- கணினியும் நீங்களும் – 20.09.2009
- கணினியும் நீங்களும் – 13.09.2009
- கணினியும் நீங்களும் – 27.09.2009
- கணினியும் நீங்களும் - பகுதி 30
- கணினியும் நீங்களும் - 4.10.2009
- கணினியும் நீங்களும் - பகுதி 30 New
- கணினியும் நீங்களும் - பகுதி 31
- கணினியும் நீங்களும் - பகுதி 32
- கணினியும் நீங்களும் - பகுதி 33
- கணினியும் நீங்களும் - பகுதி 34
- கணினியும் நீங்களும் - பகுதி 35
- கணினியும் நீங்களும் - பகுதி 36
- கணினியும் நீங்களும் - பகுதி 37
- கணினியும் நீங்களும் - பகுதி 38
- கணினியும் நீங்களும் - பகுதி 39
- கணினியும் நீங்களும் - பகுதி 40
- கணினியும் நீங்களும் - பகுதி 41
- கணினியும் நீங்களும் - பகுதி 42
- கணினியும் நீங்களும் - பகுதி 43
- கணினியும் நீங்களும் - பகுதி 44
- கணினியும் நீங்களும் - பகுதி 56
- கணினியும் நீங்களும் - பகுதி 57
- கணினியும் நீங்களும் - பகுதி 58
- கணினியும் நீங்களும் - பகுதி 59
- கணினியும் நீங்களும் - பகுதி 60
- கணினியும் நீங்களும் - பகுதி 61
- கணினியும் நீங்களும் - பகுதி 62
- கணினியும் நீங்களும் - பகுதி 63
- கணினியும் நீங்களும் - பகுதி 64
- கணினியும் நீங்களும் - பகுதி 65
- கணினியும் நீங்களும் - பகுதி 66
- கணினியும் நீங்களும் - பகுதி 67
- கணினியும் நீங்களும் - பகுதி 68
- கணினியும் நீங்களும் - பகுதி 69
- கணினியும் நீங்களும் - பகுதி 70
- கணினியும் நீங்களும் - பகுதி 71
- கணினியும் நீங்களும் - பகுதி 72
- கணினியும் நீங்களும் - பகுதி 73
- கணினியும் நீங்களும் - பகுதி 74
- கணினியும் நீங்களும் - பகுதி 75
- கணினியும் நீங்களும் - பகுதி 76
- கணினியும் நீங்களும் - பகுதி 77
- கணினியும் நீங்களும் - பகுதி 78
- கணினியும் நீங்களும் - பகுதி 79
- கணினியும் நீங்களும் - பகுதி 80
- கணினியும் நீங்களும் - பகுதி 81
- கணினியும் நீங்களும் - பகுதி 82
- கணினியும் நீங்களும் - பகுதி 83
- கணினியும் நீங்களும் - பகுதி 84
- கணினியும் நீங்களும் - பகுதி 85
- கணினியும் நீங்களும் - பகுதி 86
- கணினியும் நீங்களும் - பகுதி 87
- கணினியும் நீங்களும் - பகுதி 88
- கணினியும் நீங்களும் - பகுதி 89
- கணினியும் நீங்களும் - பகுதி 90
24 டிசம்பர் 2012
கணினி கேள்வி பதில்
23 டிசம்பர் 2012
குங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும்
மலேசியா, ’மயில்’ தாளிகையில் ‘அறியாமையும் அறிவியலும்’ எனும் கட்டுரைத் தொடரில், மே 2012 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மஞ்சுளா. பள்ளி ஆசிரியை. வயது 25. படித்துப் பட்டம் பெற்றவள். நிறைமாதக் கர்ப்பிணி. தலைப்பிரசவம். சிவப்பான குழந்தை வேண்டும். அதற்காக கல்கண்டு லேகியம், கானாங்கெளுத்தி லேகியம், தொட்டால் சிணுங்கி லேகியம், தொடாப் பிடாரி லேகியம் என்று பார்க்கின்ற லேகியங்களை எல்லாம் வாங்கிச் சாப்பிட்டாள்.
அவளுடைய கணவன் சற்று அடர்த்தியான நிறம். பிறக்கிற குழந்தையும் கணவனைப் போல நிறத்தில் இருக்க வேண்டாம். சிவப்பாக வேண்டும் என்கிற சின்ன பெரிய ஆசை.
அந்த நேரம் பார்த்து ஊசிமணி விற்கிற ஒருத்தி வீட்டிற்கு வந்தாள். அவளுடைய பெயரும் ஊசிமணி. மூட்டையை அவிழ்த்துக் கடை கட்டினாள். மருந்து மாய ஜாலங்களைப் பார்த்த மஞ்சுளாவிற்கு மனசுக்குள் மெலிதான ஒரு மயக்கம். சும்மா சொல்லக்கூடாது.
ஊசிமணி அள்ளிப் போட்ட மருந்துகள் எல்லாம், பிறக்கிற குழந்தையைச் சிவப்பாக்கிப் பார்க்கின்ற மூலிகை வேதங்கள். கடைசியில் அசல் அசாம் நாட்டு குங்குமப்பூ மஞ்சுளாவிற்குப் பிடித்துப் போனது.
குங்குமப்பூவின் பெயர் அசாம் அங்கானா. கேள்விபட்டிருக்கிறீர்களா. நானும் கேள்விபட்டதில்லை. அந்தக் குங்குமப்பூவைத் தான் பர்மாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். நூற்றில் 99 குழந்தைகள் அங்கே சிவப்பாகப் பிறக்கிறார்களாம்.
அப்புறம் அந்த அசாம் அங்கானா, அமெரிக்காவில் உள்ள பெண்களை ஐஸ்வர்யா மாதிரி வெள்ளையாக ஆக்குகிறதாம். அத்தனையும் கொலம்பஸ் காலத்து புள்ளிவிவரங்கள். நம்ப கேப்டன் ஜெயகாந்த் தோற்றார் போங்கள்.
ஒரு டப்பா குங்குமப்பூ முன்னூறு ரிங்கிட். குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்றால் சும்மாவா. காசு என்ன, இன்றைக்கு இருக்கும். நாளைக்குப் போய்விடும். காசு கைமாறியது. பற்றாக்குறைக்கு வீட்டில் இருந்த நாலைந்து சேலைகளையும் மஞ்சுளா தானம் செய்தாள்.
நல்லபடியாக ஊசிமணியை அனுப்பியும் வைத்தாள். பிறக்கப் போகும் குழந்தையின் சிவப்பு நிறத்தில் இனம் தெரியாத கற்பனை. பரவச நிலையில் ஒரு புதுமையான வாழ்க்கை.
அசாம் நாட்டு இறக்குமதியை அவள் சர்வலோக சித்தமாக நினைத்தாள். ஒரு நாளைக்கு மூன்று வேளை. சுத்த பத்தமாகச் சாப்பிட்டாள். எண்ணி வைத்து ஏழாவது நாள்.
என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்.
மஞ்சுளா இறந்து போனாள். குழந்தையைப் பற்றி கேட்க வேண்டாம். வயிற்றுக்குள்ளேயே விலை பேசிக் கொண்டது. புருசன்காரன் கத்தினான் கதறினான். என்ன செய்வது. போனது போனதுதான். அரிசி மாவில் சாயத்தைக் கலந்து குங்குமப்பூ என்று விற்றால் யாருக்குத் தெரியும். சொல்லுங்கள்.
