களின் முயற்சிகள் என்ன? உலகம் அறிந்த விஷயம்.

ஆனால் அந்த இலக்கை அவர்களால் அடைய இயலவில்லை. அது தனி ஒரு வரலாறு. அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது என்பதும் உலகம் அறிந்த மற்றொரு வரலாறு.

மலேசியாவில் கைதான இந்தியர்களில் சிலர் பயங்கரவாதத்திற்குத் துணை போனார்கள் எனும் குற்றச்சாட்டிற்கு மீண்டும் வருகிறோம்.

இலங்கைக்கு வெளியே உள்ள நாடுகளில் விடுதலைப் புலிகள் தொடர்பான வன்முறைத்  தாக்குதல்கள் என்பது அரிதான நிகழ்வுகள்.

கூகிள்; யாகூ; பிங்; எக்கோசியா; போன்ற தேடல் இயந்திரங்களில் தேடிப் பாருங்கள். தெரியும்.

தாக்குதல்கள் பற்றிய அழுத்தமான பதிவுகள் எதுவுமே இல்லை. பேரணிகள் நடந்து உள்ளன. நினைவு நாட்கள் நடந்து உள்ளன. கொடியேற்றங்கள் நடந்து உள்ளன. ஆனால் வன்முறைச் சம்பவங்கள்; அல்லது வன்முறைத்  தாக்குதல்கள் என்று எதுவும் நடந்ததாகப் பதிவுகள் இல்லை.
 

ஆக கடந்த 10 ஆண்டுகளில், அப்படி ஒரு வன்முறைத் தாக்குதல் எங்கேயும் நடந்ததாகப் பதிவுகள் இல்லை. கூட்டிக் கழித்து இப்படிச் சொல்லலாம். நடக்காத ஒன்றைக் கற்பனை செய்தும் பார்க்கவும் முடியவில்லை.

அடுத்ததாக... மலேசியாவில் அந்த 12 பேரையும் கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிற கூற்றையும் விமர்சன ரீதியாகப் பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களும் ஆதாரங்கள் “திருப்திகரமாக” இருப்பதாகக் கூறி இருக்கிறார். சரி.

போதுமான ஆதாரங்கள் உள்ளன என்கிற அந்தக் கூற்று ஒன்றே போதும். அந்தக் கூற்றே ஒரு முக்கிய முரண்பாட்டுத் தோற்றத்தைத் தோற்றுவிக்கிறது. எப்படி என்பதையும் கவனிக்க வேண்டும்.

அவ்வளவு அதிகமான, அவ்வளவு போதுமான சான்றுகள் இருந்தால்... இருக்குமானால்... அப்புறம் ஏன் அவர்கள் சோஸ்மாவின் கீழ் தடுத்து வைக்கப் பட வேண்டும்.

மலேசியாவில் பினல் கோட் (The Penal Code) குற்றவியல் சட்ட அமைப்பு இருக்கிறது. (Chapter VIA: Offences Relating to Terrorism). அதன் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கலாம்.

(The Penal Code (Kanun Keseksaan) is a law that codifies most criminal offences and procedures in Malaysia. Throughout Malaysia—31 March 1976, Act A327; P.U. (B) 139/1976).

சோஸ்மாவிற்கு மீண்டும் வருகிறேன். எந்தவித விசாரணையும் இல்லாமல் ஒருவர் தடுத்து வைக்கப் படலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். மலேசியாவில் அது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.

முந்தைய ஆட்சிக் காலங்களில் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப் பட்ட சட்டம் தான் உள்நாட்டு பாதுகாப்பு சட்டம். மிகவும் பிரபலமானது. விளக்கம் தேவை இல்லை. ஏன் என்றால் உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

அந்த உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தைத் தாண்டிய நிலையில் அவசரகாலச் சட்டம் (Emergency Ordinance) இருக்கிறது. அபாயகரமான போதைப் பொருள் சட்டம் (Dangerous Drugs Act) இருக்கிறது.

இந்தச் சோஸ்மா சட்டம்; இந்த உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்; போன்றவற்றின் பின்னணியில் சில காரணங்கள் உள்ளன.


நன்றாகப் பாருங்கள். சாதாரணச் சட்ட செயல் முறைகளைத்  தவிர்ப்பதற்காக வடிவம் அமைக்கப் பட்டவை போல அந்தச் சட்டங்கள் ஒரு மாயைத் தோற்றத்தை உருவாக்குகின்றன.


