20 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 60

(மலேசிய நண்பன் 16.6.2010 ஞாயிறு இதழில் பிரசுரம் ஆனது)

கணினியும் நீங்களும் - பகுதி 60


அர்ஜுனன் செல்வராஜா  arjunanselvaraja@ymail.com
கே: சார், எனக்கு தமிழ் பேச முடியும். ஆனால், தமிழ் எழுதத் தெரியாது. ஆங்கிலத்தில் எழுதுவேன். ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு மாற்றும் மென்பொருள் இருக்கிறதா?

ப:
தமிழ் மொழியின் மீது உள்ள உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்து கள். கணினி உலகம் எங்கோ போய் விட்டது. நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை அப்படியே தமிழுக்கு மாற்றிக் கொடுக்கும் நிரலி வந்துவிட்டது. அந்த நிரலி உலகில் உள்ள 19 மொழிகளை ஒரே ஒரு விநாடி நேரத்தில் மாற்றிக் கொடுத்து விடுகிறது. http://www.google.co.in/transliterate/indic/Tamil எனும் இடத்தில் அந்த நிரலியின் பயன் பாட்டைப் பயன் படுத்திக் கொள்ளலாம். இந்த மாதிரி மொழி மாற்றம் செய்வதை ஆங்கிலத்தில் Transliteration என்று சொல்வார்கள். தொடக்கத்தில் சற்று குழப்பம் வரலாம். கொஞ்ச நேரம் போராடினால் எல்லாம் சரியாகி விடும்.


நா.பார்த்திபன், செலாயாங், கோலாலம்பூர்
கே: இணையத்தில் நீங்கள் அண்மையில் ரசித்த வலைப் பதிவர்கள் ஜோக் ஏதாவது சொல்ல முடியுமா?

ப:
ஒரு செய்தி படித்தேன். தமிழ் நாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை செய்ய வந்தவர் ஒருவர். இவர் சிங்கையில் இருந்து வாரா வாரம் மளிகை சாமான்கள் வாங்க ஜொகூர் பாருக்கு வருவாராம். அவருடைய கடப்பிதழில் ஏதோ பிரச்னை. மலேசிய குடி நுழைவு அதிகாரிகள் அவரை மலேசியாவுக்குள் விட வில்லை. உடனே அவர் தன்னுடைய பான் அட்டையைக் காட்டி இருக்கிறார். PAN Card என்றால் இந்தியாவின் வருமான வரி இலாகா கொடுக்கும் Permanent Account Number.

அதைப் பார்த்ததும் மலேசிய அதிகாரிகள் அவருக்கு மரியாதை செய்து அனுப்பி வைத்ததாக எழுதி இருக்கிறார். நல்ல ஜோக். http://krpsenthil.blogspot.com எனும் இடத்தில் இருக்கிறது. போய்ப் படித்து பாருங்கள்.


தனபால் 
கே: கணினியின் இயங்குதளத்தில் .exe என்றும் .cab என்றும் கோப்புகள் உள்ளன. இவற்றின் பயன் என்ன?
ப:
.exe என்றால் executive கோப்பு என்பதின் சுருக்கம். இது ஒரு நிரலி. இதை இரண்டு முறை சொடுக்கு செய்தால் அந்த நிரலி விரிந்து இயங்கும். எல்லா நிரலிகளிலும் இந்தக் கோப்பு இயக்கம் இருக்கும். அடுத்து .cab என்றால் cabinet என்று பொருள். இது விண்டோஸ் இயங்கு தளத்தில் இருக்கும். இயங்கு தளம் என்றால் Operating System. இந்த .cab கோப்பு விண்டோஸ் இயங்குவதற்கு உதவி செய்யும்.

நீங்கள் ஏதாவது ஒரு நிரலியைக் கணினிக்குள் பதிப்பு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நிரலியைப் பற்றி விண்டோஸ் இயங்கு தளம் படித்துத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஒரு கோப்பில் பதித்து வைக்கும். இந்த வகையான கோப்புகள் ரொம்பவும் முக்கியமானவை. அதை நீங்கள் திறக்க வேண்டாம். அதில் நாம் படித்துத் தெரிந்து கொள்ள எதுவும் இல்லை. படித்தாலும் புரியாது. முடிந்தால் அதைத் திறந்து பார்க்காமல் இருப்பது நல்லது.


ஊர் பெயர் வெளியிடப் படவில்லை
கே: சார், நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். அங்கு 28 பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு மாதா மாதம் சம்பளப் பணத்தைக் கணக்குப் பார்த்துக் கொடுப்பது என் வேலைகளில் ஒன்று. சம்பளப் பட்டுவாடா கணக்கை மைக்ராசாப்ட் Excel நிரலியில் செய்து வருகிறேன். அதன் படியே சம்பளமும் கொடுத்து வந்தேன். யாரென்று தெரியவில்லை. திடீரென்று அந்த கணக்கு கோப்பை Folder ஐ பூட்டி வைத்து விட்டார்கள். ஒரு கடவுச்சொல் Password கொடுத்து கடைசி வரை திறக்க முடியாமல் செய்தும் விட்டார்கள். போன மாதம் சம்பளம் கொடுத்து விட்டேன். என் முதலாளி என்னை ஏசிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு கணக்கைப் பாது காக்க முடியாத நான் நிறுவன ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது என்று சொல்கிறார். அவர் சொல்வதைப் பார்த்தால் என் வேலைக்கே ஆபத்து வரும் போல இருக்கிறது. அந்தக் கணக்குக் கோப்பை மீட்டு எடுக்க வேண்டும். தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு கோடி புண்ணியம். வேதனையுடன் எழுதுகிறேன்.

ப:
நீங்கள் முக்கியமான பொறுப்பில் இருக்கிறீர்கள். நிறுவனத்தின் ஆவணங்களை எப்போதும் Backup எனும் பின்னாதரவு செய்து நகல்கள் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அலுவலகத்தில் இல்லாத போது யார் வேண்டுமானாலும் அந்தக் கணினியைப் பயன் படுத்தி இருக்கலாம். இல்லையா.

வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை போட வேண்டும்.  உங்களுக்குப் பிடிக்காதவர் யாராவது தொல்லை கொடுக்க விரும்பலாம். அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத் தொலைவில் இருந்து ரசித்து மகிழலாம்.

இது போட்டி, பொறாமை நிறைந்த உலகம். அடுத்தவர் வேதனைப் படுவதைப் பார்த்து சந்தோஷப் படும் இரண்டு கால் ஜ“வன்கள் வாழ்கின்ற காலம்.  ஆக அவர்கள் வெட்கப் படும்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். எப்படி?
  http://rs93.rapidshare.com/files/394833431/Office.Password.Unlocker.v4.0.1.6.WinALL.Cracked-YPOGEiOS.rar எனும் இடத்திற்குப் போய் நான் சொல்லும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். கணினியில் பதிப்பு செய்யுங்கள். அதில் எக்செல் ஆவணத்தின் இடத்தைச் சொல்லுங்கள். ஒரு சில விநாடிகளில் அவர்கள் போட்ட கடவுச் சொல்லைக் காட்டிக் கொடுத்து விடும். அந்தச் சொல்லைப் பயன் படுத்தி ஆவணத்தை மீட்டுக் கொள்ளுங்கள். இனிமேல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜெ.செல்லக்கண்ணு, கோத்தா கெமுனிங், கிள்ளான்
கே: நீங்கள் இவ்வளவு கணினியைப் பற்றி பேசுகிறீர்கள் சொல்கிறீர்கள். சின்ன கேள்வி. உங்களுடைய மடிக்கணினி இன்னும் எத்தனை நாளைக்கு வேலை செய்து தாக்குப் பிடிக்கும்  என்பதைப் பற்றி கணித்துச் சொல்ல முடியுமா?