சாயத்தில் விஷம் கூடுதலாகக் கலந்து இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஊசிமணியை ஊர்பூராவும் தேடிப் பார்த்தார்கள். ஆள் அகப்படவே இல்லை. ஊசிக்கப்பலில் ஊர் மாறிப் போய்விட்டாளாம்.
குங்குமப்பூவைக் கொஞ்சமாகச் சாப்பிட்டிருந்தால் பரவாயில்லை. ஆசை... ஆசை... கழுத்திற்கும் மேலே கயிறு கட்டிய ஆசை. குழந்தை சிவப்பாக, சீக்கிரமாகப் பிறக்க வேண்டும் என்கிற அவசர ஆசை. பாவம் அவள். கடைசியில் புருசனும் இல்லை. பிள்ளையும் இல்லை. காய்ந்த நெஞ்சங்களை ஈரமாக்குகின்ற கண்ணீர்க் கதை அது.
சரி. நம்ப விஷயத்திற்கு வருவோம். விஷச் சாயம் கலந்த குங்குமப்பூவைச் சாப்பிட்டதால் ஒரு பெண் இறந்து போனாள் என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா?
அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். நன்றாகப் படித்த ஒரு பெண்ணே, இப்படி அறியாமைக்கு அடிமையானால் மற்றவர்களை என்னவென்று சொல்வது. சொல்லுங்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். மனசாட்சியைக் கிலோ கணக்கில் கூறு போட்டு விற்கின்ற சொந்த பந்தங்கள் தான் அதிகமாகத் தெரியும். வெளிச்சம் போட்டு பார்க்கவே வேண்டிய அவசியமே இல்லை.
அந்த மாதிரியான உலகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னப்பறவை போல அசலையும் நகலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய காலக் கட்டத்தில் வாழ்கிறோம்.
குங்குமப்பூவைச் சாப்பிட்டால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? இல்லவே இல்லை. வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்து உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைக்கூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று சொன்னால் நம்ப முடியாது.
ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். கோடிக் கோடியாகக் கொடுத்து குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...
இல்லை டன் கணக்கில் ஆட்டுப்பால் சோப்பு போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா அம்மா மாதிரிதான் பிறக்கும். ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற எஸ்கிமோ மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருந்த இடி அமீன் மாதிரியோ பிறக்கப் போவதில்லை.
அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஆர்டிக் பக்கமாய் ஓடிவிடுவதே நல்லது.
குங்குமப்பூ என்பது பிறக்கும் குழந்தைக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்பதை யாராலும்... இதுவரையில்... அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தமாகும். குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். அதனால் ஆரோக்கியமான குழந்தையை ஈன்று எடுக்கலாம்.
ஆரோக்கியமான குழந்தைதான் அழகான குழந்தை என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். அதனால், குங்குமப்பூவைக் கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். நல்ல நலமான குழந்தை கிடைக்க குங்குமப்பூ உதவுகிறது. அவ்வளவுதான்.
ஆரோக்கியம்தான் அழகு. அது தவறான வியாக்கியானமாகி, சிவப்புதான் அழகு என்று திரிந்து போனது. ஒரு நல்ல நடைமுறை வழக்கம், வக்கிரமான கடைச்சரக்காகிப் போன பழக்கம்தான் மகா வேதனையான விஷயம்!
அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்திருக்கலாம்; பலர் பார்த்திருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையில் வந்து நிற்கிறது.
ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். சில சமயங்களில் ஓர் இலட்சத்தையும் தாண்டி இருக்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் அவ்வளவுதானே.
அப்படியே அவ்வளவு விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட்டாலும் குழந்தை சிவப்பாகப் பிறக்காது. அதுதான் சத்தியமான உண்மை. தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்.
குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை நல்ல உடலநலத்துடன் பிறக்கும். சிவப்பாகப் பிறக்காது. மறுபடியும் சொல்கிறேன். குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கவே பிறக்காது. பிறக்கும் என்று நினைத்தால் அது உங்களை மிஞ்சிய அதீத நம்பிக்கை.
மற்றபடி, மூட நம்பிக்கை என்று நான் சொல்ல மாட்டேன். அது ஒரு தவறான நம்பிக்கை. ஓர் அறியாமை. இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ தான் புகழ்பெற்றது. ஒரு கிலோகிராம் குங்குமப்பூ தயாரிக்க 500,000 குங்குமப் பூக்கள் தேவை.
குங்குமப்பூவின் பெயர் அசாம் அங்கானா. கேள்விபட்டிருக்கிறீர்களா. நானும் கேள்விபட்டதில்லை. அந்தக் குங்குமப்பூவைத் தான் பர்மாவில் கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்களாம். நூற்றில் 99 குழந்தைகள் அங்கே சிவப்பாகப் பிறக்கிறார்களாம்.
அப்புறம் அந்த அசாம் அங்கானா, அமெரிக்காவில் உள்ள பெண்களை ஐஸ்வர்யா மாதிரி வெள்ளையாக ஆக்குகிறதாம். அத்தனையும் கொலம்பஸ் காலத்து புள்ளிவிவரங்கள். நம்ப கேப்டன் ஜெயகாந்த் தோற்றார் போங்கள்.
நல்லபடியாக ஊசிமணியை அனுப்பியும் வைத்தாள். பிறக்கப் போகும் குழந்தையின் சிவப்பு நிறத்தில் இனம் தெரியாத கற்பனை. பரவச நிலையில் ஒரு புதுமையான வாழ்க்கை.
என்ன நடந்தது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்.
மஞ்சுளா இறந்து போனாள். குழந்தையைப் பற்றி கேட்க வேண்டாம். வயிற்றுக்குள்ளேயே விலை பேசிக் கொண்டது. புருசன்காரன் கத்தினான் கதறினான். என்ன செய்வது. போனது போனதுதான். அரிசி மாவில் சாயத்தைக் கலந்து குங்குமப்பூ என்று விற்றால் யாருக்குத் தெரியும். சொல்லுங்கள்.
குங்குமப்பூவைக் கொஞ்சமாகச் சாப்பிட்டிருந்தால் பரவாயில்லை. ஆசை... ஆசை... கழுத்திற்கும் மேலே கயிறு கட்டிய ஆசை. குழந்தை சிவப்பாக, சீக்கிரமாகப் பிறக்க வேண்டும் என்கிற அவசர ஆசை. பாவம் அவள். கடைசியில் புருசனும் இல்லை. பிள்ளையும் இல்லை. காய்ந்த நெஞ்சங்களை ஈரமாக்குகின்ற கண்ணீர்க் கதை அது.
அதற்கு முன் ஒரு முக்கியமான விஷயம். நன்றாகப் படித்த ஒரு பெண்ணே, இப்படி அறியாமைக்கு அடிமையானால் மற்றவர்களை என்னவென்று சொல்வது. சொல்லுங்கள். சுற்றுமுற்றும் பாருங்கள். மனசாட்சியைக் கிலோ கணக்கில் கூறு போட்டு விற்கின்ற சொந்த பந்தங்கள் தான் அதிகமாகத் தெரியும். வெளிச்சம் போட்டு பார்க்கவே வேண்டிய அவசியமே இல்லை.
அந்த மாதிரியான உலகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்னப்பறவை போல அசலையும் நகலையும் பிரித்துப் பார்க்க வேண்டிய காலக் கட்டத்தில் வாழ்கிறோம்.