மலேசியாவின் சட்ட அமைப்பின்படி ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ், எந்த ஒரு நபரையும் எந்த ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் தடுத்து வைக்கலாம். ஆனால் நம்பகமான; வலுவான சான்றுகளை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும். சான்றுகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் சோஸ்மா சட்டம்; உள்நாட்டு பாதுகாப்பு சட்டம்; அப்படி அல்ல. அவற்றுக்குச் சான்றுகள் தேவை இல்லை. அதிகாரிகள் விரும்பும் நபர்களைக் கைது செய்யலாம். எவ்வளவு காலம் வேண்டுமானாலும் தடுப்புக் காவலில் வைக்கலாம்.

அப்படிப்பட்ட ஓர் அதிகாரம் அதிகாரிகளுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு நீதித் துறையின் மறுபரிசீலனைகளும் தேவை இல்லை.

இப்போது ஐ.எஸ்.ஏ. என்கிற உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் நடைமுறையில் இல்லை. இருந்தாலும் அதற்குப் பதிலாக ’வந்தேண்டா பால்காரன்’ என்று சொல்லி சோஸ்மா வந்து இருக்கிறது.

அதனால் தான் ஐ.எஸ்.ஏ. என்பதைச் சிலர் Ikut Suka Aku என்று சொல்வார்கள். ஏன் என்றால் இந்தச் சட்டம் அரசாங்கத்திற்கு முழு அதிகாரத்தை வழங்குகிறது.

தங்களுக்கு எந்த ஒரு காரணம் சரியாகப் படுகிறதோ அந்தக் காரணத்தை முன் வைத்து ஒருவரைப் பிடிக்கலாம். பிடித்து கால வரையறை இல்லாமல் அடைத்தும் வைக்கலாம்.

சில நேரங்களில் போதுமான வலுவான சான்றுகள் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் சிலரைக் கைது செய்து காவலில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இப்படியும் சொல்லி நியாயப் படுத்தலாம்.

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தல் நெருங்கி வருகிறது. மறக்க வேண்டாமே. இப்போது நடந்த அதிரடி நடவடிக்கைகளைப் பார்த்தால்...

நாங்கள் இன்னும் ஒரு "வலுவான" அரசாங்கத்தை வைத்து இருக்கிறோம் என்பதைச் சொல்லிக் காட்டுவதற்கான ஒரு முன்னோட்டமாக அமையலாம். அல்லது அதுவே வரப் போகும் 14-ஆவது பொதுத் தேர்தலுக்கான பின்னூட்டமாகவும் அமையலாம்.

ஒரு சிறுபான்மை இனத்தைப் பலிகடா ஆக்கி பேராண்மை செய்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

புதிய அரசாங்கம் ஒரு புதிய மலேசியாவை உருவாக்கும் என்று எதிர்பார்த்தோம். அப்படி ஒன்றும் நடக்கவில்லை. என்ன செய்வது. இருந்ததும் சரி இல்லை. வந்ததும் சரி இல்லை.

இப்படி எழுதியற்காக, எழுதியவரைக் கொண்டு போய், ரோசாப்பூ சோஸ்மா பூ கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

(மலாக்கா முத்துக்கிருஷ்ணன்)
15.10.2019


பேஸ்புக் அன்பர்களின் பின்னூட்டங்கள்

M R Tanasegaran Rengasamy: பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது தான் கண்டுபிடிக்க முடிந்ததா...  இதுநாள் வரை தூக்கத்தில் இருந்தார்களா... நம்ப முடியவில்லை. நஜிப் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை எதிர்த்தவர்கள் இன்று நம்மினத்தின் பிரயோகிப்பது பச்சை துரோகம்.

Muthukrishnan Ipoh:
சோஸ்மா சட்டத்தைப் பயன்படுத்தாமல் மற்ற குற்றவியல் சட்டங்களில் ஏதாவது ஒன்றைப் பய்ன்படுத்தி இருக்கலாம் என்பதே பலரின் கருத்து... என்ன செய்வது... நாம் சிறுபான்மை இனத்தவர்...

Perumal Thangavelu: தமிழன் ஆளப் பிறந்தவன்... இந்த நாடு வரலாற்றைச் சொல்லும்... இந்திய வம்சாவளி மகாதீர்... இந்த நாட்டை வழி நடத்துவதில் கொஞ்சம் பெருமை. கொஞ்சம் வருத்தம். ஏதோ விட்ட குறை தொட்ட குறை எனது மூத்தோர் ஆண்ட பூமி. இன்று இந்திய வம்சாவளி பயணிக்கிறது..

Muthukrishnan Ipoh: கருத்துகளைப் பதிவு செய்யும் போது மிகவும் கவனமாகப் பதிவு செய்ய வேண்டும்... இனம், சமயம் தொடர்பான கருத்துகளை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது... ஒரு நெருக்கடியான கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்...