ப:
கணினி என்பது மனிதன் கண்டுபிடித்த அறிவுப் பேழை. மடியில் தவழும் மனைவியைப் போன்ற ஒரு மகா காவியம். அப்படிப் பட்ட கலா ஓவியத்தைப் போய்  எத்தனை நாளைக்கு தாக்குப் பிடிக்கும்  என்று வாசிக்கலாமா?


பச்சையப்பன் ராஜகோபால், ஸ்ரீ மூடா, ஷா ஆலம்
கே: நம்முடைய CD எனும் குறும் தட்டில் கீறல்கள் விழுந்து விட்டால் அதைப் பயன் படுத்த முடியாமல் போகிறது. அத்துடன் அதனுள் இருக்கும் தகவல்களும் கிடைக்காமல் போகின்றன. முக்கிய தகவல்கள் இருந்தால் கெட்டுப் போன சிடி யிலிருந்து மீட்க முடியுமா?

ப:
முடியும். ஓர் இலவசமான நிரலி இருக்கிறது. கீறல்கள் விழுந்த குறுந்தட்டுகளில் இருந்து தகவல்களை மீட்டுத் தருகிறது.
http://download.cnet.com /CDRoller/30102248_411384331.html எனும் இடத்தில் சிடி ரோலர் எனும் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதைப் பயன் படுத்தி காணாமல் போன கோப்புகள், படங்கள் போன்றவற்றை மீட்டுக் கொள்ளுங்கள்.


மா.செல்வக்குமாரி, தாமான் பிஸ்தாரி, தஞ்சோங் ரம்புத்தான்
கே: என்னுடைய மகளுக்கு வயது ஐந்து. அவருக்கு அடிப்படை பியானோ பயிற்சிகளைச் சொல்லிக் கொடுக்க விரும்புகிறேன். கணினியின் தட்டச்சுப் பலகை மூலமாகச் சொல்லித் தர ஏதாவது நிரலி இருந்தால் சொல்லுங்கள் ஐயா. உண்மையிலேயே நீங்கள் மலேசிய இந்தியர்களுக்கு நல்ல கணினிச் சேவைகளைச் செய்து வருகிறீர்கள். இந்தப் பகுதியின் மூலமாக நாங்கள் எவ்வளவோ பயன் அடைந்து வருகிறோம். மலேசிய நணபன் ஆசிரியர் குழுவினர் அனைவருக்கும் நன்றிகள்.

ப:
ஈப்போவில் ஒவ்வொரு நாளும் மழை பெய்கிறது. அதனால் ரொம்ப பேருக்கு சளி இருமல். உங்களுடைய நீண்ட பாராட்டு மடலைப் படித்த எனக்கும் எக்கச் சக்கமாக சளி பிடித்து விட்டது. சமாளித்து விட்டேன். பியானோ பற்றி கேட்டு இருந்தீர்கள். உங்களுக்கு என்றே உருவாக்கின மாதிரி ஒரு நிரலி இருக்கிறது. மிக மிக அற்புதமான நிரலி. http://www.4shared.com/file/PqSiZeqi/FxKeyboard.html எனும் இடத்தில் அந்த நிரலி இருக்கிறது. போய் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


சுகுமாறன் நாயர் 
கே: தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். விண்டோஸ் 7ல் பயன் படுத்துவது எப்படி?

ப:
யூனிகோடு முறையை அனைத்து கணினிகளிலும் பயன் படுத்தும் வகையில் இப்போது முரசு அஞ்சல் நிரலியை உருவாக்கம் செய்துள்ளார்கள். அதை நீங்கள் http://anjal.net/ எனும் இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். விலை மலேசிய ரிங்கிட் 99. அதில் நிறைய பயன் பாடுகள் உள்ளன. அருமையான நிரலி. கொடுக்கின்ற காசிற்கு வஞ்சகம் இல்லாமல் செயல் பாடுகளும் அமைகின்றன.

தவிர நியூ ஹாரிசான் எனும் நிறுவனமும் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியைக் கொடுக் கிறார்கள். ஆனால், முரசு அஞ்சலைப் போல சகல வசதிகளும் இல்லை. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதைக் கணினிக்குள் பதிப்பு செய்ததும் ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். அதை வலது சொடுக்கு செய்யுங்கள்.  Settings  என்று வரும். அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விடுங்கள். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.

தட்டச்சு பலகையில் Alt எனும் பொத்தானையும் 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளை நிற மணியின் சின்னம் தங்க நிறமாக மாறும். அப்படி என்றால் தமிழுக்கு மாறி விட்டது என்று அர்த்தம். அதே பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால் சின்னம் வெள்ளை நிறமாக மாறும். ஆங்கிலத்திற்குப் போய்விட்டது என்று அர்த்தம். தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்.

06 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 59

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 06.06.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

கார்த்திகேயன், கோம்பாக், சிலாங்கூர்
கே: நாம் வாங்கிய கைப்பேசி அசலானதா அல்லது போலியானதா என்று எப்படி கண்டுபிடிப்பது. ஏன் என்றால் குறைந்த விலைக்கு நிறைய வசதிகளுடன் சீனாவிலிருந்து கைப்பேசிகள் வருகின்றன.

ப:
உலகத்தில் உள்ள எல்லா கைப் பேசிகளுக்கும் IMEI எனும் தனிப்பட்ட அசல் தர இலக்கங்களைக் கொடுத்து இருப்பார்கள். International Mobile Equipment Identification. அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உங்கள் கைப்பேசியில் *#06# என்று தட்டுங்கள். உடனே 15 எண்களைக் கொண்ட IMEI திரையில் வரும். அதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு http://www.numberingplans.com/?page=analysis&sub=imeinr எனும் இணையத் தளத்திற்குப் போய் அந்த எண்களை உள் புகுத்துங்கள். உங்கள் கைப்பேசி அசலா போலியா என்பது தெரிந்து விடும். தவிர, உங்கள் கைப்பேசியைப் பற்றிய எல்லா தகவல்களும் கிடைத்து விடும்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும். நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம். இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம்.  Control Panelக்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள். உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

மேலும் சில தகவல்களைச் சொல்கிறேன்.

1. டிஜிட்டல் காமிரா மூலம் எடுத்த படங்களை நேரடியாக Wallpaper ஆக்க வேண்டாம். ஏன் என்றால் இந்தப் படங்கள் கணினியில் அதிகப் படியான மெமரி எனும் நினைவாற்றலை எடுத்துக் கொள்ளும்.

2. ஒரு நிரலியை மூடிய பிறகு Desktop எனும் மேசைத் திரையில் வைத்து Refresh எனும் புத்தாக்கம் செய்யுங்கள்.

3. கணினி முழுமையாக Boot ஆகி செயல் படுவதற்கு முன்னால் எந்த நிரலியையும் உடனடியாகத் திறக்க வேண்டாம்.

4. AutoCAD, 3D Studio MAX, Corel Draw, Photoshop போன்ற பெரிய நிரலிகளைத் தயவு
செய்து C Drive ல் உள்ள இயங்குதளத்தில் பதிக்க வேண்டாம். வேறு ஒரு Partition எனும் வன் தட்டுப் பிரிவில் பதியுங்கள். கணினி வேகமாக இயங்கும்.

5. மேசை திரையில் அதிகமான Shortcut களை உருவாக்கி வைக்க வேண்டாம். பெரிய அளவிலான கோப்புகளைச் சேர்த்து வைக்க வேண்டாம்.

6. அடிக்கடி Recycle Bin ஐ சுத்தப் படுத்தி விடுங்கள்.

01 ஜூன் 2010

கணினியும் நீங்களும் - பகுதி 58

(இந்தக் கேள்வி பதில் அங்கம் 31.05.2010 மலேசிய நண்பன்  ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

காஞ்சனா, தம்பின்  
கே: அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெற இருக்கும் செம்மொழி நாட்டில் தமிழ் மொழியின் எழுத்துகளைச் சீர்த்திருத்தம் செய்யப் போகிறார்களாம்.  அதன்படி
இ, ஈ, உ, ஊ ஆகிய எழுத்து வரிசைகளில் உள்ள 72 உயிர்மெய் எழுத்துகளை மாற்றி அமைக்கப் போகிறார்களாம்.  உண்மையா? உங்கள் கருத்து என்ன?