குங்குமப்பூவைச் சாப்பிட்டால் பிறக்கின்ற குழந்தை சிவப்பாகப் பிறக்குமா? இல்லவே இல்லை. வானத்தில் இருந்து தேவதை கீழே இறங்கி வந்து உங்களுக்கு ஒரு கோடி ரிங்கிட் கொடுத்தாள் என்று யாராவது சொன்னால் அதைக்கூட நம்பலாம். ஆனால், குங்குமப்பூவைச் சாப்பிட்டு குழந்தை சிவப்பாக பிறந்தது என்று சொன்னால் நம்ப முடியாது.
ஒரு குழந்தையின் நிறத்தைத் தீர்மானிப்பது ஓர் அப்பா, ஓர் அம்மாவின் நிறங்கள்தான். கோடிக் கோடியாகக் கொடுத்து குங்குமப்பூவை வாங்கிச் சாப்பிட்டாலும் சரி...
இல்லை டன் கணக்கில் ஆட்டுப்பால் சோப்பு போட்டுக் குளித்தாலும் சரி... பிறக்கிற குழந்தை அப்பா அம்மா மாதிரிதான் பிறக்கும். ஆர்க்டிக் துருவத்தில் இருக்கின்ற எஸ்கிமோ மாதிரியோ இல்லை... உகாண்டாவில் இருந்த இடி அமீன் மாதிரியோ பிறக்கப் போவதில்லை.
அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்புறம் வேறு வினையே வேண்டாம். சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஆர்டிக் பக்கமாய் ஓடிவிடுவதே நல்லது.
குங்குமப்பூ என்பது பிறக்கும் குழந்தைக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கும் என்பதை யாராலும்... இதுவரையில்... அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால், கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்து ஒன்பதாவது மாதம் வரை குங்குமப்பூவைப் பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தமாகும். குழந்தைக்கு தேவையான சத்துகளும் கிடைக்கும். அதனால் ஆரோக்கியமான குழந்தையை ஈன்று எடுக்கலாம்.
ஆரோக்கியமான குழந்தைதான் அழகான குழந்தை என்பதை நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். அதனால், குங்குமப்பூவைக் கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள். நல்ல நலமான குழந்தை கிடைக்க குங்குமப்பூ உதவுகிறது. அவ்வளவுதான்.
ஆரோக்கியம்தான் அழகு. அது தவறான வியாக்கியானமாகி, சிவப்புதான் அழகு என்று திரிந்து போனது. ஒரு நல்ல நடைமுறை வழக்கம், வக்கிரமான கடைச்சரக்காகிப் போன பழக்கம்தான் மகா வேதனையான விஷயம்!
அசல் சுத்தமான குங்குமப்பூ கிடைப்பது என்பது மிகச் சிரமம். அசலான குங்குமப்பூவைச் சிலர் பார்த்திருக்கலாம்; பலர் பார்த்திருக்க முடியாது. விலையோ தங்கத்தின் விலையில் வந்து நிற்கிறது.
ஒரு கிலோகிராம் குங்குமப்பூவின் விலை 68,000 ரிங்கிட். சில சமயங்களில் ஓர் இலட்சத்தையும் தாண்டி இருக்கிறது. அதாவது ஒரு சின்ன புளியங்கொட்டை அளவு கொண்ட குங்குமப்பூவின் விலை 1000 ரிங்கிட் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தங்கத்தின் விலையும் அவ்வளவுதானே.
அப்படியே அவ்வளவு விலை கொடுத்து வாங்கிச் சாப்பிட்டாலும் குழந்தை சிவப்பாகப் பிறக்காது. அதுதான் சத்தியமான உண்மை. தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்.
குங்குமப்பூவைச் சாப்பிட்டால் குழந்தை நல்ல உடலநலத்துடன் பிறக்கும். சிவப்பாகப் பிறக்காது. மறுபடியும் சொல்கிறேன். குங்குமப்பூவைச் சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கவே பிறக்காது. பிறக்கும் என்று நினைத்தால் அது உங்களை மிஞ்சிய அதீத நம்பிக்கை.
மற்றபடி, மூட நம்பிக்கை என்று நான் சொல்ல மாட்டேன். அது ஒரு தவறான நம்பிக்கை. ஓர் அறியாமை. இந்தியாவைப் பொறுத்தவரை காஷ்மீர் குங்குமப்பூ தான் புகழ்பெற்றது. ஒரு கிலோகிராம் குங்குமப்பூ தயாரிக்க 500,000 குங்குமப் பூக்கள் தேவை.
அதாவது இரண்டு, மூன்று காற்பந்து திடல்கள் அளவிற்கு குங்குமச் செடிகள் இருக்க வேண்டும். 500 பூக்களைப் பறித்து வந்து உலர வைத்தால் ஒரே ஒரு கிராம் ஈரமான குங்குமப்பூ கிடைக்கும்.
அதையும் நன்றாக பல நாட்களுக்கு உலர வைக்க வேண்டும். அதில் ஓர் அரை கிராம்கூட தேறாது. இரண்டு மூன்று சிட்டிகை. அவ்வளவுதான். அதுதான் அசலான குங்குமப்பூ.
சரி. அரிதிலும் அரிதாகக் கிடைக்கக் கூடிய இந்தக் குங்குமப்பூவை ஒரு டப்பா பத்து வெள்ளி, இருபது வெள்ளி என்று சந்தையில் போட்டு விற்கிறார்களே. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். வியாபாரிகளைக் குறை சொல்ல வேண்டாம். மொத்தமாக வாங்கிச் சில்லறையாக விற்கிறார்கள்.
அவர்களுக்கு என்ன கிடைத்ததோ அதைக் கொண்டு வந்து விற்கிறார்கள். அவர்களைக் குறை சொல்லி ஒன்றும் இல்லை. ஆனால், கழுத்தை அறுக்காமல் காசு பார்த்தால் மகிழ்ச்சி.
ஒரு பொருளுக்கு சந்தையில் மவுசு என்றால், அதில் போலியும் வந்துவிடும். குங்குமப்பூ விஷயத்திலும் அப்படித்தான்.
அசல் ’ஒரிஜினல்’ குங்குமப்பூ என்று சொல்லி, அரிசி மாவையும் அதிரச மாவையும் சிவப்பு சாயத்தில் கலந்து விற்று, காசு பார்க்கும் கூட்டமும் இருக்கிறது.
தெரியாத்தனமாய்க் கலப்படங்களை வாங்கிச் சாப்பிட்டவர்களுக்கு கடைசியில் நம்ப மஞ்சுளா மாதிரி முடிவு வரலாம்.
எது அசல், எது போலி என்று தெரிந்து கொள்ள வழி இருக்கிறது. அசல் குங்குமப்பூவை ஒரு கிண்ணத் தண்ணீரில் போட்டால் அது மெதுவாகக் கரைந்து தங்க நிறத்தில் மின்னும். மறுபடியும் சொல்கிறேன். அசல் குங்குமப்பூ தண்ணீரில் தங்க நிறத்திற்கு மாறும். சரியா.
போலியான குங்குமப்பூ உடனேயே தண்ணீரில் கரைந்துவிடும். தண்ணீரும் சிவப்பு நிறமாகிவிடும். அசல் குங்குமப்பூ தண்ணீரில் கரைய வெகு நேரம் பிடிக்கும். போலியான குங்குமப்பூ உடனே கரைந்துவிடும்.
கர்ப்பிணிப் பெண்கள் அதிகமாகவும் குங்குமப்பூவைச் சாப்பிடக் கூடாது. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு. ஆக, வயிற்றில் இருக்கும் கரு கலைந்து போக வாய்ப்பு இருக்கிறது. அதற்கு காரணம் குங்குமப்பூ அதிக வெப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகையான மூலிகைப் பொருள்.