Muthukrishnan Ipoh: ஒரு நெருக்கடியான காலக் கட்டத்தில் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்... ஆகவே நம்முடைய பதிவுகள் எவரையும் புண்படுத்துவதாக அமையக் கூடாது. அரசாங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப் படுவோம். அதே சமயத்தில் நம்முடைய கருத்துகளையும் நியாயமான முறையில் பதிவு செய்வோம். உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு எதையும் பதிவு செய்ய வேண்டாமே...

Vijikrish Krishnasamy >>> Muthukrishnan Ipoh:  noted sir.

Murugan Rajoo: ஆட்சி மாறினால் SOSMA ரத்து என்று ஒரு கருத்து. அந்தக் கருத்தை ஆதரித்து தமிழர்கள் பிரச்சாரம தொடரும்... SOSMA பெரும் ஆபத்து... ஏன் தமிழர்களுக்கு இத்தனை இக்கட்டு.இத்தனை நாள் தமிழன் என்ற போர்வையில் வாழ்ந்தவர்கள் பலர், ஓடிவிட்டார்கள்... தமிழனைக் காட்டிக் கொடுத்து... நான் தமிழன் அல்ல இந்தியன் என்று கூச்சலிட்டு... சிந்தித்தெழுவாய் தமிழா இனி வாழ்வதற்கு...

Ravindran Tamil Selvan: எத்தனை ஆட்சி மாறினாலும் "மிதிக்க" படுவது தமிழர்கள் மட்டுமே

Dorairaj Karupiah >>> Ravindran Tamil Selvan: ஆமாம் நண்பரே... அவர்கள் கண்களுக்கு நம் இனம் தான் முதலில் தென்படுவது...

Ravindran Tamil Selvan: வஞ்சகமும் துரோகமும் கை கூடிவிட்டது... பிறகு ஏன் நம் கழுத்தை நெரிக்காது...

Ravi Purushothaman: இம்ரான் கான் விடுதலைப் புலிகள் பற்றி பேசியதும் மலேசியாவில் நடப்பதும்... கூட்டிக் கழித்துப் பார்த்தால்...

Kumar Murugiah Kumar's: சிறுபான்மை மக்கள் தொகையில் ஒற்றுமை குறைவு ஐயா!

Sri Kaali Karuppar Ubaasagar: சபாஷ் அண்ணா... சரியான நேரத்தில்... மிகச் சரியான பதிவு... வாழ்த்துக்கள்...

Varusai Omar: அவலை நினைத்து உரலை இடித்த கதைதான் இந்த கைது நாடகம். "அதுஉயிர் நீத்து" பல யுகங்கள் ஆன நிலையில் நம்ம காவல் துறை மிகச் "செம்மையாக" செயல் படுகிறார்கள். அதனால் தான் இந்திரா காந்தியின் கடத்தப்பட்ட 11 மாதக் குழந்தை, கடத்திய மதம் மாறிய தந்தை (இப்போது குழந்தைக்கு 12 வயது?) ஆகக் கூடி இன்னும் தான் தேடோ தேடென்று வலை வீசி தேடிக் கொண்டு இருக்கிறார்கள்! நொண்டிக் குதிரைக்குச் சருக்கியது சாக்கு என்ற கதைதான்!!

Varusai Omar: ஆம் நண்பா முத்து... மிக கவனமாக பதிவுகளை இட வேண்டும் தான்.

Varusai Omar: எதற்கு Sosma சட்டம்? விசாரணை என்று வரச் சொன்னால் வந்து விடப் போகிறார்கள்.

Dorairaj Karupiah: பசுத்தோல் போர்த்திய நரி அன்று கால் கடுக்க காத்து இருந்தாமே... அதற்கு நல்ல பலன்... இந்த நடவடிக்கைக்கு உள் நோக்கம் இருக்கிறது.  நம் இனத்தைக் கண்டால் இளக்காரம்... என்ன செய்வது குச்சி அவன் கையில்...

Varusai Omar >>> Dorairaj Karupiah: அதற்கு காரணம் நம் இனம் தானே... எட்டப்பனா ஆகி விட்டானே நண்பா? எங்கு போய் முட்டிக் கொள்வது?

Vijikrish Krishnasamy: Neengal sholvathu muttrilum unmaiye. (நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே)

Sai Dev: Ehllaavatraiyum kaivittu vittom... (எல்லாவற்றையும் கைவிட்டு விட்டோம்)

Kannan Kannan:
அவன் நாடகம்... இன்னும் மதிமயக்கம்...