ப:
மொத்தத்தில்  தமிழில் உள்ள 246 எழுத்துகளையும்  எடுத்து விட்டு 72 எழுத்து களாக மாற்றப் போகிறார்கள். இது தான் கதை. இ, ஈ, உ, ஊ ஆகிய நான்கு எழுத்து வரிசைகளில் 72 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.

அந்த 72 உயிர்மெய் எழுத்துகளையும் அப்படியே மாற்ற வேண்டும் என்று சிலர் திட்டம் தீட்டி செயல் படுத்தி வருகிறார்கள்.

சி, சீ, சு, சூ, தி, தீ, து, தூ, பி, பீ, பு, பூ போன்ற எழுத்துக்கள் எதிர்காலத்தில் உலகளாவிய நிலையில் பெரும் பிரச்னை கொடுக்கப் போகிறதாம். அதனால் அவற்றை மாற்ற வேண்டும் என்கிறார்கள். அதோடு விட்டால் பரவாயில்லை. நான்கு புதிய எழுத்துக்களையும் கொண்டு வருகிறார்கள்.

அவை மத்திய கிழக்கு நாடுகளின் புழக்கத்திற்கு கொண்டு போகின்றன. அந்தப் புதிய எழுத்துகள் ஜிலேபி வடிவத்தில் ரொம்ப அழகாக இனிப்பாகவும்  இருக்கின்றன.

குழந்தைகளுக்கு மிட்டாய் ஜிலேபி என்றால் பிடிக்கும் இல்லையா. அதனால் அந்த எழுத்துகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே படிப்பாரகள் என்று அப்படி  வடிவம் அமைத்து இருக்கிறார்கள்.

சீர்திருத்தம் செய்யப் படும் தமிழின் உகர எழுத்துகளை இடமிருந்து வலது புறமாக அராபிய ஜாவி எழுத்துகளைப் போல எழுத வேண்டி வரும். சொல்லப் போனால் தமிழின் 246 எழுத்துகளை புதிய வடிவத்தில் 72 எழுத்துகளுக்குள் அடக்கி விட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாயிரம் எழுத்துகளை வைத்து இருக்கும் சீனர்களே அமைதியாக இருக்கிறார்கள். 246 எழுத்துகளை வைத்து இருக்கும் நாம் ஏன் அய்யா இப்படி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். புரியவில்லை. தமிழ் எழுத்துகள் செய்த பாவம் என்ன என்றும் தெரியவில்லை.

ஒரே அடியாக 246 எனும் எண்களின்  நடுவில் இருக்கும் 4ஐ பிடுங்கி விட்டால் ரொம்ப நல்லா இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. சீர்திருத்தமும் செம்மையாக இருக்கும் இல்லையா.

அதைவிட 26 ஆங்கில எழுத்துகளை அப்படியே தமிழுக்கு கொண்டு வந்து அம்மா என்று எழுதுவதற்குப் பதில் AMMA என்று ரோமானிய வடிவத்தில் எழுதி விடுவதே நல்லது என்பது என்னுடைய கருத்து.  தமிழ் எழுத்துகளே தேவை இல்லை. ரொம்ப சிம்பளாகப் போய் விடும். செத்துப் போன நீரோ திரும்பி வந்து பிடில் வாசிக்கட்டுமே.

ஆக, அந்தத் திட்டத்தை செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றம் செய்யப் போகிறார்கள். சபாஷ் சரியான போட்டி! மாற்றுங்கள் என்று சொல்லிக் கொண்டு மலேசியாவில் இருந்தும் சிலர் போகிறார்கள். பாவம், அவர்களைக் குறைச் சொல்லக் கூடாது.

அவர்களில் சிலர்  கஷ்டப் பட்டு எழுதிய நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் எல்லாம் எதிர்காலத்தில் யாராலும் படிக்க முடியாமல் போகப் போகிறது. ஏன் என்றால் புதிய தமிழ் எழுத்துகள்தான் செல்லுபடி ஆகும். அப்புறம் எழுதியதை எல்லாம் புதிதாக மாற்ற வேண்டி இருக்கும்.

புதிய புத்தகங்களை அச்சிடுபவர்களின் இல்லங்களில் குபேர சாமியாரின் சொல் வாக்குதான் செல்வாக்காக இருக்கும். வாழ்க செம்மொழி மாநாட்டின் செம்மலகள்.

குமாரி நளினி  nalini1882@gmail.com

கே: கணினியை அடைக்காமல் நீண்ட நேரம் பயன் படுத்தினால் அதனால் கணினிக்குப் பாதிப்பு ஏற்படுமா? கணினியை அடிக்கடி திறந்து அடிக்கடி அடைப்பதால் அதற்கு பாதிப்பு ஏற்படுமா?

ப:
சில மாதங்களுக்கு முன்னால் இதே மாதிரியாக ஒரு கேள்வி கேட்கப் பட்டிருந்தது. கணினியை அடிக்கடி அடைத்து திறந்து, அதாவது On and Off செய்து  கொண்டிருந்தால் அது ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

அது சீக்கிரமாகக் கெட்டுப் போக வாய்ப்பும் இருக்கிறது.  கணினியை On செய்து திறக்கும் போது ஒரு வகையான மின் அதிர்வு  ஏற்படும். அந்த அதிர்வு ஒவ்வொரு முறையும் அதிர்ச்சியை உண்டாகும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை திறக்கிறீர்கள்-அடைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் அத்தகைய மின் அதிர்வுகளைக் கணினியின் உள்ளே இருக்கும் சாதனங்கள் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும்.

இப்படியே அடைத்துத் திறந்து கொண்டிருந்தால் ஒரு நாளைக்கு கணினி நிரந்தரமாகக் கண்களை மூடிக் கொள்ளும். அதனால், கணினியில் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே தடவையில் செய்து முடித்து விடுங்கள்.

பின்னர் அதற்கு சில மணி நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். சும்மா சும்மா திறப்பதும் சும்மா சும்மா அடைப்பதுமாக இருந்தால், பாவம் அந்தக் கணினிதான் என்ன செய்யும்.

நீங்களே சொல்லுங்கள். அதற்கு மட்டும் வாய் இருந்தால் உங்களைத் திட்டித் தீர்த்து விடும். கணினியை நீண்ட நேரம் அடைக்காமல் வைத்திருந்தால் அதிகமாகச் சூடு ஏறலாம். அதனால் கணினி சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

மா.மணிவண்ணன், கம்பார்
கே: இணையம் என்றால் என்ன. இணையப் பக்கம் என்றால் என்ன. ஒரே மாதிரியாகத் தானே இருக்கின்றன.

ப:
இரண்டும் ஒன்றல்ல. இணையம் தான் முதன் முதலில் வந்தது. இணையத்தின் மூலமாகப் பிறந்ததுதான் இணையத் தளம். இணையம் என்பது Internet. அது ஒரு தொழில்நுட்பம். World Wide Web என்று சொல்லப் படும் வையக விரிவு வலையைத்தான் நாம் பொதுவாக இணையம் என்று சொல்கிறோம்.

இணையம் என்பது ஒரு தொழில்நுட்பப் பொருள். இணையத்தின் பயன்பாடுகள்தான் இணையப் பக்கம், இணையத்தளம், மின்னஞ்சல் போன்றவை எல்லாம்.

இணையத்தின் உள்ளே நுழைந்ததும் நீங்கள் பார்க்கும் அகப் பக்கங்களை இணையப் பக்கங்கள் என்று சொல்கிறோம். ஓர் இணையத் தளத்தில் பல இணையப் பக்கங்கள் இருக்கும். ஆக, எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக இணையம்  என்கிறோம். 