குங்குமச் செடியை Saffron Crocus என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். குங்குமப்பூவிற்கு Saffron என்று பெயர். அதன் பூக்கள் மிக அழகாக ஜொலிக்கும். இந்தப் பூவின் மகரந்த சேகரத்தைத் தான் நாம் குங்குமப்பூ என்று சொல்கிறோம். குங்குமப்பூவின் தாயகம் ஈரான். இதன் சாகுபடி வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
பாரசீகர்கள் காஷ்மீர் மீது படையெடுத்து குடியேறிய பின்னர்தான் இந்தியாவிற்கு குங்குமப்பூ வந்தது. தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக குங்குமப்பூவைப் பயன்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது "ஞாழல்பூ" என்றும் அழைக்கப்படுகிறது. உலகம் முழுமையும் ஓர் ஆண்டில் 300 டன் குங்குமப்பூ தயாரிக்கப்படுகிறது.
சரி. உலகிலேயே அதிகமான குங்குமப்பூவை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியா என்று சிலர் நினக்கலாம். அது தப்பு. பாரசீக நாடான ஈரான் தான் வாகை சூடுகிறது. அடுத்து ஸ்பெயின், இந்தியா, கிரீஸ், இத்தாலி, மொரோக்கோ, அசர்பைஜான் வருகின்றன. மூன்றாவது இட்த்தில் இந்தியா.
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்த போது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் ஆற குங்குமப் பூக்களை அரைத்து பூசியுள்ளனர். அப்போது வடஇந்தியாவை ஆட்சி செய்த போரஸ் மன்னனின் வீரதீரத்தைப் பாராட்டி அவனுக்கே இந்தியாவைத் திருப்பிக் கொடுத்து விட்டுப் போனார் அலெக்சாண்டர்.
அதற்குப் பதிலாக போரஸ் மன்னனிடம் இருந்து யானைகள் மீது குங்குமப்பூவையும் மாம்பழங்களையும் ஏற்றிக் கொண்டு தாயகம் சென்றார். இதில் ஒரு வேதனையான நிகழ்ச்சியும் இருக்கிறது. இந்திய மாம்பழங்களின் மீது ஆசைப்பட்டு அதிகமாகச் சாப்பிட்டதால் அந்த மாவீரன் தாயகம் திரும்பாமலேயே ஈரானில் இறந்து போனதாக வரலாறு கூறுகிறது. அலெக்சாண்டருக்கு விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டதாகவும் இன்னும் ஒரு செய்தி இருக்கிறது.
இந்தக் குங்குமப்பூவினால் ஐரோப்பாவில் ஒரு பெரிய போரே நடந்து இருக்கிறது. அது தெரியுமா உங்களுக்கு?
பதினான்கு வாரங்களுக்கு ஜெர்மனியில் குங்குமப்பூ போர் நடந்தது. அதன் பின்னர், குங்குமப்பூவில் கலப்படம் இல்லாமல் இருக்க Safranschou எனும் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, குங்குமப்பூக்களில் கலப்படம் செய்தவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது, தொடர்ந்து குற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது.
மங்கோலிய மன்ன்ன் ஜெங்கிஸ்கான் பாரசீகத்தின் மீது படை எடுத்த பிறகுதான் குங்குமப்பூ சீனாவுக்கு வந்தது. அதை விடுங்கள். இன்னும் ஒரு முக்கியமான விஷயம் வருகிறது. வரலாற்று நாயகி கிளியோபாட்ராவை உங்களுக்குத் தெரியும்தானே.
அவரைப் பற்றிய செய்தி. ஆண்பெண் உறவு என்பது ஓர் இயற்கையான நியதி. மனித உணர்வுகளுக்கு ஒரு வடிகால் என்றுகூட சொல்லலாம். தப்பில்லை. ஆனால், அந்த உறவின் புனிதத் தன்மையையும் தாண்டி, கூடுதலான பரவசத்தை நிலையை அடைய வேண்டும் என்பதற்காக கிளியோபாட்ரா என்ன செய்தாள் தெரியுமா.
குளிக்கும் போது கழுதைப்பாலில் குங்குமப்பூவைக் கலந்து பயன்படுத்தினாளாம். நூறு கழுதைகளின் பாலில் பத்து கிலோ அளவிற்கு குங்குமப்பூவைக் கலந்து பயன்படுத்தினாளாம். அவ்வளவு குங்குமத்திற்கு எங்கே போனாள் என்று தெரியவில்லை.
இந்தக் கட்டத்தில் என்னை மன்னிக்கவும்... அந்த வசீகரக் குளியலைப் பற்றிய மேல் விவரங்களைக் கேட்டால் எனக்குத் தெரியாது. அதிகமாக அறிந்தவர்கள் இருவர் இருந்தனர். ஒருவர் ஜூலியஸ் சீசர். இன்னொருவர் மார்க் அந்தோனி. அவர்களுக்கு கடிதம் எழுதலாம்.
பதில் வருமா என்று தெரியவில்லை. கிளியோபாட்ராவிற்கு மேலும் இரண்டு கணவன்மார்கள் இருந்தார்கள். அவர்களைப் போய்க் கேட்டுப் பாருங்கள் என்று ஜூலியஸ் சீசர் சொன்னாலும் சொல்லலாம். நமக்கு ஏன் அந்த வம்பு?
ஆக, உண்மையான குங்குமப்பூ கிடைப்பது என்பது ரொம்பவும் கஷ்டம். அசலான குங்குமப்பூ வேண்டும் என்பது எல்லோருடைய ஆசைதான். பிரச்னையே இல்லை.
காஷ்மீருக்குப் போக வேண்டும். அங்கே இருக்கிற குங்குமத் தோட்டத்திலேயே குடிசை போட வேண்டும். குங்குமப் பூ உலர்ந்து மெலிசாக இரண்டு மூன்று மாதங்கள் பிடிக்கும். கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு, பொறுமையின் சின்னமாக இருக்க வேண்டும்.
இதை எல்லாம் தாண்டி ’சிவப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என்று யாராவது அடம் பிடித்தால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. மனசில் பட்டதைச் சொல்கிறேன். தப்பாக நினைக்க வேண்டாம். பேசாமல் பிறந்த அந்தக் குழந்தைக்கு சிவப்பு சாயத்தை அடித்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது. என்ன சொல்கிறீர்கள்.
அப்புறம் என்ன. குழந்தை நன்றாக, அழகாக செக்கச் செவேல் என்று ஜொலிக்கும். கம்பெனிக்காரர்களும் விளம்பரம் தேடி வீட்டிற்கு வருவார்கள். பையில் நாலு காசு சேர்ந்த மாதிரியும் இருக்கும். ஸ்ரீதேவி மாதிரி குழந்தை சிரித்த மாதிரியும் இருக்கும். சாய்ம் அடித்தும் குழந்தை சிவப்பாக மாறவில்லையா. ம்ம்ம்... வேறு வழி இல்லை. ஆளை விடுங்கள்!
20 டிசம்பர் 2012
கேமரன் மலை அழிகிறது
-ஜே.சிம்மாதிரி,
பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012.
மலேசியக்கினி இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.
மறுமொழிகள்
singam wrote on 18 December, 2012, 19:05
என்ன சார் கொடுமை இது. குளிர்ச்ச்சிக்கு பேர் போன கேமரன் மலையை அழிக்க இந்த பாரிசான் அரசிற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை. கேமரன் மலையை காப்பாற்ற ஒரே வழி பாரிசானை தூக்கி எறிவதுதான்.
KODISVARAN wrote on 18 December, 2012, 19:29
அதிகாரிகள் பணம் பண்ணுவதற்கு ஏதோ சில வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்! தரை மட்டமானால் தாரை தம்பட்டம் அடித்தா நாம் அழ முடியும்!
puchong samy . wrote on 19 December, 2012, 6:40
இயற்கை அளித்த செல்வம் கேமரன் மலை காடுகள்!காடுகள் தான் அஸ்லி மக்களின் பிழைப்பு!காடுகளை அழித்தால்அஸ்லி மக்களின் பிழைப்பு நாறிடுமே!அஸ்லிகள் BN னுக்கு ஒட்டு போடுவார்களா?
Marra Tamilan wrote on 19 December, 2012, 9:44
அய்யா இந்த விஷயதை கையாள நடப்பு அரசாங்கதுக்கு நிச்சயம் துப்பில்லை. காடுகள் கண்டிப்பாக பாதுககாகக் படவேண்டும். இதற்கு சட்ட நடவடிக்கை எதேனும் எடுக்க முடியாதா? செம்பருதியின் சட்ட நடவடிக்கை குழு இதற்கு ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்.
·
S. Mani wrote on 19 December, 2012, 11:17
கேமரன்மலையில் குளிர்ச்சி குறைவது ஒரு பக்கம் இருக்கட்டும், அங்கே அதிகளவில் இந்தியர்கள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த அம்னோகாரனுங்களுக்கு பொறாமையா இருக்கு. இந்தியர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேருவது இவனுங்களுக்கு புடிக்காது. நம் இனத்தை அழிப்பதில்தான் இவனுங்க குறிக்கோள்
·
kamapo wrote on 19 December, 2012, 16:36
தரைமட்டம் மட்டும் இல்லை … முடிந்தால் பெரிய குளமே தோண்டி விடுவார்கள் இந்தத திருட்டு அதிகாரிகள்….! நொண்டிச்சாக்குகள் ஆயிரம்…! கண எதிரே காடுகளை வெட்டுபவர்களைப் பிடிக்க முடியாதா? உண்மையிலேயே இது Malaysiaவில்தான் Boleh.!!!! DO, ADOs,.SOs, polis, game-wardens, forest offficers, etc etc.தண்டசம்பளமா? Accountability..??!! அதுசரி, illegal ஆக அழிக்கப்பட்ட நிலங்களை பின்னர் யாரும் பயன் படுத்துவது இல்லையா? அவர்களை பிடித்தால் எல்லாம் தெரிந்துவிடுமே..!! அதனால்தான் அவர்களை பிடிப்பது இல்லை போலும்…!!!
singam wrote on 19 December, 2012, 17:45
உண்மை Mr .kamapo வேலியே பயிரை மேய்கிறது. காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து எதிர்கட்சியினர் அண்மையில் ஒரு மறியலை நடத்தியதாக அறிந்தேன். வாழ்த்துக்கள். காடுகள் அழிக்கப் படுவதை எதிர்த்து அவ்வூர் MP தேவமணி, மூச்சே விடுவதில்லை. ஏன் ?
VGK KUANTAN wrote on 20 December, 2012, 12:00
கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே!!!உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே ?? சொந்த தொகுதி பிரச்சினையை கவனிக்க முடியாதவர்
சிப்பாங்கில் சாமீ மேடைக்கு என்ன புடுங்குகிறார். இதைத்தான் தமிழில் ‘வேலை இல்லாதவன் அம்ப ……….ன் எதையோ புடிச்சு சிறைச்சனாம்’ என்று சொல்வார்கள்.
கேமரன் மலை இயற்கை சூழல் காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தான் ஒரே வழி. ஆகவே கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே அச்சமின்றி எதிர் கட்சிக்கு வாக்களியுங்கள்.
பாகாங் மாநில ஜ.செ.க துணைத் தலைவர், டிசம்பர் 18, 2012.
மலேசியக்கினி இணையத் தளத்தில் பிரசுரிக்கப்பட்டது.
![]() |
மக்கள் தொண்டன் சிம்மாதிரி |
மலேசிய நாட்டில் குளிர்ச்சியான ஜனரஞ்சக சூழல் அமைந்துள்ள ஆகப் பெரிய (72,000 ஹெக்டர்) ஒரே இடம் கேமரன் மலைதான் என்றால் அது மிகையில்லை.
கேமரன் மலையின் இந்த குளிர்ச்சிக்கு எப்படியாவது சாவு மணி அடிக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு முழுமூச்சாக அல்லும் பகலுமாக பாடுபடுகிறது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கம்.
ஆம்! கேமரன் மலைக் காடுகள் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளை வெட்டி அழிப்பவர்கள், உள்நாட்டினர் அல்ல. வெளிநாட்டுத் தொழிலாளர்களான வங்களாதேசிகளும் மியான்மார் வாசிகளும் ஆகும்.
இந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தந்து காடுகளை அழிப்பது அரசாங்க மாவட்ட நில துறையைச் சேர்ந்த ஒரு சில அதிகாரிகளே. இதனை மாநில மந்திரி பெசாரே ஒப்புக் கொண்டுள்ளார். (The Star – 12.10.2012)
அழிக்கப்படும் இவ்வகை காடுகளை இங்குள்ள விவசாயிகளுக்கு இந்த அரசு ஊழியர்கள் ‘விற்று’ விடுகிறார்கள். இதனால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் காடுகள் அழிக்கப்பட்டு இயற்கையான சூழிநிலைகள் மாற்றம் கண்டு; குளிர்ச்சிக்குப் பாதகம் விளைவது மட்டும் இல்லாமல் தண்ணீர் தட்டுப்பாடுப் பிரச்னையும் தலைதூக்கியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையில் பல புகார்கள் செய்தும் எவ்வித பலனுமில்லை. தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கூறிவிட்டனர். சுற்றுச் சூழல் துறையிடம் புகார் செய்யப்பட்டது, அவர்களும் கைவிரித்துவிட்டனர்.
இவ்வகையில் இதே ஆட்சி நீடிக்குமானால் இன்னும் ஓராண்டில் கேமரன் மலை தரைமட்டமாகிவிடும். அப்புறம், அழுதோ புலம்பியோ கதறியோ எந்த பயனும் இல்லை. கேமரன் மலையை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் தவிக்கிறோம்.
மறுமொழிகள்
singam wrote on 18 December, 2012, 19:05
என்ன சார் கொடுமை இது. குளிர்ச்ச்சிக்கு பேர் போன கேமரன் மலையை அழிக்க இந்த பாரிசான் அரசிற்கு எப்படித்தான் மனம் வருகிறதோ தெரியவில்லை. கேமரன் மலையை காப்பாற்ற ஒரே வழி பாரிசானை தூக்கி எறிவதுதான்.
KODISVARAN wrote on 18 December, 2012, 19:29
அதிகாரிகள் பணம் பண்ணுவதற்கு ஏதோ சில வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்! தரை மட்டமானால் தாரை தம்பட்டம் அடித்தா நாம் அழ முடியும்!
puchong samy . wrote on 19 December, 2012, 6:40
இயற்கை அளித்த செல்வம் கேமரன் மலை காடுகள்!காடுகள் தான் அஸ்லி மக்களின் பிழைப்பு!காடுகளை அழித்தால்அஸ்லி மக்களின் பிழைப்பு நாறிடுமே!அஸ்லிகள் BN னுக்கு ஒட்டு போடுவார்களா?