குமாரி. ராஜாத்தி, பெக்கான் பாரு, கோப்பேங்

கே: என்னுடைய கணினி ஆமை போல நகர ஆரம்பிக்கிறது. ரொம்ப வேதனையாகவும் கஷ்டமாகவும் இருக்கிறது. கணினியை On செய்து விட்டு காலைப் பசியாறுதல் முடித்து விட்டு வந்தாலும் திரையில் எதுவும் வராது தெரியாது. நான் பயன் படுத்துவது விண்டோஸ் XP. என்ன செய்யலாம்?

ப:
இதற்கு நிறைய காரணங்களைச் சொல்லலாம். நீங்கள் மட்டும் அந்தக் கணினியைப் பயன்படுத்துகிறீர்களா இல்லை வீட்டில் உள்ள மற்றவர்களும் பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. சரி, எப்படி இருந்தாலும் உடனடியாகச் செய்ய வேண்டிய  சில நிவாரணங்களைச் சொல்கிறேன்.

தேவையில்லாத ஆவணங்கள், படங்கள், வீடியோ படங்கள், கோப்புகள், பாடல் கோப்புகள், பாடல் காட்சிகள், நிரலிகள் போன்றவை உங்கள் Hard Disc எனும் தட்டகத்தை அடைத்துக் கொண்டிருக்கலாம்.

கணினியால் மூச்சுவிட முடியாத நிலைமைகூட வந்திருக்கலாம். தேவையில்லாத Programs எனப்படும் நிரலிகளை அகற்றிவிடுங்கள். உங்களுக்குத் தெரியாமல் யாராவது பெரிய விளையாட்டு நிரலிகளைப் போட்டு வைத்திருக்கலாம். 

Control Panel க்குப் போய் அங்கே Add or Remove Programs எனும் பகுதியில் இந்த விளையாட்டுகளை அப்புறப்படுத்தி விடுங்கள். இது மிகவும் முக்கியம். 

முகப்புத் திரையில் My Computer எனும் சின்னத்தில் சுழலியை வையுங்கள். வலது புற சொடுக்கு செய்யுங்கள். அதில் Manage எனும் சொல்லைச் சொடுக்குங்கள்.

உள்ளே போய் Disk Defragmenter என்பதைத் தட்டிவிடுங்கள். உங்கள் தட்டகத்தின் பிரிவுகள் காட்டப்படும்.

அவற்றை ஒவ்வொன்றாக Defragment எனும் சுத்திகரிப்பு செய்யுங்கள். அதிக நேரம் பிடிக்கலாம். எல்லாம் முடிந்த பிறகு கணினியை Restart எனும் மறு  தொடக்கம் செய்யுங்கள். இப்போது உங்கள் கணினி வேகமாக வேலை செய்யும். 

16 மே 2010

கணினியும் நீங்களும் - பகுதி 57

(கடந்த மலேசிய நண்பன் 16.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

Second Hand Computers and various Computer accessories can be purchased from
Mr.Ravi, Bahau, NS.
The sales office is based in Seremban. 
(HP:0193525278)
Pentium3 Full Set with Monitor, Windows XP -
Price
RM399

Pentium4 Full Set with Monitor, Windows XP -
Price RM499 to RM899

New and used Laptops -
Prices range from RM600++

All second hand PCs are valid with 3months warranty.

ஈஸ்வரன்    eswaran1818@yahoo.com
கே: நம்முடைய தட்டச்சுப் பலகையில் இருக்கும் பொத்தான்களில் Alt என்று ஒரு பொத்தான் இருக்கிறது. இது எதற்காகப் பயன் படுகிறது? சிலர் 'அல்ட்டர்' என்று அழைக்கிறார்கள். சிலர் 'அல்ட்' என்று அழைக்கிறார்கள். எது சரி?

ப:
Alternate எனும் சொல்லின் சுருக்கமே Alt என்பதாகும். 'இரண்டில் ஒன்று ' எனும் பொருளைக் குறிக்கிறது. அதை  'அல்ட்டர்னெட்' என்று அழைப்பதே சரி. இந்தப் பொத்தான் தனியாக வேலை செய்யாது. இதனுடன் வேறு பொத்தானையும்  சேர்த்து அழுத்தினால் பல வேலைகளைச் செய்ய முடியும்.

சில சமயங்களில் கணினி நிலை குத்திச் செயல் படாமல் போகும் நிலைமை ஏற்படும். அப்போது Alt - Ctrl - Del ஆகிய மூன்று பொத்தான்களையும் ஒரே சமயத்தில் சேர்த்து அழுத்த வேண்டும். அப்படி அழுத்தும் போது Windows Task Manager எனும் விண்டோஸ்

செயல் நிர்வாகி என்பவர் ஒருவர் வருவார். அவரை உதவியாக வைத்துக் கொண்டு கணினியை அடைத்து விட்டு மறுபடியும் பாது காப்பான முறையில் தொடக்கி விட முடியும்.

தனபால் மணி    danabalmani@yahoo.com
கே: முரசு அஞ்சல் 10 ஆம் பதிப்பில் உள்ள புதுமைகள் சிறப்புகள் என்ன? கணினி உலகில் நீங்கள் முக்கியமானவர். அதனால் உங்களிடம் கேட்கிறோம்.

ப:
யூனிகோடு குறியீட்டு முறைதான் இதில் உள்ள தலையாய சிறப்புத் தன்மை. இதில் பழைய TSCII, TAB, TAM, AA  குறியீட்டு முறைகள் இல்லை. லிப்கோ தமிழ்ப் பேரகராதி சேர்க்கப் பட்டுள்ளது. நீங்கள் தட்டச்சு செய்யும் போதே தமிழ்ச் சொற்களின் பொருளையும் தேடிப் பார்க்கலாம்.  விண்டோஸ் இயங்கு தளத்தில் உள்ள பழைய ஆவணங்களை யூனிகோடு முறைக்கு எளிதாக மாற்றிக் கொள்ள முடிகிறது.

விலையும் மலிவு. RM 99 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்கிறார்கள். இன்னும் ஒரு விஷயம். பள்ளி மாணவர்கள் முரசு அஞ்சலில் தட்டச்சு செய்யும் போது எழுத்துக் கூட்டி வாசிக்கின்ற புதிய அமைப்பும் உள்ளது. பொதுவாகச் சொல்ல வேண்டும் என்றால் முரசு அஞ்சல் மலேசியத் தமிழர்கள் உருவாக்கியது. ஆதரவு தர வேண்டியது நம் அனைவரின் கடமை.

அப்புறம் கணினி என்கிற கடலில் அடியேன் ஒரு சின்னப் பொடி. பெரிய பெரிய வார்த்தைகளைப் பயன் படுத்தி மூழ்கடிக்க வேண்டாம்.

பரமேஸ்வரி    premi_santhy@hotmail.com
கே: Unicode என்று ஆங்கிலத்தில் சொல்வதைத் தமிழில் எப்படி சொல்லலாம்? தமிழ் மொழிக்கு இந்த 'யுனிகோட்' அவசியமா?

ப:
கணினிகள் எண்களைக் கொண்டு செயல் படுகின்றன. அவை எழுத்து களையும் மற்ற வரி உருவங்களையும் எண் வடிவத்திலேயே

பார்க்கின்றன. சேமிப்பும் செய்கின்றன. யூனிக்கோடு கண்டு அறியப் படுவதற்கு முன்னர் எழுத்து களுக்கு எண்களை வழங்க நூற்றுக் கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக இருந்தன.

அந்த முறைகளைத் தவிர்த்து விட்டு ஒரு எழுத்துக்கு ஓர் எண்ணைக் கொடுக்கிற முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்று விட்டார்கள். Fonts எனும் எழுத்துருகள் இல்லாமலே செயல் படும் முறைதான் இந்த யூனிகோடு முறை. எழுத்துரு என்றால் Font. உலகத்தில் உள்ள

எல்லா மொழிகளுக்கும் ஒரே ஒரு குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைக்கப் பட்டதுதான் இந்த யூனிகோடு முறை.Unicode என்பதைத் தமிழில் ஒருங்குறி என்று அழைப்பதே சரி.  கணினி வந்த புதிதில் ஆளாளுக்கு எழுத்துருகளை உருவாக்கினார்கள்.