Marra Tamilan wrote on 19 December, 2012, 9:44
அய்யா இந்த விஷயதை கையாள நடப்பு அரசாங்கதுக்கு நிச்சயம் துப்பில்லை. காடுகள் கண்டிப்பாக பாதுககாகக் படவேண்டும். இதற்கு சட்ட நடவடிக்கை எதேனும் எடுக்க முடியாதா? செம்பருதியின் சட்ட நடவடிக்கை குழு இதற்கு ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்.
·
S. Mani wrote on 19 December, 2012, 11:17
கேமரன்மலையில் குளிர்ச்சி குறைவது ஒரு பக்கம் இருக்கட்டும், அங்கே அதிகளவில் இந்தியர்கள் விவசாயம் செய்து பிழைப்பை நடத்திக்கிட்டு இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த அம்னோகாரனுங்களுக்கு பொறாமையா இருக்கு. இந்தியர்கள் சொந்தமாக தொழில் செய்து முன்னேருவது இவனுங்களுக்கு புடிக்காது. நம் இனத்தை அழிப்பதில்தான் இவனுங்க குறிக்கோள்
·
kamapo wrote on 19 December, 2012, 16:36
தரைமட்டம் மட்டும் இல்லை … முடிந்தால் பெரிய குளமே தோண்டி விடுவார்கள் இந்தத திருட்டு அதிகாரிகள்….! நொண்டிச்சாக்குகள் ஆயிரம்…! கண எதிரே காடுகளை வெட்டுபவர்களைப் பிடிக்க முடியாதா? உண்மையிலேயே இது Malaysiaவில்தான் Boleh.!!!! DO, ADOs,.SOs, polis, game-wardens, forest offficers, etc etc.தண்டசம்பளமா? Accountability..??!! அதுசரி, illegal ஆக அழிக்கப்பட்ட நிலங்களை பின்னர் யாரும் பயன் படுத்துவது இல்லையா? அவர்களை பிடித்தால் எல்லாம் தெரிந்துவிடுமே..!! அதனால்தான் அவர்களை பிடிப்பது இல்லை போலும்…!!!
singam wrote on 19 December, 2012, 17:45
உண்மை Mr .kamapo வேலியே பயிரை மேய்கிறது. காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து எதிர்கட்சியினர் அண்மையில் ஒரு மறியலை நடத்தியதாக அறிந்தேன். வாழ்த்துக்கள். காடுகள் அழிக்கப் படுவதை எதிர்த்து அவ்வூர் MP தேவமணி, மூச்சே விடுவதில்லை. ஏன் ?
VGK KUANTAN wrote on 20 December, 2012, 12:00
கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே!!!உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எங்கே ?? சொந்த தொகுதி பிரச்சினையை கவனிக்க முடியாதவர்
சிப்பாங்கில் சாமீ மேடைக்கு என்ன புடுங்குகிறார். இதைத்தான் தமிழில் ‘வேலை இல்லாதவன் அம்ப ……….ன் எதையோ புடிச்சு சிறைச்சனாம்’ என்று சொல்வார்கள்.
கேமரன் மலை இயற்கை சூழல் காப்பாற்ற வேண்டுமானால் ஆட்சி மாற்றம் தான் ஒரே வழி. ஆகவே கேமரன் மலை வாழ் இந்திய வாக்காளர்களே அச்சமின்றி எதிர் கட்சிக்கு வாக்களியுங்கள்.
16 டிசம்பர் 2012
கணினியில் ’பீப் பீப்’ ஒலி
குமாரி. பிலோமினா, ஆங் மோ கியூ, சிங்கப்பூர்
கே: வணக்கம். நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இங்கே எங்களுக்கு தமிழ் முரசு நாளிதழ் மட்டுமே கிடைக்கிறது. சென்ற வாரம், ஜொகூர் பாருவில் இருக்கும் என் தோழி ’தினக்குரல்’ ஞாயிறு நாளிதழை எனக்கு அறிமுகம் செய்தாள். இப்படி ஒரு நாளிதழ் வருவது எங்களுக்குத் தெரியாது. தினக்குரல் புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருக்கிறது.

ஐயா, உங்களிடம் கணினி தொடர்பான கேள்வி. Drive SnapShot எனும் ஒரு நிரலி இருக்கிறது. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நம்முடைய கணினி crash ஆகி, மோசமாகப் பழுது அடைந்து விடுகிறது. அப்போது அந்த ’டிரைவ் சினேப் சாட்’ நிரலியைப் பயன்படுத்தி, கணினி எப்படி இருந்ததோ அதே மாதிரி, பழைய நிலைக்கு கொண்டுவர முடியும். என் அலுவலகத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால், தனியாக சிங்கப்பூரில் கிடைக்கவில்லை. மலேசியாவில் கிடைக்கிறதா. அதன் விலை என்ன? அதைப்பற்றி கொஞ்சம் விளக்கம் செய்யுங்கள்.
ப: முதலில் என்னுடைய வாழ்த்துகள். சிங்கப்பூரில் இருந்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறீர்கள். சிங்கப்பூரிலும் தினக்குரல் கிடைக்கிறது. மகிழ்ச்சி. ஒரு சில மாதங்களுக்கு முன்னால், இந்தோனேசியாவின் பாத்தாம் தீவிற்குப் போன போது, சிங்கப்பூர் குடிநுழைவுப் பகுதியில் ’தினக்குரல்’ நாளிதழைப் பார்த்து அதிசயித்துப் போனேன். தினக்குரல் எட்டு திக்கும் வெற்றிக் கொடி கட்டி நிமிர்ந்து நிற்க வேண்டும். அதுவே எல்லோருடய ஆசையும்கூட. சரி. உங்கள் கேள்விக்கு வருகிறேன்.
Drive SnapShot என்பது கணினியைப் பாதுகாக்கும் ஒரு நிரலி. கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போதே backup system எனும் நகலமைப்பு செய்து விடுகிறது. கணினிப் பதிவகத்தில் உள்ள எல்லா தரவுகளையும், படம் பிடித்து வைத்துக் கொள்கிறது. 24 மணி நேரத்திற்கு ஒரு தடவை படம் பிடிக்கிறது. அந்த நகலமைப்பை உங்களுடைய விரலியில் வைத்துக் கொள்ளலாம். external hard disk எனும் வெளியே இருக்கும் வன்தட்டிலும் பதிந்து கொள்ளலாம். சரியா.
கணினிக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய சுனாமியே வந்து தீர்த்தாபிஷேகம் செய்து விட்டது என்றே வைத்துக் கொள்ளுங்கள். இல்லை உங்கள் வீட்டில் இருக்கும் வாண்டுகளில் ஒருவர், நீங்கள் இல்லாத போது, கணினிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, தீபாவளிக் குளியல் செய்து விட்டார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.
கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் ஆவணங்கள், தரவுகள் எல்லாமே அப்படியே இருக்கும். அந்த நிரலிதான் ஏற்கனவே, உங்கள் கணினியின் தரவுகளைப் படம் பிடித்து வைத்து இருக்கிறதே. ஆக, கணினியைப் பயன்படுத்த முடிகிறதோ இல்லையோ, உங்களின் விலை மதிப்பற்ற தகவல்களுக்கு ஒன்றும் ஆகாது.