அதனால், பெரும் பிரச்னைகள் வந்தன. ஒருவர் 'நித்தியா' என்று ஒரு தமிழ் எழுத்துரு வடிவத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக்
கொள்வோம்.

அவர் தயாரித்த நித்தியா எழுத்துருகள் நம்மிடம் இருந்தால் தான் அவர் எழுதியதை நாம் படிக்க முடியும். இல்லை என்றால் பதிவு இறக்கம் செய்ய வேண்டும். பதிவு இறக்கம் செய்ய முடியவில்லை என்றால் அவர் எழுதியது எதையும் படிக்க முடியாது. இப்படி தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் ஆனால் நிலைமை என்ன ஆவது. வேளாண்மை வீடு வந்து சேராது.

அதனால், அமெரிக்காவில் கலிபோர்னியா எனும் இடத்தில் கணினி ஒருங்குறி ஒன்றியத்தை உருவாக்கினார்கள். அதற்கு World Unicode Consortium என்றும் பெயர் வைத்தார்கள். உலக நாடுகள் எல்லாம் உறுப்பியம் வகிக்கின்றன. தமிழ் மொழிக்கும் ஒருங்குறி கொடுத்து விட்டார்கள். இனி எதிர்காலத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுத்துருகளை உருவாக்க முடியாது.

யூனிகோடு முறை நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று சொல்ல வேண்டும். கூகிள் தேடல் இயந்திரத்தில் போய் தமிழிலேயே  'மலாக்கா முத்துக்கிருஷ்ணன்' என்று தட்டிப் பாருங்கள். பெருமைக்காக சொல்கிறான் என்று நினைக்க வேண்டாம். 13 ஆயிரம் பக்கங்களைக் கொடுக்கிறது. யூனிகோடு எனும் ஒருங்குறி என்கிற முறை இல்லை என்றால் அந்தத் தேடல் இயந்திரம் தமிழில் தேடி இருக்காது. தமிழில் ஆவணஙளைச் சேர்த்தும் வைத்து  இருக்காது. முரசு அஞ்சல் வாங்க வசதி இல்லாதவர்கள்  http://software.nhm.in/products/writer எனும் இடத்திற்குப் போய் நிரலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


காயத்ரி    gayatry@wohhup.com
கே: சார், நான் அசல் விண்டோஸ் இயங்கு தளத்தை பணம் கொடுத்து பயன் படுத்தி வந்தேன். திடீரென்று You may be a victim of software counterfeiting எனும் அறிவிப்பும் எச்சரிக்கையும் வருகின்றன. என்ன செய்வது என்று புரியவில்லை. பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன். அதனால் அந்த அறிவிப்பைத் தவிர்ப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. உதவி செய்யுங்கள்.

ப:
உங்கள் வேதனை எனக்கு புரிகிறது. நீங்கள் அசல் இயங்கு தளத்தை வாங்கி இருக்கிறீர்கள். இருந்தும் போலியானது என்று எச்சரிக்கை வருகிறது. இந்த மாதிரியான பிரச்னை இருப்பது மைக்ராசாப்ட் நிறுவனத்திற்கும் தெரியும். அதற்காக அதை நீக்க ஒரு சின்ன மென்பொருள் இருக்கிறது. http://download11.com/get/RemoveWGA.exe எனும் இடத்தில் கிடைக்கும். நாம் காப்புரிமை சட்டத்தை மீறி எதையும் செய்யவில்லை.

எப்படி இயக்குவது என்று சொல்கிறேன். முதலில் Start பொத்தானுக்கு பக்கத்தில் காலியான இடத்தில் வலது சொடுக்கு செய்யுங்கள்.

Task Manager வரும். அதைச் சொடுக்குங்கள். அதில் Processes என்பதைத் தேர்வு செய்யவும். உள்ளே wgatray.exe எனும் கோப்பு இருக்கும். அதை வலது சொடுக்கு செய்து End Process Tree என்பதைத் தட்டி விடவும். அடுத்து கணினியை அடைத்து விட்டு மறுபடியும் திறக்க வேண்டும்.

அதாவது Restart. கணினி தொடக்கம் ஆனதும் தட்டச்சுப் பலகையில் ஆக மேலே இருக்கும் F8 பொத்தானைத் தட்டி விடுங்கள்.  அப்படி

திறக்கும் போது Safe Mode என்பதைத் தேர்வு செய்யுங்கள். உள்ளே போனதும் RemoveWGA.exe ஐ இயக்கி விடுங்கள். அந்த நிரலியை

பதிப்பு எனும் Install செய்ய வேண்டியது இல்லை. அவ்வளவு தான். உங்கள் பிரச்னை தீர்ந்தது. பிரச்னை தொடர்ந்தால் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

கணினி வாசகன், தஞ்சோங் மாலிம்
கே: Adobe Photoshop நிரலியின் விலை RM 1200 என்று போன வாரம் எழுதி இருந்தீர்கள். ஆனால், நான் RM 10 கொடுத்து வாங்கி இருக்கிறேனே. அது எப்படி?

ப:
ஆமாம். பத்து பேரைக் கூப்பிட்டு கல்யாணம் செய்தால் பத்தாயிரம் செல்வு ஆகும். அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் தாலி கட்டினால் பத்து வெள்ளியோடு முடிந்து விடும். அது அப்படி தான்.


பச்சையப்பன் ராஜு, தாமான் ஸ்ரீ மூடா, ஷா ஆலம்

கே: உளவு பார்க்கும் Spy Camera மூலம் பெண்களைப் படம் பிடித்து இணையத்தில் வர வைக்கிறார்களே அவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

ப:
பெரிசா நினைக்க என்ன இருக்கிறது. அஞ்சு வயசு அச்சு பிச்சுகள் எல்லாம் ஆள் ஆளுக்கு காமரா கைப்பேசிகளோடு அலைகிற

காலத்தில் வாழ்கிறோம். அதனால் நாம் தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் அந்த அளவுக்கு வளர்ந்து விட்டது. அந்த மாதிரியான அவல நிலைமை வராமல் இருக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும். சில பாது காப்பு முறைகளைச் சொல்கிறேன்.

1. Cyber Cafe என்று சொல்லப் படும் இணைய மையங்களுக்குப் போகும் பெண்களே! கணினிக்கு மேலே வைக்கப் பட்டிருக்கும் புகைப்படக்

கருவி உங்களுக்குத் தெரியாமல் உங்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கலாம். அதனால் போய் உட்கார்ந்த உடன் அதை வேறு பக்கம் திருப்பி விடுங்கள். சந்தேகமாக இருந்தால் அந்த மாதிரியான இடங்களுக்குப் போவதைத் தவிர்க்கலாமே.

2. வெளியூர்களுக்குப் போய் ஓட்டல்களில் தங்க வேண்டி வரலாம். அந்த மாதிரியான நேரங்களில் படுக்கைக்கு அருகில் காமரா இருக்கிறதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். இது முக்கியம். குளியல் அறைகள், துணி மாற்றும் அறைகளில் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

3. மிக நெருக்கமாக இருக்கும் போது உங்கள் கணவரே விளையாட்டுத் தனமாய்  உங்களைப் படம் பிடிப்பதாய் இருந்தால் கூட அனுமதிக்கக் கூடாது. கைப்பேசி காமராவில் படம் பிடிக்கலாம். பிடித்ததைப் பார்த்து விட்டு பிறகு அழித்து விடலாம் என்பார். கணவர்தானே என்று நீங்களும் பேசாமல் இருந்து விடுவீர்கள். சொன்ன மாதிரி அதை உங்கள் கணவர் முற்றாக அழித்தும் இருப்பார். ஆனால், கைப்பேசியில் இருந்து அழித்த படங்களை மீட்டு எடுக்க மென்பொருள்கள் உள்ளன. அதே கைப்பேசியை உங்கள் கணவர்  ஏதோ ஒரு கைப்பேசி விற்பனைக் கடைக்கு கொண்டு போய் பழுது பார்க்கக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

மேற்சொன்ன மென்பொருளைப் பயன் படுத்தி கைப்பேசியில் இருந்து அழித்த படங்கள், வீடியோக்களை மீட்க முடியும். அதை அப்படியே இணையத்தில் உலா வர வைக்கவும் முடியும். அந்த மாதிரியான கில்லாடித் தனமான மென்பொருள்கள் என்னிடமும் உள்ளன. ஆனால், இதுவரை பயன் படுத்தியது இல்லை. அதனால், ஜாக்கிரதை! ஜாக்கிரதை!

4. காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதல் இனிக்கும் போது இமய மலையை இழுத்து வந்து காலடியில் போடுவார்கள். அதே காதல் கசக்கும் போது வில்லனாக மாறிப் போவார்கள். அதனால் காதலிக்கும் போது காதலனிடம் கவனமாய் இருங்கள். படம் பிடிக்க அனுமதிக்கவே வேண்டாம். இந்தக் காலத்து காதலர்களில் பணத்துக்காக எதையும் செய்யும் சில பஞ்சமா பாதகர்களும் இருக்கிறார்கள்.

எல்லோரையும் சொல்லவில்லை. பத்திரம். பத்திரம். சேலை கட்டிப் பிடித்த படத்தை நிர்வாணப் படமாக மாற்றிக் கொடுக்கும் வரைகலை நிரலிகள் வந்துவிட்டன. அதை வைத்து அவர்கள் என்ன என்னவோ செய்ய முடியும்.

5. படிக்கிற பிள்ளைகள் அதிக நேரம் அரட்டையாடல் Chatting செய்கிறார்கள் என்றால் பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். தயவு செய்து அதிகாரத்தைப் பயன் படுத்த வேண்டாம். கைப் பேசியில் தொங்கிக் கொண்டு கம்ப ராமாயணம் படிக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

அப்படிப் பட்டவர்களிடம் நாசுக்காகச் சொல்லி திசையைத் திருப்ப வேண்டும். இறுக்கிப் பிடித்தால் வேறு வினையே வேண்டாம்.

6. கடைசியாக ஒன்று. இளம்  பெண்களே! பொது இடங்களுக்கு போகும் போது கொஞ்சம் நாகரிகமாக உடை அணிந்து போங்கள். என்னையும் பார் என் அழகையும் பார் கிழிஞ்சு போன என் சிலுவாரையும் பார் என்று பாடிக் கொண்டு போக வேண்டாம். அது சும்மா இருக்கிற காமரா கைப்பேசிகளுக்கு வேலை கொடுப்பது மாதிரி.

கலைப் பித்தன், குவாந்தான், பகாங்
கே: சார், சென்ற வாரம் சுங்கை சிப்புட் மாலினி என்பவருக்கு பதில் கொடுத்தீர்கள். நல்ல கேள்வி நல்ல பதில். உங்களுடைய பதிலில் இலக்கணப் பிழை இருந்தது. பழசான கணினிகள் 400 ரிங்கிட் வரை கிடைக்கிறது என்று பதில் கொடுத்தீர்கள். கணினிகள் என்பது பன்மை. கிடைக்கிறது என்பது ஒருமை. பன்மையில் தொடங்கி ஒருமையில் முடிக்கக் கூடாது. இனிமேல்  இலக்கணப் பிழைகளைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ப:
தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. மனதிற்குச் சந்தோஷமாகவும் அதே சமயத்தில் கொஞ்சம் நெருடலாகவும் இருக்கிறது. பரவாயில்லை.  பிழைகள் வராமல் பார்த்துக் கொள்கிறோம்.

அஜேந்திரா செல்வம்   
கே: Adobe Page Maker என்பது பழைய செயலி என்கிறார்கள். உண்மையா?

ப:
உண்மைதான். புத்தகங்கள், திருமண அழைப்பிதழ்கள், விளம்பரங்கள், அறிவிப்பு அறிக்கைகள் தயாரித்து வெளியிடுபவர்கள் இந்தப் பேஜ் மேக்கர் செயலியைப் பயன் படுத்தி வருகிறார்கள். இந்தச் செயலி யூனிகோடு குறியீட்டு முறையைச் சரியாக ஏற்றுக் கொள் வதில்லை என்பது ஒரு கசப்பான உணர்வு. உலகமே யூனிகோடு ஒருங்குறி முறைக்கு மாறி விட்டது. ஆகவே நாமும் மாற வேண்டும்.

இந்தச் செயலியைத் தயாரித்த அடோபி நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்னால் அதன் தயாரிப்பை நிறுத்திக் கொண்டது. In Design எனும் புதிய செயலியை அறிமுகம் செய்தது. மேற்கத்திய நாடுகளில் பேஜ் மேக்கரை விட்டு விட்டு இன் டிசைன் செயலிக்குப் போய் விட்டார்கள்.  இன் டிசைன் இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிறது.
மொஹாய்தீன் ஜாபார், லாபு செண்டாயான்
கே:செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துகளைச் சீர்திருத்தம் செய்யப் போகிறார்களாம். இணையத்தில் பெரிய வாதங்கள் நடக்கின்றன. மலேசியத் தமிழைப் பற்றிய ஒரு தவறான கருத்தை உருவாக்கி வருகிறார்கள். உங்கள் கருத்து என்ன சார்?

ப:
நானும் படித்தேன். சரி. உலகத்திலேயே மலேசியாவிலும் சிங்கையிலும் தான் தமிழ் நன்றாக மூச்சு விட்டு வாழ்கின்றது. இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல ஆசைப் படுகிறேன். தமிழ் மொழியின் உரிமைகளுக்காக 1970களில் ஒரு போராட்டம் நடந்தது. நானும் அந்தப் போராட்டத்தில் போர்க் கொடியைத் தூக்கினேன். ஆர்ப்பாட்டத்தில் இறங்கினேன். அப்புறம் என்ன. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டேன். என்னோடு ஒன்பது பேர். அவர்களில் ஒருவர்தான் அமரர் கண்ணனாத்து.

மலேசியாவின் கெமுந்திங் சிறையில் பல மாதங்கள் வேதனைகளை அனுபவிக்க வேண்டிய நிலைமை. தாய் மொழிக்காக அந்த மாதிரியான வேதனைகளை எல்லாம் அனுபவித்து இருக்கிறோம்.. ஒரு மொழிக்கான உரிமையின் வேதனையை அதன் விளிம்பில் இருந்து ரசித்தவன் நான். ஆக, இதை எழுதுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. முறையாக ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்தும் அரசாங்கம்  அங்கீகரிக்காமல் போனதும் மற்றொரு விஷயம். 

தமிழ் மொழி உயிர் வாழ வேண்டும் என்பதற்காக இங்கே அரசாங்கத்துடன் மோதி போராட வேண்டிய நிலைமை. ஆனால், அங்கே செம்மொழி எனும் பெயரில் இருக்கின்ற தமிழ் எழுத்துகளைக் சீர்திருத்தம் செய்யது இருப்பதையும் இல்லாமல் ஆக்குவது. ஒன்று சொல்வேன்.  சொந்த பந்தங்கள் இல்லாமல் வாழலாம். ஆனால், சூடு சொரணை இல்லாமல் வாழக் கூடாது.