வேறொரு கணினியில் அந்த நிரலியைக் கொண்டு போய், பழைய கணினியின் இயக்கத்தை மறுபடியும் கொண்டு வந்துவிடலாம். இதைத்தான் Drive SnapShot என்று சொல்கிறார்கள். தமிழில் மொழி பெயர்த்தால் ’நொடிப்பெடுப்பு’ என்று வருகிறது. அதற்கு ஒரு நல்ல சொல்லைத் தேர்ந்தெடுத்து பிறகு சொல்கிறேன்.
அந்த நிரலியின் விலை 89 யூரோ டாலர்கள். மலேசிய காசிற்கு 450 ரிங்கிட். அதைத் தயாரித்தவர்கள் என்னவோ 200,000 டாலர்கள் செலவு செய்து இருக்கிறார்கள். ஆனால், இரண்டு மில்லியன் சம்பாதித்து விட்டார்கள். அந்த நிரலியைக் கனடாவில் உள்ள ஒரு கணினியாளர் அனுமதி உரிமையுடன் எனக்கு அனுப்பி வைத்து இருக்கிறார்.
வேண்டும் என்பவர்கள் எனக்கு அழையுங்கள். அல்லது என்னுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள். மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கிறேன். சும்மா இலவசமாகக் கிடைக்கவில்லை. சேவைக் கட்டணம் உண்டு. இருந்தாலும் பரவாயில்லை. தினக்குரல் வாசகர்களுக்காக இலவசமாக வழங்குகிறேன். இன்னும் ஒன்று. இது கைப்பேசியின் மூலமாக அனுப்புகிற சங்கதி இல்லை. மின்னஞ்சல் மூலமாகத்தான் அனுப்ப முடியும்.
கதிரவன் கலைமகள், தாமான் பெர்த்துவா, ஈப்போ
கே: என்னுடைய கணினியில் தொடர்ந்து ’பீப் பீப்’ ஒலி நிற்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கணினியைத் திறந்ததும் அந்தச் சத்தம் வருகிறது. பயந்து கொண்டு, நான் கணினியை அடைத்துவிட்டேன். சில நாட்களாகத் திறக்கவே இல்லை. என்ன கோளாறு என்று தெரியவில்லை. கணினிக்கு பெரிய கோளாறு எதுவும் இல்லை என்று சொல்லுங்கள். அப்போதுதான் என் மனசு சந்தோஷம் அடையும்.
ப: பெரிய கோளாறு எதுவும் இல்லை. இப்ப சந்தோஷம்தானே! அந்த மாதிரி தொடர்ந்து Beep… Beep... சத்தம் வந்தால், உங்களுடைய தட்டச்சுப் பலகையில் கோளாறு என்று நினைத்துக் கொள்ளுங்கள். தட்டச்சுப் பலகை என்றால் Keyboard. அதில் ஏதோ ஒரு பொத்தான் அல்லது சில பொத்தான்கள் பயங்கரமான கீழறுப்பு வேலைகளைச் செய்து கொண்டு இருக்கின்றன என்று நினைத்துக் கொள்ளுங்கள்

அந்தத் தட்டச்சுப் பலகையை அப்படியே கழற்றி, கீழே தரையில் வைத்து, அதன் தலையில் லேசாக ஒரு தட்டு தட்டுங்கள். சின்னதாக ஒரு தட்டு போதும். அதற்கு என்று உங்கள் ஆத்திரத்தை எல்லாம் அதன் மேல் காட்ட வேண்டாம். வாயில்லாத ஜீவன். பாவம், அதற்கு நேரம் சரியில்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
மீண்டும் தட்டச்சுப் பலகையை, கணினியில் இணைத்துப் பாருங்கள். பிரச்னை தீர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன். ரொம்ப நாளைக்கு முன்பு, அந்த மாதிரி ஒரு தீவிரமான ஆராய்ச்சி பண்ணி, ஒரு பெரிய சாதனை பண்ணியதாக ஒரு நினைப்பு எனக்கு இன்னும் இருக்கிறது.
அப்படியும் ஒன்றும் சரிபட்டு வரவில்லை என்றால், அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. என்ன வழி தெரியுமா. புதிதாக ஒன்றை வாங்கி விடுவதுதான். அதைவிட சிறந்த வழி இல்லை. சரிங்களா. விலை என்ன… ஒரு 15 லிருந்து 35 ரிங்கிட்டிற்குள் இருக்கும். எவ்வளோ பண்றோம். இதை பண்ண முடியாதா?
02 டிசம்பர் 2012
தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?
தியாகா ராமா thiaga.rama@gmail.com
கே: தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழ் யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கும் போது, அப்புறம் ஏன் 100 ரிங்கிட் கேட்கிறார்கள்?
ப: யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது என்பது உண்மைதான். காசிற்கு விற்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்னை. அந்த நிரலியில் கொஞ்சம் மாற்றம் செய்து விற்கிறார்கள். அப்படி சம்பாதிக்கிற பணம் எத்தனை நாளைக்கு ஒட்டிக் கொண்டு வரப் போகிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுத மாட்டேன். போகட்டும் விடுங்கள். நாம்தான் உஷாராக இருக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் இருக்கும் நியூ ஹாரிசான் எனும் நிறுவனம் இலவசமாக தமிழ் யூனிகோடு நிரலியை உலகத் தமிழர்களுக்கு வழங்கி வருகிறது. http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்ததும், அதைக் கணினிக்குள் நிறுவல் செய்து கொள்ளுங்கள். install எனும் ஆங்கிலச் சொல்லுக்கு நிறுவல் என்பதே சரியான தமிழ்ச் சொல் ஆகும்.
நிறுவல் செய்யும் போது ஒரு கட்டத்தில் எந்த மொழி என்று கேட்கப்படும். அப்போது ’தமிழ்’ என்பதைத் தேர்வு செய்யுங்கள். தமிழ், அசாம், வங்காளம், குஜாராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, சமஸ்கிருதம் ஆகிய 11 இந்திய மொழிகளில், இந்த நிரலி வேலை செய்கிறது.
என்.எச்.எம் தமிழ் நிரலியை நிறுவல் செய்ததும், ஆகக் கீழே இருக்கும் பணிப் பட்டையில் ஒரு வெள்ளை நிற மணியின் சின்னம் தோன்றும். Task Bar என்பதைத்தான் பணிப் பட்டை என்று அழைக்கிறோம். அந்த வெள்ளை நிற மணியை வலது சொடுக்கு செய்யுங்கள். Settings என்று வரும்.
அதில் Tamil Phonetic என்பதை மட்டும் சொடுக்கி விட்டு மற்றவற்றை சும்மா விட்டு விடுங்கள். அதாவது Tamil 99, OldTypewriter, Bamini, Inscript ஆகிய மொழிப் பிரிவுகளுக்கு முன்னால் உள்ள (
) சின்னத்தை வேண்டாம் என்று எடுத்து விடுங்கள். Tamil Phonetic என்பதை மட்டும் தேர்வு செய்தால் போதும். அதை மட்டும் சொடுக்கு செய்யுங்கள்.

அடுத்து Start automatically when starting Windows என்பதையும் மறக்காமல் சொடுக்கி விடுங்கள். அவ்வளவுதான். Ok பொத்தானைத் தட்டி விட்டு வெளியேறுங்கள்.
கணினியின் இயக்கத்தை நிறுத்தி, மறுபடியும் தொடக்கம் செய்யுங்கள். அதாவது Restart செய்யுங்கள். அடுத்து Keyboard எனும் தட்டச்சுப் பலகையில் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே, 2 எனும் இலக்கப் பொத்தானையும் அழுத்துங்கள். வெள்ளி நிறத்தில் இருக்கும் மணியின் சின்னம் தங்க நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் தட்டச்சுப் பலகை தமிழுக்கு மாறி விட்டது என்று பொருள்.