09 மே 2010

கணினியும் நீங்களும் - பகுதி 56

மலேசிய நண்பன் ஞாயிறு நாளிதழ் பிரசுரப்பதில் தவிர்க்க முடியாத சில தொழில் நுட்பப் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. மன்னிக்கவும். இந்தக் கேள்வி பதில் அங்கம் வேறொரு நாளிதழில்  வெளி வர ஏற்பாடுகள் நடப்பதாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். கணினி உலகத்திற்கு என்னை அடையாளம் காட்டியதே நண்பன். அந்த மலேசிய நண்பனுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். மற்ற நாளிதழ்களுக்கு வரலாற்றுக் கட்டுரைகள்  எழுதுவேன். நன்றி

(மலேசிய நண்பன்  09.05.2010 ஞாயிற்றுக் கிழமை நாளிதழில் பிரசுரம் ஆனது. கணினியும் நீங்களும் பழைய கேள்வி பதில்கள் Archive 2009, 2010 எனும் பிரிவுகளின் கீழ் இருக்கின்றன.)

மாலினி, சுங்கை சிப்புட், பேராக்
கே: சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு கணினி வாங்கிக் கொடுக்க மறுக்கிறார்கள். கேட்டால் விலை அதிகம், பணம் இல்லை என்கிறார்கள். இது சரியா?

ப:
கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று அவ்வையார் சொன்னார். இப்போது அவர் இருந்திருந்தால் 'கணினி இல்லா வீட்டில் கை நனைக்க வேண்டாம்' என்று பாடி இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் பழசான கணினிகள் RM300 லிருந்து  RM450 வரை கிடைக்கிறது. ஈப்போ இக்பூங், கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங், இம்பி, லோயாட் பேரங்காடிகளில்  Second Hand மறு விற்பனைக் கணினிகள் RM250 க்கு கூட விற்கப் படுகின்றன.

நன்றாக வேலை செய்யக் கூடிய கணினிகள். நான் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போய் இருக்கிறேன். அதைக் கூட மாதம் நூறு ரிங்கிட் என்று கட்டலாம். லோயாட் பேரங்காடியில் நூற்றுக் கணக்கான கணினிக் கடைகள் உள்ளன. அதில் ஒரே ஒரு தமிழரின் கடை. மிக மிக மலிவாக விற்கிறார். விலை ஐந்து காசு கூட இருந்தாலும் பரவாயில்லை. நான் அவரிடம்தான் வாங்குவேன். நீங்கள் போனால் அவருக்கு ஆதரவு கொடுங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். 

சந்தையில் கணினிகள் மலை மலையாய்க் குவிந்து விட்டன. விலையும்  குறைந்து விட்டது. உலகத்திலேயே மிகக் குறைவான விலையில் கணினிகள் கிடைக்கும் நாடு மலேசியா. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சொந்தக்காரர் ஒருவரிடம் கணினியைக் கற்றுக் கொள்ளுமாறு சொன்னேன். அதற்கு அவர்  'கணினியைக் கற்றுக் கொள்வதால் எனக்கு என்ன நன்மை. மாசம் முடிஞ்சதும் பத்து காசு பாக்கெட்டுக்கு வருமா' என்று கேட்டு அம்மிக் கல்லைத் தூக்கி அடி வயிற்றில் போடுகிறார். நிமிர்த்த முடியாத நிதர்சனங்கள். 

நம் சமுதாயத்தில் பலர், சீரியல்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்கிறார்கள். அந்த மாதிரியான ஆலாபனைகள் வேண்டாம். தயவு செய்து குழந்தைகளுக்கு ஒரு கணினியை வாங்கிக் கொடுத்து புண்ணியம் சேருங்கள். கணினி மூலமாகத் தமிழ் மொழியைக் கற்றுக் கொடுங்கள். தமிழ் மொழியில் பேச வையுங்கள். ஒரு மொழி மறைந்தால் ஓர் இனம் மறைகிறது என்று சொல்லுங்கள். அடுத்த பிறப்பிலும் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.


மலர்விழி பார்த்திபன், பண்டார் மேரு ராயா, ஈப்போ
கே: ஒவ்வொரு கணினிக்கும் ஒவ்வொரு IP Address இருக்கும் என்கிறார்களே. அப்படி என்றால் என்ன?

ப:
IP Address என்றால் இணைய விதிமுறை இலக்கம். உலகில் கோடிக் கணக்கான கணினிகள் இருக்கின்றன. இவற்றில் ஒவ்வொன்றையும் தனித் தனியாக வேறு படுத்துவதற்கு இந்த இணைய விதிமுறை இலக்கம் தேவை. உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித் தனி பெயர் இருக்கிறதே அந்த மாதிரிதான். இணையத்தில் இணைந்ததும் ஒவ்வொரு கணினிக்கும் ஓர் இணைய விதிமுறை இலக்கம் கிடைக்கும்.

அந்த இலக்கத்தைக் கொண்டு தான் நமக்கு இணையச் சேவை வழங்கப் படுகிறது. உங்கள் கணினியின் ஐ.பி முகவரி என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் http://www.ip2location.com/ எனும் இணையத் தளத்திற்குப் போய்ப் பாருங்கள். இல்லை என்றால் Start >> Run >> ipconfig என்று தட்டுங்கள். பதில் கிடைக்கும். இந்த இலக்கத்தை வைத்துக் கொண்டு உங்கள் வீட்டு முகவரியைக் கூட தெரிந்து கொள்ள முடியும். அதற்கும் ஒரு நிரலி உள்ளது. காவல் துறையினருக்குப் பெரிதும் பயன் படுகிறது.


ஜெகதீசன் பெருமாள், ஊத்தான் மெலிந்தாங், பேராக் 
கே: கணினி வித்துவான் பில் கேட்ஸ் தமிழராய்ப் பிறந்து இருந்தால் Windows என்பதை ஜன்னல் என்று சொல்லி இருப்பார். அதே போல Anti Virus என்பதை Anty Virus என்று மாற்றி அழைத்திருப்பார் என்று என் நண்பர் சொல்கிறார். நச்சு நிரல் கொல்லி என்பதை Anti Virus என்கிறோம். அப்படி என்றால் Anty Virus என்பதை எப்படி அழைத்திருப்பார்?

ப:
பிரமாதமான கேள்வி. இப்படி எல்லாம் இடக்கு முடக்காய் யோசிக்கிற தன்மை மற்ற எவருக்கு கிடைக்கும்.  உங்கள் நண்பருக்கு அபாரமான மூளை என்று  நான் சொன்னதாகச் சொல்லுங்கள். பாவம் பில் கேட்ஸ். சிவனே என்று அவர் அங்கே சும்மா கிடக்கிறார். அவரைப் போய் வம்புக்கு இழுக்கிறீர்களே நியாயமா! சரி. உங்கள் ஸ்டைலில் Anty என்றால் மாமியார். Virus என்றால் கொல்லி. ஆக, அதைக் கச்சிதமாக 'மாமியார் கொல்லி' என்று அழைக்கச் சொல்லி நமக்கு  கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்.


மகேஸ்வரி முத்தையா 
கே: Thumb Drive, Pen Drive என்பதற்குத் தமிழ்ச் சொல் கிடைத்து விட்டதா?
ப:
வாசகர்களில் பலர் அழைத்து புதுப் புதுச் சொற்களைச் சொன்னார்கள். சித்தியவானைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கடவுச் செயலினி எனும் சொல் சரியாக இருக்கும் என்றார்.

கெர்லிங்கைச் சேர்ந்த வீரமாமுனிவர் என்பவர் மின்னல் செருகி என்றார். இன்னொருவர் கட்டை விரல் ஓட்டி என்றார். செருகி, விரல் இடுக்கி, இடைத் தரகி, கணினிக் கடவி, விரல் வில்லை, மினிக் கடவி என்று நிறையச் சொற்கள் வந்தன. இடைத் தாரகை எனும் சொல்லும் நன்றாக இருந்தது.

அவற்றை எல்லாம் வடி கட்டி ஒரே ஒரு சொல்லைத் தனியாக எடுத்து வைத்தேன். மலையரசு என்பவர் சொன்னார். 'விரலி'. Mouse என்பதைச் சுழலி என்று அழைக்கும் போது Thumb Drive என்பதை ஏன் விரலி என்று அழைக்கக் கூடாது.

இந்தச்சொல் ஏற்கனவே புழக்கத்தில் இருப்பதை அறிவேன். அறிஞர் ஜெயபாரதி தமிழாக்கம் செய்து இருக்கிறார். இருந்தாலும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. ஆக, ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். விரலி. சிரமம் பாராமல் அழைத்து கருத்து கள் கூறிய அனைவருக்கும் நன்றி.


லோகேஸ்வரி  
கே: கணினியில் நாம் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள் இருப்பதை அறிவோம். அதே மாதிரி தமிழில் தட்டச்சு செய்வதைக் கணினி அதையே தமிழில் வாசிக்குமா? அப்படி ஒரு மென் பொருள் இருக்கிறதா?

ப:
தமிழில் பேசும் கணினி வந்து விட்டது. ஆனால் இன்னும் வெள்ளோட்ட வடிவத்தில் இருக்கிறது. வெள்ளோட்டம் என்றால் சோதனை முறை. ஆங்கிலத்தில் Beta Version என்பார்கள். அனேகமாக இந்த வருடத்திற்குள் முழுமை படுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறேன். பெங்களூரில் இருக்கும் இந்திய அறிவியல் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஏ.ஜி.இராமக்கிருஷ்ணன் என்பவர் உருவாக்கி இருக்கிறார். விவரங்களை 
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo எனும் இணையத் தளத்தில் பார்க்கலாம்.

அந்த நிரலி நன்றாக வேலை செய்கிறது. இருந்தாலும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது. சோதனை முறையில் தானே இருக்கிறது. தமிழில் பேசும் கணினியை உருவாக்கி விட்டார்களே. சந்தோஷப் படுவோம்!

தினேஸ்வரன்  
கே: சார், உங்கள் மூலமாக எனக்கு பெரிய உதவி தேவைப் படுகிறது. Adobe Photoshop எனும் வரைபட நிரலியை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் தளம் எங்கே இருக்கிறது?

ப:
'அடோபே போட்டோஷாப் ' என்பது ஒரு பெரும் வரைபட நிரலி. இது இலவசமாகக் கிடைக்கும் இடத்தைக் கேட்கிறீர்கள். உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா. கோடிக் கணக்கில் செலவு செய்து நியாயமான விலையில் விற்கப் படும் ஒரு நிரலியை இலவசமாகக் கேட்கிறீர்கள்.  அதன் விலை RM 1200 ரிங்கிட். காசு கொடுத்து வாங்கிப் பயன் படுத்துங்கள். அப்போதுதான் இலவசம் எனும் சொல்லின் மகிமை தெரியும் புரியும்.

அப்துல் சலிகான் 
கே: குறும் செய்திகள் வரும் போது LOL என்றும் ASAP என்றும் சொற்களைப் பயன் படுத்துகிறார்கள். மலேசியத் தன்மையில் இருந்து பார்த்தால் சற்றுக் குழப்பமாகத் தெரிகின்றது. உங்கள் கருத்து?

ப:
குறும் செய்தி என்றால் சொற்களைக் குறுக்கிக் குறைத்து அனுப்பும் முறை. LOL எனும் சொல் சுருக்கத்தைப் பாருங்கள். ஒரு நாய் குரைக்கும் ஒலிச் சொல் மாதிரி இருக்கிறது. ஆனால், அதைப் பிரித்துப் பார்த்தால் Lots of Love அல்லது Laughing Out Loud என்று பிரியும். அதே மாதிரிதான் ASAP என்பதுவும். படித்ததும் புகைச்சல் தான் முதலில் நினைவில் தட்டுப் படுகிறது. As Soon As Possible என்பதன் சுருக்கம். எவ்வளவு žக்கிரமாக முடியுமோ அவ்வளவு žக்கிரம் என்று அர்த்தம்.

ஆக, குறும் செய்தி நடைமுறைக்கு வந்த காலத்தில் இருந்து இந்தச் சொற்கள் பயன் பாட்டில் இருந்து வருகின்றன. மலேசியத் தன்மைக்கு ஒரு மாதிரியாக இருக்கலாம். ஆனால், உலகத் தன்மைக்கு ஒத்து வருகிறதே. இன்னும் சில சொற்களைப் பாருங்கள். hbtu என்றால் happy birthday to you. அடுத்து hand என்றால் have a nice day என்று அர்த்தம். myob என்றால் mind your own business. இப்படி நிறைய உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு நாமும் சிலவற்றை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டி இருக்கிறது.

மனோ ரஞ்சன்  
கே: சில சமயங்களில் என்னுடைய கணினி திறக்க வெகு நேரம் எடுத்துக் கொள்கிறது. நான் விண்டோஸ் எக்ஸ்.பி பயன் படுத்துகிறேன். My Computer என்பதைச் சொடுக்கி அதிக நேரம் காத்திருக்க வேண்டி இருக்கிறது. இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?

ப:
இதற்கு ஒரு வழி இருக்கிறது. My Computer என்பதைத் திறந்து Tools >> Folder Options எனும் இடத்திற்குப் போங்கள். அங்கே View என்பது இருக்கும் Files and Folders எனும் பகுதிக்கு கீழே Automatically search for network folders and printers என்பது இருக்கும். சரியா. அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கட்டம் இருக்கும். அதில் உள்ள ' சரி ' சின்னத்தைச் சொடுக்கி அது இல்லாமல் ஆக்கி விடுங்கள். அவ்வளவுதான். அப்புறம் பாருங்கள். உங்கள் கணினி வேகமாகத் திறக்கும். மனசுக்கும் சந்தோஷமாக இருக்கும்.

வெங்கடாசலம் 
கே: அறிஞர் டாக்டர் ஜெயபாரதியின் முகவரி கிடைக்குமா அல்லது அவருடைய இணையத் தளங்களைச் சொல்ல முடியுமா?

ப:
பல்கலைச் செம்மல், கடாரத் தமிழ் பேரறிஞர் டாக்டர் ஜெயபாரதி மலேசிய இந்தியர்களுக்கு கிடைத்த ஒர் அரிய பொக்கிஷம். உண்மைலேயே இவர்தான் சகல கலா வல்லவர். இவர் தொட்டுப் பேசாத துறையே இருக்க முடியாது. இவர் ஒரு பெரிய ஆழி. Tsunami எனும் சொல்லை ஆழிப் பேரலை என்று தமிழ்ப் படுத்திக் கொடுத்தவர். World Wide Web என்பதை வையக விரிவு வலை என்று தமிழ் படுத்தினார்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் நான் சுங்கை பட்டாணி போய் இருந்தேன். அவரைப் பார்க்க முடியவில்லை. அவர் வீடு தெரியும். ஆனால் முகவரி தெரியவில்லை. இருந்தாலும் அவருடைய இணையத் தள முகவரியைத் தருகிறேன். http://www.visvacomplex.com/ இவர் நம்பிக்கை எனும் தைப்பில் தன் முனைப்பு உரை நிகழ்த்தி இருக்கிறார். யூடியுப்பில் இருக்கிறது. போய்ப் பருங்கள். http://www.youtube.com/watch?v=GDUnmxaKmKE. 

(கணினியின் மூலமாக ஜாதக ஏடுகளை தருவிக்க விரும்புகிறவர்கள், அவர்களின் முழுப் பெயர், தகப்பனார் பெயர், பிறந்த தேதி, நேரம், பிறந்த இடம் ஆகியவற்றை மேலே காணும் மின்னஞ்சல் வழியாக அனுப்பி வைக்கவும். SMS மூலமாகவும் கேட்கலாம். ஆனால், பதில் மின்னஞ்சல் வழியாகத் தான் கிடைக்கும். PDF முறைமையில் 45 பக்கங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கப் படுகிறது. சேவைக் கட்டணம் உண்டு.)