அதே Alt 2 பொத்தான்களை மறுபடியும் அழுத்தினால், மணியின் சின்னம் வெள்ளி நிறத்திற்கு மாறும். அப்படி என்றால் ஆங்கிலத்திற்குப் மாறிவிட்டது என்று பொருள். தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்றால் மறுபடியும் Alt எனும் பொத்தானை அழுத்திக் கொண்டே 2 எனும் பொத்தானையும் அழுத்துங்கள். தமிழுக்கு வந்துவிடும். இதுதான் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்யும் முறையாகும். தங்க நிறம் என்றால் தமிழ். வெள்ளி நிறம் என்றால் ஆங்கிலம். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
’ஸ்ரீ’ எனும் எழுத்தை எழுதுவதற்கு sri என்று தட்டச்சு செய்ய வேண்டும். அதைப் போல ’ஷ்’ எனும் எழுத்தை எழுதுவதற்கு sh என்று தட்டச்சு செய்ய வேண்டும். நிரலியைப் பதிவிறக்கம் செய்யும் போது, அதன் அருகில் Manual எனும் ஒரு வழிகாட்டி இருக்கும். அதையும் படித்துப் பார்த்து விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் பலர், வியாபார நோக்கில் பல வகையான தமிழ் எழுத்துருகளை உருவாக்கினார்கள். அவற்றுக்கு தங்களின் விருப்பமான பெயர்களை வைத்து அழகு பார்த்தார்கள். ஆயிரம், இரண்டாயிரம், பத்தாயிரம் என்றுகூட பணம் சம்பாதித்தார்கள். பணம் சம்பாதிப்பதே அவர்களின் தலையாய நோக்கமாக இருந்தது. After Sales Service எனும் வணிக நெறியை அடியோடு முறித்துப் போட்டார்கள். உண்மை அதுதான்.
இப்போதும் மட்டும் என்னவாம். பழைய நிரலியில் ஒரு சில சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்கிறார்கள். அப்புறம் புதுசு என்று சாயம் பூசி, மொத்தமாக விற்று விடுகிறார்கள். கணினி உலகில் நடக்கும் சில பித்தலாட்டங்களை, வெளிச்சம் போட்டு பார்க்கும் போது வேதனையின் விரிசல்கள் தெரிகின்றன.
தமிழ் யூனிகோடு உங்களுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இலவசமாகக் கிடைப்பதற்கு காசு எதுவும் கொடுக்க வேண்டாம். மறுபடியும் சொல்கிறேன். http://software.nhm.in/products/writer எனும் இடத்தில் அந்த தமிழ் தட்டச்சு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது.
பதிவிறக்கம் செய்வதில் பிரச்னை வரலாம். அல்லது நிறுவல் செய்யும் போது பிரச்னைகள் வரலாம். புதியவர்கள் சிரமப்பபடுவார்கள் என்பது எனக்குத் தெரியும். பயப்பட வேண்டாம். பிரச்னை என்றால் 010-3913225 அல்லது 012-4347462 எனும் என்னுடைய கைத்தொலைப்பேசி எண்களுக்கு அழையுங்கள். உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்.
திருமதி. மாலா சின்கா malasinha@gmail.com
கே: ஆங்கிலத்தில் Mouse என்று அழைப்பதை நீங்கள் ’சுழலி’ என்று அழைக்கிறீர்கள். பாட நூல்களில் எலியன், சுட்டெலி என்று இருக்கிறது. எது சார் சரி. யார் சொல்வது சரி.
ப: நல்ல ஒரு கேள்வி. 1968 ஆம் ஆண்டு, Douglas Engelbart என்பவர் பலகையால் ஆன ஒரு சுழலியை உருவாக்கினார். அதற்கு ஒரு நீண்ட வால். சுண்டெலிக்கு இருக்குமே அந்த மாதிரியான ஒரு நீண்ட வெள்ளை நிற வால். ஒருநாள், ஆய்வுக் கூடத்தில் உதவியாளராக இருந்த ஒருவர், அதைப் பார்த்து ’இது என்ன சுண்டெலியின் வாலைப் போல இருக்கிறது’ என்று கேட்டு வைத்தார்.
அதுவரை சுழலிக்குப் பெயர் எதுவும் வைக்கப்படவில்லை. அடுத்து அடுத்து அவர்கள் பேசிக் கொள்ளும் போது ‘மவுஸ்’ எனும் சொல் அடிக்கடி வந்து விழுந்தது. காலப் போக்கில் அதுவே, நிலையான ஒரு சொல்லாகிப் போனது.
அப்புறம் அது ஒரு பெயராகவும் மாறிப் போனது. கடந்த 44 ஆண்டுகளாக ‘மவுஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். அது வரலாறு. சரி. நம்ப விசயத்திற்கு வருவோம்.
2000ஆம் ஆண்டுகளில்தான், தமிழர்கள் உலகளாவிய நிலையில் கணினியைப் பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கினர். அதுவரை ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தினர். தமிழ்க் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டாலும் தரமான சொற்களாக அமையவில்லை.
தடி எடுத்தான் தம்பிரான் என்று சொல்வார்களே, அந்த மாதிரி ஆளாளுக்கு ஒரு சொல்லை உருவாக்கிக் கொண்டார்கள். அந்த வகையில் வந்தவைதான் இந்தச் சுண்டெலி, சுட்டெலி, சுட்டி, எலியன், எலியான், இடுக்கி, சொடுக்கி என்கிற சொற்கள்.
2003 ஆம் ஆண்டு, விக்கிப்பீடியா இணையக் கலைக்களஞ்சியம் தமிழில் தன் சேவையைத் தொடங்கியது. 2009ஆம் ஆண்டில் விக்சனரி எனும் தனிக் கலைக்களஞ்சியப் பகுதியும் தோற்றுவிக்கப்பட்டது. அப்போது கணினிக் கலைச் சொற்களும் இணைக்கப்பட்டன.
அந்தக் கட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். ’மவுஸ்’ என்பதைச் சுற்றுகிறோம், சுழற்றுகிறோம். ஆக, சுண்டெலியின் முதல் எழுத்தான ‘சு’ எனும் எழுத்துடன், ஈற்று எழுத்தான ‘லி’ எனும் எழுத்தையும் சேர்த்தால் ‘சுலி’ என்று வருகிறது.
இதில், கணினியின் மவுஸைச் சுழற்றுவதால் ‘சுழல்’ எனும் வேர்ச் சொல் வருகிறது. அந்த வேர்ச் சொல்லில் உள்ள ‘ழ’ எனும் எழுத்தை மட்டும் எடுத்து, ‘சுலி’ எனும் எழுத்துகளுடன் சேர்த்தால், ‘சுழலி’ என்று வருகிறது.
ஆக, அதுவே எளிதான, எல்லாருக்கும் புரியும்படியான சொல்லாக இருக்கிறது என்று விக்கிப்பீடியா ஏற்றுக் கொண்டது. சொல்லை உருவாக்கிய எனக்குப் பெருமை வேண்டாம். உலகளாவிய நிலையில் போய்ச் சேர்ந்தால் அதுதான் உண்மையான பெருமையாக இருக்கும்.
எதிர்வரும் காலங்களில் சுழலி எனும் சொல் பாட நூல்களில் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)